ஈசாயிலிருந்து ஒரு கிளை
ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும். எரே 23:5வெளி 22:16சகரி 6:12வெளி 5:5அப் 13:22-23எரே 33:15ஏசா 53:2சகரி 3:8 ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் யெகோவாவுக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய யெகோவாவுடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார். ஏசா 61:1யோவா 16:13எபே 1:17-182 தீமோ 1:7ஏசா 42:1மத் 3:16கொலோ 1:8-9யோவா 3:34 யெகோவாவுக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்; அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும், யோவா 7:24லூக் 2:521 சாமு 16:7யோவா 8:15-161 கொரி 2:13-15நீதி 2:51 இராஜா 3:28எபி 5:14 நீதியின்படி ஏழைகளை நியாயம்விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வார்த்தையாகிய கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரை அழிப்பார். 2 தெச 2:8வெளி 19:15யோபு 4:9மல்கி 4:6நீதி 31:8-9ஏசா 61:1மத் 5:5சங் 72:12-14 நீதி அவருக்கு அரைக்கட்டும், சத்தியம் அவருக்கு இடைக்கச்சையுமாயிருக்கும். எபே 6:141 யோவா 1:92 கொரி 6:7ஏசா 25:1ஏசா 59:171 பேது 4:1ஓசி 2:20வெளி 1:13 அப்பொழுது ஓனாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடு படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒன்றாக இருக்கும்; ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான். ஏசா 65:25ஓசி 2:18எசேக் 34:25வெளி 5:9-10கலா 3:26-27கொலோ 3:3-8தீத் 3:3-51 கொரி 6:9-11 பசுவும் கரடியும் கூடிமேயும், அவைகளின் குட்டிகள் ஒன்றாகப் படுத்துக்கொள்ளும்; சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும். பால் குடிக்கும் குழந்தை விரியன்பாம்புப் புற்றின்மேல் விளையாடும், பால் மறந்த பிள்ளை கட்டுவிரியன் புற்றிலே தன் கையை வைக்கும். ஏசா 59:5சங் 140:3 என் பரிசுத்த மலையெங்கும் தீமை செய்வாருமில்லை; கெடுதல் செய்வாருமில்லை; சமுத்திரம் தண்ணீனால் நிறைந்திருக்கிறதுபோல, பூமி யெகோவாவை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும். ஆப 2:14ஏசா 52:10சங் 98:2-3மீகா 4:2-4யோபு 5:23ஏசா 60:1-22ஏசா 59:19சங் 72:19 அக்காலத்திலே, மக்களுக்குக் கொடியாக நிற்கும் ஈசாயின் வேருக்காக மக்கள்கூட்டம் விசாரித்துக் கேட்பார்கள்; அவருடைய தங்கும் இடம் மகிமையாயிருக்கும். ரோம 15:9-12லூக் 2:32ஏசா 11:1மத் 2:1-2யோவா 12:32மத் 12:21மத் 8:11அப் 11:18 அக்காலத்திலே, ஆண்டவர் அசீரியாவிலும், எகிப்திலும், பத்ரோசிலும், எத்தியோப்பியாவிலும், பெர்சியாவிலும், சிநேயாரிலும், ஆமாத்திலும், தூரமான கடலிலுள்ள தீவுகளிலும், தம்முடைய மக்களில் மீதியானவர்களை மீட்டுக்கொள்ளத் திரும்ப இரண்டாம்முறை தமது கரத்தை நீட்டி, சகரி 10:8-12ஏசா 10:20மீகா 7:12ஓசி 3:4-5உபா 4:27-31ஓசி 11:11எரே 30:8-11லேவி 26:40-42 மக்களுக்கு ஒரு கொடியை ஏற்றி, இஸ்ரவேலில் துரத்துண்டவர்களைச் சேர்த்து, யூதாவில் சிதறடிக்கப்பட்டவர்களை பூமியின் நான்கு திசைகளிலுமிருந்து கூட்டுவார். ஏசா 43:6ஏசா 56:8சங் 147:2செப்ப 3:10ஏசா 11:10சகரி 10:6ஏசா 27:13சங் 68:22 எப்பிராயீமின் பொறாமை நீங்கும், யூதாவின் எதிரிகள் அழிக்கப்படுவார்கள்; எப்பிராயீம் யூதாவின்மேல் பொறாமையாக இருக்கமாட்டான், யூதா எப்பிராயீமைத் துன்பப்படுத்தமாட்டான். எரே 3:18எசேக் 37:16-24ஓசி 1:11ஏசா 9:21ஏசா 7:1-6 அவர்கள் இருவரும் ஒன்றாகக்கூடி மேற்கேயிருக்கிற பெலிஸ்தருடைய எல்லைகளின்மேல் பாய்ந்து, கிழக்குத்திசையாரைக் கொள்ளையிட்டு, ஏதோமின்மேலும் மோவாபின்மேலும் போரிடுவார்கள்; அம்மோன் மக்கள் அவர்களுக்குக் கீழ்ப்படிவார்கள். யோவே 3:19தானி 11:41ஏசா 25:10எரே 49:28ஆமோ 9:12மத் 8:11எசேக் 38:1-23ஏசா 16:14 எகிப்தின் சமுத்திரமுனையைக் யெகோவா முற்றிலும் அழித்து, தம்முடைய காற்றின் வலிமையினால் நதியின்மேல் தமது கையை நீட்டி, ஏழு ஆறுகளாகப் பிரித்து, மக்கள் கால் நனையாமல் கடந்துபோகச் செய்வார். வெளி 16:12சகரி 10:11ஏசா 50:2ஏசா 19:16ஏசா 7:20எசேக் 29:10எசேக் 30:12ஏசா 19:5-10 இஸ்ரவேலர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் அவர்களுக்கு இருந்ததுபோல, அசீரியாவிலே அவருடைய மக்களில் மீதியானவர்களுக்கு ஒரு பெரும்பாதையிருக்கும். ஏசா 19:23ஏசா 35:8-10ஏசா 11:11யாத் 14:26-29ஏசா 62:10ஏசா 40:3-4ஏசா 51:10ஏசா 57:14