1 நாளாகமம் 23

1 Chronicles 23
அத்தியாயம் 23

லேவியர்கள்

தாவீது வயது சென்றவனும் பூரண வயதுள்ளவனுமானபோது, தன்னுடைய மகனாகிய சாலொமோனை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக்கினான். 1 நாளாக 29:281 நாளாக 28:51 இராஜா 1:33-391 நாளாக 29:22-251 இராஜா 1:11 இராஜா 1:30ஆதி 25:8ஆதி 35:29 இஸ்ரவேலின் எல்லாப் பிரபுக்களையும், ஆசாரியர்களையும், லேவியர்களையும் கூடிவரும்படிச் செய்தான். 1 நாளாக 13:11 நாளாக 28:12 நாளாக 34:29-30யோசு 23:2யோசு 24:1 அப்பொழுது முப்பது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட லேவியர்கள் பெயர்பெயராக எண்ணப்பட்டார்கள்; தலைதலையாக எண்ணப்பட்ட அவர்களுடைய எண்ணிக்கை முப்பத்தெட்டாயிரம். 1 நாளாக 23:24எண் 4:2-49 அவர்களில் இருபத்துநான்காயிரம்பேர் யெகோவாவுடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கிறவர்களும், ஆறாயிரம்பேர் தலைவர்களும் அலுவலர்களும் என்றும், 2 நாளாக 19:8உபா 16:181 நாளாக 23:28-321 நாளாக 26:20-271 நாளாக 26:29-311 நாளாக 6:481 நாளாக 9:28-32அப் 20:28 நான்காயிரம்பேர் வாசல் காக்கிறவர்களாக இருக்கவேண்டும் என்றும், துதி செய்வற்கு தான் செய்துவைத்த கீதவாத்தியங்களால் நான்காயிரம்பேர் யெகோவாவை துதிக்கிறவர்களாக இருக்கவேண்டும் என்றும் தாவீது சொல்லி, 2 நாளாக 29:25-262 நாளாக 8:14ஆமோ 6:5சங் 87:71 நாளாக 15:16-241 நாளாக 16:381 நாளாக 16:41-421 நாளாக 25:1-7 அவர்களை லேவியின் மகன்களாகிய கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்களுடைய குழுக்களின்படி பிரித்தான். 1 நாளாக 6:12 நாளாக 8:141 நாளாக 6:162 நாளாக 29:25எஸ்றா 6:181 நாளாக 24:11 நாளாக 26:12 நாளாக 31:2 கெர்சோனியர்களில், லாதானும், சீமேயும் இருந்தார்கள். 1 நாளாக 26:211 நாளாக 15:71 நாளாக 6:17-20யாத் 6:17 லாதானின் மகன்கள் யெகியேல், சேத்தாம், யோவேல் என்னும் மூன்றுபேர்; இவர்களில் முந்தினவன் தலைவனாக இருந்தான். 1 நாளாக 15:111 நாளாக 15:17-181 நாளாக 15:20-211 நாளாக 15:71 நாளாக 6:33-34 சீமேயின் மகன்கள் செலோமித், ஆசியேல், ஆரான் என்னும் மூன்று பேர்; இவர்கள் லாதான் வம்சத்தார்களின் தலைவர்களாக இறந்தார்கள். யாகாத், சீனா, எயூஷ், பெரீயா என்னும் நான்குபேர்களும் சீமேயின் மகன்களாக இருந்தார்கள். யாகாத் தலைவனாக இருந்தான்; சீனா இரண்டாம் மகனாக இருந்தான்; எயூஷூக்கும் பெரீயாவுக்கும் அநேகம் மகன்கள் இல்லாததால், அவர்கள் தகப்பன்மார்களின் குடும்பத்தார்களில் ஒரே வம்சமாக எண்ணப்பட்டார்கள்.

கோகாத்தியர்கள்

கோகாத்தின் மகன்கள் அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்னும் நான்குபேர். யாத் 6:181 நாளாக 6:2எண் 26:58எண் 3:27 அம்ராமின் மகன்கள் ஆரோன், மோசே என்பவர்கள்; ஆரோனும் அவனுடைய மகன்களும் பரிசுத்தத்திற்குப் பரிசுத்தமான இடத்தை என்றென்றைக்கும் பரிசுத்தமாகக் காக்கவும், என்றைக்கும் யெகோவாவுக்கு முன்பாக தூபங்காட்டவும், அவருக்கு ஆராதனை செய்யவும், அவர் நாமத்திலே ஆசீர்வாதம் கொடுக்கவும் பிரித்துவைக்கப்பட்டார்கள். உபா 21:5யாத் 6:201 சாமு 2:28யாத் 30:6-101 நாளாக 6:32 நாளாக 26:18-21அப் 13:2யாத் 28:1-14 தேவனுடைய மனிதனாகிய மோசேயின் மகன்களோ, லேவிகோத்திரத்தார்களுக்குள் எண்ணப்பட்டார்கள். உபா 33:11 நாளாக 26:23-25சங் 90:1 மோசேயின் மகன்கள் கெர்சோம் எலியேசர் என்பவர்கள். யாத் 18:3-4யாத் 2:22யாத் 4:20 கெர்சோமின் மகன்களில் செபுவேல் தலைவனாக இருந்தான். 1 நாளாக 26:241 நாளாக 24:201 நாளாக 25:20 எலியேசருடைய மகன்களில் ரெகபியா என்னும் அவனுடைய மகன் தலைவனாக இருந்தான்; எலியேசருக்கு வேறே மகன்கள் இல்லை; ரெகபியாவின் மகன்கள் அநேகராக இருந்தார்கள். 1 நாளாக 26:25 இத்சேயாரின் மகன்களில் செலோமித் தலைவனாக இருந்தான். 1 நாளாக 24:221 நாளாக 26:26 எப்ரோனின் மகன்களில் எரியா என்பவன் தலைவனாக இருந்தான்; இரண்டாவது அமரியா, மூன்றாவது யாகாசியேல், நான்காவது எக்காமியாம். 1 நாளாக 24:231 நாளாக 15:91 நாளாக 23:12 ஊசியேலின் மகன்களில் மீகா என்பவன் தலைவனாக இருந்தான்; இரண்டாவது இஷியா.

மெராரியர்கள்

மெராரியின் மகன்கள் மகேலி, மூசி என்பவர்கள்; மகேலியின் மகன்கள் எலெயாசார், கீஸ் என்பவர்கள். யாத் 6:191 நாளாக 23:61 நாளாக 24:26-301 நாளாக 6:201 நாளாக 6:30 எலெயாசார் மரணமடைகிறபோது, அவனுக்கு மகள்களே அன்றி மகன்கள் இல்லை; கீசின் மகன்களாகிய இவர்களுடைய சகோதரர்கள் இவர்களைத் திருமணம் செய்தார்கள். 1 நாளாக 24:28எண் 36:6-8 மூசியின் மகன்கள் மகலி, ஏதேர், எரேமோத் என்னும் மூன்றுபேர். 1 நாளாக 24:30 தங்கள் பிதாகளுடைய குடும்பங்களின்படி, தகப்பன்மார்களில் தலைவனாக இருந்த லேவி சந்ததிகளின்படி பெயர்பெயராக குறிக்கப்பட்டபடி, தலைதலையாக எண்ணப்பட்ட இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட இவர்களுடைய சந்ததியார்கள் யெகோவாவுடைய ஆலயத்துப் பணிவிடையைச் செய்தார்கள். 1 நாளாக 23:3எண் 10:17எண் 10:21எண் 4:3எஸ்றா 3:8எண் 8:241 நாளாக 23:27எண் 1:18 இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா தமது மக்களை இளைப்பாறியிருக்கச்செய்தார்; அவர் 1 என்றென்றைக்கும் எருசலேமில் தங்குவார் என்றும், 1 நாளாக 22:182 சாமு 7:11சங் 132:13-142 சாமு 7:1சங் 135:21சகரி 8:32 கொரி 6:16கொலோ 2:9 இனி லேவியர்கள் தங்குமிடத்தையாவது அதின் ஊழியத்தில் அதின் பணிபொருட்களில் எதையாவது சுமக்கத் தேவையில்லை என்றும், எண் 4:5எண் 7:9எண் 4:15உபா 10:8எண் 4:49 தாவீது அவர்களைக்குறித்துச் சொன்ன கடைசி வார்த்தைகளின்படியே, லேவி மகன்களில் எண்ணிக்கைக்கு உட்பட்டவர்கள் இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்டவர்களாக இருந்தார்கள். 1 நாளாக 23:241 நாளாக 23:32 சாமு 23:1சங் 72:20 அவர்கள் ஆரோனுடைய மகன்களின் கீழ் யெகோவாவுடைய ஆலயத்தின் ஊழியமாக நின்று, பிராகாரங்களையும், அறைகளையும், எல்லா பரிசுத்த பணிபொருட்களின் சுத்திகரிப்பையும், தேவனுடைய ஆலயத்தின் ஆராதனையின் வேலையையும் விசாரிப்பதும், 2 நாளாக 31:112 நாளாக 35:11-142 நாளாக 35:3-6நெகே 13:91 நாளாக 18:171 நாளாக 23:41 நாளாக 28:131 நாளாக 9:28-29 சமுகத்து அப்பங்களையும், உணவுபலிக்கு மெல்லிய மாவையும், புளிப்பில்லாத அதிரசங்களையும், சட்டிகளிலே செய்கிறதையும் சுடுகிறதையும், திட்டமான எல்லா எடையையும் அளவையும் விசாரிப்பதும், லேவி 19:35-36யாத் 25:30லேவி 2:4-7லேவி 24:5-9லேவி 6:20-231 நாளாக 9:29-341 இராஜா 7:482 நாளாக 13:11 நாள்தோறும் காலையிலும் மாலையிலும் யெகோவாவைப் போற்றித் துதித்து, ஓய்வு நாட்களிலும், அமாவாசைகளிலும், பண்டிகைகளிலும், யெகோவாவுக்கு சர்வாங்க தகனபலிகள் செலுத்தப்படுகிற எல்லா வேளைகளிலும், சங் 92:1-31 நாளாக 9:33எஸ்றா 3:10-111 நாளாக 16:37-421 நாளாக 25:1-71 நாளாக 6:31-332 நாளாக 29:25-282 நாளாக 31:2 எண்ணிக்கைக்கு உள்ளான அவர்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்டபடியே, எப்பொழுதும் அதின்படி செய்ய, யெகோவாவுக்கு முன்பாக நிற்பதும், ஏசா 1:13-14லேவி 23:1-17லேவி 23:24லேவி 23:39எண் 10:10எண் 28:1-29சங் 81:1-4 ஆசரிப்புக் கூடாரத்தின் காவலையும் பரிசுத்த இடத்தின் காவலையும் தங்களுடைய சகோதரர்களாகிய ஆரோனுடைய மகன்களின் காவலையும் காப்பதும், யெகோவாவுடைய ஆலயத்தின் பணிவிடையைச் செய்வதும், அவர்கள் வேலையாக இருந்தது. எண் 1:53எண் 3:38எண் 3:6-91 நாளாக 9:271 இராஜா 8:4