எண்ணாகமம் 33

Numbers 33

இஸ்ரயேலரின் பயணம்

இஸ்ரயேலர், மோசே ஆரோன் என்பவர்களின் தலைமையின்கீழ் தங்கள் பிரிவுகளின்படியே எகிப்தைவிட்டு வெளியேறியபோது, அவர்கள் பயணத்தில் தரித்துநின்ற இடங்களாவன. சங் 77:20மீகா 6:41 சாமு 12:8யாத் 12:37யாத் 12:51யாத் 13:18யோசு 24:5 யெகோவாவின் கட்டளைப்படியே, இஸ்ரயேலர் பயணித்த பயணங்களை, மோசே எழுதிவைத்தான். அவர்கள் பயணித்த பயணங்களின் விவரங்கள்: எண் 9:17-23உபா 1:2உபா 10:11எண் 10:13எண் 10:6

பஸ்காவுக்கு அடுத்தநாளான முதலாம் மாதத்தின் பதினைந்தாம் நாளில் 1 இஸ்ரயேலர் ராமசேஸ் நகரத்தை விட்டுப் புறப்பட்டார்கள். எல்லா எகிப்தியர்களும் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே அவர்கள் துணிச்சலுடன் அணிவகுத்து வெளியே போனார்கள். யாத் 14:8யாத் 12:37யாத் 13:4யாத் 12:2ஆதி 47:11ஏசா 52:12மீகா 2:13சங் 105:38 எகிப்தியர்களோ தங்களுக்குள்ளே யெகோவா சாகடித்த முதற்பேறானவர்களையெல்லாம் அடக்கம் செய்துகொண்டிருந்தார்கள். ஏனெனில், யெகோவா அவர்களுடைய தெய்வங்களின்மேல் நியாயத்தீர்ப்பைக் கொண்டுவந்திருந்தார். யாத் 12:12ஏசா 19:1செப்ப 2:11யாத் 18:11வெளி 12:7-9யாத் 12:29-30சங் 105:36

இஸ்ரயேலர் ராமசேஸை விட்டுப் புறப்பட்டு, சுக்கோத்தில் முகாமிட்டார்கள். யாத் 12:37

சுக்கோத்திலிருந்து புறப்பட்டு, பாலைவனத்தின் ஓரமாயுள்ள ஏத்தாமில் முகாமிட்டார்கள். யாத் 13:20

ஏத்தாமிலிருந்து புறப்பட்டு, பாகால் செபோனுக்கு கிழக்கேயுள்ள பிகாஈரோத் பள்ளத்தாக்கிற்குத் திரும்பி, மிக்தோலுக்கு அருகே முகாமிட்டார்கள். யாத் 14:2யாத் 14:9எண் 33:8

ஈரோத் பள்ளத்தாக்கிலிருந்து புறப்பட்டு, கடலைக் கடந்து பாலைவனத்திற்குப் போய், ஏத்தாம் பாலைவனத்தில் மூன்றுநாள் பயணம்பண்ணி மாராவில் முகாமிட்டார்கள். யாத் 14:21-31யாத் 15:22-26

மாராவிலிருந்து புறப்பட்டு, ஏலிமுக்கு வந்தார்கள். அங்கே பன்னிரண்டு நீரூற்றுக்களும், எழுபது பேரீச்சமரங்களும் இருந்தன. அங்கே அவர்கள் முகாமிட்டார்கள். யாத் 15:27

ஏலிமிலிருந்து புறப்பட்டு, செங்கடலுக்கு அருகே முகாமிட்டார்கள். யாத் 16:1யாத் 17:1

செங்கடலில் இருந்து புறப்பட்டு, சீன் பாலைவனத்தில் முகாமிட்டார்கள். யாத் 16:1

சீன் பாலைவனத்திலிருந்து புறப்பட்டு, தொப்காவில் முகாமிட்டார்கள்.

தொப்காவிலிருந்து புறப்பட்டு, ஆலூசில் முகாமிட்டார்கள்.

ஆலூசிலிருந்து புறப்பட்டு, ரெவிதீமில் முகாமிட்டார்கள். அங்கே மக்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இருக்கவில்லை. யாத் 17:1-8யாத் 19:2

ரெவிதீமிலிருந்து புறப்பட்டு, சீனாய் பாலைவனத்தில் முகாமிட்டார்கள். யாத் 19:1-2யாத் 16:1

சீனாய் பாலைவனத்திலிருந்து புறப்பட்டு, கிப்ரோத் அத்தாவில் முகாமிட்டார்கள். எண் 11:34உபா 1:6எண் 10:11-13எண் 10:33எண் 11:4

கிப்ரோத் அத்தாவிலிருந்து புறப்பட்டு, ஆஸ்ரோத்தில் முகாமிட்டார்கள். எண் 11:35

ஆஸ்ரோத்திலிருந்து புறப்பட்டு, ரித்மாவில் முகாமிட்டார்கள். எண் 12:16

ரித்மாவிலிருந்து புறப்பட்டு, ரிம்மோன் பேரேசில் முகாமிட்டார்கள்.

ரிம்மோன் பேரேசிலிருந்து புறப்பட்டு, லிப்னாவில் முகாமிட்டார்கள்.

லிப்னாவிலிருந்து புறப்பட்டு, ரீசாவில் முகாமிட்டார்கள். உபா 1:1

ரீசாவிலிருந்து புறப்பட்டு, கேலத்தாவில் முகாமிட்டார்கள்.

கேலத்தாவிலிருந்து புறப்பட்டு, சாப்பேர் மலையில் முகாமிட்டார்கள்.

சாப்பேர் மலையிலிருந்து புறப்பட்டு, ஆரதாவில் முகாமிட்டார்கள்.

ஆரதாவிலிருந்து புறப்பட்டு, மக்கெலோத்தில் முகாமிட்டார்கள்.

மக்கெலோத்திலிருந்து புறப்பட்டு, தாகாத்தில் முகாமிட்டார்கள்.

தாகாத்திலிருந்து புறப்பட்டு, தாராகில் முகாமிட்டார்கள்.

தாராகிலிருந்து புறப்பட்டு, மித்காவில் முகாமிட்டார்கள்.

மித்காவிலிருந்து புறப்பட்டு, அஸ்மோனாவில் முகாமிட்டார்கள்.

அஸ்மோனாவிலிருந்து புறப்பட்டு, மோசெரோத்தில் முகாமிட்டார்கள். உபா 10:5-6

மோசெரோத்திலிருந்து புறப்பட்டு, பெனெயாக்கானில் முகாமிட்டார்கள். உபா 10:61 நாளாக 1:43ஆதி 36:27

பெனெயாக்கானிலிருந்து புறப்பட்டு கித்காத்தில் முகாமிட்டார்கள். உபா 10:7

கித்காத்திலிருந்து புறப்பட்டு, யோத்பாத்தாவில் முகாமிட்டார்கள். உபா 10:7

யோத்பாத்தாவிலிருந்து புறப்பட்டு, எப்ரோனாவில் முகாமிட்டார்கள்.

எப்ரோனாவிலிருந்து புறப்பட்டு, எசியோன் கேபேரில் முகாமிட்டார்கள். உபா 2:81 இராஜா 22:481 இராஜா 9:262 நாளாக 20:36எண் 14:25

எசியோன் கேபேரிலிருந்து புறப்பட்டு, சீன் பாலைவனத்திலுள்ள காதேசில் முகாமிட்டார்கள். எண் 20:1எண் 27:14உபா 32:51எண் 13:21

காதேசிலிருந்து புறப்பட்டு, ஏதோமின் எல்லையிலுள்ள ஓர் மலையில் முகாமிட்டார்கள். எண் 21:4எண் 20:22-23எண் 20:16 யெகோவாவின் கட்டளைப்படி ஆசாரியன் ஆரோன், “ஓர்” என்னும் மலையில் ஏறிப்போய், இஸ்ரயேலர் எகிப்திலிருந்து புறப்பட்ட நாற்பதாம் வருடம் ஐந்தாம் மாதம், முதலாம் நாளில் அங்கே இறந்தான். உபா 10:6உபா 32:50எண் 20:24-28 “ஓர்” என்னும் மலையில் ஆரோன் இறந்தபோது அவனுக்கு வயது நூற்று இருபத்துமூன்று.

கானானின் தெற்கு பகுதியில் வாழ்ந்த கானானிய அரசன் ஆராத், இஸ்ரயேலர் வருவதைப்பற்றிக் கேள்விப்பட்டான். எண் 21:1-9

அவர்கள் ஓர் மலையில் இருந்து புறப்பட்டு, சல்மோனாவில் முகாமிட்டார்கள். எண் 21:4

சல்மோனாவில் இருந்து புறப்பட்டு, பூனோனில் முகாமிட்டார்கள்;

பூனோனில் இருந்து புறப்பட்டு, ஒபோத்தில் முகாமிட்டார்கள். எண் 21:10

ஒபோத்தில் இருந்து புறப்பட்டு மோவாபின் எல்லையிலுள்ள அபாரீமின் மேடுகளில் முகாமிட்டார்கள். எண் 21:11

அந்த இய்யாபாரீம் மேடுகளிலிருந்து புறப்பட்டு, தீபோன்காத்தில் முகாமிட்டார்கள்.

தீபோன்காத்திலிருந்து புறப்பட்டு, அல்மோன் திப்லதாயில் முகாமிட்டார்கள். எசேக் 6:14ஏசா 15:2எரே 48:18எரே 48:22எண் 32:34

அல்மோன் திப்லதாயில் இருந்து புறப்பட்டு, நேபோவுக்கு அருகேயுள்ள அபாரீம் மலைகளில் முகாமிட்டார்கள். உபா 32:49உபா 34:1எண் 21:20எண் 27:12

அபாரீம் மலைகளிலிருந்து புறப்பட்டு, எரிகோவுக்கு எதிரே யோர்தானுக்கு அண்மையில் மோவாப் சமவெளிகளில் முகாமிட்டார்கள். எண் 22:1 மோவாப் சமவெளிகளில் யோர்தான் ஒரம் நெடுகிலும் பெத்யெசிமோத் தொடங்கி ஆபேல் சித்தீம்வரை முகாமிட்டார்கள். யாத் 25:10யாத் 25:23யாத் 25:5எசேக் 25:9யோசு 13:20யோசு 2:1எண் 25:1-9

எரிகோவுக்கு எதிரே யோர்தானுக்கு அருகேயுள்ள மோவாபின் சமவெளிகளில் யெகோவா மோசேயுடன் பேசினார். எண் 33:48-49 அவர் அவனிடம், “நீ இஸ்ரயேலருடன் பேசிச் சொல்லவேண்டியதாவது: நீங்கள் யோர்தானைக் கடந்து கானான் நாட்டிற்குப் போகும்போது, யோசு 3:17உபா 9:1உபா 7:1 அங்கே உங்களுக்கு முன்பாக அந்நாட்டில் குடியிருக்கிறவர்களை எல்லாம் வெளியே துரத்திவிடுங்கள். அத்துடன் அவர்களுடைய செதுக்கப்பட்ட எல்லா சிலைகளையும், வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகங்களையும் அழித்து, உயர்ந்த மேடைகளையெல்லாம் உடைத்துவிடுங்கள். யாத் 23:24லேவி 26:1உபா 20:16-18உபா 7:2-5உபா 12:2-3நியாயாதி 2:2உபா 12:30-31உபா 7:25-26 நீங்கள் அந்நாட்டை உங்கள் உரிமையாக்கி அங்கே குடியேறுங்கள். ஏனெனில் அந்நாட்டை நீங்கள் உரிமையாக்கும்படி நான் அதை உங்களுக்குக் கொடுத்திருக்கிறேன். உபா 11:31தானி 4:17தானி 4:25தானி 4:32உபா 32:8எரே 27:5-6யோசு 21:43சங் 115:16 நீங்கள் அந்நாட்டை உங்கள் வம்சங்களின் எண்ணிக்கையின்படியே பங்கிடுங்கள். பெரிய குழுவினருக்கு பெரிய உரிமைச்சொத்தையும், சிறிய குழுவினருக்குச் சிறிய உரிமைச்சொத்தையும் கொடுங்கள். சீட்டின்படி எது எவர்களுக்கு விழுகிறதோ அதுவே அவர்களுக்குரியதாகும். உங்கள் முற்பிதாக்களின் கோத்திரங்களின்படியே அதைப் பங்கிட்டுக்கொள்ளுங்கள். எண் 26:53-56யோசு 15:1-12யோசு 16:1-4யோசு 17:1-13யோசு 18:11

“ ‘ஆனால் அந்நாட்டில் குடியிருப்பவர்களை நீங்கள் வெளியே துரத்திவிடாவிட்டால், நீங்கள் அங்கு விட்டுவிட்டவர்கள், உங்கள் கண்களுக்குக் கூரிய கருக்குகளாகவும், உங்கள் விலாக்களுக்கு முட்களாகவும் இருப்பார்கள். நீங்கள் வாழப்போகும் நாட்டில், அவர்கள் உங்களைத் துன்புறுத்துவார்கள். நியாயாதி 2:3சங் 106:34-36யோசு 23:12-13உபா 7:16உபா 7:4யாத் 23:33எசேக் 28:24நியாயாதி 1:21-36 அப்பொழுது நான் அவர்களுக்குச் செய்யத் திட்டமிட்டதை உங்களுக்கே செய்வேன் என்றார்.’ ” உபா 28:63உபா 29:28எசேக் 33:24-29யோசு 23:15-16லேவி 18:28லேவி 20:23லூக் 21:23-242 நாளாக 36:17-20