ஊழியக்காரர்களும் மேற்பார்வைத்துவமும்
இப்படியாக, எந்த மனிதனும் எங்களைக் கிறிஸ்துவின் ஊழியக்காரன் என்றும், தேவனுடைய இரகசியங்களின் மேற்பார்வைக்காரர்களென்றும் நினைத்துக்கொள்ளவேண்டும். 1 பேது 4:101 தீமோ 3:9தீத் 1:7எபே 6:192 கொரி 4:5கொலோ 1:25-271 கொரி 9:16-18ரோம 16:25 மேலும், மேற்பார்வைக்காரன் உண்மையுள்ளவன் என்று காணப்படுவது அவசியமாகும். மத் 25:21லூக் 12:42லூக் 16:10-12கொலோ 4:17எண் 12:72 கொரி 2:17மத் 25:23நீதி 13:17 ஆனாலும் நான் உங்களாலேயாவது மனிதர்களுடைய நியாயநாளின் விசாரணையினாலோ தீர்ப்பைப்பெறுவது எனக்கு மிகவும் சாதாரண காரியமாக இருக்கிறது; நானும் என்னைக்குறித்துத் தீர்ப்புச்சொல்லுகிறதில்லை. 1 கொரி 2:15யோவா 7:241 சாமு 16:71 கொரி 3:13 என்னிடத்தில் நான் எந்தவொரு குற்றத்தையும் அறியேன்; ஆனாலும் அதினாலே நான் நீதிமானாகிறதில்லை; என்னை நியாயம் விசாரிக்கிறவர் கர்த்தரே. சங் 143:21 யோவா 3:20-21நீதி 21:2சங் 130:32 கொரி 1:12சங் 19:121 கொரி 4:52 கொரி 5:10 ஆதலால், கர்த்தர் வரும்வரைக்கும் நீங்கள் காலத்திற்குமுன்னே எதைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள்; இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளிப்படையாக்கி, இருதயங்களின் நோக்கங்களையும் வெளிப்படுத்துவார்; அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும். யாக் 5:72 கொரி 5:101 கொரி 3:13எபி 4:132 கொரி 10:18ரோம 2:16பிரச 12:14ரோம 2:1 சகோதரர்களே, எழுதப்பட்டதற்கு அதிகமாக நினைக்கவேண்டாமென்று நீங்கள் எங்களாலே கற்றுக்கொள்ளவும், ஒருவனும் ஒருவனிமித்தம் மற்றொருவனுக்கு விரோதமாக கர்வமடையாதிருக்கவும், நான் உங்கள்நிமித்தம் என்னையும் அப்பொல்லோவையும் ஆதாரமாக வைத்து, இவைகளை எழுதினேன். 2 கொரி 11:42 கொரி 12:192 கொரி 12:6கொலோ 2:18ரோம 12:31 தெச 1:5யோவா 3:26-271 கொரி 1:31 அன்றியும் உன்னை சிறப்பானவனாகும்படி செய்கிறவர் யார்? உனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக்கொள்ளாதது எது? நீ பெற்றுக்கொண்டவனானால் பெற்றுக்கொள்ளாதவன்போல ஏன் மேன்மைபாராட்டுகிறாய்? யோவா 3:271 பேது 4:10யாக் 1:171 நாளாக 29:11-16யோவா 1:16ரோம 12:6நீதி 2:6லூக் 19:13 இப்பொழுது திருப்தியடைந்திருக்கிறீர்களே, இப்பொழுது ஐசுவரியவான்களாக இருக்கிறீர்களே, எங்களையல்லாமல் ஆளுகிறீர்களே; நீங்கள் ஆளுகிறவர்களானால் நலமாக இருக்கும்; அப்பொழுது உங்களோடுகூட நாங்களும் ஆளுவோமே. நீதி 13:71 கொரி 5:62 கொரி 13:9கலா 6:3லூக் 6:25ரோம 12:31 கொரி 1:51 தெச 2:19-20 தேவன் அப்போஸ்தலர்களாகிய எங்களை மரணத்திற்குக் குறிக்கப்பட்டவர்கள்போலக் கடைசியானவர்களாகக் காணப்படப்பண்ணினார் என்று தோன்றுகிறது; நாங்கள் உலகத்திற்கும் தூதர்களுக்கும் மனிதர்களுக்கும் வேடிக்கையானோம். எபி 10:332 கொரி 4:8-12ரோம 8:361 கொரி 15:30-322 கொரி 1:8-10எபி 1:14பிலி 1:29-301 தெச 3:3 நாங்கள் கிறிஸ்துவினிமித்தம் பைத்தியக்காரர்கள், ஆனால் நீங்கள் கிறிஸ்துவில் புத்திசாலிகள்; நாங்கள் பலவீனமானவர்கள், ஆனால் நீங்கள் பலவான்கள்; நீங்கள் மேன்மையானவர்கள், ஆனால் நாங்கள் மேன்மையற்றவர்கள். 1 கொரி 2:31 கொரி 3:182 கொரி 13:9அப் 17:18அப் 26:241 பேது 4:142 கொரி 11:19ஓசி 9:7 இந்நேரம்வரைக்கும் பசியுள்ளவர்களும், தாகமுள்ளவர்களும், நிர்வாணிகளும், கொடூரமாக தாக்கப்பட்டவர்களும், தங்க இடம் இல்லாதவர்களுமாக இருக்கிறோம். ரோம 8:352 கொரி 11:23-27பிலி 4:122 தீமோ 3:11மத் 8:202 கொரி 6:4-5யோபு 22:61 கொரி 9:4 எங்களுடைய கைகளினாலே வேலைசெய்து பாடுபடுகிறோம், சபிக்கப்படும்போது ஆசீர்வதிக்கிறோம், துன்பப்படும்போது சகிக்கிறோம். 1 பேது 3:9மத் 5:11ரோம 12:141 பேது 4:12-14அப் 18:3லூக் 6:28ரோம 12:201 பேது 2:23 நிந்திக்கப்படும்போது வேண்டிக்கொள்ளுகிறோம், இந்தநாள்வரை உலகத்தின் குப்பையைப்போலவும், எல்லோரும் துடைத்துப்போடுகிற அழுக்கைப்போலவும் ஆனோம். புலம் 3:45அப் 22:22 உங்களை வெட்கப்படுத்தும்படிக்கு நான் இவைகளை எழுதவில்லை, நீங்கள் எனக்குப் பிரியமான பிள்ளைகளென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். 1 தெச 2:113 யோவா 1:41 கொரி 4:151 கொரி 9:151 தெச 5:142 கொரி 12:19கொலோ 1:281 கொரி 15:34 கிறிஸ்துவிற்குள் பத்தாயிரம் ஆசிரியர்கள் உங்களுக்கு இருந்தாலும், தகப்பன்மார்கள் அநேகர் உங்களுக்கு இல்லையே; கிறிஸ்து இயேசுவிற்குள் நற்செய்தியினால் நான் உங்களைப்பெற்றேன். 1 கொரி 3:10கலா 4:191 கொரி 9:141 கொரி 9:231 பேது 1:231 கொரி 3:61 கொரி 9:121 கொரி 9:18 ஆகவே, என்னைப் பின்பற்றுகிறவர்களாக இருங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். 1 கொரி 11:12 தெச 3:9பிலி 3:171 தெச 1:6எபி 13:7பிலி 4:9யோவா 10:4-51 பேது 5:3 இதினிமித்தமாக, எனக்குப் பிரியமும், கர்த்தருக்குள் உண்மையுமுள்ள என் குமாரனாகிய தீமோத்தேயுவை உங்களிடம் அனுப்பினேன்; நான் எங்கும் எந்தச் சபையிலும் போதித்துவருகிற பிரகாரம் கிறிஸ்துவிற்குள்ளான என் நடக்கைகளை அவன் உங்களுக்கு ஞாபகப்படுத்துவான். 1 கொரி 16:101 தீமோ 1:21 கொரி 7:172 தீமோ 1:21 கொரி 14:331 கொரி 16:11 கொரி 11:21 கொரி 7:25 நான் உங்களிடத்திற்கு வருகிறதில்லை என்கிறதற்காகச் சிலர் இறுமாப்படைந்திருக்கிறார்கள். 1 கொரி 4:6-81 கொரி 5:21 கொரி 4:21 ஆனாலும் கர்த்தருக்கு விருப்பமானால் நான் சீக்கிரமாக உங்களிடத்திற்கு வந்து, இறுமாப்படைந்திருக்கிறவர்களுடைய பேச்சை அல்ல, அவர்களுடைய பெலத்தையே அறிந்துகொள்வேன். 2 கொரி 13:1-4அப் 18:21அப் 19:211 கொரி 11:341 கொரி 14:51 கொரி 2:61 கொரி 4:182 கொரி 1:23 தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே இல்லை, பெலத்திலே உண்டாயிருக்கிறது. 1 கொரி 2:41 தெச 1:52 கொரி 10:4-5ரோம 14:17ரோம 1:16ரோம 15:191 கொரி 1:24 உங்களுக்கு என்ன வேண்டும்? நான் பிரம்போடு உங்களிடம் வரவேண்டுமோ? அல்லது அன்போடும் சாந்தமுள்ள ஆவியோடும் வரவேண்டுமோ? 2 கொரி 13:22 கொரி 13:101 தெச 2:72 கொரி 12:20-212 கொரி 1:232 கொரி 2:3யாக் 3:172 கொரி 10:1-2