2 தெசலோனிக்கேயர் 2

2 Thessalonians 2
அத்தியாயம் 2

கர்த்தருடைய வருகை

அன்றியும், சகோதரர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையையும், நாம் அவரிடத்தில் சேர்க்கப்படுவதையும்குறித்து, நாங்கள் உங்களை வேண்டிக்கொள்ளுகிறது என்னவென்றால், 1 தெச 4:14-17மாற் 13:27மத் 24:311 தெச 2:191 தெச 3:132 தீமோ 4:1மத் 25:32எபே 1:10 கிறிஸ்துவினுடைய நாள் வந்துவிட்டது என்று தீர்க்கதரிசனமாகவோ எங்களுடைய வார்த்தையாகவோ எங்களிடத்திலிருந்து கடிதம் வந்ததாகவோ சொல்லப்பட்டால், உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள். 1 யோவா 4:1-2மாற் 13:7மத் 24:4-62 பேது 3:4-82 தெச 3:17லூக் 21:91 கொரி 1:81 தெச 4:15 எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்; ஏனென்றால், விசுவாச துரோகம் முன்னதாக நடந்து, பின்பு அழிவின் மகனாகிய பாவமனிதன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது. மத் 24:4-61 யோவா 2:18எபே 5:61 தீமோ 4:1-32 தெச 2:8-10தானி 7:25தானி 8:252 தீமோ 3:1-3 அவன் எதிர்த்து நிற்கிறவனாகவும், தேவனென்னப்படுவது எதுவோ, ஆராதிக்கப்படுவது எதுவோ, அவையெல்லாவற்றிற்கும்மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாகவும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாகவும் இருப்பான். தானி 7:25எசேக் 28:2ஏசா 14:13-14வெளி 13:6-7எசேக் 28:6தானி 11:451 கொரி 8:5தானி 7:8 நான் உங்களிடத்திலிருந்தபோது இவைகளைச் சொன்னது உங்களுக்கு ஞாபகமில்லையா? 2 பேது 1:15கலா 5:21யோவா 16:4மத் 16:91 தெச 2:112 தெச 3:10அப் 20:31லூக் 24:6-7 அவன் தன் காலத்திலே வெளிப்படும்படிக்கு, இப்பொழுது அவனைத் தடைசெய்கிறது இன்னதென்றும் அறிந்திருக்கிறீர்களே. 2 தெச 2:32 தெச 2:8 அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியைசெய்கிறது; ஆனாலும், தடைசெய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படுவதற்குமுன்னே அது வெளிப்படாது. 1 யோவா 4:32 தீமோ 2:17-18வெளி 17:71 யோவா 2:18அப் 20:29வெளி 17:5கொலோ 2:18-231 தீமோ 3:16 நீக்கப்படும்போது, அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான்; அவனைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் தோற்றத்தினாலே நாசம்பண்ணுவார். 2 தெச 2:3வெளி 19:20-21ஏசா 11:4வெளி 20:10வெளி 19:15தானி 7:10-11வெளி 2:16தீத் 2:13 அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி எல்லா பொய்யான வல்லமையோடும் அடையாளங்களோடும் அற்புதங்களோடும், மத் 24:24வெளி 19:20எபே 2:22 கொரி 11:3யோவா 4:48மாற் 13:22உபா 13:1-2அப் 13:10 கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் எல்லாவித வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத்தக்கதாகச் சத்தியத்தை நேசிக்க அவர்கள் மறுத்ததினால் அப்படி நடக்கும். 1 கொரி 1:18நீதி 1:72 கொரி 4:2-32 பேது 2:12யோவா 8:45-47ரோம 16:181 கொரி 16:22எபே 4:14 ஆகவே, சத்தியத்தை விசுவாசிக்காமல் அநீதியில் பிரியப்படுகிற எல்லோரும் தண்டனைக்குள்ளாக்கப்படும்படிக்கு, ரோம 1:28யோவா 12:39-431 தீமோ 4:1மத் 24:11சங் 81:11-12எசேக் 21:29ரோம 1:21-251 தெச 2:3 அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய மாய வஞ்சகத்தை தேவன் அவர்களுக்கு அனுப்புவார். ரோம 1:32ரோம 8:7-8மாற் 16:16ரோம 2:81 தெச 5:92 பேது 2:13-15ஓசி 7:3யோவா 3:36

நிலைகொண்டிருங்கள்

கர்த்தருக்குப் பிரியமான சகோதரர்களே, நீங்கள் ஆவியானவராலே பரிசுத்தமாக்கப்படுகிறதினாலும், சத்தியத்தை விசுவாசிக்கிறதினாலும் இரட்சிப்படையும்படிக்கு, தொடக்கம் முதல் தேவன் உங்களைத் தெரிந்துகொண்டபடியினாலே, நாங்கள் உங்களைக்குறித்து எப்பொழுதும் தேவனுக்கு நன்றிசொல்ல கடனாளிகளாக இருக்கிறோம். 2 தீமோ 1:9எபே 1:4-51 தெச 1:41 தெச 5:9ரோம 9:11அப் 13:482 தெச 1:3தானி 9:23 நீங்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மகிமையை அடையும்படிக்கு எங்களுடைய நற்செய்தியினாலே அந்த இரட்சிப்பிற்கு அவர் உங்களை அழைத்தார். 1 தெச 2:121 பேது 5:101 தெச 1:5ரோம 8:171 பேது 1:4-5ரோம 2:16ரோம 8:28-302 தீமோ 2:12 ஆகவே, சகோதரர்களே, நீங்கள் உறுதிகொண்டு, வார்த்தையினாலாவது கடிதத்தினாலாவது நாங்கள் உங்களுக்கு உபதேசித்த முறைமைகளைக் கைக்கொள்ளுங்கள். 1 கொரி 11:22 தெச 3:61 கொரி 16:132 தெச 2:2பிலி 4:1ரோம 16:171 கொரி 15:582 தெச 3:14 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும், நம்மிடத்தில் அன்புகூர்ந்து நித்தியஆறுதலையும் நல்நம்பிக்கையையும் கிருபையாக நமக்குக் கொடுத்திருக்கிற நம்முடைய பிதாவாகிய தேவனும், யோவா 3:16ரோம 5:2-51 பேது 1:3-8தீத் 3:4-71 தெச 3:11ரோம 8:24-25தீத் 1:22 கொரி 4:17-18 உங்களுடைய இருதயங்களைத் தேற்றி, எல்லா நல்வசனத்திலும் செயல்களிலும் உங்களை உறுதிப்படுத்துவாராக. 2 தெச 3:31 தெச 3:131 தெச 3:21 கொரி 1:8கொலோ 2:7எபி 13:9யூதா 1:24ரோம 15:13