குஷ்ட வியாதியுள்ளவன் சுகமடைதல்
இயேசு மலைப்பகுதியில் இருந்து கீழே இறங்கி வந்தார், அப்பொழுது பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள். மத் 8:18மத் 4:25லூக் 5:15மத் 19:2மத் 20:29மாற் 3:7லூக் 14:25-27மத் 12:15 அப்பொழுது ஒரு குஷ்டவியாதி உள்ளவன் வந்து, அவர்முன் முழங்காற்படியிட்டு, “ஆண்டவரே, உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் முடியும் என்றான்.” மாற் 1:40-45லூக் 17:12-19மத் 15:25மத் 18:26அப் 10:25லேவி 13:44-46லூக் 5:12-141 கொரி 14:25
இயேசு தன் கையை நீட்டி அவனைத் தொட்டு. “எனக்கு சித்தமுண்டு, நீ சுத்தமடைவாயாக!” என்று சொன்னார். உடனே அவன் தனது குஷ்டவியாதியிலிருந்து சுத்தமானான். லூக் 5:13சங் 33:92இராஜா 5:14மத் 11:4-5மாற் 1:412இராஜா 5:11ஆதி 1:3யோவா 5:21 அப்பொழுது இயேசு அவனிடம், “நீ இதை ஒருவருக்கும் சொல்லாதபடி பார்த்துக்கொள். ஆனால், நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, மோசே கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்து அது அவர்களுக்கு நீ சுகமடைந்ததற்கான ஒரு சாட்சியாய் இருக்கும்” 1 என்றார். லேவி 14:2-32லூக் 17:14லூக் 5:14லேவி 13:2-46மாற் 7:36மத் 9:30மாற் 6:11யோவா 10:37-38
நூற்றுக்குத் தலைவனின் விசுவாசம்
இயேசு கப்பர்நகூமுக்குப் போனபோது, ஒரு நூற்றுக்குத் தலைவன் 2 உதவிகேட்டு அவரிடம் வந்து, லூக் 7:1-10அப் 27:43மத் 27:54அப் 10:1-33அப் 27:31அப் 23:17மத் 4:13மாற் 15:39 “ஆண்டவரே, வீட்டில் எனது வேலைக்காரன் முடக்குவாதமுடையவனாய், கடும் வேதனையுடன் படுத்திருக்கிறான்” என்றான். கொலோ 4:1மத் 4:24அப் 9:33கொலோ 3:111 தீமோ 6:2அப் 10:7அப் 8:7மாற் 2:3-12
இயேசு அவனிடம், “நான் வந்து அவனைக் குணமாக்குவேன் என்றார்.” லூக் 7:6மத் 9:18-19மாற் 5:23-24
நூற்றுக்குத் தலைவன் அதற்குப் பதிலாக, “ஐயா, நீர் எனது வீட்டிற்குள் வருவதற்கு நான் தகுதியற்றவன். ஒரு வார்த்தை மட்டும் சொல்லும், என் வேலைக்காரன் குணமடைவான். சங் 107:20லூக் 7:6-7சங் 33:9மாற் 1:25-27மத் 8:3யோவா 1:27மத் 15:26-27லூக் 5:8 ஏனெனில் நானும் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழேயும் படைவீரர்கள் இருக்கிறார்கள். நான் ஒருவனை, ‘போ’ என்றால், போகிறான்; ஒருவனை, ‘வா’ என்றால், வருகிறான். நான் எனது வேலைக்காரனிடம் இதைச் செய் என்றால், அவன் செய்கிறான்” என்றான். தீத் 2:9சங் 107:25-29கொலோ 3:22லூக் 4:35-36லூக் 4:39லூக் 7:8சங் 119:91சங் 148:8
இயேசு இதைக் கேட்டபோது வியப்படைந்தார். அவர் தம்மைப் பின்தொடர்கிறவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், இப்படிப்பட்ட பெரிதான விசுவாசத்தை இஸ்ரயேலரிடத்திலும் நான் கண்டதில்லை. லூக் 7:9மத் 15:28மாற் 6:6லூக் 5:20லூக் 7:50 நான் இதையும் உங்களுக்குச் சொல்கிறேன்: அநேகர் கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும் வருவார்கள். அவர்கள் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் இறைவனுடைய அரசிலே பெரும்விருந்தில் அவர்களுக்குரிய இடங்களில் பங்கு பெறுவார்கள். லூக் 13:28-29எபே 3:6எபே 2:11-14கலா 3:28-29மல்கி 1:11மீகா 4:1-2அப் 10:45அப் 11:18 ஆனால் அந்த அரசுக்குரிய மக்களோ, வெளியே இருளுக்குள்ளே எறியப்படுவார்கள். அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்” என்றார். மத் 25:30லூக் 13:28மத் 21:43மத் 13:42மத் 13:50மத் 24:51மத் 22:12-13மத் 3:9-10
அதற்குப் பின்பு இயேசு நூற்றுக்குத் தலைவனிடம், “நீ போ, நீ விசுவாசித்தபடியே, உனக்கு ஆகட்டும்” என்றார். அந்த வேளையிலேயே அவனது வேலைக்காரன் குணமடைந்தான். மத் 9:29-30யோவா 4:50மாற் 9:23மத் 15:28மத் 17:20மத் 9:22யோவா 4:52-53பிரச 9:7
இயேசு அநேகரைக் குணப்படுத்துதல்
இயேசு பேதுருவின் வீட்டிற்கு வந்தபோது, பேதுருவின் மாமியார் காய்ச்சலுடன் படுக்கையில் படுத்திருப்பதை அவர் கண்டார். லூக் 4:38-41மாற் 1:29-341 கொரி 9:51 தீமோ 3:2எபி 13:4மத் 17:251 தீமோ 4:3மத் 8:20 இயேசு அவளுடைய கையைத் தொட்டவுடனே காய்ச்சல் அவளைவிட்டுப் போயிற்று. அவள் எழுந்து அவருக்குப் பணிவிடை செய்யத் தொடங்கினாள். 2இராஜா 13:21லூக் 8:54மாற் 1:41லூக் 4:38-39அப் 19:11-13ஏசா 6:7யோவா 12:1-3மத் 14:36
மாலை நேரமானபோது, பிசாசு பிடித்திருந்த பலரை இயேசுவிடம் கொண்டுவந்தார்கள்; அவர் வார்த்தையினாலே அந்த தீய ஆவிகளைத் துரத்தி, எல்லா நோயாளிகளையும் குணமாக்கினார். யாத் 15:26லூக் 4:40மத் 14:14மாற் 1:32-34அப் 5:15மத் 12:22மாற் 5:8அப் 19:13-16
“அவர்தாமே நம்முடைய பலவீனங்களை ஏற்றுக்கொண்டு, ஏசா 53:41 பேது 2:24மத் 1:22மத் 2:15மத் 2:23
நமது நோய்களைச் சுமந்தார்” 3
என்று இறைவாக்கினன் ஏசாயாவினால் கூறப்பட்டது இப்படியாக நிறைவேறியது.
இயேசுவைப் பின்பற்றுவதற்கான விலை
தன்னைச் சுற்றி நின்ற கூட்டத்தை இயேசு கண்டபோது, அவர் தம்முடைய சீடர்களிடம், மறுகரைக்குப் போகும்படி, கட்டளையிட்டார். லூக் 4:42-43லூக் 8:22யோவா 6:15மாற் 4:35மத் 14:22மத் 8:1மாற் 1:35-38மாற் 5:21 அப்பொழுது ஒரு மோசேயின் சட்ட ஆசிரியன் அவரிடம் வந்து, “போதகரே, நீர் போகும் இடமெல்லாம் நான் உம்மைப் பின்பற்றுவேன்” என்றான். லூக் 22:33-34யோவா 13:36-38லூக் 14:33லூக் 14:25-271 கொரி 1:20லூக் 9:57-60மாற் 12:32-34எஸ்றா 7:6
இயேசு அதற்குப் பதிலாக, “நரிகளுக்குக் குழிகளும், ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. ஆனால் மானிடமகனாகிய எனக்கோ தலைசாய்க்கக்கூட இடமில்லை” என்றார். சங் 84:3லூக் 2:7ஏசா 53:2-32 கொரி 8:9லூக் 2:16சங் 104:17லூக் 2:12லூக் 8:3
இன்னொரு சீடன் அவரிடம், “ஆண்டவரே, முதலில் நான் போய் என் தகப்பனை அடக்கம் செய்துவிட்டு வர எனக்கு அனுமதிகொடும்” என்றான். லூக் 9:59-62மத் 19:29லேவி 21:11-12எண் 6:6-71 இராஜா 19:20-21உபா 33:9-10ஆகா 1:22 கொரி 5:16
அதற்கு இயேசு அவனிடம், “நீ என்னைப் பின்பற்று. மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்” என்றார். லூக் 15:32கொலோ 2:13எபே 5:14எபே 2:5எபே 2:1யோவா 1:431 தீமோ 5:6மத் 4:18-22
இயேசு புயலை அமைதிப்படுத்துதல்
அதற்குப் பின்பு இயேசு படகில் ஏறினார். அவரது சீடர்களும் அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள். லூக் 8:22-25மாற் 4:36-41லூக் 7:22மத் 9:1 அப்பொழுது திடீரென ஒரு புயல்காற்று கடலின்மேல் வீசியது; அலைகள் படகிற்கு மேலாக மோதியது. இயேசுவோ தூங்கிக்கொண்டிருந்தார். லூக் 8:23யோனா 1:4-5மாற் 4:37-38சங் 107:23-27அப் 27:14-382 கொரி 11:25-26ஏசா 54:11யோவா 6:17-18 சீடர்கள் இயேசுவிடம் வந்து, அவரை எழுப்பி, “ஆண்டவரே, எங்களைக் காப்பாற்றும்! நாங்கள் தண்ணீரில் மூழ்கப்போகிறோம்!” என்று அவரிடம் சொன்னார்கள். யோனா 1:62 நாளாக 14:11மாற் 4:38-39சங் 44:22-232 நாளாக 20:12ஏசா 51:9-10லூக் 8:24சங் 10:1
அதற்கு இயேசு, “விசுவாசக் குறைவுள்ளவர்களே! நீங்கள் ஏன் இவ்வளவாய் பயப்படுகிறீர்கள்?” எனக் கேட்டார். பின்பு அவர் எழுந்து காற்றையும் அலைகளையும் கடிந்துகொண்டார். அப்பொழுது மிகுந்த அமைதி உண்டாயிற்று. ஏசா 41:10-14சங் 65:7சங் 107:28-30சங் 89:9மத் 6:30லூக் 8:24-25மாற் 4:39-41ரோம 4:20
அதைக் கண்டவர்கள் வியப்படைந்து, “இவர் எப்படிப்பட்டவரோ? காற்றும் அலைகளுங்கூட இவருக்குக் கீழ்ப்படிகிறதே!” என்று பேசிக்கொண்டார்கள். மாற் 7:37மத் 14:33மாற் 1:27மாற் 6:51மத் 15:31
பிசாசு பிடித்த இருவர் குணமடைதல்
இயேசு மறுபக்கத்திலுள்ள கதரேனருடைய 4 நாட்டிற்கு வந்தபோது, பிசாசு பிடித்த இருவர் கல்லறைகளிலிருந்து வந்து அவரைச் சந்தித்தனர். ஒருவரும் அந்த வழியாய்ச் செல்லமுடியாதவாறு, அவர்கள் மிகவும் கொடூரமானவர்களாய் இருந்தார்கள். லூக் 8:26-39மாற் 5:1-20அப் 10:38மத் 4:24ஆதி 10:16ஆதி 15:21நியாயாதி 5:6உபா 7:1 அவர்கள், “இறைவனின் மகனே, உமக்கு எங்களிடம் என்ன வேண்டும்? நியமிக்கப்பட்ட காலம் வருமுன், எங்களைச் சித்திரவதை செய்யவா நீர் இங்கே வந்தீர்?” என உரத்த சத்தமிட்டார்கள். மாற் 1:24லூக் 4:34யாக் 2:19மாற் 5:7லூக் 8:282 பேது 2:4மத் 4:32 சாமு 16:10
அவர்களுக்கு கொஞ்சம் தூரத்தில் பன்றிகள் பெருங்கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தது. லேவி 11:7உபா 14:8ஏசா 65:3-4மாற் 5:11ஏசா 66:3லூக் 8:32லூக் 15:15-16 பிசாசுகள் இயேசுவிடம், “நீர் எங்களை வெளியே விரட்டுவதானால், பன்றிக்கூட்டத்திற்குள் அனுப்பிவிடும்” என்று கெஞ்சிக்கேட்டன. வெளி 20:1-2லூக் 8:30-33மாற் 5:12வெளி 12:12மாற் 5:7
இயேசு அவைகளிடம், “போங்கள்!” என்றார். எனவே அவைகள் வெளியே வந்து, பன்றிகளுக்குள் புகுந்துகொண்டன. அந்த முழுப்பன்றிக்கூட்டமும், மேட்டிலிருந்து விரைந்தோடி, கடலுக்குள் விழுந்து செத்தன. மாற் 5:13வெளி 20:71 இராஜா 22:22அப் 2:23அப் 4:28லூக் 8:33யோபு 1:10-19யோபு 2:3-8 பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் பட்டணத்திற்குள் ஓடிப்போய், பிசாசு பிடித்தவர்களுக்கு நிகழ்ந்ததையும், நடந்த எல்லாவற்றையும் அறிவித்தார்கள். லூக் 8:34-36மாற் 5:14-16அப் 19:15-17 அப்பொழுது பட்டணத்திலுள்ள யாவரும் இயேசுவை சந்திக்க வெளியே வந்து. அவர்கள் இயேசுவைக் கண்டபோது, தங்களுடைய பகுதியைவிட்டுப் போய்விடும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள். அப் 16:39லூக் 5:8லூக் 8:37-39யோபு 21:14மாற் 5:17-18யோபு 22:171 இராஜா 17:181 இராஜா 18:17