விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்
நான் என் காவலிலே தரித்து, பாதுகாப்பிலே நிலைகொண்டிருந்து, அவர் எனக்கு என்ன சொல்லுவாரென்றும், அவர் என்னைக் கண்டிக்கும்போது நான் என்ன உத்திரவு சொல்லுவேனென்றும் கவனித்துப்பார்ப்பேன் என்றேன். ஏசா 21:8ஏசா 62:62 சாமு 18:24சங் 85:8சங் 73:16-17சங் 5:32 கொரி 13:3எரே 12:1 அப்பொழுது யெகோவா எனக்கு மறுமொழியாக: நீ தரிசனத்தை எழுதி, அதை செய்தி அறிவிப்பாளன் வாசிக்கும்விதத்தில் பலகைகளிலே தெளிவாக எழுது. ஏசா 30:8வெளி 14:13வெளி 1:18-19உபா 31:22வெளி 21:5-8தானி 12:4உபா 27:8ஏசா 8:1 குறித்தகாலத்திற்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது சம்பவிக்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாக வரும், அது தாமதிப்பதில்லை. சங் 27:14எபி 10:36-37புலம் 3:25-26எசேக் 12:25சங் 102:13சங் 130:5-6தானி 10:14யாக் 5:7-8 இதோ, அகங்காரியாக இருக்கிறானே, அவனுடைய ஆத்துமா அவனுக்குள் செம்மையானதல்ல; தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான். ரோம 1:17எபி 10:38கலா 3:11-12கலா 2:16யோவா 3:361 யோவா 5:10-12லூக் 18:14தானி 4:37
துன்மார்க்கர்களுக்கு ஐயோ
அவன் மதுபானத்தினால் அக்கிரமம்செய்து அகங்காரியாகி, வீட்டிலே தங்கியிருக்காமல், அவன் தன் ஆத்துமாவைப் பாதாளத்தைப்போல விரிவாக்கித் திருப்தியாகாமல், மரணத்திற்குச் சமமாகச் சகல தேசங்களையும் தன் வசமாகச் சேர்த்து, சகல மக்களையும் தன்னிடமாகக் கூட்டிக்கொண்டாலும், ஏசா 5:11-12நீதி 20:1நீதி 27:20நீதி 31:4-52இராஜா 14:10தானி 5:1-4பிரச 5:10ஏசா 10:7-13 இவர்களெல்லோரும் அவன்பேரில் ஒரு பழமொழியையும், அவனுக்கு விரோதமான பழிச்சொல்லையும் கூறி, தன்னுடையதல்லாததைத் தனக்காகச் சேர்த்துக் கொள்ளுகிறவனுக்கு ஐயோ என்றும், அது எதுவரைக்கும் நிற்கும் என்றும், அவன் தன்மேல் களிமண் சுமையையல்லவா சுமத்திக்கொள்ளுகிறான் என்றும் சொல்லுவார்கள். ஏசா 14:4-19எரே 29:22எரே 50:13யோபு 20:15-29மீகா 2:4எண் 23:71 கொரி 7:29-311 பேது 4:7 உன்னைக் கடிப்பவர்கள் உடனடியாக எழும்புவதும், உன்னை அலைக்கழிப்பவர்கள் விழிப்பதுமில்லையோ? நீ அவர்களுக்குச் சூறையாகாயோ? நீதி 29:11 தெச 5:3தானி 5:25-31பிரச 10:8ஏசா 13:1-5ஏசா 13:16-18ஏசா 21:2-9ஏசா 41:25 நீ அநேகம் மக்களைக் கொள்ளையிட்டதினால் மக்களில் மீதியான யாவரும் நீ சிந்தின மனித இரத்தத்தின் காரணமாகவும், நீ செய்த கொடுமையின் காரணமாகவும் உன்னைக் கொள்ளையிடுவார்கள். ஏசா 33:1ஆப 2:17எரே 27:7ஆப 2:10ஏசா 33:4ஏசா 47:6எரே 30:16எரே 50:10-11 தீமையின் வல்லமைக்குத் தப்பவேண்டுமென்று தன் கூட்டை உயரத்திலே வைக்கும்படிக்கு, தன் வீட்டிற்குப் பொல்லாத ஆதாயத்தைத் தேடுகிறவனுக்கு ஐயோ, எரே 49:16எரே 22:13-191 இராஜா 21:19-241 இராஜா 21:2-42இராஜா 5:20-27அப் 1:17-25உபா 7:25-26ஆதி 13:10-13 அநேக மக்களை வெட்டிப்போட்டதினால் உன் வீட்டிற்கு வெட்கமுண்டாக ஆலோசனை செய்தாய்; உன் ஆத்துமாவுக்கு விரோதமாகப் பாவம்செய்தாய். 2இராஜா 9:26நாகூ 1:141 இராஜா 2:232இராஜா 10:7ஆப 2:16ஏசா 14:20-22ஏசா 33:11எரே 22:30 சுவரிலிருந்து கல் கூப்பிடும், உத்திரம் மேற்கூரையிலிருந்து சாட்சியிடும். லூக் 19:40யோசு 24:27யாக் 5:3-4யோபு 31:38-40ஆதி 4:10எபி 12:24வெளி 6:10 இரத்தப்பழிகளாலே பட்டணத்தைக் கட்டி, அநியாயத்தினாலே நகரத்தைப் பலப்படுத்துகிறவனுக்கு ஐயோ, மீகா 3:10நாகூ 3:1தானி 4:27-31எரே 22:13-17யோசு 6:26வெளி 17:61 இராஜா 16:34எசேக் 24:9 இதோ, மக்கள் நெருப்புக்கு இரையாக உழைத்து, மக்கள் வீணாக இளைத்துப்போகிறது யெகோவாவுடைய செயல் அல்லவோ? எரே 51:58ஏசா 50:11நீதி 21:30ஆதி 11:6-9ஏசா 41:5-8ஏசா 55:2யோபு 5:13-14மல்கி 1:4 சமுத்திரம் தண்ணீரினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி யெகோவாவுடைய மகிமையை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும். ஏசா 11:9சங் 22:27சங் 72:19ஏசா 6:3சங் 86:9சகரி 14:8-9சங் 67:1-2வெளி 11:15 தன் தோழர்களுக்குக் குடிக்கக்கொடுத்துத் தன் தோல்பையை அவர்களுக்கு அருகிலே வைத்து, அவர்களுடைய நிர்வாணங்களைப் பார்க்குமளவுக்கு, அவர்களை வெறிக்கச்செய்கிறவனுக்கு ஐயோ, எரே 51:7ஆதி 9:22ஓசி 7:5வெளி 17:2வெளி 17:6வெளி 18:32 சாமு 11:132 சாமு 13:26-28 நீ மகிமையினால் அல்ல, வெட்கத்தினால் நிரப்பப்படுவாய்; நீயும் குடித்து விருத்தசேதனமில்லாதவன் என்று காட்டிக்கொள்; யெகோவாவுடைய வலதுகையில் இருக்கிற பாத்திரம் உன்னிடத்திற்குத் திரும்பும்; உன் மகிமையின்மேல் வெட்கமான வாந்திபண்ணுவாய். ஏசா 47:3நாகூ 3:5-6ஓசி 4:7ஓசி 7:5ஏசா 20:4ஏசா 28:7-8ஏசா 49:26ஏசா 51:21-23 லீபனோனுக்குச் செய்த கொடுமை உன்னை மூடும்; சிந்தின மனித இரத்தத்தின் காரணமாகவும், தேசத்திற்கும் பட்டணத்திற்கும் அதின் குடிமக்கள் எல்லோருக்கும் செய்த கொடுமையின் காரணமாகவும் மிருகங்கள் செய்யும் பாழ்க்கடிப்பு உன்னைக் கலங்கச்செய்யும். ஆப 2:8சங் 55:23சகரி 11:1எரே 50:28எரே 50:33-34எரே 51:24எரே 51:34-37நீதி 28:17 சித்திரக்காரனுக்கு அவன் செய்த உருவமும், ஊமையான தெய்வங்களை உண்டாக்கித் தான் உருவாக்கின உருவத்தை நம்பினவனுக்கு வார்க்கப்பட்டதும், பொய்ப்போதகம் செய்கிறதுமான சிலையும் எதற்கு உதவும்? எரே 10:81 கொரி 12:2ஏசா 44:9-10சகரி 10:2எரே 2:27-28ஏசா 42:17ஏசா 45:16சங் 115:4-8 மரத்தால் செய்யப்பட்ட விக்கிரகத்தைப்பார்த்து விழியென்றும், ஊமையான கல் சிலையைப் பார்த்து எழும்பு என்றும் சொல்லுகிறவனுக்கு ஐயோ, அது போதிக்குமோ? இதோ, அது பொன்னும் வெள்ளியுமான தகட்டால் மூடப்பட்டிருக்கிறது; அதற்குள்ளே சுவாசம் இல்லையே? சங் 135:17எரே 10:41 இராஜா 18:26-29எரே 10:9அப் 17:29தானி 3:1தானி 3:18தானி 3:29 யெகோவாவோவென்றால், தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; பூமியெல்லாம் அவருக்கு முன்பாக மௌனமாயிருப்பதாக. சகரி 2:13செப்ப 1:7சங் 46:10சங் 11:4ஏசா 6:1யோனா 2:7மீகா 1:2சங் 76:8-9