நீதியும் இரக்கமும்
தரியு அரசன் ஆட்சி செய்த நான்காம் வருடம் கிஸ்லேவ் என்னும் ஒன்பதாம் மாதம் நான்காம் நாள், யெகோவாவின் வார்த்தை சகரியாவுக்கு வந்தது. நெகே 1:1எஸ்றா 6:14-15சகரி 1:1ஆகா 2:10ஆகா 2:20 பெத்தேல் நகரத்து மக்கள் சரெத்செர், ரெகெம்மெலெக் என்பவர்களைத் தங்கள் மனிதர்களோடு, யெகோவாவிடம் மன்றாடும்படி அனுப்பினார்கள். சகரி 8:211 இராஜா 13:61 சாமு 13:12எரே 26:19யாத் 32:11எஸ்றா 6:10எஸ்றா 7:15-23எஸ்றா 8:28-30 அவர்கள் வந்து சேனைகளின் யெகோவாவின் ஆலய ஆசாரியர்களிடமும், இறைவாக்கினரிடமும், “பல வருடமாக நாம் கடைப்பிடித்து வந்ததுபோல, ஐந்தாம் மாதத்தில் அழுது புலம்பி உபவாசம் இருக்க வேண்டுமா?” என்று கேட்டார்கள். சகரி 8:19யாக் 4:8-101 கொரி 7:5ஓசி 4:6மல்கி 2:7மத் 9:152இராஜா 25:8-9உபா 17:9-11
அப்பொழுது எல்லாம் வல்ல யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது: ஏசா 10:16 “நீ இந்த நாட்டின் மக்கள் எல்லோரையும், ஆசாரியர்களையும் கேட்கவேண்டியதாவது: கடந்த எழுபது வருடமாக ஐந்தாம் மற்றும் ஏழாம் மாதங்களில் உபவாசமிருந்து துக்கங்கொண்டாடியபோது, உண்மையாக எனக்காகவா உபவாசமிருந்தீர்கள்? சகரி 1:12ஏசா 58:4-61 கொரி 10:31மத் 5:16-18கொலோ 3:23ஏசா 1:11-12மத் 6:16மத் 6:2 நீங்கள் சாப்பிடும்போதும், குடிக்கும்போதும் உங்களுக்காக அல்லவா விருந்து கொண்டாடினீர்கள்? 1 கொரி 11:20-211 கொரி 11:26-29கொலோ 3:17ஓசி 8:131 நாளாக 29:221 கொரி 10:311 சாமு 16:7உபா 12:7 முந்திய இறைவாக்கினரைக்கொண்டு யெகோவா இதைப்பற்றி உங்களுக்கு அறிவிக்கவில்லையா? எருசலேமும் அதன் சுற்றுப்புற பட்டணங்களும் அமைதியாயும் செழிப்பாயும் இருந்தபோதும், தெற்குப் பிரதேசங்களிலும், மேற்கே மலையடிவாரங்களிலும் குடியிருப்புகள் சமாதானமாய் இருந்தபோதும் அவர் இவற்றை அறிவிக்கவில்லையா?” ஏசா 1:16-20எரே 17:26எரே 7:23எசேக் 18:30-32ஏசா 55:6-7எரே 32:44எரே 7:5ஆமோ 5:14-15
யெகோவாவின் வார்த்தை திரும்பவும் சகரியாவுக்கு வந்தது: “சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: ‘நீதியைச் சரியாக வழங்குங்கள். ஒருவரிலொருவர் இரக்கம் காண்பித்து கருணை உள்ளவர்களாய் இருங்கள். மீகா 6:8சங் 82:2-4நீதி 21:3எரே 7:5உபா 10:18-19யாக் 2:13-17எரே 21:12லூக் 11:42 விதவையையோ, தகப்பன் இல்லாத பிள்ளையையோ, பிறநாட்டினனையோ, ஏழையையோ ஒடுக்கவேண்டாம். உங்கள் உள்ளத்தில் ஒருவனுக்கெதிராக ஒருவன் தீய திட்டங்களைச் செய்யக்கூடாது.’ எரே 5:281 யோவா 3:15உபா 27:19ஏசா 1:16-17ஏசா 1:23யாக் 5:4நீதி 22:22-23சங் 21:11
“ஆனால் அவர்கள் நான் சொன்னவற்றைக் கவனிக்க மறுத்தார்கள்; பிடிவாதமாக மறுபக்கம் திரும்பி தங்கள் காதுகளை மூடிக்கொண்டார்கள். நெகே 9:29எரே 8:5ஓசி 4:16அப் 7:57எசேக் 3:7எரே 35:15சகரி 1:42 நாளாக 33:10 அவர்கள் தங்கள் இருதயங்களை வைரத்தைப்போல் கடினமாக்கினார்கள். முந்தைய இறைவாக்கினர்மூலம் சேனைகளின் யெகோவா தம் ஆவியானவரால் கொடுத்த சட்டத்தையோ, வார்த்தைகளையோ கேட்க மறுத்தார்கள். ஆதலால் சேனைகளின் யெகோவா கடுங்கோபங்கொண்டுள்ளார். 2 நாளாக 36:16எசேக் 11:19நெகே 9:29-30அப் 28:27எசேக் 36:26சங் 50:172 தெச 2:10-12தானி 9:11-12
“ ‘நான் கூப்பிட்டபோது அவர்கள் கேட்கவில்லை. அதேபோல் அவர்கள் என்னைக் கூப்பிட்டபோது நானும் கேட்காமலிருந்தேன்,’ என சேனைகளின் யெகோவா சொல்கிறார். நீதி 1:24-28ஏசா 1:15எரே 14:12எரே 11:11மீகா 3:4சங் 81:8-12யாக் 4:3எரே 6:16-17 ‘அவர்களை நாடுகளுக்குள்ளே ஒரு சுழல்காற்றினால் நான் சிதறடித்தேன்; அங்கே அவர்கள் அந்நியராயிருந்தார்கள். இவ்வாறு அவர்கள் விட்டுச்சென்ற நாடு போக்குவரத்து இல்லாமல் பாழாய்ப் போயிற்று. இவ்வாறே அவர்கள் அந்தச் செழிப்பான நாட்டைப் பாழாக்கினார்கள்.’ ” உபா 28:33உபா 28:64எரே 23:19உபா 4:27எரே 5:15உபா 28:49சகரி 2:62 நாளாக 36:21