ஏசாயா 49

Isaiah 49
அத்தியாயம் 49

ஆண்டவருடைய ஊழியக்காரன்

தீவுகளே, எனக்குச் செவிகொடுங்கள்; தூரத்திலிருக்கிற மக்களே, கவனியுங்கள்; தாயின் கர்ப்பத்திலிருந்ததுமுதல் யெகோவா என்னை அழைத்து, நான் என் தாயின் வயிற்றில் இருக்கும்போது என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தினார். எரே 1:5கலா 1:15ஏசா 44:2ஏசா 49:5லூக் 1:311 பேது 1:20லூக் 2:10-11மத் 1:20-21 அவர் என் வாயைக் கூர்மையான பட்டயமாக்கி, தமது கரத்தின் நிழலினால் என்னை மறைத்து, என்னைக் கூர்மையான அம்பாக்கி, என்னைத் தமது அம்புகளை வைக்கும் பையிலே மூடிவைத்தார். எபி 4:12வெளி 1:16ஏசா 50:4வெளி 2:12ஏசா 11:4ஏசா 51:16எரே 1:18சங் 91:1 அவர் என்னை நோக்கி: நீ என் ஊழியக்காரன்; இஸ்ரவேலே, நான் உன்னில் மகிமைப்படுவேன் என்றார். ஏசா 42:11 பேது 2:9ஏசா 44:23ஏசா 52:13யோவா 17:1யோவா 17:4சகரி 3:8ஏசா 53:10 அதற்கு நான்: வீணாக உழைக்கிறேன், வீணாகவும் பயனற்றதாகவும் என் பெலனைச் செலவழிக்கிறேன்; ஆகிலும் என் நியாயம் கர்த்தரிடத்திலும், என் பலன் என் தேவனிடத்திலும் இருக்கிறது என்று சொன்னேன். ஏசா 35:4கலா 4:112 கொரி 12:152 கொரி 2:15எசேக் 3:19ஏசா 40:10ஏசா 53:10-12ஏசா 62:11 யாக்கோபைத் தம்மிடத்தில் திருப்பும்படி நான் தாயின் கர்ப்பத்திலிருந்ததுமுதல் யெகோவா தமக்கு ஊழியக்காரனாக என்னை உருவாக்கினார்; இஸ்ரவேலோ சேராதேபோகிறது; ஆகிலும் யெகோவாவுடைய பார்வையில் கனமடைவேன், என் தேவன் என் பெலனாயிருப்பார். யோவா 3:35மத் 17:51 பேது 3:22மத் 28:18ரோம 15:81 தெச 2:15-16எபே 1:20-22ஏசா 11:12 யாக்கோபின் வம்சங்களை எழுப்பவும், இஸ்ரவேலில் காக்கப்பட்டவர்களைத் திருப்பவும், நீர் எனக்குத் தாசனாயிருப்பது அற்பகாரியமாயிருக்கிறது; நீர் பூமியின் முடிவுவரைக்கும் என்னுடைய இரட்சிப்பாயிருக்கும்படி, உம்மை தேசங்களுக்கு ஒளியாகவும் வைப்பேன் என்கிறார். அப் 13:47ஏசா 42:6லூக் 2:32சங் 98:2-3ஏசா 52:10ஏசா 60:3லூக் 24:46-47அப் 26:18 இஸ்ரவேலின் மீட்பரும் அதின் பரிசுத்தருமாகிய யெகோவா, மனிதர்களால் அசட்டைசெய்யப்பட்டவரும், தேசங்களால் அருவருக்கப்பட்டவரும், அதிகாரிகளுக்கு ஊழியக்காரனுமாயிருக்கிறவரை நோக்கி, உண்மையுள்ள யெகோவா நிமித்தமும், உம்மைத் தெரிந்துகொண்ட இஸ்ரவேலின் பரிசுத்தர்நிமித்தமும், ராஜாக்கள் கண்டு எழுந்திருந்து, பிரபுக்கள் பணிந்துகொள்வார்கள் என்று சொல்கிறார். 1 பேது 2:4ஏசா 53:3மத் 26:67ஏசா 48:17சங் 22:6-8சங் 72:10-11ஏசா 49:23ஏசா 49:1

இஸ்ரவேலின் மறுசீரமைப்பு

பின்னும் யெகோவா: அனுக்கிரகக் காலத்திலே நான் உமக்குச் செவிகொடுத்து, இரட்சணிய நாளிலே உமக்கு உதவி செய்தேன்; நீர் பூமியைச் சீர்ப்படுத்தி, பாழாய்க்கிடக்கிற இடங்களைச் சொந்தமாக்கிக்கொள்ளவும்; 2 கொரி 6:2ஏசா 42:6சங் 69:13எபி 12:24ஏசா 61:4ஏசா 58:12எபே 2:12-19எபி 5:7 கட்டுண்டவர்களை நோக்கி: புறப்பட்டுப்போங்கள் என்றும்; இருளில் இருக்கிறவர்களை நோக்கி: வெளியே வாருங்கள் என்றும் சொல்லவும், நான் உம்மைக் காப்பாற்றி, உம்மை மக்களுக்கு உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்; அவர்கள் வழியோரங்களிலே மேய்வார்கள்; சகல மேடுகளிலும் அவர்களுக்கு மேய்ச்சல் உண்டாயிருக்கும். 1 பேது 2:9ஏசா 42:16ஏசா 42:7லூக் 4:18ஏசா 61:1ஏசா 9:2சங் 102:20சங் 69:33 அவர்கள் பசியாயிருப்பதுமில்லை, தாகமாயிருப்பதுமில்லை; உஷ்ணமாகிலும், வெயிலாகிலும் அவர்கள்மேல் படுவதுமில்லை; அவர்களுக்கு இரங்குகிறவர் அவர்களை நடத்தி, அவர்களை நீரூற்றுகளிடத்திற்குக் கொண்டுபோய்விடுவார். வெளி 7:16-17மத் 5:6எசேக் 34:23ஏசா 33:16சங் 121:5-6ஏசா 40:11எரே 31:9யோவா 10:3-4 என் மலைகளையெல்லாம் வழிகளாக்குவேன்; என் பாதைகள் உயர்த்தப்படும். ஏசா 11:16ஏசா 35:8-10ஏசா 62:10லூக் 3:4-5ஏசா 40:3-4ஏசா 43:19ஏசா 57:14யோவா 14:6 இதோ, இவர்கள் தூரத்திலிருந்து வருவார்கள்; இதோ, அவர்கள் வடக்கிலும் மேற்கிலுமிருந்து வருவார்கள்; இவர்கள் அஸ்வான் 1 தேசத்திலுமிருந்து வருவார்கள் என்கிறார். ஏசா 43:5-6ஏசா 11:10-11ஏசா 2:2-3ஏசா 60:9-14ஏசா 66:19-20லூக் 13:29மத் 8:11மீகா 4:2 வானங்களே, கெம்பீரித்துப் பாடுங்கள்; பூமியே, களிகூரு; மலைகளே, கெம்பீரமாக முழங்குங்கள்; யெகோவா தம்முடைய மக்களுக்கு ஆறுதல் செய்தார்; சிறுமைப்பட்டிருக்கிற தம்முடையவர்கள்மேல் இரக்கமாயிருப்பார். ஏசா 44:23ஏசா 51:3சங் 96:11-13ஏசா 40:1-2ஏசா 52:9லூக் 2:13-142 தெச 2:16-17ஏசா 12:1 சீயோனோ: யெகோவா என்னைக் கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார் என்று சொல்கிறாள். ஏசா 40:27ரோம 11:1-5எரே 23:39புலம் 5:20சங் 22:1சங் 31:22சங் 89:38-46சங் 13:1 ஒரு பெண் தன் கர்ப்பத்தின் குழந்தைக்கு இரங்காமல், தன் மகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை. ஏசா 44:21சங் 103:13மத் 7:11எரே 31:20ஓசி 11:1மல்கி 3:17புலம் 4:101 இராஜா 3:26-27 இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது. ஆகா 2:23ஏசா 60:18ஏசா 62:6உன்னத 8:6யாத் 13:9ஏசா 26:1ஏசா 54:12சங் 48:12-13 உன் மகன்கள் துரிதமாக வருவார்கள்; உன்னை நிர்மூலமாக்கினவர்களும் உன்னைப் பாழாக்கினவர்களும் உன்னை விட்டுப் புறப்பட்டுப்போவார்கள். ஏசா 51:13ஏசா 62:5எசேக் 28:24ஏசா 51:22-23எஸ்றா 1:5ஏசா 10:6ஏசா 49:19ஏசா 51:18-20 உன் கண்களை ஏறெடுத்துச் சுற்றிலும் பார்; அவர்களெல்லோரும் ஏகமாகக்கூடி உன்னிடத்தில் வருகிறார்கள்; நீ அவர்களெல்லோரையும் ஆபரணமாக அணிந்து, மணமகள் அணிந்துகொள்வதுபோல, நீ அவர்களை அணிந்துகொள்வாய் என்று, என் ஜீவனைக்கொண்டு சொல்கிறேன் என்று யெகோவா உரைக்கிறார். ஏசா 54:1-3ஏசா 61:10ஏசா 66:12-13ஏசா 54:9ஏசா 43:5-6ஏசா 49:12ஏசா 54:7ஏசா 66:20 அப்பொழுது உன் வனாந்திரங்களும், உன் பாழான இடங்களும், நிர்மூலமான உன் தேசமும், இனிக் குடிமக்களின் திரளினாலே உனக்கு நெருக்கமாயிருக்கும்; உன்னை விழுங்கினவர்கள் தூரமாவார்கள். சகரி 10:10ஏசா 54:1-2எரே 30:18-19ஓசி 1:10-11ஏசா 49:25-26ஏசா 51:3சங் 56:1-2எசேக் 36:3 பிள்ளைகளற்றிருந்த உனக்கு உண்டாயிருக்கப்போகிற பிள்ளைகள்: இடம் எங்களுக்கு நெருக்கமாயிருக்கிறது; நாங்கள் குடியிருக்கும்படிக்கு விலகியிரு என்று, உன் காதுகள் கேட்கச்சொல்வார்கள். யோசு 17:14-162இராஜா 6:1கலா 4:26-28ஓசி 1:10ஏசா 51:3ஏசா 54:1-3ஏசா 60:4மத் 3:9 அப்பொழுது நீ: இவர்களை எனக்குப் பிறப்பித்தவர் யார்? நான் பிள்ளைகளற்றும், தனித்தும், சிறைப்பட்டும், நிலையற்றும் இருந்தேனே; இவர்களை எனக்கு வளர்த்தவர் யார்? இதோ, நான் தனிமையாக விடப்பட்டிருந்தேனே; இவர்கள் எங்கேயிருந்தவர்கள்? என்று உன் இருதயத்தில் சொல்வாய். கலா 3:29கலா 4:26-29ஏசா 1:8ஏசா 3:26ஏசா 5:13ஏசா 51:17-20ஏசா 52:2ஏசா 54:3-8 இதோ, தேசங்களுக்கு நேராக என் கையை உயர்த்தி, மக்களுக்கு நேராக என் கொடியை ஏற்றுவேன்; அப்பொழுது உன் மகன்களை பெரும் கைகளில் ஏந்திக்கொண்டு வருவார்கள்; உன் மகள்கள் தோளின்மேல் எடுத்துக்கொண்டு வரப்படுவார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்கிறார். ஏசா 14:2லூக் 13:29சங் 86:9ஏசா 11:10-12ஏசா 2:2-3ஏசா 42:1-4ஏசா 49:12ஏசா 60:3-11 ராஜாக்கள் உன்னை வளர்க்கும் தந்தைகளும், அவர்களுடைய நாயகிகள் உன் வளர்க்கும் தாய்களுமாயிருப்பார்கள்; தரையிலே முகங்குப்புறவிழுந்து உன்னைப் பணிந்து, உன் கால்களின் தூளை நக்குவார்கள்; நான் யெகோவா, எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை என்பதை அப்பொழுது அறிந்துகொள்வாய். ஏசா 60:14ஏசா 60:16ஏசா 60:3மீகா 7:17ஏசா 45:14ஏசா 60:10-11ரோம 10:11சங் 25:3 பராக்கிரமன் கையிலிருந்து கொள்ளைப்பொருளைப் பறிக்கமுடியுமோ? அல்லது நீதியாய்ச் சிறைப்பட்டுப்போனவர்களை விடுவிக்கமுடியுமோ? லூக் 11:21-22சங் 124:6-7மத் 12:29எசேக் 37:3ஏசா 42:22எஸ்றா 9:13எஸ்றா 9:9சங் 126:1-3 என்றாலும் இதோ, பராக்கிரமனால் சிறைப்படுத்தப்பட்டவர்களும் விடுவிக்கப்படுவார்கள்; பெலவந்தனால் கொள்ளையிடப்பட்டதும் விடுதலையாக்கப்படும்; உன்னோடு வழக்காடுகிறவர்களுடன் நான் வழக்காடி, உன் பிள்ளைகளை இரட்சித்துக்கொள்வேன். ஏசா 54:15-17ஏசா 35:4ஏசா 41:11-12எரே 50:33-34ஏசா 54:13ரோம 8:31-39சகரி 14:12ஏசா 10:27 உன்னை ஒடுக்கினவர்களுடைய மாம்சத்தை அவர்களுக்கே சாப்பிடக்கொடுப்பேன்; மதுபானத்தால் வெறிகொள்வதுபோல் தங்களுடைய இரத்தத்தினால் வெறிகொள்வார்கள்; கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான அனைவரும் அறிந்துகொள்வார்களென்று யெகோவா சொல்கிறார். ஏசா 9:20ஏசா 41:14-20ஏசா 9:4வெளி 16:6எசேக் 39:7ஏசா 43:3ஏசா 60:16சங் 9:16