கிறிஸ்து இயேசுவின் ஊழியர்களான பவுலும், 2 கொரி 1:1அப் 16:12-15ரோம 1:1கொலோ 1:1-21 கொரி 1:1-21 தெச 1:11 தீமோ 3:82 பேது 1:1
தீமோத்தேயுவும், பிலிப்பி பட்டணத்தில் கிறிஸ்து இயேசுவில் இருக்கும் எல்லாப் பரிசுத்தவான்களுக்கும், அவர்களோடுகூட திருச்சபைத் தலைவர்களுக்கும், உதவி ஊழியர்களுக்கும் எழுதுகிறதாவது:
நம்முடைய பிதாவாகிய இறைவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. ரோம 1:72 கொரி 1:21 பேது 1:2
ஜெபமும் நன்றி செலுத்துதலும்
நான் உங்களை நினைக்கும் போதெல்லாம், என் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். 1 கொரி 1:41 தெச 1:2-3பிலே 1:4-52 தீமோ 1:3எபே 1:15-16கொலோ 1:3-41 தெச 3:9ரோம 1:8-9 உங்கள் எல்லோருக்காகவும் நான் மன்றாடும் பொழுதெல்லாம், எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் மன்றாடுகிறேன். 1 தெச 1:2ரோம 1:92 யோவா 1:4பிலி 2:2எபே 1:14-231 தெச 2:19-20கொலோ 2:5பிலே 1:7 ஏனெனில் நான் அங்கே வந்த முதல் நாளிலிருந்து இன்றுவரை, நற்செய்திப் பணியில் நீங்கள் என்னோடு பங்காளர்களாய் இருக்கிறீர்கள். பிலி 4:14-15எபி 3:14பிலி 1:7பிலே 1:172 கொரி 8:11 யோவா 1:3அப் 16:12-40கொலோ 1:21-23 இப்படிப்பட்ட நல்ல செயலை உங்களில் தொடங்கிய இறைவன், அதைக் கிறிஸ்து இயேசுவின் நாள்வரை நடத்தி முடிப்பார் என்று நான் நிச்சயமுடையவனாய் இருக்கிறேன். 1 தெச 5:23-24பிலி 2:13எபே 4:12எபி 13:20-21சங் 138:81 பேது 5:10ரோம 8:28-301 கொரி 1:8
உங்கள் எல்லோரையும்பற்றி, இவ்வாறு நான் நினைப்பது சரியானதே. ஏனெனில் எப்பொழுதும் என் இருதயத்தில் நீங்கள் இடங்கொண்டிருக்கிறீர்கள்; நான் சிறையில் இருக்கிறபோதும், நற்செய்தியின் சார்பாகப் பேசி, அதை உறுதிசெய்கிற போதும், நீங்களும் எல்லோரும் இறைவன் எனக்குக் கொடுத்திருக்கிற கிருபையில், என்னுடன் பங்குடையவர்களாய் இருக்கிறீர்கள். 2 கொரி 7:3பிலி 1:52 தீமோ 2:9கொலோ 4:18அப் 16:23-25அப் 20:23எபே 3:1எபே 6:20 கிறிஸ்து இயேசு கொண்டிருந்த உருக்கமான அன்போடு, உங்களெல்லோரையும் நான் காண விரும்புகிறேன் என்பதற்கு, இறைவனே சாட்சியாயிருக்கிறார். ரோம 1:9பிலி 4:11 தெச 2:82 தீமோ 1:4கொலோ 2:1ரோம 9:1எரே 31:20பிலே 1:12
என் மன்றாடல் இதுவே: உங்கள் அன்பு மென்மேலும் அறிவாற்றலிலும், ஆழமான நுண்ணறிவிலும் பெருகி வளரவேண்டும். 1 தெச 3:12கொலோ 1:92 பேது 1:5-6பிலே 1:6கொலோ 3:101 தெச 4:9-102 கொரி 8:71 பேது 1:22 அப்பொழுது மிகச் சிறந்தது எது என்று நிதானித்தறிய உங்களால் முடியும். கிறிஸ்து மீண்டும் வரும் நாள்வரைக்கும் தூய்மையுள்ளவர்களாகவும், குற்றம் காணப்படாதவர்களாகவும், ரோம 12:21 தெச 3:131 தெச 5:23ரோம 2:18எபே 5:101 யோவா 4:1பிலி 1:61 தெச 5:21 இயேசுகிறிஸ்துவின் மூலமாக வரும் நீதியின் கனிகளில், நிறைவுள்ளவர்களாகவும் நீங்கள் இருப்பீர்கள். அது இறைவனுக்கு மகிமையையும், துதியையும் ஏற்படுத்தும். எபி 12:11யோவா 15:8யோவா 15:4-5கொலோ 1:10கலா 5:22-23யாக் 3:17-18பிலி 4:17ரோம 6:22
சிறையில் பவுல்
பிரியமானவர்களே, எனக்கு நடந்தவைகள் உண்மையிலே நற்செய்தியைப் பரப்புவதற்கு உதவியாக இருந்தது என்பதை நீங்கள் அறியவேண்டும் என்று நான் விரும்புகிறேன். 2 தீமோ 2:9ரோம 8:28அப் 11:19-21ரோம 8:37அப் 22:1-30அப் 8:4எஸ்த 9:1அப் 28:1-31 ஏனெனில் நான் கிறிஸ்துவுக்காகவே சிறையில் விலங்கிடப்பட்டிருக்கிறேன் என்பது அரண்மனைக் காவலர்கள் எல்லோருக்கும், மற்றவர்களுக்கும்கூட நன்கு தெளிவாகியிருக்கிறது. 2 தீமோ 2:9எபே 3:1அப் 26:29எபே 6:20பிலி 1:7பிலி 4:221 பேது 4:12-16அப் 20:23-24 நான் விலங்கிடப்பட்டிருப்பதால், கர்த்தரில் இருக்கிற சகோதரர்களில் அநேகர், பயமின்றியும் தைரியத்துடனும் நற்செய்தியைப் பேசுவதற்கு உற்சாகம் கொண்டிருக்கிறார்கள். எபே 6:19-201 தெச 2:2லூக் 1:74கொலோ 4:4பிலி 1:7கொலோ 4:72 கொரி 1:3-7அப் 4:23-31
சிலர் பொறாமையினாலும், போட்டி மனப்பான்மையினாலும், கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள் என்பது உண்மையே. ஆனால் மற்றவர்களோ நல்ல எண்ணத்துடனேயே அதைச் செய்கிறார்கள். ரோம 16:17-18பிலி 2:31 பேது 5:2-42 கொரி 11:132 கொரி 4:51 கொரி 3:3-42 கொரி 1:19மத் 23:5 இவர்கள் அன்புடனே இதைச் செய்கிறார்கள். நான் இங்கே சிறையில் போடப்பட்டிருப்பது, நற்செய்தியின் சார்பாகப் பேசியதற்காகவே என்பதை இவர்கள் அறிந்திருக்கிறார்கள். 2 கொரி 2:172 கொரி 4:1-2யோபு 6:14பிலி 1:10பிலி 1:12பிலி 1:7சங் 69:26யோபு 16:4 மற்றவர்களோ உண்மை மனதுடன் அல்லாமல், தன்னல நோக்கத்துடனேயே கிறிஸ்துவை பிரசங்கிக்கிறார்கள். நான் விலங்கிடப்பட்டிருக்கையில், எனக்கு இன்னும் கஷ்டத்தை உண்டாக்கலாம் என்ற எண்ணத்துடனே அவர்கள் இப்படிச் செய்கிறார்கள். 2 தீமோ 1:11-12பிலி 2:31 கொரி 9:16-172 தீமோ 4:6-71 தீமோ 2:72 தீமோ 4:16அப் 22:1அப் 26:1 ஆனால் நோக்கம் எதுவாயிருந்தால் என்ன? தவறான நோக்கத்துடனோ, உண்மையான நோக்கத்துடனோ, எல்லா வழிகளிலும் கிறிஸ்து பிரசங்கிக்கப்படுகிறார் என்பதே முக்கியம். இதனால் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். லூக் 9:50மாற் 9:38-401 கொரி 15:11பிலி 1:14-171 கொரி 14:15மத் 23:132 யோவா 1:9-11மாற் 12:40
ஆம், நான் இனிமேலும் மகிழ்ச்சியடைவேன். ஏனெனில் உங்கள் மன்றாட்டினாலும், இயேசுகிறிஸ்துவின் ஆவியானவர் கொடுக்கும் உதவியினாலும், எனக்கு நடந்தவைகள் என் விடுதலைக்கே ஏதுவாகும் என்று அறிவேன். ரோம 8:28அப் 16:72 கொரி 1:11கலா 4:6ரோம 8:91 கொரி 4:17எபே 6:18-191 பேது 1:11 நான் எவ்வகையிலும் வெட்கப்படக்கூடாது என்பதும், வாழ்வதாலோ இறப்பதாலோ, இப்பொழுதுபோலவே எப்பொழுதும் கிறிஸ்து என் உடலில் மேன்மைப்படுவதற்கு போதிய அளவு தைரியம் இருக்கவேண்டும் என்பதும், எனது ஆவலும் எதிர்பார்ப்புமாகும். 1 பேது 4:161 கொரி 6:20ஏசா 54:41 தெச 5:231 யோவா 2:28எபே 6:19-202 கொரி 4:102 தீமோ 4:6-7 ஏனெனில், நான் வாழ்வேன் என்றால் அது கிறிஸ்துவுக்காகவேயாகும். சாவது என்றால் அதுவும் எனக்கு இலாபமே. கலா 2:202 கொரி 5:82 கொரி 5:1பிலி 1:232 கொரி 5:6பிலி 1:20கொலோ 3:4வெளி 14:13 இந்த உடலில் நான் இன்னும் உயிர் வாழ்ந்துகொண்டிருந்தால், அது கிறிஸ்துவுக்குள் பலனுள்ள வேலையாகும். இப்படியிருந்தும் நான் எதைத் தெரிந்துகொள்வேன்? அது எனக்குத் தெரியாது. 1 பேது 4:2கலா 2:20பிலி 1:242 கொரி 10:3அப் 3:17சங் 71:18கொலோ 2:1யாத் 32:1 இந்த இரண்டுக்குமிடையே நான் சிக்குண்டிருக்கிறேன்: நான் இந்த உடலை விட்டுப்பிரிந்து கிறிஸ்துவுடன் இருக்கவே விரும்புகிறேன். இதுவே மிகச் சிறந்தது; 2 கொரி 5:8சங் 17:15வெளி 14:132 தீமோ 4:6அப் 7:59யோவா 17:24லூக் 23:43வெளி 7:14-17 ஆனால் நான் இந்த உடலில் இருப்பது, அதையும்விட உங்களுக்கு மிகவும் அவசியமாயிருக்கிறது. யோவா 16:7பிலி 1:22பிலி 1:25-26அப் 20:29-31 இதை நான் நம்புகிறபடியால், உங்களுடன் நான் இருப்பேன் என்றும், நீங்கள் உங்கள் விசுவாசத்தின் வளர்ச்சிக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் தொடர்ந்து உழைப்பேன் என்றும் நான் அறிவேன். பிலி 2:242 கொரி 1:24எபே 4:11-13அப் 20:25ரோம 1:11-12ரோம 15:13ரோம 5:21 பேது 1:8 எனவே நான் மீண்டும் உங்களிடம் வருவதானால், என் நிமித்தம் கிறிஸ்து இயேசுவில் உங்களுக்கு இருக்கும் மகிழ்ச்சி உங்களில் நிரம்பிவழியும். 2 கொரி 1:142 கொரி 5:12பிலி 3:3பிலி 4:42 கொரி 7:6யோவா 16:22யோவா 16:24பிலி 2:16-18
நற்செய்திக்கு ஏற்ற வாழ்க்கை
என்னதான் நடந்தாலும், கிறிஸ்துவின் நற்செய்திக்கு ஏற்றவிதத்தில் நீங்கள் நடந்துகொள்ளுங்கள். அப்பொழுது நான் வந்து உங்களைப் பார்க்கக்கூடியதாய் இருந்தாலும், வரமுடியாதிருந்து உங்களைப்பற்றிக் கேள்விப்பட்டாலும், நீங்கள் நற்செய்தியின் விசுவாசத்திற்காகக் கூடப்போராடி ஒரே மனதுடன் ஒன்றாக நிலைத்து நிற்கிறீர்கள் என்றும், எபே 4:11 கொரி 16:13-141 கொரி 1:102 பேது 3:14பிலி 2:1-2கொலோ 1:10யூதா 1:31 தெச 4:1 உங்களை எதிர்க்கிறவர்களுக்கு எவ்வழியிலும் பயப்படாமல் இருக்கிறீர்கள் என்றும் நான் அறியவேண்டும். நீங்கள் பயப்படாமல் இருக்கிறது அவர்கள் அழிந்துபோவதற்கும் நீங்கள் இரட்சிக்கப்படுவதற்கும் ஒரு அடையாளமாக இருக்கும். இது இறைவனின் செயலாகும். 2 தீமோ 1:7-82 தெச 1:5-6மத் 10:28ஏசா 51:72 தீமோ 2:11-121 பேது 4:12-14மத் 5:10-12ஏசா 12:2 ஏனெனில் கிறிஸ்துவுக்காக அவரில் விசுவாசமாய் இருப்பதற்காக மட்டுமல்ல, அவருக்காகத் துன்பப்படுவதற்காகவும் உங்களுக்கு ஒரு நன்கொடையாக கொடுக்கப்பட்டுள்ளது. யாக் 1:21 பேது 4:13அப் 5:41ரோம 5:3அப் 14:22மத் 5:11-12எபே 2:8யாக் 1:17-18 நீங்கள் எனக்கு ஏற்பட்ட, போராட்டத்தைக் கண்டீர்கள். அதே போராட்டம் உங்களுக்கும் ஏற்படுகிறது. அது எனக்கு இன்னும் உண்டு என்பதையும் இப்பொழுது கேள்விப்படுகிறீர்கள். 1 தெச 2:2அப் 16:19-402 தீமோ 4:7ரோம 8:35-372 தீமோ 2:10-12எபி 12:4யோவா 16:33எபே 6:11-18