ராணுவப்பிரிவுகள்
தங்கள் எண்ணிக்கையின்படி இருக்கிற இஸ்ரவேலர்களுக்கு வம்சங்களின் தலைவர்களும், ஆயிரம் பேர்களுக்கு தலைவர்களும், நூறு பேர்களுக்கு அதிபதிகளும் தலைவர்களும், இவர்களுடைய தலைவர்களும் வைக்கப்பட்டிருந்தார்கள்; இவர்கள் வருடத்தில் உண்டான மாதங்களிலெல்லாம் மாதத்திற்கு மாதம் ராஜாவிற்குப் பணிவிடை செய்வதற்கு பிரிக்கப்பட்ட வரிசைகளின்படியெல்லாம் மாறிமாறி வருவார்கள்; ஒவ்வொரு வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர் இருந்தார்கள். 1 நாளாக 13:11 நாளாக 28:11 இராஜா 4:271 இராஜா 4:71 இராஜா 5:141 சாமு 8:122 நாளாக 17:12-192 நாளாக 26:11-13 முதலாவது மாதத்திற்கு முதல் வகுப்பின்மேல் சப்தியேலின் மகன் யஷொபெயாம் இருந்தான்; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர் இருந்தார்கள். 1 நாளாக 11:112 சாமு 23:8 அவன் பேரேசின் சந்ததியார்களில் சகல தளபதிகளின் தலைவனாக இருந்து முதல் மாதம் விசாரித்தான். எண் 26:20ஆதி 38:29ஆதி 49:8-10எண் 10:14எண் 7:12 இரண்டாவது மாதத்தின் வகுப்பின்மேல் அகோகியனான தோதாயி இருந்தான்; அவனுடைய வகுப்பிலே மிக்லோத் தகுதியில் இரண்டாவதாக இருந்தான்; அவனுடைய வகுப்பிலே இருபத்துநான்காயிரம்பேர் இருந்தார்கள். 2 சாமு 23:91 நாளாக 11:12 மூன்றாவது மாதத்தின் மூன்றாம் தளபதி யோய்தாவின் மகனாகிய பெனாயா என்னும் ஆசாரியனும் தலைவனுமானவன்; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர் இருந்தார்கள். 1 நாளாக 18:171 இராஜா 4:4-5 இந்தப் பெனாயா அந்த முப்பது பலசாலிகளில் ஒருவனும் அந்த முப்பது பேர்களின் தலைவனுமாக இருந்தான்; அவனுடைய வகுப்பை அவனுடைய மகனாகிய அமிசபாத் விசாரித்தான். 2 சாமு 23:20-231 நாளாக 11:22-252 சாமு 22:20-23 நான்காவது மாதத்தின் நான்காம் தளபதி யோவாபின் சகோதரனாகிய ஆசகேலும், அவனுக்குப்பின்பு அவனுடைய மகன் செப்தியாவுமே; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர் இருந்தார்கள். 1 நாளாக 11:262 சாமு 23:242 சாமு 2:18-23 ஐந்தாவது மாதத்தின் ஐந்தாம் தளபதி இஸ்ராகியனான சம்கூத் என்பவன்; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர் இருந்தார்கள். 1 நாளாக 11:272 சாமு 23:251 நாளாக 26:29 ஆறாவது மாதத்தின் ஆறாம் தளபதி இக்கேசின் மகன் ஈரா என்னும் தெக்கோவியன்; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர் இருந்தார்கள். 1 நாளாக 11:282 சாமு 23:26 ஏழாவது மாதத்தின் ஏழாம் தளபதி எப்பிராயீம் மகன்களில் ஒருவனாகிய ஏலேஸ் என்னும் பெலோனியன்; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர் இருந்தார்கள். 1 நாளாக 11:272 சாமு 23:26 எட்டாவது மாதத்தின் எட்டாம் தளபதி சேராகியர்களில் ஒருவனாகிய சிப்பெக்காய் என்னும் ஊசாத்தியன்; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர் இருந்தார்கள். 2 சாமு 21:181 நாளாக 11:29எண் 26:20 ஒன்பதாவது மாதத்தின் ஒன்பதாம் தளபதி பென்யமீனர்களில் அபியேசர் என்னும் ஆனதோத்தான்; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர் இருந்தார்கள். 1 நாளாக 11:282 சாமு 23:27 பத்தாவது மாதத்தின் பத்தாம் தளபதி சேராகியர்களில் ஒருவனாகிய மகராயி என்னும் நெத்தோபாத்தியன்; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர் இருந்தார்கள். 1 நாளாக 11:302 சாமு 23:28 பதினோராவது மாதத்தின் பதினோராம் தளபதி எப்பிராயீம் கோத்திரத்தில் பெனாயா என்னும் பிரத்தோனியன்; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர் இருந்தார்கள். 1 நாளாக 11:312 சாமு 23:30 பன்னிரண்டாவது மாதத்தின் பன்னிரண்டாம் தளபதி ஒத்னியேல் சந்ததியான எல்தாயி என்னும் நெத்தோபாத்தியன்; அவனுடைய வகுப்பில் இருபத்து நான்காயிரம்பேர் இருந்தார்கள். 2 சாமு 23:291 நாளாக 4:13நியாயாதி 3:91 நாளாக 11:30
கோத்திரத்தின் அலுவலர்கள்
இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவர்கள்: ரூபன் கோத்திரத்திற்குத் தலைவன் சிக்ரியின் மகன் எலியேசர்; சிமியோன் கோத்திரத்திற்கு மாக்காவின் மகன் செப்பத்தியா. லேவி கோத்திரத்திற்கு கேமுவேலின் மகன் அஷாபியா; ஆரோன் சந்ததிக்கு சாதோக். 1 நாளாக 26:301 நாளாக 12:27-281 நாளாக 24:311 நாளாக 24:4 யூதா கோத்திரத்திற்கு தாவீதின் சகோதரர்களில் ஒருவனாகிய எலிகூ; இசக்காருக்கு மிகாவேலின் மகன் ஒம்ரி. 1 சாமு 16:61 சாமு 17:131 சாமு 17:29 செபுலோன் கோத்திரத்திற்கு ஒப்தியாவின் மகன் இஸ்மாயா: நப்தலி கோத்திரத்திற்கு அஸ்ரியேலின் மகன் எரிமோத். எப்பிராயீம் கோத்திரத்திற்கு அசசியாவின் மகன் ஓசெயா; மனாசேயின் பாதிக்கோத்திரத்திற்கு பெதாயாவின் மகன் யோவேல். கீலேயாத்திலுள்ள மனாசேயின் பாதிக்கோத்திரத்திற்கு சகரியாவின் மகன் இத்தோ; பென்யமீனுக்கு அப்னேரின் மகன் யாசியேல். 1 இராஜா 4:141 சாமு 14:50-512 சாமு 3:272 சாமு 3:37 தாண் கோத்திரத்திற்கு எரோகாமின் மகன் அசாரியேல்; இவர்கள் இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவர்களாக இருந்தார்கள். 1 நாளாக 28:1 இஸ்ரவேலை வானத்தின் நட்சத்திரங்கள்போல பெருகச்செய்வேன் என்று யெகோவா சொல்லியிருந்ததால், தாவீது இருபது வயதுமுதல் அதற்குக் கீழுள்ளவர்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்கவில்லை. ஆதி 15:51 நாளாக 21:2-5எபி 11:12எண் 1:18 செருயாவின் மகன் யோவாப் எண்ணத்துவங்கியும் முடிக்காமற்போனான்; அதற்காக இஸ்ரவேலின்மேல் கடுங்கோபம் வந்தது; ஆதலால் அந்த எண்ணிக்கை தாவீது ராஜாவின் நாளாகமக் கணக்கிலே எழுதப்படவில்லை. 1 நாளாக 21:1-172 சாமு 24:1-15
ராஜாக்களுடைய மேற்பார்வையாளர்கள்
ராஜாவுடைய பொக்கிஷங்களின்மேல் ஆதியேலின் மகன் அஸ்மாவேத்தும், பட்டணங்களிலும் கிராமங்களிலும் பாதுகாப்பான கோபுரங்களிலும் நிலத்தின் வருமான கருவூலங்களின்மேல் உசியாவின் மகன் யோனத்தானும், 2 நாளாக 16:22 நாளாக 26:102இராஜா 18:15யாத் 1:11ஆதி 41:48எரே 41:8 நிலத்தைப் பயிரிட வயல்வெளியின் வேலை செய்கிறவர்களின்மேல் கேலூப்பின் மகன் எஸ்ரியும், திராட்சைத்தோட்டங்களின்மேல் ராமாத்தியனான சீமேயும், திராட்சைத்தோட்டங்களின் பலனாகிய திராட்சைரசம் வைக்கும் இடங்களின்மேல் சிப்மியனாகிய சப்தியும், பள்ளத்தாக்குகளிலுள்ள ஒலிவமரங்களின்மேலும் முசுக்கட்டை மரங்களின்மேலும் கெதேரியனான பாகாலானானும், எண்ணெய் கிடங்குகளின்மேல் யோவாசும், 1 இராஜா 10:272 நாளாக 1:151 இராஜா 20:271 இராஜா 4:7 சாரோனில் மேய்கிற மாடுகளின்மேல் சாரோனியனான சித்ராயும், பள்ளத்தாக்குகளிலுள்ள மாடுகளின்மேல் அத்லாயின் மகன் சாப்பாத்தும், 1 நாளாக 5:16ஏசா 65:10 ஒட்டகங்களின்மேல் இஸ்மவேலியனாகிய ஓபிலும், கழுதைகளின்மேல் மெரோனோத்தியனாகிய எகெதியாவும், ஆதி 47:6யோபு 1:3 ஆடுகளின்மேல் ஆகாரியனான யாசிசும் விசாரிப்புக்காரர்களாக இருந்தார்கள்; இவர்கள் எல்லோரும் தாவீது ராஜாவின் பொருட்களுக்கு விசாரிப்புக்காரர்களாக இருந்தார்கள். 1 நாளாக 5:10 தாவீதின் சிறிய தகப்பனாகிய யோனத்தான் என்னும் புத்தியும் படிப்புமுள்ள மனிதன் ஆலோசனைக்காரனாக இருந்தான்; அக்மோனியின் மகன் யெகியேல் ராஜாவின் மகன்களோடு இருந்தான். 1 நாளாக 11:112 சாமு 13:32 சாமு 21:21 அகித்தோப்பேல் ராஜாவுக்கு ஆலோசனைக்காரனாக இருந்தான்; அற்கியனான ஊசாய் ராஜாவின் தோழனாயிருந்தான். 2 சாமு 15:122 சாமு 15:372 சாமு 15:322 சாமு 16:16-172 சாமு 16:232 சாமு 17:23சங் 55:13சகரி 13:7 பெனாயாவின் மகன் யோய்தாவும் அபியத்தாரும் அகித்தோப்பேலுக்கு உதவியாக இருந்தார்கள்; யோவாப் ராஜாவின் படைத்தலைவனாக இருந்தான். 1 நாளாக 11:61 இராஜா 1:71 நாளாக 27:5