சாமுவேல் இஸ்ரவேலரிடம் ராஜாவை பற்றி பேசுதல்
அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேலர்கள் அனைவரையும் பார்த்து: இதோ, நீங்கள் எனக்குச் சொன்னபடியெல்லாம் உங்கள் சொல்லைக்கேட்டு உங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தினேன். 1 சாமு 10:241 சாமு 11:14-151 சாமு 10:11 சாமு 8:19-221 சாமு 8:5-8 இப்போதும் இதோ, ராஜா உங்களுக்கு முன்பாக வாழ்ந்துவருகிறார்; நானோ முதிர்வயதானவனும் நரைத்தவனுமானேன்; என்னுடைய மகன்கள் உங்களோடிருப்பார்கள்; நான் என்னுடைய சிறுவயதுமுதல் இந்த நாள்வரைக்கும் உங்களுக்கு முன்பாக வாழ்ந்துவந்தேன். 1 சாமு 8:51 சாமு 8:11 சாமு 8:201 சாமு 3:19-201 சாமு 8:3எண் 27:171 சாமு 2:221 சாமு 2:29 இதோ, நான் இருக்கிறேன்; யெகோவாவுக்கு முன்பாகவும் அவர் அபிஷேகம்செய்து வைத்தவருக்கு முன்பாகவும் என்னைக்குறித்துச் சாட்சி சொல்லுங்கள்; நான் யாருடைய எருதை எடுத்துக்கொண்டேன்? யாருடைய கழுதையை எடுத்துக்கொண்டேன்? யாருக்கு அநியாயம்செய்தேன்? யாருக்கு தீங்கு செய்தேன்? யார் கையில் லஞ்சம் வாங்கிக்கொண்டு குருடனாக இருந்தேன்? சொல்லுங்கள்; அப்படி இருக்குமானால் அதை உங்களுக்குத் திரும்பக் கொடுப்பேன் என்றான். அப் 20:33எண் 16:151 பேது 5:21 சாமு 24:6உபா 16:191 சாமு 10:11 சாமு 12:51 தெச 2:10 அதற்கு அவர்கள்: நீர் எங்களுக்கு அநியாயம் செய்யவும் இல்லை; எங்களுக்கு தீங்கு செய்யவும் இல்லை; ஒருவர் கையிலும் ஒன்றும் வாங்கவும் இல்லை என்றார்கள். 3 யோவா 1:12தானி 6:4சங் 37:5-6 அதற்கு அவன்: நீங்கள் என்னுடைய கையில் ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை என்பதற்குக் யெகோவா உங்களுக்கு எதிராகச் சாட்சியாக இருக்கிறார்; அவர் அபிஷேகம்செய்தவரும் இன்று அதற்குச் சாட்சி என்றான்; அதற்கு அவர்கள்: அவர் சாட்சிதான் என்றார்கள். யாத் 22:4அப் 23:9அப் 24:201 கொரி 4:42 கொரி 1:121 சாமு 26:9அப் 24:16யோவா 18:38 அப்பொழுது சாமுவேல் மக்களைப் பார்த்து: மோசே, ஆரோனை, ஏற்படுத்தியவரும், உங்கள் முற்பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்தவரும் யெகோவாவே. மீகா 6:4யாத் 6:26சங் 105:41சங் 77:19-20சங் 99:6ஓசி 12:13ஏசா 63:7-14சங் 105:26 இப்பொழுதும் யெகோவா உங்களுக்கும் உங்களுடைய முற்பிதாக்களுக்கும் செய்துவந்த எல்லா நீதியான செய்கைகளைக்குறித்தும், நான் யெகோவாவுக்கு முன்பாக உங்களோடு நியாயம் பேசும்படிக்கு நீங்கள் நில்லுங்கள். ஏசா 1:18அப் 17:3எசேக் 18:25-30ஏசா 5:3-4மீகா 6:1-5நியாயாதி 5:11 யாக்கோபு எகிப்திற்கு போயிருக்கும்போது, உங்கள் முன்னோர்கள் யெகோவாவைப் பார்த்து முறையிட்டார்கள், அப்பொழுது யெகோவா மோசேயையும், ஆரோனையும் அனுப்பினார்; அவர்கள் உங்கள் முன்னோர்களை எகிப்திலிருந்து அழைத்துவந்து, அவர்களை இந்த இடத்திலே குடியிருக்கச்செய்தார்கள். யாத் 4:14-16யாத் 2:23-241 சாமு 10:181 சாமு 12:6அப் 7:15யாத் 12:51யாத் 14:30-31யாத் 3:9-10 அவர்கள் தங்கள் தேவனாகிய யெகோவாவை மறந்துபோகிறபோது, அவர் அவர்களை ஆத்சோரின் படைத்தலைவனாகிய சிசெராவின் கையிலும், பெலிஸ்தர்களின் கையிலும், மோவாபிய ராஜாவின் கையிலும் விற்றுப்போட்டார்; இவர்கள் அவர்களுக்கு விரோதமாக யுத்தம்செய்தார்கள். நியாயாதி 10:7நியாயாதி 13:1நியாயாதி 3:12நியாயாதி 4:2உபா 32:18உபா 32:30ஏசா 50:1-2ஏசா 63:10 ஆகையால் அவர்கள் யெகோவாவைப் பார்த்து முறையிட்டு: நாங்கள் யெகோவாவை விட்டுப் பாகால்களையும் அஸ்தரோத்தையும் வழிபட்டதினாலே, பாவம்செய்தோம்; இப்போதும் எங்கள் எதிரிகளின் கைக்கு எங்களை மீட்டுவிடும்; இனி உம்மை வழிபடுவோம் என்றார்கள். நியாயாதி 10:10நியாயாதி 2:13நியாயாதி 10:15-16நியாயாதி 3:7நியாயாதி 3:91 சாமு 7:22 கொரி 5:14-15ஏசா 26:16 அப்பொழுது யெகோவா யெருபாகாலையும், 1 பேதானையும் 2, யெப்தாவையும் சாமுவேலையும் அனுப்பி, நீங்கள் பயமில்லாமல் குடியிருக்கும்படிச் சுற்றிலும் இருந்த உங்கள் எதிரிகளின் கைக்கும் உங்களை நீங்கலாக்கி இரட்சித்தார். நியாயாதி 6:32நியாயாதி 4:61 சாமு 7:13நியாயாதி 11:1-33நியாயாதி 6:14நியாயாதி 8:29நியாயாதி 8:35நியாயாதி 13:1-16 அம்மோன் மக்களின் ராஜாவாகிய நாகாஸ் உங்களுக்கு விரோதமாக வருகிறதை நீங்கள் கண்டபோது, உங்கள் தேவனாகிய யெகோவாவே உங்களுக்கு ராஜாவாக இருந்தும், நீங்கள் என்னை நோக்கி: அப்படியல்ல, ஒரு ராஜா எங்கள்மேல் ஆளவேண்டும் என்றீர்கள். நியாயாதி 8:231 சாமு 8:5-71 சாமு 10:191 சாமு 11:1-2ஆதி 17:71 சாமு 8:19-201 சாமு 8:3யாத் 19:5-6 இப்பொழுதும் நீங்கள் வேண்டும் என்று விரும்பித் தெரிந்துகொண்ட ராஜா, இதோ, இருக்கிறார்; இதோ, யெகோவா உங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தினார். 1 சாமு 10:24ஓசி 13:111 சாமு 8:51 சாமு 11:151 சாமு 9:20அப் 13:21சங் 78:29-31 நீங்கள் யெகோவாவுடைய வாக்குக்கு விரோதமாகக் கலகம்செய்யாமல் யெகோவாவுக்குப் பயந்து, அவருக்கு பணிவிடைசெய்து, அவருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்தால், நீங்களும் உங்களை ஆளுகிற ராஜாவும் உங்கள் தேவனாகிய யெகோவாவைப் பின்பற்றுகிறவர்களாக இருப்பீர்கள். யோசு 24:14உபா 28:1-14ஏசா 3:10யோசு 24:20லேவி 20:1-13சங் 81:12-15ரோம 2:7 நீங்கள் யெகோவாவுடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமல், யெகோவாவுடைய வாக்குக்கு எதிராக கலகம் செய்தால், யெகோவாவுடைய கை உங்கள் முன்னோர்களுக்கு எதிராக இருந்ததுபோல உங்களுக்கும் எதிராக இருக்கும். யோசு 24:20ஏசா 1:20ஏசா 3:111 சாமு 12:9உபா 28:15-68லேவி 26:14-30ரோம 2:8-91 சாமு 5:9 இப்பொழுது யெகோவா உங்கள் கண்களுக்கு முன்பாகச் செய்யும் பெரிய காரியத்தை நின்று பாருங்கள். யாத் 14:13யாத் 14:311 சாமு 12:71 சாமு 15:16 இன்று கோதுமை அறுவடையின் நாள் அல்லவா? நீங்கள் உங்களுக்கு ஒரு ராஜாவைக் கேட்டதால், யெகோவாவின் பார்வைக்குச் செய்த உங்களுடைய தீங்கு பெரியதென்று நீங்கள் பார்த்து உணரும்படி, நான் யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்வேன்; அப்பொழுது இடிமுழக்கங்களையும் மழையையும் கட்டளையிடுவார் என்று சொல்லி, 1 சாமு 8:71 சாமு 7:9-10நீதி 26:1யாக் 5:16-18எரே 15:1யோசு 10:12சங் 99:6 சாமுவேல் யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்தான்; அன்றையதினமே யெகோவா இடிமுழக்கங்களையும் மழையையும் கட்டளையிட்டார்; அப்பொழுது மக்கள் எல்லோரும் யெகோவாவுக்கும் சாமுவேலுக்கும் மிகவும் பயந்து; யாத் 14:31யாத் 9:23-25எஸ்றா 10:9சங் 106:12-13வெளி 11:5-6 சாமுவேலைப் பார்த்து: நாங்கள் சாகாதபடி உம்முடைய தேவனாகிய யெகோவாவிடத்தில் உம்முடைய அடியாருக்காக விண்ணப்பம் செய்யும்; நாங்கள் செய்த எல்லாப் பாவங்களோடும் எங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்று கேட்ட இந்தப் பாவத்தையும் சேர்த்துக்கொண்டோம் என்று மக்கள் எல்லோரும் சொன்னார்கள். யாத் 9:281 யோவா 5:161 சாமு 12:23யாத் 10:171 சாமு 7:51 சாமு 7:8அப் 8:24ஆதி 20:7 அப்பொழுது சாமுவேல் மக்களைப் பார்த்து: பயப்படாதீர்கள்; நீங்கள் இந்தத் தீங்கையெல்லாம் செய்தீர்கள்; ஆனாலும் யெகோவாவை விட்டுப் பின்வாங்காமல் யெகோவாவை உங்கள் முழு இருதயத்தோடும் தொழுதுகொள்ளுங்கள். உபா 11:16யோசு 23:6சங் 101:3சங் 125:51 பேது 3:16உபா 31:29யாத் 20:19-20எரே 3:1 பயனற்றதும், விடுவிக்கமுடியாததுமாக இருக்கிற வெறுமையானவைகளைப் பின்பற்றும்படி திரும்பாதீர்கள்; அவைகள் வீணானவைகளே. ஆப 2:18எரே 10:15எரே 16:19உபா 11:16எரே 14:221 கொரி 8:4ஏசா 44:9-10ஏசா 45:20 யெகோவா உங்களைத் தம்முடைய மக்களாக்கிக்கொள்வதற்கு பிரியமானதால், யெகோவா தம்முடைய மேன்மையான நாமத்தினிமித்தம் தமது மக்களைக் கைவிடமாட்டார். உபா 14:2பிலி 1:6சங் 106:81 இராஜா 6:13உபா 7:7-8எரே 14:21ரோம 11:29யோசு 7:9 நானும் உங்களுக்காக விண்ணப்பம் செய்யாமல் இருந்தால் யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்கிறவனாக இருப்பேன்; அது எனக்குத் தூரமாயிருக்கட்டும்; நன்மையும் சரியானதுமான வழியை நான் உங்களுக்குப் போதிப்பேன். கொலோ 1:9ரோம 1:92 தீமோ 1:31 தெச 3:101 இராஜா 8:36அப் 12:5சங் 34:11எரே 6:16 நீங்கள் எப்படியும் யெகோவாவுக்குப் பயந்து, உங்கள் முழு இருதயத்தோடும் உண்மையாய் அவரைச் தொழுதுகொள்ளக்கடவீர்கள்; அவர் உங்களிடத்தில் எவ்வளவு மகிமையான காரியங்களைச் செய்தார் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள். உபா 10:21நீதி 1:7எபி 12:29ஏசா 5:12சங் 126:2-3பிரச 12:13சங் 111:10யாத் 12:13 நீங்கள் இன்னும் தீங்கையே செய்தால், நீங்களும் உங்கள் ராஜாவும் அழிந்துபோவீர்கள் என்றான். யோசு 24:201 சாமு 31:1-5ஓசி 10:3உபா 28:36ஏசா 3:11உபா 32:15-44