1 நாளாகமம் 20

1 Chronicles 20
அத்தியாயம் 20

ரப்பாவைப் பிடித்தல்

அடுத்த வருடம், ராஜாக்கள் யுத்தத்திற்குப் புறப்படும் காலம் வந்தபோது, யோவாப் இராணுவ பலத்தைக் கூட்டிக்கொண்டுபோய், அம்மோனியர்களின் தேசத்தை அழித்து ரப்பாவுக்கு வந்து அதை முற்றுகையிட்டான்; தாவீதோ எருசலேமில் இருந்துவிட்டான்; யோவாப் ரப்பாவைத் தாக்கி அதைத் தோற்கடித்தான். 2 சாமு 11:12 சாமு 12:26-31ஆமோ 1:14உபா 3:11எரே 49:2-31 இராஜா 20:221 இராஜா 20:262இராஜா 13:20 தாவீது வந்து, அவர்கள் ராஜாவுடைய தலையின்மேல் இருந்த கிரீடத்தை எடுத்துக்கொண்டான்; அது ஒரு தாலந்து எடையுள்ள பொன்னும் இரத்தினங்கள் பதித்ததுமாகவும் இருந்தது; அது தாவீதின் தலையில் வைக்கப்பட்டது; பட்டணத்திலிருந்து ஏராளமான கொள்ளைப் பொருட்களையும் கொண்டுபோனான். 1 நாளாக 18:112 சாமு 12:30-312 சாமு 8:11-12 பின்பு அதிலிருந்த மக்களை அவன் வெளியே கொண்டுபோய், அவர்களை வாள்களும், கடப்பாரைகளும், கோடரிகளும் செய்கிற பணியில் பலவந்தமாக உட்படுத்தி; இப்படி அம்மோனிய மக்களின் பட்டணங்களுக்கெல்லாம் தாவீது செய்து, எல்லா மக்களோடு எருசலேமிற்குத் திரும்பினான். 1 நாளாக 19:2-51 இராஜா 9:212 சாமு 12:31யாத் 1:14நியாயாதி 8:16-17நியாயாதி 8:6-7யோசு 9:23சங் 21:8-9

பெலிஸ்தர்களோடு யுத்தம்

அதற்குப்பின்பு கேசேரிலே பெலிஸ்தர்களோடு யுத்தம் உண்டாயிற்று; அப்பொழுது ஊசாத்தியனாகிய சிப்பெக்காய் இராட்சத சந்ததியர்களில் ஒருவனான சிப்பாயி என்பவனைக் கொன்றான்; அதினால் அவர்கள் அடக்கப்பட்டார்கள். 2 சாமு 21:18-221 நாளாக 11:292 சாமு 21:15யோசு 12:12யோசு 16:3 திரும்பப் பெலிஸ்தர்களோடு யுத்தம் உண்டாகிறபோது, யாவீரின் மகனாகிய எல்க்கானான் காத்தூரானாகிய கோலியாத்தின் சகோதரனான லாகேமியைக் கொன்றான்; அவனுடைய ஈட்டிக் தாங்கு நெய்கிறவர்களின் படைமரம் அளவு பெரிதாக இருந்தது. 2 சாமு 21:191 சாமு 17:41 சாமு 17:71 சாமு 21:91 சாமு 22:10 மறுபடியும் ஒரு யுத்தம் காத்திலே நடந்தபோது, அங்கே உயரமான ஒரு மனிதன் இருந்தான்; அவனுக்கு ஆறு ஆறு விரலாக இருபத்துநான்கு விரல்கள் இருந்தது, அவனும் இராட்சத சந்ததியாக இருந்து, 2 சாமு 21:20 இஸ்ரவேலை சபித்தான்; தாவீதின் சகோதரனாகிய சிமேயாவின் மகன் யோனத்தான் அவனைக் கொன்றான். 1 நாளாக 2:131 சாமு 16:91 சாமு 17:101 சாமு 17:261 சாமு 17:36ஏசா 37:23 காத்தூரிலிருந்த இராட்சதனுக்குப் பிறந்த இவர்கள் தாவீதின் கையினாலும் அவனுடைய வீரர்களின் கையினாலும் இறந்தார்கள். ரோம 8:31பிரச 9:11எரே 9:23யோசு 14:12