பிலிப்பியர் 4

Philippians 4

ஒற்றுமையாக நிலைத்திருக்க அழைப்பு

ஆகையால் நான் அன்பாயிருக்கிற எனக்கு பிரியமானவர்களே, என் நண்பர்களே, அப்படியே நீங்களும் கர்த்தரில் உறுதியாய் நிற்கவேண்டும். நீங்களே நான் காண விரும்புகிற என் மகிழ்ச்சியும், என் கிரீடமுமானவர்கள். பிலி 1:271 கொரி 16:13சங் 27:14பிலி 2:161 கொரி 15:58எபி 10:23யோவா 15:3-4பிலி 1:8

கர்த்தரில் ஒரே மனதுள்ளவர்களாய் இருக்கும்படி, எயோதியாளிடமும் சிந்திகேயாளிடமும் கேட்டுக்கொள்கிறேன். எபி 12:141 கொரி 1:10மாற் 9:501 பேது 3:8-11பிலி 2:2-3எபே 4:1-81 தெச 5:13ஆதி 45:24 ஆம், என் உண்மையுள்ள உடன் கூட்டாளியே, உன்னிடமும் கேட்கிறேன். இந்தப் பெண்களுக்கு உதவிசெய். இவர்கள் கிலெமெந்தோடும், மற்ற எனது உடன் ஊழியரோடும் சேர்ந்து, என்னுடன் நற்செய்திக்காக போராடினார்கள். இவர்கள் எல்லோருடைய பெயர்களும் ஜீவப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. வெளி 3:5லூக் 10:20வெளி 13:8பிலி 1:27வெளி 21:27அப் 16:14-18வெளி 17:8யாத் 32:32

கடைசி புத்திமதிகள்

எப்பொழுதும் கர்த்தரில் மகிழ்ச்சியாய் இருங்கள். நான் மீண்டும் உங்களுக்குச் சொல்கிறேன்: மகிழ்ச்சியாயிருங்கள்! 1 தெச 5:16-18ரோம 12:12யாக் 1:2-4பிலி 3:1மத் 5:12ரோம 5:2-31 பேது 4:13சங் 146:2 உங்கள் கனிவான குணம் எல்லோருக்கும் தெளிவாகத் தெரிந்திருக்கட்டும். கர்த்தர் விரைவில் வருகிறார். யாக் 5:8-9மத் 6:25தீத் 3:2எபி 10:371 பேது 4:7வெளி 22:71 கொரி 6:7எபி 10:25 எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால் எல்லாவற்றிலும் நன்றி செலுத்துவதோடு, உங்கள் விண்ணப்பங்களை, மன்றாட்டினாலும், வேண்டுதலினாலும் இறைவனிடம் அர்ப்பணியுங்கள். நீதி 3:5-61 பேது 5:7மத் 6:25-33சங் 55:221 தெச 5:17-18மத் 7:7-8சங் 34:5-7மத் 6:8 அப்பொழுது, விளங்கிக்கொள்ளும் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட இறைவனுடைய சமாதானமும், அமைதியும் உங்கள் இருதயங்களையும், மனங்களையும் கிறிஸ்து இயேசுவில் காத்துக்கொள்ளும். யோவா 14:27ஏசா 26:32 தெச 3:16கொலோ 3:15சங் 29:11யோவா 16:33ரோம 15:13கலா 5:22

இறுதியாக பிரியமானவர்களே, உண்மையானது எவையோ, மதிப்பானது எவையோ, சரியானது எவையோ, தூய்மையானது எவையோ, அன்பானது எவையோ, அத்துடன் பாராட்டுதலுக்குத் தகுந்தது எவையோ, மேன்மையும் புகழ்ச்சியுமானது எவைகளோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள். யாக் 3:17தீத் 2:7ரோம 12:9-212 கொரி 8:21கலா 5:221 தெச 5:21-222 பேது 1:3-7எபே 5:9 நீங்கள் என்னிடமிருந்து எவைகளை எல்லாம் கற்றுக்கொண்டீர்களோ, பெற்றுக்கொண்டீர்களோ, கேட்டீர்களோ, அல்லது என் நடத்தையில் கண்டீர்களோ, அவைகளையே கைக்கொள்ளுங்கள். அப்பொழுது சமாதானத்தின் இறைவன் உங்களோடு இருப்பார். யாக் 1:221 தெச 4:1-8பிலி 3:172 பேது 1:10யோவா 13:17ரோம 16:20பிலி 4:72 கொரி 13:11

நன்கொடைகளுக்கு நன்றி

இப்பொழுதாவது எனக்கு மீண்டும் உதவிசெய்ய உங்களுக்கு முடியுமாயிருப்பதைக்குறித்து கர்த்தரில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் என்னில் அக்கறை கொண்டிருந்தீர்கள் என்பது உண்மை. ஆனால் அதைக் காண்பிப்பதற்கு உங்களுக்குத் தருணம் கிடைக்கவில்லை என்பதும் எனக்குத் தெரியும். 2 கொரி 11:92 கொரி 7:6-7கலா 6:10கலா 6:62 கொரி 6:7பிலி 1:3பிலி 2:30சங் 85:6 நான் தேவையுள்ளவனாக இருப்பதனால் இதைக் கூறவில்லை. ஏனெனில், நான் எந்தச் சூழ்நிலையிலும் மனநிறைவுடன் இருக்கக் கற்றுக்கொண்டேன். 1 தீமோ 6:6-9எபி 13:5-6மத் 6:31-342 கொரி 9:8பிலி 3:82 கொரி 6:102 கொரி 8:91 கொரி 4:11-12 ஏழ்மையுடன் வாழவும், நிறைவுடன் வாழவும் எனக்குத் தெரியும். வயிறார சாப்பிட்டிருக்கவும், பசியாக இருக்கவும், நிறைவுடனும் தேவையுடனும் வாழவும், எப்பொழுதும் எல்லாச் சூழ்நிலைகளிலும், எப்படி மனநிறைவுடன் வாழ்வது என்பதன் இரகசியத்தையும் நான் கற்றுக்கொண்டுள்ளேன். மத் 11:292 கொரி 12:7-102 கொரி 11:272 கொரி 11:92 கொரி 6:4-10உபா 32:101 கொரி 4:9-13ஏசா 8:11 எனக்குப் பெலன் கொடுக்கிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டு. ஏசா 41:102 கொரி 12:9-10எபே 6:10கொலோ 1:11ஏசா 40:29-31எபே 3:16யோவா 15:72 கொரி 3:4-5

இப்படி இருந்தும், எனது கஷ்டங்களில் நீங்களும் பங்குகொண்டது நல்லதே. எபி 13:16பிலி 1:7எபி 10:341 இராஜா 8:18கலா 6:6மத் 25:211 தீமோ 6:183 யோவா 1:5-8 மேலும் பிலிப்பியர்களே, நான் மக்கெதோனியாவைவிட்டுப் புறப்பட்டுவந்து, உங்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கித்த ஆரம்ப நாட்களில், உங்களைத்தவிர வேறு எந்த ஒரு திருச்சபையும், கொடுக்கல் வாங்கல் காரியங்களில் என்னுடன் பங்குகொள்ளவில்லை என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்; பிலி 1:52 கொரி 11:8-122 கொரி 12:11-15அப் 16:402இராஜா 5:162இராஜா 5:20 ஏனெனில் நான் தெசலோனிக்கேயாவில் இருக்கையிலும் எனக்குத் தேவை இருந்தபோதெல்லாம், இரண்டொருதரம் எனக்கு நீங்கள் உதவி அனுப்பினீர்கள். 1 தெச 2:9அப் 17:11 தெச 2:18 நான் உங்கள் நன்கொடையைப் பெறுவதை நாடவில்லை. ஆனால் உங்கள் கணக்கில் நற்பலன்கள் அதிகரிக்கவேண்டும் என்றே விரும்புகிறேன். தீத் 3:14எபி 6:102 கொரி 9:9-13யோவா 15:81 பேது 5:22 கொரி 9:5யோவா 15:16லூக் 14:12-14 எனவே நான் எல்லாவற்றையும் முழுமையாகப் பெற்றுக்கொண்டேன். என்னிடம் இப்போது தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது. நான் நீங்கள் அனுப்பிய நன்கொடையை எப்பாப்பிராத்துவிடமிருந்து பெற்றுக்கொண்டேன், அவை இறைவனைப் பிரியப்படுத்துகிற நறுமணமுள்ள காணிக்கைகளும், ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய பலியும் ஆகும். எபி 13:162 கொரி 9:12பிலி 4:12எபே 5:2பிலி 2:25-261 பேது 2:52 கொரி 2:14-162 தெச 1:3 என் இறைவன் கிறிஸ்து இயேசுவில் உள்ள தமது மகிமை நிறைந்த செல்வத்தின்படியே உங்கள் எல்லாக் குறைகளையும் நிறைவாக்குவார். 2 கொரி 9:8-11சங் 84:111 பேது 5:10சங் 23:1-51 தீமோ 6:17மீகா 7:7நீதி 3:9-10உபா 8:3-4

நமது இறைவனும் பிதாவுமாய் இருக்கிறவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். ரோம 11:36சங் 115:1வெளி 14:7வெளி 7:12எபே 3:21கலா 1:4-5யூதா 1:25பிலி 1:11

இறுதி வாழ்த்துதல்

கிறிஸ்து இயேசுவில் இருக்கிற எல்லாப் பரிசுத்தவான்களுக்கும் வாழ்த்துதல் சொல்லுங்கள். கலா 1:21 கொரி 1:2கொலோ 4:10-14எபே 1:1பிலே 1:23-24பிலி 1:1ரோம 16:21-22ரோம 16:3-16

என்னுடன் இருக்கிற சகோதர சகோதரிகள், உங்களுக்கு வாழ்த்துதல் அனுப்புகிறார்கள்.

எல்லாப் பரிசுத்தவான்களும் உங்களுக்கு வாழ்த்துதல் அனுப்புகிறார்கள். விசேஷமாக ரோமப் பேரரசன் சீசரின் அரண்மனையைச் சேர்ந்த பரிசுத்தவான்களும் வாழ்த்துதல் அனுப்புகிறார்கள். பிலி 1:132 கொரி 13:13ரோம 16:161 பேது 5:13அப் 9:13எபி 13:243 யோவா 1:14

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியுடன் இருப்பதாக. ஆமென். 2 கொரி 13:14ரோம 16:20ரோம 16:23