பாறையிலிருந்து தண்ணீர்
முதலாம் மாதத்தில் முழு இஸ்ரயேல் சமுதாயமும் சீன் பாலைவனத்தை அடைந்தது. அவர்கள் காதேசில் தங்கினார்கள். அங்கே மிரியாம் இறந்து, அடக்கம்பண்ணப்பட்டாள். எண் 13:21யாத் 15:20எண் 33:36எண் 26:59எண் 27:14உபா 1:22-23உபா 2:14உபா 32:51
இஸ்ரயேல் சமுதாயத்தினருக்கு அங்கே தண்ணீர் கிடைக்கவில்லை. எனவே மக்கள் மோசேக்கும், ஆரோனுக்கும் விரோதமாக ஒன்றுகூடினார்கள். எண் 16:19எண் 16:42யாத் 15:23-241 கொரி 10:10-11யாத் 16:12யாத் 16:2யாத் 16:7யாத் 17:1-4 அவர்கள் மோசேயுடன் வாக்குவாதம்பண்ணிச் சொன்னதாவது, “எங்கள் சகோதரர்கள் யெகோவா முன்பாக செத்து விழுந்தபோது நாங்களும் செத்திருக்கலாமே! யாத் 17:2எண் 14:1-2எண் 16:31-35யாத் 16:2-3எண் 11:1எண் 11:33-34எண் 16:49யோபு 3:10-11 நாங்களும், எங்கள் கால்நடைகளும் சாகும்படியாக நீ ஏன் யெகோவாவின் மக்களை இந்தப் பாலைவனத்திற்குக் கொண்டுவந்தாய்? யாத் 17:3சங் 106:21அப் 7:35அப் 7:39-40யாத் 14:11-12யாத் 16:3யாத் 5:21எண் 11:5 நீ ஏன் எங்களை எகிப்திலிருந்து வெளியே, இந்த அவலம் நிறைந்த இடத்திற்குக் கொண்டுவந்தாய்? இங்கே தானியமோ, அத்திப்பழங்களோ, திராட்சைக்கொடிகளோ, மாதுளம்பழங்களோ இல்லை. குடிப்பதற்குத் தண்ணீரும் இல்லை” என்றார்கள். எண் 16:14உபா 8:15எசேக் 20:36எரே 2:2எரே 2:6நெகே 9:21
அதைக்கேட்ட மோசேயும், ஆரோனும் மக்கள் கூட்டத்தைவிட்டு சபைக் கூடாரவாசலுக்கு வந்து முகங்குப்புற விழுந்தார்கள், அவ்வேளையில் யெகோவாவினுடைய மகிமை அவர்கள்முன் தோன்றியது. எண் 14:5எண் 16:19எண் 16:22எண் 16:4எண் 16:451 நாளாக 21:16யாத் 16:10யாத் 17:4 யெகோவா மோசேயிடம் சொன்னதாவது, “நீ கோலை எடுத்துக்கொள். நீயும், உன் சகோதரன் ஆரோனும் மக்கள் சபையை ஒன்றுகூட்டுங்கள். அவர்கள் கண்களுக்கு முன்பாக நீ அக்கற்பாறையைப் பார்த்து பேசு. அதிலிருந்து அதன் தண்ணீர் பொங்கிவரும். நீ கற்பாறையிலிருந்து இந்த மக்கள் சமுதாயத்திற்குத் தண்ணீரை வரப்பண்ணுவாய். அவர்களும் அவர்களுடைய மிருகங்களும் குடிப்பார்கள்” என்றார். யாத் 4:17ஏசா 43:20அப் 2:1-4யாத் 17:5-6ஏசா 48:21யோவா 16:24நெகே 9:15வெளி 22:17
யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே, மோசே அவர் முன்னிருந்த கோலை எடுத்தான். எண் 17:10 அவனும், ஆரோனும் கற்பாறைக்கு முன்பாக மக்கள் சபையை ஒன்றுகூட்டினார்கள். மோசே அவர்களிடம், “கலகக்காரரே, கேளுங்கள், இந்தக் கற்பாறையிலிருந்து நாங்கள் உங்களுக்குத் தண்ணீரை வரப்பண்ணவேண்டுமோ?” என்று கேட்டான். சங் 106:32-33அப் 14:9-15அப் 23:3-5அப் 3:12-16தானி 2:28-30உபா 9:24எபே 4:26ஆதி 40:8 பின்பு மோசே தன் கையை உயர்த்தி, தனது கோலினால் கற்பாறையை இரண்டுமுறை அடித்தான். அப்பொழுது தண்ணீர் பீறிட்டுப் பாய்ந்து வந்தது. மக்கள் கூட்டத்தினர் தாங்களும் குடித்து, தங்கள் வளர்ப்பு மிருகங்களுக்கும் குடிக்கக் கொடுத்தார்கள். 1 கொரி 10:4யாத் 17:6உபா 8:15எண் 20:81 நாளாக 15:131 சாமு 15:24ஓசி 13:5யாக் 1:20
ஆனால் யெகோவா மோசேயிடமும், ஆரோனிடமும் சொன்னதாவது, “நீங்கள் என்னைக் கனம்பண்ணும் அளவுக்கு என்னில் நம்பிக்கை வைக்கவில்லை. இஸ்ரயேலருக்கு முன்பாக என்னைப் பரிசுத்த இறைவனாகக் கனம்பண்ணவில்லை. எனவே நான் இந்த சமுதாயத்திற்குக் கொடுக்கும் நாட்டிற்கு நீங்கள் அவர்களைக் கொண்டுபோகமாட்டீர்கள்” என்றார். உபா 1:37எண் 27:14எசேக் 36:23எண் 20:24உபா 3:23-27உபா 32:49-51உபா 34:4ஏசா 8:13
அவ்விடத்தில் இஸ்ரயேலர் யெகோவாவுடன் வாக்குவாதப்பட்டதாலும், அவர் தம்மை பரிசுத்தராகக் காண்பித்ததாலும், அது மேரிபாவின் 1 தண்ணீர் எனப்பட்டது. யாத் 17:7சங் 95:8உபா 33:8உபா 32:51சங் 106:32-48எசேக் 20:41எசேக் 36:23எசேக் 38:16
ஏதோம் இஸ்ரயேலுக்கு வழியை மறுத்தல்
பின்பு மோசே காதேசிலிருந்து தூதுவர்களை ஏதோம் அரசனிடம் அனுப்பி: நியாயாதி 11:16-17உபா 23:7உபா 2:4-25ஆதி 32:3-4ஆதி 36:31-39யோசு 9:9மல்கி 1:2ஒபதி 1:10-12
“உமது சகோதரனான இஸ்ரயேல் சொல்வதாவது, எங்களுக்கு நேரிட்ட கஷ்டங்களையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர். எங்கள் முற்பிதாக்கள் எகிப்திற்குப் போனார்கள். நாங்களும் பல ஆண்டுகள் அங்கே குடியிருந்தோம். எகிப்தியர் எங்களையும், எங்கள் முற்பிதாக்களையும் துன்புறுத்தினார்கள். உபா 26:6யாத் 12:40ஆதி 46:6அப் 7:15ஆதி 15:13அப் 7:19யாத் 1:11-14யாத் 1:16 ஆனாலும் நாங்கள் யெகோவாவிடம் அழுதபோது அவர் எங்கள் அழுகையைக் கேட்டு, ஒரு தூதனை அனுப்பி எங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தார். யாத் 14:19யாத் 23:20யாத் 33:2யாத் 3:2-9யாத் 2:23-24யாத் 14:10யாத் 6:5
“இப்போது நாங்கள் உமது பிரதேசத்தின் எல்லையிலுள்ள காதேஸ் என்னும் பட்டணத்தில் இருக்கிறோம். தயவுசெய்து உமது நாட்டின் வழியாகக் கடந்துசெல்ல எங்களை அனுமதியும். நாங்கள் எந்தவொரு வயலின் வழியாகவோ, திராட்சைத் தோட்டத்தின் வழியாகவோ செல்லமாட்டோம். எந்தவொரு கிணற்றிலிருந்து தண்ணீர் குடிக்கவுமாட்டோம்; நாங்கள் அரசனின் பெருந்தெருவழியாகவே போவோம். உமது நாட்டைக் கடந்து முடிக்கும்வரை வலதுபக்கமோ, இடது பக்கமோ திரும்பமாட்டோம் என்று சொல்லுங்கள்” என்றான். உபா 2:27உபா 2:1-4உபா 2:29எண் 21:1எண் 21:22-24
அவ்வாறே அவர்கள் சொன்னபோது, ஏதோம் பதிலாக,
“நீங்கள் நாட்டின் வழியாகக் கடந்துபோக முடியாது. அப்படிப்போக முயற்சித்தால், நாங்கள் அணிவகுத்து வந்து உங்களை வாளினால் தாக்குவோம்” என்றான்.
திரும்பவும் இஸ்ரயேலர் அவனிடம்: உபா 2:28உபா 2:6யாத் 12:38
“நாங்கள் உமது பிரதான வீதியிலே மாத்திரம் போவோம். நாங்களோ, எங்கள் வளர்ப்பு மிருகங்களோ உங்கள் தண்ணீரைக் குடித்தால் அதற்குரிய பணத்தை நாங்கள் தருவோம். நாங்கள் எங்கள் கால்களால் நடந்து உமது நாட்டைக் கடந்துசெல்ல மட்டும் விரும்புகிறோமே தவிர வேறோன்றும் இல்லை” என்றார்கள்.
அதற்கு அவன்: ஆமோ 1:11நியாயாதி 11:17எசேக் 35:5-11ஆதி 27:41ஆதி 32:6நியாயாதி 11:20எண் 20:18ஒபதி 1:10-15
“நீங்கள் என் நாட்டின் வழியாகக் கடந்துசெல்லவே முடியாது” என்று பதிலளித்தான்.
பின்பு ஏதோம் அவர்களுக்கு எதிராகப் பெரிதும் வலிமையுமான படையுடன் புறப்பட்டு வந்தான். ஏதோமியர் இஸ்ரயேலரைத் தங்கள் பிரதேசத்தின் வழியாகக் கடந்துபோகவிட மறுத்தபடியால், இஸ்ரயேலர் அங்கிருந்து திரும்பிப் போனார்கள். நியாயாதி 11:18உபா 2:29உபா 2:27உபா 2:4-8உபா 23:7நியாயாதி 11:24
ஆரோனின் மரணம்
முழு இஸ்ரயேல் சமுதாயமும் காதேஸை விட்டுப் புறப்பட்டு ஓர் என்னும் மலைக்கு வந்து சேர்ந்தார்கள். எண் 20:1எண் 20:14எண் 21:4எசேக் 47:19எசேக் 48:28எண் 13:26எண் 20:16எண் 33:36-38 ஏதோமின் எல்லைக்கு அருகிலுள்ள ஓர் என்னும் மலையிலே யெகோவா மோசேக்கும், ஆரோனுக்கும் சொன்னதாவது, எண் 33:37 “ஆரோன் தன் முன்னோர்களுடன் சேர்க்கப்படப்போகிறான். நான் இஸ்ரயேலருக்குக் கொடுக்கப்போகும் நாட்டிற்குள் அவன் போவதில்லை. ஏனெனில் நீங்கள் இருவரும் மேரிபாவின் தண்ணீரண்டையில் எனது கட்டளைக்கு எதிராகக் கலகம் பண்ணினீர்கள். ஆதி 25:8உபா 32:502 நாளாக 34:28எண் 20:10-12எண் 27:13எண் 31:2ஆதி 15:15ஆதி 25:17 ஆகையால் நீ ஆரோனையும், அவன் மகன் எலெயாசாரையும் கூட்டிக்கொண்டு ஓர் மலைக்கு வா. எண் 33:38-39 அங்கே ஆரோனின் உடைகளைக் கழற்றி அவன் மகன் எலெயாசாருக்கு உடுத்து. ஏனெனில் ஆரோன் அங்கே இறந்து தன் முன்னோர்களுடன் சேர்க்கப்படுவான்” என்றார். எண் 20:24யாத் 29:29-30எபி 7:11எபி 7:23-24ஏசா 22:21-22
யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே செய்தான். மக்கள் கூட்டம் முழுவதும் பார்த்துக்கொண்டிருக்கையில் அவர்கள் ஓர் என்னும் மலைக்குப் போனார்கள். அங்கே மோசே ஆரோனின் உடைகளைக் கழற்றி, அவன் மகன் எலெயாசாருக்கு உடுத்தினான். அங்கே அந்த மலை உச்சியில் ஆரோன் இறந்தான். மோசேயும், எலெயாசாரும் கீழே இறங்கிவந்தார்கள். உபா 10:6யாத் 29:29-301 நாளாக 22:11-121 நாளாக 22:171 நாளாக 28:5-92 பேது 1:15அப் 20:25-29உபா 31:7-8 முழு இஸ்ரயேல் சமுதாயமும் ஆரோன் இறந்துவிட்டதை அறிந்தபோது, அவனுக்காக அழுது முப்பது நாட்கள் துக்கங்கொண்டாடினார்கள். உபா 34:82 நாளாக 35:24-25அப் 8:2ஆதி 1:10