நாகூம் 2

Nahum 2

நினிவேயின் வீழ்ச்சி

நினிவே பட்டணமே, உன்னைத் தாக்குகிறவன் உனக்கெதிரே முன்னேறி வருகிறான்; யோவே 3:9-112 நாளாக 25:8எரே 51:20-23எரே 51:11-12எரே 50:23எரே 46:3-10ஏசா 14:6நாகூ 3:14-15

கோட்டையைக் காவல் செய்,

வீதியை கண்காணி,

உன்னைத் திடப்படுத்திக்கொள்,

உன் முழுப் பெலத்தையும் ஒன்றுதிரட்டு.

அசீரியர் இஸ்ரயேலைப் பாழாக்கி, எசேக் 37:23சங் 80:12-13செப்ப 3:11ஏசா 60:15ஆதி 49:22-23ஓசி 10:1ஏசா 10:5-12எரே 25:29

அவர்களின் திராட்சைத் தோட்டங்களை அழித்துப்போட்டாலும்,

யெகோவா இஸ்ரயேலின் மாட்சிமையை,

யாக்கோபின் மாட்சிமையைப்போல் திரும்பவும் அமைத்துக்கொடுப்பார்.

நினிவேயைத் தாக்குகிற எசேக் 23:14-15ஏசா 63:1-3ஏசா 14:8வெளி 12:3வெளி 6:4சகரி 1:8சகரி 11:2சகரி 6:2

இராணுவவீரர்களின் கேடயங்கள் சிவப்பாய் இருக்கின்றன.

போர்வீரர்கள் சிவப்பு உடை உடுத்தியிருக்கிறார்கள்.

தேர்கள் ஆயத்தப்படும் நாளிலே அவற்றிலுள்ள உலோகம் மினுங்குகிறது.

தேவதாரு மரத்தினால் செய்யப்பட்ட ஈட்டிகள் ஆயத்தமாக்கப்படுகின்றன.

தேர்கள் நகரத்திற்கு வெளியே வீதிகளின் வழியாக சதுக்கங்களில் ஓடி, எரே 4:13எசேக் 26:10ஏசா 66:15நாகூ 3:2-3தானி 11:40ஏசா 37:24

கடகடவென்றோடி, இங்கும் அங்கும் விரைகின்றன.

அவை சுடர் விட்டெரியும் தீப்பந்தம்போல் காணப்படுகின்றன,

அவை மின்னலைப்போல் பறக்கின்றன.

நினிவேயின் அரசன் தான் தெரிந்தெடுத்த வீரர்களை அழைப்பிக்கிறான். எரே 46:12ஏசா 21:5ஏசா 5:27எரே 50:29எரே 51:27-28நாகூ 3:18நாகூ 3:3

இருந்தும் அவர்கள் தங்கள் வழியில் இடறுகிறார்கள்.

அவர்கள் பட்டணத்து சுவரை நோக்கி விரைகிறார்கள்.

பாதுகாப்புக்கான கேடயம் அதற்குரிய இடத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன.

ஆனாலும் தாக்குகிறவன் உட்புகுந்துவிட்டான், ஏசா 45:1-22 பேது 3:10-11

ஆற்றின் மதகுகள் திறந்து விடப்படுகின்றன; அரண்மனை சரிந்து விழுகிறது.

இது நினிவே என்று தீர்மானிக்கப்படுகிறது ஏசா 38:14ஏசா 59:11ஏசா 32:12லூக் 23:27லூக் 23:48

பட்டணத்திலுள்ளவர்களை நாடுகடத்திக் கொண்டுபோக உத்தரவிடப்பட்டது.

பட்டணத்துப் பணிப்பெண்கள் தங்கள் மார்பில் அடித்து,

புறாக்களைப்போல் புலம்புகிறார்கள்.

நினிவே தண்ணீர் நிறைந்த குளம்போல் இருக்கிறது. ஆதி 10:11ஏசா 13:14ஏசா 47:13ஏசா 48:20எரே 46:5எரே 50:16எரே 51:13எரே 51:30

அதன் தண்ணீரோ வடிந்து ஓடுகிறது.

“நில்லுங்கள், நில்லுங்கள்!” என்று அவர்கள் அழுகிறார்கள்.

ஆனால் ஒருவனும் திரும்பி வருவதில்லை.

வெள்ளியைக் கொள்ளையிடுங்கள், 2 நாளாக 36:10தானி 11:8எசேக் 26:12ஏசா 33:4எரே 25:34எரே 51:56நாகூ 2:12-13ஏசா 33:1

தங்கத்தையும் கொள்ளையிடுங்கள்;

அதன் கருவூலங்களில் இருக்கும் திரவியங்களுக்குக்

குறைவில்லை, என்று தாக்குகிறவர்கள் சொல்கிறார்கள்.

நினிவே கொள்ளையடிக்கப்பட்டு, சூறையாடப்பட்டு, வெறுமையாக்கப்பட்டுள்ளது! தானி 5:6யோவே 2:6சங் 22:14ஏசா 13:7-8எரே 30:6ஏசா 21:3ஏசா 24:1செப்ப 2:13-15

உள்ளங்கள் கலங்குகின்றன, முழங்கால்கள் தள்ளாடுகின்றன, உடல்கள் நடுங்குகின்றன,

எல்லா முகங்களும் வெளிறிப்போய் இருக்கின்றன.

அசீரியன் ஒரு சிங்கம்போல் இருந்தான். ஏசா 5:29எரே 2:15எசேக் 19:2-8ஆதி 49:9ஏசா 31:4எரே 4:7எரே 50:17எரே 50:44

ஆனால் இப்பொழுதோ சிங்கங்களின் குகை எங்கே?

அவை தமது குட்டிகளுக்கு இரை கொடுத்த இடம் எங்கே?

சிங்கமும், அதன் பெண் சிங்கமும் குட்டிகளுடன் பயமின்றிபோன இடம் எங்கே?

சிங்கம் தன் குட்டிகளுக்குப் போதிய அளவு இரையைக் கொன்று. எரே 51:34ஏசா 10:6-14சங் 17:12

தன் துணைச் சிங்கத்திற்குத் தேவையான இரையைத் பிடித்துக் கொன்று.

தான் கொன்றவைகளினால் தன் இடங்களையும்,

இரையினால் தன் குகையையும் நிரப்பியது.

நினிவேயே, “நான் உனக்கு விரோதமாக இருக்கிறேன்” எரே 21:13நாகூ 3:5சங் 46:92இராஜா 19:232இராஜா 19:9எசேக் 5:8ஏசா 49:24-25யோசு 11:9

என்று சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார்.

“புகை எழும்பும்படி உன் தேர்களை எரிப்பேன்,

உன் சிங்கக்குட்டிகள் வாளினால் அழியும்.

பூமியில் உங்களுக்கு இரையில்லாமல் போகச்செய்வேன்.

உங்கள் தூதுவர்களின் குரல்கள்

இனிமேலும் கேட்கப்படுவதில்லை.”