1 கொரிந்தியர் 14

1 Corinthians 14
அத்தியாயம் 14

வரங்களைப் பயன்படுத்துதல்

அன்பை விரும்புங்கள்; ஆவியானவருக்குரிய வரங்களையும் விரும்புங்கள்; விசேஷமாகத் தீர்க்கதரிசனவரத்தை விரும்புங்கள். 1 தீமோ 4:141 கொரி 14:391 கொரி 16:141 கொரி 12:11 தெச 5:20எபி 12:141 கொரி 14:3-51 கொரி 13:13 ஏனென்றால், அந்நிய மொழியில் பேசுகிறவன், ஆவியானவராலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாமலிருக்கிறபடியினாலே, அவன் மனிதர்களிடம் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான். மாற் 16:17அப் 10:46அப் 19:6அப் 2:4-111 கொரி 13:21 கொரி 2:101 கொரி 14:9-11கொலோ 1:26-27 தீர்க்கதரிசனம் சொல்லுகிறவனோ மனிதர்களுக்கு பக்திவளர்ச்சியும், புத்தியும், ஆறுதலும் உண்டாகத்தக்கதாகப் பேசுகிறான். 1 கொரி 14:121 தீமோ 4:13யூதா 1:202 தீமோ 4:2எபே 6:221 கொரி 14:26ரோம 14:19தீத் 1:9 அந்நிய மொழியில் பேசுகிறவன் தனக்கே பக்திவளர்ச்சி உண்டாகப் பேசுகிறான்; தீர்க்கதரிசனம் சொல்லுகிறவனோ சபைக்கு பக்திவளர்ச்சி உண்டாகப்பேசுகிறான். 1 கொரி 14:221 கொரி 14:26மாற் 16:171 கொரி 14:17-191 கொரி 14:31 கொரி 13:21 கொரி 14:121 கொரி 14:5 நீங்களெல்லோரும் அந்நிய மொழிகளைப் பேசும்படி விரும்புகிறேன்; ஆனாலும், அந்நிய மொழிகளில் பேசுகிறவன் சபைக்குப் பக்திவளர்ச்சி உண்டாகும்படிக்கு அர்த்தத்தையும் சொல்லாவிட்டால், தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் அவனைவிட மேன்மையுள்ளவன்; ஆதலால் நீங்கள் தீர்க்கதரிசனம் சொல்லுகிறவர்களாகவேண்டுமென்று அதிகமாக விரும்புகிறேன். 1 கொரி 12:101 கொரி 12:28-301 கொரி 13:1மாற் 16:17எண் 11:28-291 கொரி 14:3-41 கொரி 13:41 கொரி 14:1 மேலும், சகோதரர்களே, நான் உங்களிடம் வந்து உங்களுக்கு இரகசியங்களை வெளிப்படுத்துவதற்காவது, அறிவுண்டாக்குவதற்காவது, தீர்க்கதரிசனத்தை சொல்லுகிறதற்காவது, போதகத்தைப் போதிக்கிறதற்காவது ஏதுவானதைச் சொல்லாமல், அந்நிய மொழிகளில் பேசினால் என்னாலே உங்களுக்கு பலன் என்ன? எபே 1:172 தீமோ 3:16ரோம 6:171 கொரி 14:11 கொரி 14:26-302 யோவா 1:92 பேது 3:18எபி 13:9 அப்படியே புல்லாங்குழல், சுரமண்டலம் முதலிய சத்தமிடுகிற உயிரில்லாத வாத்தியங்களின் தொனிகளில் வித்தியாசம் காட்டாவிட்டால், குழலாலே ஊதப்படுகிறதும், சுரமண்டலத்தாலே வாசிக்கப்படுகிறதும் என்னவென்று எப்படித் தெரியும்? 1 கொரி 13:11 கொரி 14:8எண் 10:2-10லூக் 7:32மத் 11:17 அந்தப்படி எக்காளமும் விளங்காத சத்தமிட்டால் எவன் போருக்கு ஆயத்தம் செய்வான்? எண் 10:9எசேக் 33:3-6எரே 4:19ஆமோ 3:6ஏசா 27:13யோபு 39:24-25யோவே 2:1நெகே 4:18-21 அதுபோல, நீங்களும் தெளிவான பேச்சைப் பேசாவிட்டால் பேசப்பட்டது என்னவென்று எப்படித் தெரியும்? ஆகாயத்தில் பேசுகிறவர்களாக இருப்பீர்களே. 1 கொரி 9:26 உலகத்திலே எத்தனையோவிதமான மொழிகள் உண்டாயிருக்கிறது, அவைகளில் ஒன்றும் அர்த்தமில்லாததல்ல. ஆனாலும், மொழியின் கருத்தை நான் அறியாமலிருந்தால், பேசுகிறவனுக்கு அந்நியனாக இருப்பேன், பேசுகிறவனும் எனக்கு அந்நியனாக இருப்பான். அப் 28:21 கொரி 14:21அப் 28:4கொலோ 3:11ரோம 1:14 நீங்களும் ஆவியானவருக்குரிய வரங்களை நாடுகிறவர்களானபடியால், சபைக்குப் பக்திவளர்ச்சி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி விரும்புங்கள்; 1 கொரி 14:261 கொரி 12:311 கொரி 14:3-41 கொரி 14:11 கொரி 12:7தீத் 2:14 அந்தப்படி அந்நிய மொழியில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக ஜெபம் செய்யவேண்டும். யோவா 14:13-14மாற் 11:241 கொரி 12:30அப் 1:141 கொரி 12:101 கொரி 14:27-28அப் 4:29-31அப் 8:15 எதினாலென்றால், நான் அந்நிய மொழியிலே விண்ணப்பம் செய்தால் என் ஆவி விண்ணப்பம் செய்யுமேதவிர, என் கருத்து பயனில்லாததாக இருக்கும். 1 கொரி 14:21 கொரி 14:15-161 கொரி 14:19 இப்படியிருக்க, செய்யவேண்டியதென்ன? நான் ஆவியோடும் விண்ணப்பம் செய்வேன்; கருத்தோடும் விண்ணப்பம் செய்வேன்; நான் ஆவியோடும் பாடுவேன், கருத்தோடும் பாடுவேன். கொலோ 3:16எபே 6:18எபே 5:17-20யோவா 4:23-24யூதா 1:20சங் 47:7ரோம 12:1-21 கொரி 14:19 இல்லாவிட்டால், நீ ஆவியோடு ஸ்தோத்திரம் செய்யும்போது, படிப்பறியாதவன் உன் ஸ்தோத்திரத்திற்கு ஆமென் என்று எப்படிச் சொல்லுவான்? நீ பேசுகிறது என்னவென்று அவனுக்குத் தெரியாதே. 1 நாளாக 16:36சங் 106:48வெளி 5:141 கொரி 11:24உபா 27:15-26எரே 28:6நெகே 8:6எண் 5:22 நீ நன்றாக ஸ்தோத்திரம் செய்கிறாய், ஆனாலும் மற்றவன் பக்திவளர்ச்சியடையமாட்டானே. 1 கொரி 14:41 கொரி 14:6 உங்களெல்லோரையும்விட நான் அதிகமான மொழிகளைப் பேசுகிறேன், இதற்காக என் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். 1 கொரி 1:4-61 கொரி 4:7 அப்படியிருந்தும், நான் சபையிலே அந்நிய மொழியில் பத்தாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதைவிட, மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடு ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாக இருக்கும். 1 கொரி 14:21-221 கொரி 14:4 சகோதரர்களே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாக இருக்கவேண்டாம்; துர்க்குணத்திலே குழந்தைகளாகவும், புத்தியிலோ தேறினவர்களாகவும் இருங்கள். 1 பேது 2:21 கொரி 13:11ரோம 16:19மத் 18:31 கொரி 2:62 பேது 3:18எபே 4:14-15பிலி 1:9 மறுமொழிக்காரர்களாலும், மறு உதடுகளாலும் இந்த மக்களிடத்தில் பேசுவேன்; ஆனாலும் அவர்கள் எனக்குச் செவிகொடுப்பதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று வேதத்தில் எழுதியிருக்கிறதே. ஏசா 28:11-12எரே 5:15உபா 28:49ரோம 3:19யோவா 10:34 அப்படியிருக்க, அந்நியமொழிகள் விசுவாசிகளுக்கு அடையாளமாக இல்லாமல், விசுவாசம் இல்லாதவர்களுக்கு அடையாளமாக இருக்கிறது; தீர்க்கதரிசனமோ விசுவாசம் இல்லாதவர்களுக்கு அடையாளமாக இல்லாமல், விசுவாசிகளுக்கு அடையாளமாக இருக்கிறது. அப் 2:6-12மாற் 16:171 தீமோ 1:91 கொரி 14:1அப் 2:32-36 ஆகவே, சபையார் எல்லோரும் ஏகமாகக் கூடிவந்து, எல்லோரும் அந்நிய மொழிகளிலே பேசிக்கொள்ளும்போது, படிப்பறியாதவர்களாவது, விசுவாசம் இல்லாதவர்களாவது உள்ளே நுழைந்தால், அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்கள் என்பார்களல்லவா? அப் 2:131 கொரி 11:18அப் 26:24ஓசி 9:7யோவா 10:20 எல்லோரும் தீர்க்கதரிசனம் சொல்லும்போது, விசுவாசம் இல்லாத ஒருவன் அல்லது படிப்பறியாதவன் ஒருவன் உள்ளே நுழைந்தால், அவனுடைய பாவம் அவனுக்கு உணர்த்தப்பட்டும், சொல்லப்பட்ட எல்லாவற்றாலும் நியாயந்தீர்க்கப்பட்டும் இருப்பான். அப் 2:37எபி 4:12-131 கொரி 2:15யோவா 4:29யோவா 1:47-49 அவனுடைய இருதயத்தின் இரகசியங்களும் வெளியரங்கமாகும்; அவன் முகங்குப்புறவிழுந்து, தேவனைப் பணிந்துகொண்டு, தேவன் மெய்யாக உங்களுக்குள்ளே இருக்கிறார் என்று அறிக்கையிடுவான். ஏசா 45:14சகரி 8:23உபா 9:18ஆதி 44:14ஏசா 60:14லூக் 17:16லூக் 5:8சங் 72:11

ஆராதனையின் ஒழுங்குகள்

நீங்கள் கூடிவந்திருக்கிறபோது, உங்களில் ஒருவன் சங்கீதம் பாடுகிறான், ஒருவன் போதகம் பண்ணுகிறான், ஒருவன் அந்நிய மொழியைப் பேசுகிறான், ஒருவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான், ஒருவன் விளக்கம் சொல்லுகிறான். சகோதரர்களே, இது என்ன? அனைத்தும் பக்திவளர்ச்சிக்கேதுவாகச் செய்யப்படவேண்டும். எபே 5:191 கொரி 12:7-10ரோம 14:191 தெச 5:11எபே 4:161 கொரி 14:12-13எபே 4:291 கொரி 14:40 யாராவது அந்நிய மொழியிலே பேசுகிறதுண்டானால், அது இரண்டுபேர்மட்டும் அல்லது மிஞ்சினால் மூன்றுபேர்மட்டும் பேசவும், அவர்கள் ஒவ்வொருவராகப் பேசவும், இன்னொருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும். 1 கொரி 14:26 அர்த்தம் சொல்லுகிறவன் இல்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப்பேசவேண்டும். தீர்க்கதரிசிகள் இரண்டுபேராவது மூன்றுபேராவது பேசலாம், மற்றவர்கள் நிதானிக்கவேண்டும். 1 கொரி 12:101 தெச 5:19-211 யோவா 4:1-31 கொரி 14:39 அங்கே உட்கார்ந்திருக்கிற மற்றொருவனுக்கு ஏதாவது வெளிப்படுத்தப்பட்டால், முதலில் பேசினவன் பேசாமலிருக்கவேண்டும். 1 தெச 5:19-20யோபு 32:11யோபு 33:31-331 கொரி 14:261 கொரி 14:6யோபு 32:15-20 எல்லோரும் கற்கிறதற்கும் எல்லோரும் தேறுகிறதற்கும், நீங்கள் அனைவரும் ஒவ்வொருவராகத் தீர்க்கதரிசனம் சொல்லலாம். 1 கொரி 14:31 தெச 5:111 தெச 5:141 கொரி 14:191 கொரி 14:351 தெச 4:182 கொரி 1:42 கொரி 7:6-7 தீர்க்கதரிசிகளுடைய ஆவிகள் தீர்க்கதரிசிகளுக்கு அடங்கியிருக்கிறதே. 1 யோவா 4:1அப் 4:19-201 கொரி 14:29-301 சாமு 10:10-131 சாமு 19:19-242இராஜா 2:32இராஜா 2:5எரே 20:9 தேவன் கலகத்திற்கு தேவனாக இல்லாமல், சமாதானத்திற்கு தேவனாக இருக்கிறார்; பரிசுத்தவான்களுடைய சபைகள் எல்லாவற்றிலேயும் அப்படியே இருக்கிறது. யாக் 3:17-181 கொரி 14:402 தெச 3:16கலா 5:221 கொரி 11:16எபி 13:201 கொரி 7:17ரோம 15:33 சபைகளில் உங்களுடைய பெண்கள் பேசாமலிருக்கவேண்டும்; பேசுகிறதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை; அவர்கள் அடங்கியிருக்கவேண்டும்; வேதமும் அப்படியே சொல்லுகிறது. 1 தீமோ 2:11-12ஆதி 3:16எண் 30:3-131 கொரி 14:35கொலோ 3:18தீத் 2:51 கொரி 11:51 பேது 3:1-6 அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ளவிரும்பினால், தங்களுடைய கணவரிடத்தில் வீட்டிலே விசாரிக்கட்டும்; பெண்கள் சபையிலே பேசுகிறது அவமானத்தை ஏற்படுத்துகிறதாக இருக்குமே. 1 பேது 3:7எபே 5:12எபே 5:25-271 கொரி 11:141 கொரி 11:61 கொரி 14:34 தேவவசனம் உங்களிடத்திலிருந்தா புறப்பட்டது? அது உங்களிடத்திற்கு மாத்திரமா வந்தது? 1 கொரி 4:71 தெச 1:82 கொரி 10:13-16அப் 13:1-3அப் 15:35-36அப் 16:9-10அப் 17:1அப் 17:10-11 ஒருவன் தன்னைத் தீர்க்கதரிசியென்றாவது, ஆவியைப் பெற்றவனென்றாவது நினைத்தால், நான் உங்களுக்கு எழுதுகிறவைகள் கர்த்தருடைய கட்டளைகளென்று அவன் ஏற்றுக்கொள்ளவேண்டும். 1 யோவா 4:62 கொரி 10:72 பேது 3:2யூதா 1:171 தெச 4:1-81 கொரி 13:1-31 கொரி 7:251 கொரி 8:2 ஒருவன் அறியாதவனாக இருந்தால், அவன் அறியாதவனாக இருக்கட்டும். 2 தீமோ 4:3-41 தீமோ 6:3-5மத் 7:6வெளி 22:11-12ஓசி 4:17மத் 15:14 இப்படியிருக்க, சகோதரர்களே, தீர்க்கதரிசனம் சொல்ல விரும்புங்கள், அந்நிய மொழிகளைப் பேசுகிறதற்கும் தடைசெய்யாமலிருங்கள். 1 கொரி 12:311 கொரி 14:11 தெச 5:201 கொரி 14:24-251 கொரி 14:31 கொரி 14:5 அனைத்து காரியங்களும் நல்லொழுக்கமாகவும், முறையாகவும் செய்யப்படவேண்டும். கொலோ 2:5தீத் 1:51 கொரி 14:26-331 கொரி 11:34ரோம 13:13