கிறிஸ்து இயேசுவின் ஊழியனாய் இருக்கின்ற பவுலாகிய நான் அப்போஸ்தலனாய் இருக்கும்படி அழைக்கப்பட்டிருக்கிறேன். இறைவனுடைய நற்செய்தியை அறிவிப்பதற்காகப் பிரித்தெடுக்கப்பட்டும் இருக்கிறேன். அப் 9:15ரோம 15:161 கொரி 1:1எரே 1:5கொலோ 1:1தீத் 1:12 கொரி 1:1ரோம 1:9 அவர் இந்த நற்செய்தியை, முன்னதாகவே பரிசுத்த வேதவசனங்களில், தமது இறைவாக்கினர்மூலம் வாக்களித்தார். தீத் 1:2லூக் 1:70ரோம 3:21ரோம 16:26அப் 10:43ரோம 3:2லூக் 24:26-27அப் 26:6 இறைவனுடைய மகனைப்பற்றியதே இந்த நற்செய்தி. இவர் பூமியில் மாம்சத்தின்படி, தாவீதின் சந்ததியில் இருந்தார். கலா 4:4மத் 1:1எரே 23:5-6யோவா 1:14லூக் 1:31-33மத் 1:20-23ஆமோ 9:11ஏசா 9:6-7 பரிசுத்தமுள்ள ஆவியானவரின் வல்லமையினால், இறந்தோரிலிருந்து உயிருடன் எழுப்பப்பட்டு, இவர் இறைவனுடைய மகன் என்று வல்லமையுடன் அறிவிக்கப்பட்டார். இவரே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து. எபி 5:5-6எபே 1:19-23எபி 9:142 கொரி 13:4அப் 13:33-35அப் 5:30-32யோவா 2:18-211 பேது 1:11 இவர் மூலமாக, இவருடைய பெயரின் நிமித்தம் நாங்கள் கிருபையையும், அப்போஸ்தல ஊழியத்தையும் பெற்றோம். விசுவாசத்தினால் வரும் கீழ்ப்படிதலுக்கு யூதரல்லாதவர்களிலிருந்தும் இயேசுகிறிஸ்துவுக்கு சொந்தமாகும்படி மக்களை அழைப்பதற்கே இந்தக் கிருபையைப் பெற்றுக்கொண்டோம். அப் 9:15ரோம 16:26அப் 6:7மல்கி 1:111 கொரி 15:10எபி 5:9ரோம 12:31 பேது 2:9-10 நீங்களும் இயேசுகிறிஸ்துவுக்கு சொந்தமாகும்படி அழைக்கப்பட்டவர்களுக்குள் இடம்பெற்றிருக்கிறீர்கள். 1 பேது 2:9வெளி 17:142 பேது 1:10எபி 3:11 கொரி 1:91 பேது 2:212 தீமோ 1:9எபே 1:11
இறைவனால் அன்பு செலுத்தப்பட்டவர்களும், பரிசுத்தவான்களாய் இருக்கும்படி அழைக்கப்பட்டவர்களுமான ரோம் நகரில் இருக்கிற உங்கள் அனைவருக்கும் எழுதுகிறதாவது: கொலோ 1:2யூதா 1:1-2எபே 1:21 தெச 1:12 கொரி 13:142 யோவா 1:32 தெச 3:162 பேது 1:2-3
நம்முடைய பிதாவாகிய இறைவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
பவுல் ரோமுக்குப் போக ஆவல்
முதலாவதாக, உங்கள் விசுவாசம் உலகம் எங்கும் அறியப்படுகிறதினாலே, உங்கள் எல்லோருக்காகவும் இயேசுகிறிஸ்துமூலமாய், என் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். ரோம 16:191 கொரி 1:41 தெச 1:8-9ரோம 6:171 பேது 4:11கொலோ 1:3எபே 1:15பிலி 1:3 எல்லா வேளைகளிலும், என்னுடைய மன்றாட்டுகளில் உங்களை எப்படித் தொடர்ந்து நினைவுகூருகிறேன் என்பதற்கு இறைவனே சாட்சியாய் இருக்கிறார். நான் இறைவனுடைய மகனைப்பற்றிய நற்செய்தியைப் பிரசங்கிக்கிறதினாலே, என் ஆவியில் இறைவனுக்கு ஊழியம் செய்கிறேன். எபே 6:182 தீமோ 1:3எபே 1:16-19ரோம 9:11 தெச 5:172 கொரி 1:231 கொரி 14:14-151 தெச 1:2 இறைவனுடைய சித்தத்தின்படி நான் உங்களிடத்தில் வருவதற்கான வழி இப்பொழுதாவது திறக்கப்பட வேண்டுமென்று மன்றாடுகிறேன். ரோம 15:30-32அப் 18:21யாக் 4:15பிலே 1:221 தெச 2:181 தெச 3:10-11அப் 19:21எபி 13:19
உங்களைப் பெலப்படுத்துவதற்காக, நான் ஆவிக்குரிய வரங்களில் சிலவற்றை உங்களுக்குக் கொடுக்கும்படி, உங்களைக் காண ஆவலாயிருக்கிறேன். 2 பேது 1:122 தெச 3:3ரோம 16:25ரோம 15:292 பேது 3:17-181 பேது 5:102 தெச 2:17அப் 8:15-19 இதனால் உங்களுடைய விசுவாசத்தினாலே நானும், என்னுடைய விசுவாசத்தினாலே நீங்களுமாக நாம் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்திக்கொள்ளலாம். 1 தெச 3:7-103 யோவா 1:3-42 கொரி 7:132 கொரி 7:4-72 பேது 1:1ரோம 15:32தீத் 1:41 தெச 2:17-20 பிரியமானவர்களே, யூதரல்லாத மக்களின் மத்தியில் நான் அறுவடை செய்ததுபோலவே, உங்கள் மத்தியிலும் அறுவடை செய்யும்படி, நான் உங்களிடத்தில் வருவதற்குப் பலமுறை திட்டமிட்டேன்; ஆனாலும் இதுவரைக்கும் வரமுடியாதபடி தடை ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதை நீங்கள் அறியாதிருப்பதை நான் விரும்பவில்லை. அப் 19:21பிலி 4:172 தீமோ 4:171 தெச 2:181 தெச 4:132 கொரி 1:81 கொரி 10:11 கொரி 12:1
நான் கிரேக்கருக்கும், கிரேக்கர் அல்லாதவர்களுக்கும், ஞானிகளுக்கும், மூடர்களுக்கும் கடமைப்பட்டவனாய் இருக்கிறேன். 1 கொரி 9:16-23அப் 9:15கொலோ 3:11அப் 22:21அப் 26:17-18யாக் 3:17-18ரோம 12:162 கொரி 11:19 அதனாலேயே ரோம் நகரில் இருக்கிற உங்களுக்குங்கூட நற்செய்தியைப் பிரசங்கிக்க இவ்வளவு ஆவலாயிருக்கிறேன். ரோம 15:201 கொரி 9:17ஏசா 6:82 கொரி 10:15-161 இராஜா 8:18மத் 9:382 கொரி 8:12அப் 21:13
ஏனெனில் நற்செய்தியைக்குறித்து நான் வெட்கப்படவில்லை. அதுவே விசுவாசிக்கிற ஒவ்வொருவருக்கும் இறைவனுடைய இரட்சிப்பைக் கொடுக்கின்ற வல்லமையாய் இருக்கிறது. அந்த நற்செய்தி முதலாவது யூதர்களுக்கும், பின்பு யூதரல்லாத மக்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. மாற் 8:382 தீமோ 1:81 பேது 4:162 தீமோ 1:12சங் 40:9-10லூக் 9:261 தெச 1:5-61 கொரி 1:18-24 ஏனெனில் இந்த நற்செய்தியில்தான், இறைவனிடமிருந்து வரும் நீதி வெளிப்படுத்தப்படுகிறது. “நீதிமான்கள் விசுவாசத்தினாலே வாழ்வார்கள்” 1 என்று எழுதப்பட்டிருக்கிறபடி, நீதி தொடக்கத்திலிருந்து முடிவுவரை அந்த விசுவாசத்தினாலே வருகிறது. ஆப 2:4கலா 3:11எபி 10:38பிலி 3:9எபி 11:6-7ரோம 9:30ரோம 3:21ரோம 3:3
இறைவனின் கோபம்
தங்களுடைய தீமையினாலே மனிதர்கள் சத்தியத்தை அடக்கி ஒடுக்குகிறார்கள். பக்தியில்லாமை மற்றும் தீமை இவை எல்லாவற்றிற்கும் விரோதமாக, பரலோகத்திலிருந்து இறைவனுடைய கோபம் வெளிப்படுத்தப்படுகிறது. எபே 5:61 தீமோ 4:1-2ரோம 1:32கொலோ 3:62 தெச 2:10ரோம 4:15ரோம 5:9ரோம 6:13 ஏனென்றால், இறைவனைப்பற்றி அறியக்கூடியவை அவர்களுக்குத் தெளிவாக்கப்பட்டிருக்கிறது. அதை இறைவனே அவர்களுக்குத் தெளிவுபடுத்தியிருக்கிறார். அப் 14:16-17சங் 19:1-6ரோம 1:20அப் 17:23-30ஏசா 40:26யோவா 1:9எரே 10:10-13 உலகம் படைக்கப்பட்டதிலிருந்து, இறைவனுடைய நித்திய வல்லமை, இறை இயல்பு ஆகிய இறைவனுடைய காணப்படாத தன்மைகள் தெளிவாகக் காணப்படுகின்றன. படைக்கப்பட்டவைகளிலிருந்து அந்தத் தன்மைகள் விளங்கிக்கொள்ளப்படுகின்றன. இதனால் மனிதர்கள் சாக்குப்போக்குச் சொல்லமுடியாது. ரோம 1:19ஏசா 40:26சங் 19:1-6சங் 8:3சங் 33:6-9ரோம 2:15யோவா 15:22யோவா 1:18
அவர்கள் இறைவனை அறிந்தும்கூட, அவரை இறைவனாக மகிமைப்படுத்தவில்லை, அவருக்கு நன்றி செலுத்தவும் இல்லை. மாறாக அவர்களுடைய சிந்தனை பயனற்றதாகி, அவர்களுடைய உணர்வற்ற இருதயங்கள் இருளடைந்தன. எபே 4:17-182இராஜா 17:15எரே 2:52 தீமோ 3:2சங் 50:23யோவா 3:19வெளி 14:71 பேது 2:9 தங்களை ஞானிகள் என்று சொல்லிக்கொண்டாலும், அவர்கள் மூடர்கள் ஆனார்கள். 1 கொரி 1:19-21நீதி 26:12ரோம 11:25நீதி 25:14எரே 8:8-91 கொரி 3:18-19எரே 10:14ஏசா 47:10 அவர்கள் அழியாமையுடைய மகிமையான இறைவனை வழிபடாமல், மனிதர்கள், பறவைகள், மிருகங்கள், ஊரும் உயிரினங்கள் போன்ற உருவங்களில் செய்யப்பட்ட அழிந்துபோகும் சிலைகளை வழிபட்டனர். சங் 106:20எரே 2:11அப் 17:291 பேது 4:3சங் 115:5-8ரோம 1:25உபா 5:8எசேக் 8:10
ஆகவே இறைவன் அவர்களை அவர்களுடைய பாவ ஆசைகளுக்கு விட்டுவிட்டார். எனவே அவர்கள் ஒருவரோடொருவர் தங்கள் உடல்களை இழிவுபடுத்தும் அசுத்தமான பாலுறவுகளில் ஈடுபட்டார்கள். சங் 81:11-12அப் 7:42அப் 14:16மத் 15:142 தெச 2:10-12எபே 4:18-19ரோம 1:26-28லேவி 18:22 அவர்கள் இறைவனைப்பற்றிய சத்தியத்தைப் புறக்கணித்துப் பொய்யை ஏற்றுக்கொண்டு, படைத்தவரை விட்டுவிட்டு படைக்கப்பட்டவைகளை வழிபட்டு, அவைகளுக்கே பணிசெய்தார்கள். படைத்தவரே என்றென்றும் துதிக்கப்படத்தக்கவர். ஆமென். ஆப 2:18எரே 13:251 யோவா 2:15-16ஏசா 44:20ஆமோ 2:42 கொரி 11:31எரே 10:14-15ரோம 9:5
இதனால், இறைவன் அவர்களை வெட்கக்கேடான காம ஆசைகளுக்கு ஒப்புக்கொடுத்தார். அவர்களுடைய பெண்களுங்கூட இயல்பான பாலுறவை கைவிட்டு, இயல்புக்கு விரோதமான உறவுகளில் ஈடுபட்டார்கள். யூதா 1:71 தீமோ 1:10லேவி 18:22-28ரோம 1:241 கொரி 6:9எபே 4:19ஆதி 19:5நியாயாதி 19:22 அவ்விதமாகவே ஆண்களும், இயல்பான பெண்களுடனான பாலுறவை விட்டுவிட்டு, ஆணுடன் ஆண் உறவுகொள்ளும்படியான காமவேட்கை கொண்டார்கள். ஆண்களுடன் ஆண்கள் அசிங்கமான செயல்களில் ஈடுபட்டார்கள். தங்களுடைய முறைகேடான செயல்களுக்கு ஏற்ற தண்டனையைத் தங்களிலேயேப் பெற்றுக்கொண்டார்கள். லேவி 20:13லேவி 18:22ரோம 1:23-24
மேலும், அவர்கள் இறைவனைப்பற்றிய அறிவைக் காத்துக்கொள்வதை ஒரு தகுதியான செயலாக எண்ணவில்லை. இதனால் அவர்கள் செய்யத் தகாதவைகளைச் செய்யும்படி, இறைவன் அவர்களைச் சீர்கெட்ட சிந்தைக்கும் விட்டுவிட்டார். 2 தெச 2:10-12ரோம 1:21தீத் 1:16எரே 9:6ரோம 1:242 தீமோ 3:8ரோம 8:7-8நீதி 5:12-13 அவர்கள் எல்லாவித அநியாயத்தினாலும், தீமையினாலும், பேராசையினாலும், சீர்கேட்டினாலும் நிறைந்தவர்கள் ஆகிவிட்டார்கள். அவர்கள் பொறாமையினாலும், கொலையினாலும், சண்டையினாலும், வஞ்சனையினாலும், பகையினாலும் நிறைந்திருக்கிறார்கள். 2 கொரி 12:20நீதி 16:28நீதி 26:20சங் 41:7ரோம 3:10 அவர்கள் அவதூறு பேசுவோராயும், தூற்றுகிறவர்களாகவும், இறைவனை வெறுக்கிறவர்களாகவும், அவமரியாதை செய்கிறவர்களாகவும், இறுமாப்புக் கொண்டவர்களாகவும், பெருமை பேசுகிறவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் தீமைசெய்யும் புதிய வழிகளைக் கண்டுபிடிக்கிறார்கள். தங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள். 2 தீமோ 3:2யூதா 1:162 பேது 2:18யாக் 3:5யாக் 4:16ரோம 8:7-8தீத் 3:31 இராஜா 20:11 அவர்கள் உணர்வில்லாதவர்கள், உண்மை இல்லாதவர்கள், அன்பில்லாதவர்கள், இரக்கம் இல்லாதவர்கள். 2 தீமோ 3:3நீதி 18:2ரோம 3:11ஏசா 33:8எரே 4:22மத் 15:162இராஜா 18:14-37ஏசா 27:11 இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்துக்கேத் தகுதியானவர்கள் என்ற இறைவனுடைய நீதியான நியமத்தை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அப்படியிருந்தும்கூட, இந்தக் காரியங்களைத் தாங்கள் தொடர்ந்து செய்கிறதுமல்லாமல், இவைகளைச் செய்கிறவர்களையும் பாராட்டுகிறார்கள். ரோம 1:21ரோம 2:1-5ரோம 6:21சங் 50:18ரோம 1:18லூக் 11:48ரோம 2:21-23அப் 22:20