துதியின் பாடல்கள்
அக்காலத்திலே நீ சொல்வது: சங் 30:5ஏசா 25:1ஏசா 54:8சகரி 14:9ஓசி 6:1ஏசா 40:1-2ஏசா 14:3ஏசா 27:1-3
“யெகோவாவே, நான் உம்மைத் துதிப்பேன்;
நீர் என்மேல் கோபமாயிருந்தீர்; ஆனாலும் உம்முடைய கோபம் நீங்கியது;
நீர் என்னைத் தேற்றுகிறீர்.
இதோ, தேவனே என் இரட்சிப்பு; யாத் 15:2சங் 118:14சங் 27:1வெளி 7:10ஏசா 26:3-4யோனா 2:9ஏசா 45:17ஏசா 45:22-25
நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்;
கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்;
அவரே எனக்கு இரட்சிப்புமானவர்.
நீங்கள் இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து வெளி 22:1வெளி 22:17எரே 2:13யோவா 4:10-14வெளி 7:17ஏசா 55:1-3யோவா 7:37-39ஏசா 49:10
மகிழ்ச்சியுடன் தண்ணீர் மொண்டுகொள்வீர்கள்.
அக்காலத்திலே நீங்கள் சொல்வது: சங் 105:1சங் 145:4-61 நாளாக 29:11யோவா 17:26சங் 117:1-2பிலி 2:9-11யாத் 15:2யாத் 33:19
யெகோவாவை துதியுங்கள்;
அவர் நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்;
அவருடைய செய்கைகளை மக்களுக்குள்ளே அறிவியுங்கள்;
அவருடைய நாமம் உயர்ந்ததென்று பிரஸ்தாபம் செய்யுங்கள்.
யெகோவாவைக் கீர்த்தனம்செய்யுங்கள், சங் 98:1யாத் 15:1ஆப 2:14யாத் 15:21ஏசா 40:9வெளி 15:3வெளி 19:1-3சங் 105:2
அவர் மகத்துவமான செயல்களைச் செய்தார்;
இது பூமியெங்கும் அறியப்படக்கடவது என்பீர்கள்.
சீயோனில் குடியிருக்கிறவளே, சகரி 2:10-11சகரி 2:5சங் 9:11செப்ப 3:14-17ஏசா 41:14எசேக் 48:35ஏசா 40:9ஏசா 41:16
நீ சத்தமிட்டுக் கெம்பீரி;
இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார்.”