ஏசாயா 62

Isaiah 62
அத்தியாயம் 62

சீயோனின் புதிய பெயர்

சீயோனுக்காகவும் எருசலேமுக்காகவும் நான் மவுனமாயிராமலும், அதின் நீதி பிரகாசத்தைப் போலவும், அதின் பாதுகாப்பு எரிகிற தீப்பந்தத்தைப்போலவும் வெளிப்படும்வரை அமராமலும் இருப்பேன். ஏசா 62:6-7நீதி 4:18ஏசா 32:15-17சங் 102:13-161 பேது 2:9லூக் 2:30-32எபி 7:25ஏசா 51:5-6 தேசங்கள் உன் நீதியையும், சகல ராஜாக்களும் உன் மகிமையையும் காண்பார்கள்; யெகோவாவுடைய வாய் சொல்லும் புதிய பெயரால் நீ அழைக்கப்படுவாய். ஏசா 62:12ஏசா 65:15வெளி 2:17ஆதி 17:5ஏசா 60:1-3ஏசா 66:12ஆதி 17:15ஏசா 49:23 நீ யெகோவாவுடைய கையில் அலங்காரமான கிரீடமும், உன் தேவனுடைய கரத்தில் ராஜமுடியுமாயிருப்பாய். ஏசா 28:51 தெச 2:19சகரி 9:16லூக் 2:14 நீ இனிக் கைவிடப்பட்டவள் எனப்படாமலும், உன் தேசம் இனிப் பாழான தேசம் எனப்படாமலும், நீ எப்சிபா என்றும், உன் தேசம் பியூலா என்றும் சொல்லப்படும்; யெகோவா உன்மேல் பிரியமாயிருக்கிறார்; உன் தேசம் வாழ்க்கைப்படும். செப்ப 3:17ஓசி 2:19-20ஏசா 62:12ஏசா 54:5-7எரே 32:411 பேது 2:10ஏசா 61:10ஏசா 54:1 வாலிபன் கன்னிகையை திருமணம்செய்வதுபோல, உன் மக்கள் உன்னை திருமணம்செய்வார்கள்; மணமகன் மணமகளின்மேல் மகிழ்ச்சியாயிருப்பதுபோல, உன் தேவன் உன்மேல் மகிழ்ச்சியாயிருப்பார். ஏசா 62:4ஏசா 65:19எபி 12:2ஏசா 49:18-22எரே 32:41சங் 45:11-16உன்னத 3:11 எருசலேமே, உன் மதில்களின்மேல் பகல்முழுவதும் இரவுமுழுவதும் ஒருக்காலும் மவுனமாயிராத காவற்காரர்களைக் கட்டளையிடுகிறேன். யெகோவாவைப் பிரஸ்தாபம்செய்கிறவர்களே, நீங்கள் அமைதியாக இருக்ககூடாது. ஏசா 52:8எசேக் 3:17-211 தெச 5:17சங் 134:1-2எரே 6:17எபி 13:17ஏசா 56:10எசேக் 33:2-9 அவர் எருசலேமை உறுதிப்படுத்தி, பூமியிலே அதைப் புகழ்ச்சியாக்கும்வரை அவரை அமர்ந்திருக்கவிடாதிருங்கள். எரே 33:9செப்ப 3:19-20ஏசா 60:18லூக் 18:1-8மத் 6:9-10ஏசா 61:11வெளி 11:15மத் 6:13 இனி நான் உன் தானியத்தை உன் எதிரிகளுக்கு உணவாகக் கொடுக்கமாட்டேன்; உன் பிரயாசத்தினாலாகிய உன் திராட்சைரசத்தை அந்நிய தேசத்தார் குடிப்பதுமில்லையென்று யெகோவா தமது வலது கரத்தின்மேலும் தமது வல்லமையுள்ள புயத்தின்மேலும் வாக்குக்கொடுத்தார். ஏசா 65:21-23நியாயாதி 6:3-6உபா 28:33உபா 28:31எசேக் 20:5உபா 32:40ஏசா 1:7எரே 5:17 அதைச் சேர்த்தவர்களே அதை சாப்பிட்டு யெகோவாவை துதிப்பார்கள்; அதைத் தயாரித்தவர்களே என் பரிசுத்த ஸ்தலத்தின் பிராகாரங்களில் அதைக் குடிப்பார்கள். உபா 16:11உபா 12:12உபா 12:7உபா 14:23-29உபா 16:14 வாசல்கள் வழியாக நுழையுங்கள், நுழையுங்கள்; மக்களுக்கு வழியை ஒழுங்குபடுத்துங்கள்; பாதையை உயர்த்துங்கள், உயர்த்துங்கள்; அதிலுள்ள கற்களைப் பொறுக்கிப்போடுங்கள்; மக்களுக்காகக் கொடியை ஏற்றுங்கள். ஏசா 57:14ஏசா 40:3எபி 12:13ஏசா 49:22ஏசா 11:10மத் 22:9யாத் 17:15ஏசா 11:12 நீங்கள் மகளாகிய சீயோனை நோக்கி: இதோ, உன் இரட்சிப்பு வருகிறது; இதோ, அவர் கொடுக்கும் பலன் அவரோடும், அவர் செய்யும் பிரதிபலன் அவர் முன்பாகவும் வருகிறது என்று சொல்லுங்கள் என்று, யெகோவா பூமியின் கடைசிவரைக்கும் கூறுகிறார். சகரி 9:9மத் 21:5யோவா 12:15வெளி 22:12ஏசா 40:9-10ரோம 10:11-18சங் 98:1-3ஏசா 49:4 அவர்களைப் பரிசுத்த மக்களென்றும், யெகோவாவால் காப்பாற்றப்பட்டவர்களென்றும் சொல்லுவார்கள்; நீ தேடிக்கொள்ளப்பட்டதென்றும் 1, கைவிடப்படாத நகரமென்றும் பெயர்பெறுவாய். 1 பேது 2:9உபா 26:19ஏசா 62:4உபா 28:9உபா 7:6ஏசா 35:9சங் 107:2எபி 13:5