இரண்டாம் குடிமதிப்பு
கொள்ளைநோய் நீங்கியபின் யெகோவா மோசேயிடமும் ஆரோனின் மகனான ஆசாரியன் எலெயாசாரிடமும் கூறியதாவது, எண் 25:9 “நீங்கள் முழு இஸ்ரயேல் சமுதாயத்தையும் குடும்பம் குடும்பமாக குடிமதிப்பிடுங்கள். இஸ்ரயேலின் இராணுவத்தில் பணிபுரியக்கூடிய இருபது வயதும், அதற்கு மேற்பட்ட வயதும் உடையவர்களைக் கணக்கிடுங்கள்” என்றார். யாத் 38:25-26எண் 1:2-3யாத் 30:11-16 எனவே மோசேயும், ஆசாரியன் எலெயாசாரும் யோர்தானுக்கு அருகே, எரிகோவுக்கு எதிராகவுள்ள மோவாப் சமவெளியில் அவர்களுடன் பேசினார்கள். எண் 22:1எண் 33:48எண் 26:63எண் 35:1உபா 34:1உபா 34:6உபா 34:8உபா 4:46-49 “யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடி உங்களில் இருபது வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் உடையவர்களைக் குடிமதிப்பிடுங்கள்” என்றார்கள். எண் 1:11 நாளாக 21:1
எகிப்திலிருந்து வெளியேவந்த இஸ்ரயேலர் இவர்களே:
இஸ்ரயேலின் மூத்த மகனான ரூபனின் சந்ததிகளாவன, 1 நாளாக 5:31 நாளாக 5:1யாத் 6:14ஆதி 46:8-9ஆதி 29:32ஆதி 49:2-3
ஆனோக் மூலமாக ஆனோக்கிய வம்சமும்,
பல்லூ மூலமாக பல்லூவிய வம்சமும் வந்தன.
எஸ்ரோன் மூலமாக எஸ்ரோனிய வம்சமும்,
கர்மீயின் மூலமாக கர்மீய வம்சமும் வந்தன.
ரூபனின் வம்சங்கள் இவைகளே: 43,730 பேர் அவர்களில் கணக்கிடப்பட்டார்கள். ஆதி 46:9எண் 1:21எண் 2:11எண் 26:1எண் 26:21
பல்லூவின் மகன் எலியாப், எலியாபின் மகன்கள் நெமுயேல், தாத்தான், அபிராம் என்பவர்கள். இஸ்ரயேல் சமுதாயத்திற்கு அதிகாரிகளாயிருந்த தாத்தானும் அபிராமுமே மோசேயையும் ஆரோனையும் எதிர்த்துக் கலகம் பண்ணினார்கள். கோராகைப் பின்பற்றியவர்கள் யெகோவாவுக்கு விரோதமாகக் கலகம்பண்ணியபோது இவர்களும் அவர்களோடிருந்தார்கள். எண் 1:16எண் 16:1-35யூதா 1:11சங் 106:17 பூமி பிளவுண்டு கோராகுடன் சேர்த்து அவர்களை விழுங்கிப்போட்டது. நெருப்பு 250 பேரை சுட்டெரித்தபோது, கோராகைப் பின்பற்றியவர்களும் செத்தார்கள். அந்த நிகழ்ச்சி இஸ்ரயேலுக்கு ஒரு எச்சரிப்பின் அடையாளமாய் இருந்தது. எண் 16:382 பேது 2:6எண் 16:31-351 கொரி 10:6-101 சாமு 2:34எசேக் 14:8எரே 29:22யூதா 1:7 ஆனாலும், கோராகின் சந்ததிகள் எல்லோருமே சாகவில்லை. யாத் 6:24உபா 24:16சங் 42:11 நாளாக 6:22-28எண் 16:33எண் 16:5சங் 44:1சங் 45:1
வம்சம் வம்சமாக சிமியோனின் சந்ததிகளாவன. 1 நாளாக 4:24யாத் 6:15ஆதி 46:101 இராஜா 7:21
நெமுயேல் மூலமாக நெமுயேலின் வம்சமும்,
யாமின் மூலமாக யாமினிய வம்சமும்,
யாகீன் மூலமாக யாகீனிய வம்சமும் வந்தன.
சேராகின் மூலமாக சேராகிய வம்சமும், ஆதி 46:10
சாவூலின் மூலமாக சாவூலிய வம்சமும் வந்தன.
சிமியோனின் வம்சங்கள் இவையே. 22,200 பேர் அவர்களில் கணக்கிடப்பட்டார்கள். எண் 1:22-23எண் 2:12-13
வம்சம் வம்சமாக காத்தின் சந்ததிகளாவன: ஆதி 46:16எண் 2:14
சிப்போனின் மூலமாக சிப்போனிய வம்சமும்,
அகியின் மூலமாக அகியரின் வம்சமும்,
சூனியின் மூலமாக சூனியரின் வம்சமும் வந்தன.
ஒஸ்னியின் மூலமாக ஒஸ்னிய வம்சமும், ஆதி 46:16
ஏரியின் மூலமாக ஏரிய வம்சமும் வந்தன.
ஆரோதியின் மூலமாக ஆரோதிய வம்சமும், ஆதி 46:16
அரேலியின் மூலமாக அரேலிய வம்சமும் வந்தன.
காத்தின் வம்சங்கள் இவையே. 40,500 பேர் அவர்களில் கணக்கிடப்பட்டார்கள். எண் 1:24-25எண் 2:14-15
ஏர், ஓனான் ஆகியோர் யூதாவின் மகன்கள். ஆனால் அவர்கள் கானான் நாட்டில் இறந்துபோனார்கள். ஆதி 46:121 நாளாக 2:3-8ஆதி 38:1-10
வம்சம் வம்சமாக யூதாவின் சந்ததிகளாவன: ஆதி 46:12நெகே 11:241 நாளாக 2:3-81 நாளாக 4:21ஆதி 38:11ஆதி 38:14ஆதி 38:26-30ஆதி 38:5
சேலாவின் மூலமாக சேலாவிய வம்சமும்,
பாரேஸின் மூலமாக பாரேஸிய வம்சமும்,
சேராவின் மூலமாக, சேராவிய வம்சமும் வந்தன.
பாரேஸின் சந்ததிகளாவன:
எஸ்ரோன் மூலமாக எஸ்ரோனிய வம்சமும்,
ஆமூலின் மூலமாக ஆமூலிய வம்சமும் வந்தன.
யூதாவின் வம்சங்கள் இவையே. 76,500 பேர் அவர்களில் கணக்கிடப்பட்டார்கள். 1 நாளாக 5:2ஆதி 49:8எபி 7:14எண் 1:26-27எண் 2:3-4சங் 115:14
வம்சம் வம்சமாக இசக்காரின் சந்ததிகளாவன: 1 நாளாக 7:1ஆதி 46:13ஆதி 30:17-18எண் 2:5
தோலாவின் மூலமாக தோலாவிய வம்சமும்,
பூவாவின் மூலமாக பூவாவிய வம்சமும் உண்டாயின.
யாசூபின் மூலமாக யாசூபிய வம்சமும், ஆதி 46:13
சிம்ரோனின் மூலமாக சிம்ரோனிய வம்சமும் உண்டாயின.
இசக்காரின் வம்சங்கள் இவையே. 64,300 பேர் அவர்களில் கணக்கிடப்பட்டார்கள். எண் 1:28-29எண் 2:5-6
வம்சம் வம்சமாக செபுலோன் சந்ததிகளாவன: ஆதி 46:14ஆதி 30:19-20
சேரேத்தின் மூலமாக செரேத்திய வம்சமும்,
ஏலோனின் மூலமாக ஏலோனிய வம்சமும்,
யாலயேலின் மூலமாக யாலயேலிய வம்சமும் வந்தன.
செபுலோனின் வம்சங்கள் இவையே. 60,500 பேர் அவர்களில் கணக்கிடப்பட்டார்கள். எண் 1:30-31எண் 2:7-8
வம்சம் வம்சமாக மனாசே, எப்பிராயீம் வழியாக வந்த யோசேப்பின் சந்ததிகளாவன: ஆதி 46:20ஆதி 41:51-52ஆதி 48:13-20ஆதி 48:5
மனாசேயின் சந்ததிகள்: யோசு 17:11 நாளாக 7:14-19எண் 36:1உபா 3:15ஆதி 48:14நியாயாதி 5:14எண் 32:39-40
மாக்கீரின் மூலமாக மாகீரிய வம்சம் வந்தது.
மாகீர், கீலேயாத்தின் தகப்பன் கீலேயாத்தின் வழியாக கீலேயாத்திய வம்சம் வந்தது.
கீலேயாத்தின் சந்ததிகளாவன: நியாயாதி 6:11நியாயாதி 6:24நியாயாதி 6:34யோசு 17:2நியாயாதி 8:2
ஈயேசேரின் மூலமாக ஈயேசேரியரின் வம்சமும்,
ஏலேக்கின் மூலமாக ஏலேக்கிய வம்சமும் வந்தன.
அஸ்ரியேலின் மூலமாக அஸ்ரியேலிய வம்சமும்,
சீகேமின் மூலமாக சீகேமிய வம்சமும் வந்தன.
செமிதாவின் மூலமாக செமிதாவிய வம்சமும்,
எப்பேரின் மூலமாக ஏப்பேரிய வம்சமும் வந்தன.
எப்பேரின் மகனான செலொப்பியாத்திற்கு மகன்கள் இருக்கவில்லை. அவனுக்கு மகள்கள் மட்டுமே இருந்தார்கள். அவர்களின் பெயர்கள் மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என்பனவாகும். எண் 27:1எண் 36:10-12
மனாசேயின் வம்சங்கள் இவைகளே: 52,700 பேர் அவர்களில் கணக்கிடப்பட்டார்கள். எண் 1:34-35எண் 2:20-21
வம்சம் வம்சமாக எப்பிராயீம் சந்ததிகளாவன: 1 நாளாக 7:20-21
சுத்தெலாகின் மூலமாக சுத்தெலாகிய வம்சமும்,
பெகேரின் மூலமாக பெகேரிய வம்சமும்,
தாகானின் மூலமாக தாகானிய வம்சமும் வந்தன.
சுத்தெலாதின் சந்ததிகளாவன:
ஏரானின் மூலமாக ஏரானிய வம்சம் வந்தது.
எப்பிராயீமின் வம்சங்கள் இவைகளே. 32,500 பேர் அவர்களில் எண்ணப்பட்டார்கள். எண் 1:32-33எண் 2:18-19
வம்சம் வம்சமாக இவர்கள் யோசேப்பின் சந்ததிகளாவர்.
வம்சம் வம்சமாக பென்யமீன் சந்ததிகளாவன: 1 நாளாக 8:11 நாளாக 7:6-12ஆதி 46:2ஆதி 46:21
பேலாவின் மூலமாக பேலாவிய வம்சமும்,
அஸ்பேலின் மூலமாக அஸ்பேலின் வம்சமும்,
அகிராமின் மூலமாக அகிராமிய வம்சமும் வந்தன.
சுப்பாமின் மூலமாக சுப்பாமிய வம்சமும், ஆதி 46:21
உப்பாமின் மூலமாக உப்பாமிய வம்சமும் வந்தன.
ஆர்த், நாகமான் மூலமாக வந்த பேலாவின் சந்ததிகளாவன: 1 நாளாக 8:3
ஆரேதின் மூலமாக ஆரேதிய வம்சமும்,
நாகமானின் மூலமாக நாகமானிய வம்சமும் வந்தன.
பென்யமீனின் வம்சங்கள் இவையே: 45,600 பேர் அவர்களில் கணக்கிடப்பட்டார்கள். ஆதி 46:21எண் 1:36-37எண் 2:22-23
வம்சம் வம்சமாக தாணின் சந்ததிகளாவன: ஆதி 46:23
சூகாமின் மூலமாக சூகாமிய வம்சம் உண்டாயிற்று.
தாணின் வம்சங்களாவன; அவர்கள் அனைவரும் சூகாமிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள். 64,400 பேர் அவர்களில் கணக்கிடப்பட்டார்கள். எண் 1:38-39எண் 2:25-26
வம்சம் வம்சமாக ஆசேரின் சந்ததிகளாவன: 1 நாளாக 7:30ஆதி 46:17
இம்னாவின் மூலமாக இம்னாவிய வம்சமும்;
இஸ்வியின் மூலமாக இஸ்விய வம்சமும்;
பெரீயாவின் மூலமாக பெரீயாவிய வம்சமும் வந்தன;
பெரீயா சந்ததியின் மூலமாக வந்தவர்கள்:
ஏபேரின் மூலமாக ஏபேரிய வம்சமும்,
மல்கியேலின் மூலமாக மல்கியேலிய வம்சமும் வந்தன.
ஆசேருக்கு செராக்கு என்னும் பெயருள்ள ஒரு மகள் இருந்தாள். ஆதி 46:17
ஆசேரின் வம்சங்கள் இவைகளே: 53,400 பேர். அவர்களில் கணக்கிடப்பட்டார்கள். எண் 1:40-41எண் 2:27-28
வம்சம் வம்சமாக நப்தலியின் சந்ததிகளாவன: 1 நாளாக 7:13ஆதி 46:24
யாத்சியேலின் மூலமாக யாத்சியேலிய வம்சமும்;
கூனியின் மூலமாக கூனியரின் சந்ததியும் வந்தன;
எத்செரின் மூலமாக எத்சேரிய வம்சமும், 1 நாளாக 7:13
சில்லேமின் மூலமாக சில்லேமிய வம்சமும் உண்டாயின.
நப்தலியின் வம்சங்கள் இவையே. 45,400 பேர் அவர்களில் கணக்கிடப்பட்டார்கள். எண் 1:42-43எண் 2:29-30
இஸ்ரயேலிய மனிதர்களின் மொத்த எண்ணிக்கை 6,01,730 பேர். எண் 1:46யாத் 12:37யாத் 38:26யோபு 12:14யோபு 12:20-23யோபு 12:9-10நெகே 9:23எண் 11:21
யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: “பெயர்களின் எண்ணிக்கை அடிப்படையில் நாடு அவர்களுக்கு உரிமைச்சொத்தாகப் பகிர்ந்தளிக்கப்படவேண்டும். யோசு 11:23யோசு 14:1சங் 105:44தானி 7:27எசேக் 47:22ஆதி 12:2ஆதி 12:7மத் 5:5 கணக்கிடப்பட்டவர்களில் பெரிய குழுவினருக்கு பெரிதான உரிமைச்சொத்தும், சிறிய குழுவிற்குச் சிறிதான உரிமைச்சொத்தும் கொடு. கணக்கிடப்பட்டவர்களின் எண்ணிக்கையின்படியே ஒவ்வொரு குழுவும் உரிமைச்சொத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். எண் 33:54யோசு 17:14எண் 32:3எண் 32:5 சீட்டுப்போடுவதன் மூலமே நாடு பங்கிடப்படவேண்டும் என்பதில் கவனமாயிரு. ஒவ்வொரு குழுவும் உரிமையாக்கிக்கொள்ளும் நிலம் அவர்களின் முற்பிதாக்களின் கோத்திரப் பெயர்களின் எண்ணிக்கைப்படியே இருக்கவேண்டும். எண் 33:54எண் 34:13யோசு 14:2யோசு 11:23அப் 1:26கொலோ 1:12யோசு 17:14யோசு 18:10-11 ஒவ்வொரு உரிமைச்சொத்து நிலமும் பெரிய குழுக்களுக்குள்ளும், சிறிய குழுக்களுக்குள்ளும் சீட்டுப்போட்டே பங்கிடப்படவேண்டும்” என்றார். 1 கொரி 12:4ரோம 11:7
வம்சம் வம்சமாக எண்ணப்பட்ட லேவியர்கள் இவர்களே. ஆதி 46:111 நாளாக 6:1யாத் 6:16-191 நாளாக 6:16-30எண் 3:1-4எண் 35:2-3
கெர்சோனின் மூலமாக கெர்சோனிய வம்சமும்,
கோகாத்தின் மூலமாக கோகாத்திய வம்சமும்,
மெராரியின் மூலமாக மெராரிய வம்சமும் வந்தன.
லேவியின் மற்ற வம்சங்களாவன: யாத் 6:20எண் 16:1எண் 3:17-21
லிப்னீய வம்சம்,
எப்ரோனிய வம்சம்,
மகலிய வம்சம்,
மூசிய வம்சம்,
கோராகிய வம்சம் என்பவைகளே.
அம்ராமின் முற்பிதா கோகாத்; அம்ராமின் மனைவியின் பெயர் யோகெபேத். அவள் லேவிய சந்ததியைச் சேர்ந்தவள். அவள் எகிப்திலே லேவிக்குப் பிறந்தவள். அவள், ஆரோன், மோசே ஆகியோரையும் அவர்களின் சகோதரியான மிரியாமையும் அம்ராமுக்குப் பெற்றாள். யாத் 6:20யாத் 2:1-2லேவி 18:12 நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் ஆகியோரின் தகப்பன் ஆரோன். எண் 3:2எண் 3:8 நாதாபும், அபியூவும் அங்கீகரிக்கப்படாத நெருப்பினால் யெகோவாவுக்கு முன்பாகக் காணிக்கையைச் செலுத்தியபோது இறந்துபோனார்கள். லேவி 10:1-2எண் 3:41 நாளாக 24:1-2
கணக்கிடப்பட்டபடி, ஒரு மாதமும் அதற்கு மேற்பட்ட வயதும் உடையவர்களான லேவிய ஆசாரியர்களின் மொத்தத்தொகை 23,000 பேர். இவர்களுக்கு மற்ற இஸ்ரயேலருக்குள் உரிமைச்சொத்து கிடைக்காதபடியால், லேவியர் அவர்களுடன் சேர்த்து எண்ணப்படவில்லை. உபா 10:9எண் 1:49எண் 3:39எண் 35:2-8உபா 14:27-29உபா 18:1-2யோசு 13:14யோசு 13:33
யோர்தானுக்கு அருகே எரிகோவுக்கு எதிராகவுள்ள மோவாப் சமவெளியில் மோசேயும், ஆசாரியன் எலெயாசாரும் இஸ்ரயேலரைக் கணக்கெடுத்தபோது கணக்கிடப்பட்டவர்கள் இவர்களே. எண் 26:3 ஆனால் முன்பு மோசேயினாலும், ஆசாரியன் ஆரோனாலும் சீனாய் வனாந்திரத்தில் கணக்கிடப்பட்ட இஸ்ரயேலர்களில் ஒருவனும் இவர்கள் மத்தியில் இருக்கவில்லை. உபா 2:14-151 கொரி 10:5உபா 4:3-4எபி 3:17எண் 1:1-2எண் 14:29 ஏனெனில், “அந்த இஸ்ரயேலர் பாலைவனத்தில் நிச்சயம் சாவார்கள்” என யெகோவா அவர்களுக்குச் சொல்லியிருந்தார். அவ்வாறே எப்புன்னேயின் மகன் காலேபையும், நூனின் மகன் யோசுவாவையும் தவிர வேறு ஒருவரும் உயிரோடிருக்கவில்லை. 1 கொரி 10:5-6எண் 14:38ரோம 11:22எபி 3:17-18எண் 14:28-30எண் 14:35சங் 90:3-7உபா 2:14-15