இறைவனுடைய நீதியான நியாயத்தீர்ப்பு
மற்றவர்களை நியாயந்தீர்க்கிறவனே, நீ சாக்குப்போக்குச் சொல்லமுடியாது. ஏனெனில் எந்தக் காரியங்களில் நீ மற்றவர்களை நியாயந்தீர்க்கிறாயோ, அதே காரியங்களை நீ செய்கிறபடியால், நீ உன்னையே குற்றவாளியெனத் தீர்ப்புச் செய்கிறாய். லூக் 6:37ரோம 2:3யோவா 8:7-9ரோம 2:21-23மத் 7:1-5ரோம 1:18-202 சாமு 12:5-7சங் 50:16-20 இப்படி நடக்கிறவர்களுக்கு விரோதமான இறைவனுடைய நியாயத்தீர்ப்பு, சத்தியத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்றும் நாங்கள் அறிந்திருக்கிறோம். சங் 9:7-8செப்ப 3:5சங் 145:17எரே 12:1சங் 98:92 தெச 1:5-10சங் 96:13வெளி 16:5 ஆகவே நீ ஒரு அற்ப மனிதனாயிருந்தும், நீ மற்றவர்களை நியாயந்தீர்க்கிறாயே. அதே காரியங்களை நீயே செய்யும்போது, இறைவனுடைய நியாயத்தீர்ப்புக்குத் தப்புவாய் என்று நினைக்கிறாயா? நீதி 16:5லூக் 12:14ரோம 1:32மத் 23:331 தெச 5:32 சாமு 10:3தானி 10:19எசேக் 17:15 அல்லது, இறைவனுடைய தயவு உன்னை மனந்திரும்புதலுக்கு வழிநடத்துகிறது என்று உணராமல், அவருடைய தயவு, சகிப்புத்தன்மை, பொறுமை ஆகியவற்றின் நிறைவை ஏளனம் பண்ணுகிறாயா? 2 பேது 3:9ஏசா 30:18யாத் 34:6ரோம 9:22-23தீத் 3:4-6எபே 1:18சங் 86:15எபே 1:7
நீயோ உன் பிடிவாதத்தினாலும், மனந்திரும்பாத இருதயத்தினாலும், இறைவனின் கோபத்தை அவருடைய கோபத்தின் நாளுக்கென குவித்துக்கொண்டு வருகிறாய். அந்த நாளிலே அவருடைய நீதியான நியாயத்தீர்ப்பு வெளிப்படும். பிரச 12:14ரோம 1:18ரோம 2:2-3எபி 3:152 பேது 3:7யூதா 1:6உபா 32:34ரோம 9:22 இறைவன், “ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கேற்பவே பலன் கொடுப்பார்.” 1 சங் 62:12எரே 32:19மத் 16:272 கொரி 5:10எரே 17:10வெளி 20:12வெளி 22:121 கொரி 3:8 நன்மை செய்வதில் சோர்ந்துபோகாமல், மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு இறைவன் நித்திய வாழ்வைக் கொடுப்பார். 2 தீமோ 4:7-8லூக் 8:151 கொரி 15:582 தீமோ 1:101 பேது 1:7-8வெளி 2:10-11எபி 10:35-36ரோம 6:23 ஆனால் சுயநலக்காரருக்கும், சத்தியத்தை புறக்கணித்துத் தீமையைப் பின்பற்றுகிறவர்களுக்கும் கோபமும், உக்கிரகோபமுமே இருக்கும். 1 தீமோ 6:3-42 தெச 1:81 பேது 4:17யோவா 3:18-212 தெச 2:10-12நீதி 13:10வெளி 16:191 கொரி 11:16 தீமைசெய்கிற ஒவ்வொரு மனிதருக்கும் பிரச்சனையும் துன்பமுமே இருக்கும்: அது முதலாவது யூதருக்கும், பின்பு யூதரல்லாத மக்களுக்குமாக இருக்கும்; 1 பேது 4:17எசேக் 18:4ரோம 1:16ரோம 3:29-302 தெச 1:6அப் 13:46-47அப் 18:5-6அப் 3:26 ஆனால், நன்மை செய்கிற ஒவ்வொருவருக்கும் மகிமையும், கனமும், சமாதானமும் இருக்கும். அதுவும் முதலாவது யூதருக்கும், பின்பு யூதரல்லாத மக்களுக்குமாக இருக்கும். ஏசா 32:17ஏசா 26:121 பேது 1:7எண் 6:26யாக் 3:13யோபு 22:21லூக் 1:79ரோம 2:7 ஏனென்றால், இறைவன் பாரபட்சம் காட்டுவதில்லை. உபா 10:17அப் 10:342 நாளாக 19:7கலா 2:6கலா 6:7-8யோபு 34:19உபா 16:19கொலோ 3:25
யூத சட்டத்தை அறியாதவர்களாய்ப் பாவம் செய்கிற எல்லோரும் அந்தச் சட்டத்திற்குப் புறம்பாகவே அழிவார்கள். யூத சட்டத்திற்கு உட்பட்டவர்களாய்ப் பாவம் செய்கிற எல்லோரும் அந்தச் சட்டத்தினாலேயே நியாயந்தீர்க்கப்படுவார்கள். 1 கொரி 9:21கலா 3:10அப் 17:30-31கலா 2:16-19ரோம 2:14-16ரோம 7:7-11ரோம 8:32 கொரி 3:7-9 ஏனெனில் மோசேயின் சட்டத்தைக் கேட்கிறவர்கள் இறைவனுடைய பார்வையில் நீதிமான்கள் அல்ல; மோசேயின் சட்டத்துக்குக் கீழ்ப்படிகிறவர்கள்தான் நீதிமான்கள் ஆக்கப்படுவார்கள். யாக் 1:22-251 யோவா 3:7யாக் 2:21-25ரோம 2:25கலா 2:16லூக் 8:211 யோவா 2:29கலா 3:11-12 உண்மையாகவே யூதரல்லாத மக்களிடம் யூத சட்டம் இல்லாதிருந்தாலும், சட்டம் இல்லாத அவர்கள் சட்டம் சொல்லுகிற காரியங்களை இயல்பாகவே செய்கிறபொழுது, அவர்களே தங்களுக்கான சட்டமாய் இருக்கிறார்கள். ரோம 1:19-20ரோம 2:12ரோம 2:27அப் 17:30அப் 10:35எபே 2:12சங் 147:19-20உபா 4:7 சட்டத்தில் சொல்லப்பட்டவைகள் தங்களுடைய இருதயங்களில் எழுதப்பட்டிருக்கின்றன என்று அவர்கள் நடைமுறைகளில் காண்பிக்கிறார்கள். அவர்களுடைய மனசாட்சியும் அதற்கு சாட்சியிடுகிறது. அவர்களுடைய சிந்தனைகளும் அவர்களை குற்றம் உண்டென்றும் குற்றம் இல்லையென்றும், சுட்டிக்காட்டுகிறது. 2 கொரி 5:112 கொரி 1:12ரோம 1:18-19தீத் 1:151 யோவா 3:19-211 தீமோ 4:2யோபு 27:6ரோம 9:1 ஆகவே என்னுடைய நற்செய்தி அறிவிக்கிறபடியே இயேசுகிறிஸ்துவின் மூலமாக, இறைவன் மனிதர்களுடைய இரகசிய சிந்தனைகளைக்குறித்து நியாயந்தீர்க்கும் நாளில் இவ்விதமாக எல்லோருக்கும் தீர்ப்பளிப்பார். பிரச 12:141 கொரி 4:5அப் 17:31அப் 10:42லூக் 8:17யோவா 5:22-291 பேது 4:5ரோம 14:10-12
யூதர்களும் மோசேயின் சட்டமும்
இப்பொழுது நீ உன்னை யூதன் என்று சொல்லிக்கொள்ளுகிறாய். மோசேயின் சட்டத்தின்மேல் நம்பிக்கை வைத்து இறைவனுடன் உனக்குள்ள உறவைக்குறித்து பெருமை பேசுகிறாய். ரோம 2:23மீகா 3:11ஏசா 48:1-2வெளி 2:9யோவா 5:45மத் 3:9ரோம 2:28-29ரோம 9:32 அவருடைய திட்டத்தை அறிந்து மோசேயின் சட்டத்தினால் நீ அறிவுறுத்தப்பட்டு இருப்பதனால், மேன்மையானவைகளை ஏற்றுக்கொண்டுள்ளதாகச் சொல்லிக்கொள்ளுகிறாய். 1 தெச 5:21யாக் 4:17உபா 4:8பிலி 1:101 கொரி 8:1-22 தீமோ 3:15-17எபி 5:14யோவா 13:17 நீ உன்னை பார்வையற்றோர்களுக்கு ஒரு வழிகாட்டி என்றும், இருளில் இருக்கிறவர்களுக்கு ஒரு வெளிச்சம் என்றும் திட்டமாய் நம்புகிறாய். வெளி 3:17-181 கொரி 4:101 கொரி 8:1-2ஏசா 49:6ஏசா 5:21ஏசா 56:10யோவா 9:34யோவா 9:40-41 அப்படி மோசேயின் சட்டத்திலுள்ள அறிவின் உள்ளடக்கத்தையும், சத்தியத்தையும் நீ பெற்றுக்கொண்டதால், மூடர்களுக்கு அறிவு புகட்டுகிறவனாகவும், குழந்தைகளுக்கான ஆசிரியனாகவும் இருப்பதாக எண்ணுகிறாய். 2 தீமோ 3:5தீத் 1:162 தீமோ 1:131 கொரி 3:1ரோம 6:171 பேது 2:2எபி 5:13மத் 11:25 ஆகவே, மற்றவர்களுக்குப் போதிக்கிற நீ உனக்கே போதிக்கிறதில்லையா? களவு செய்யக்கூடாதென்று பிரசங்கிக்கிற நீ களவுசெய்கிறாயா? 1 கொரி 9:27மத் 23:3-28லூக் 12:47மீகா 3:11லூக் 11:46தீத் 2:1-7சங் 50:16-21ஆமோ 8:4-6 விபசாரம் செய்யக்கூடாதென்று சொல்லுகிற நீ விபசாரம் செய்கிறாயா? விக்கிரகங்களை அருவருக்கிற நீ, கோவில்களைக் கொள்ளையிடுகிறாயா? மல்கி 3:8மத் 12:39அப் 19:37எசேக் 22:11யாக் 4:4எரே 5:7எரே 7:9-10எரே 9:2 மோசேயின் சட்டத்தைக்குறித்து பெருமை பேசுகிற நீ, மோசேயின் சட்டத்தை மீறுகிறதினால் இறைவனை கனவீனம் பண்ணலாமா? யாக் 4:16-17ரோம 2:17யோவா 5:45ரோம 3:2ரோம 9:4யாக் 1:22-27எரே 8:8-9யோவா 9:28-29 அதனால் வேதத்தில் எழுதியிருக்கிறபடி, “உங்கள் நிமித்தம் யூதரல்லாத மக்களிடையே இறைவனுடைய பெயர் நிந்திக்கப்படுகிறதே.” 2 எசேக் 36:20-23ஏசா 52:52 பேது 2:2புலம் 2:15-162 சாமு 12:14தீத் 2:81 தீமோ 6:1தீத் 2:5
மோசேயின் சட்டத்தை நீ கடைப்பிடித்தால் விருத்தசேதனம் பயனுள்ளதுதான். ஆனால், மோசேயின் சட்டத்தை நீ மீறுகிறபோது, விருத்தசேதனம் செய்யப்படாதவனைப்போல் ஆகிவிடுகிறாய். கலா 5:3-6எரே 4:4அப் 7:51கலா 6:15உபா 30:6எரே 9:25-26ரோம 2:23ரோம 2:28 விருத்தசேதனம் செய்யப்படாதவர்கள் மோசேயின் சட்டத்தில் சொல்லப்பட்டவைகளைக் கைக்கொண்டால், அவர்கள் விருத்தசேதனம் செய்யப்பட்டவர்களைப்போல எண்ணப்படமாட்டார்களா? கொலோ 2:111 கொரி 7:18-19ரோம 8:4அப் 10:2-4அப் 10:34-35அப் 11:3-18எபே 2:11ஏசா 56:6-7 தன் உடலிலே விருத்தசேதனம் செய்துகொள்ளாதவனாயிருந்தும், மோசேயின் சட்டத்துக்குக் கீழ்ப்படிகிறவன், உன்னைக் குற்றவாளியெனத் தீர்ப்பான். ஏனெனில் நீ எழுதப்பட்ட ஒழுங்குவிதியையும் விருத்தசேதனத்தையும் உடையவனாயிருந்தும்கூட அதை மீறுகிறவனாகிவிட்டாயே. மத் 12:41-422 கொரி 3:6ரோம 2:29ரோம 7:6-8ரோம 8:4அப் 13:22எசேக் 16:48-52கலா 5:14
வெளித்தோற்றத்தில் மாத்திரம் ஒருவன் யூதனாயிருந்தால், அவன் யூதனல்ல; வெறும் வெளித்தோற்றத்திற்காக உடலில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனமல்ல. கலா 6:15மத் 3:9ரோம 9:6-8வெளி 2:9ஏசா 48:1-2ரோம 4:10-12ஓசி 1:6-91 பேது 3:21 ஒருவன் உள்ளத்தில் யூதனாயிருந்தால், அவனே யூதன்; எழுதப்பட்ட ஒழுங்குவிதியினால் அல்ல, பரிசுத்த ஆவியானவரால் இருதயத்தில் செய்யப்படும் விருத்தசேதனமே விருத்தசேதனம். இப்படிப்பட்ட மனிதனுக்குரிய புகழ்ச்சி மனிதரிடமிருந்து அல்ல, இறைவனிடமிருந்தே வருகிறது. உபா 30:6பிலி 3:3உபா 10:16கொலோ 2:11-12எரே 4:41 தெச 2:41 கொரி 4:51 பேது 3:4