கொலோசெயர் 2

Colossians 2
அத்தியாயம் 2

உங்களுக்காகவும் லவோதிக்கேயாவில் இருக்கிறவர்களுக்காகவும், சரீரத்தில் என் முகத்தைக் காணாதிருக்கிற மற்றெல்லோருக்காகவும் மிகுந்த போராட்டம் எனக்கு உண்டென்று நீங்கள் அறியவிரும்புகிறேன். கொலோ 1:29பிலி 1:30கொலோ 4:12-13வெளி 3:14-22வெளி 1:11அப் 20:38கொலோ 1:24ஓசி 12:3-4 அவர்களுடைய இருதயங்கள் தேற்றப்பட்டு, அவர்கள் அன்பினால் இணைக்கப்பட்டு, பிதாவாகிய தேவனுக்கும் கிறிஸ்துவிற்கும் உரிய இரகசியத்தை அறிந்துகொள்ளுகிற உணர்வின் பூரண நிச்சயத்தினுடைய எல்லா ஐசுவரியத்திற்கும் உரியவர்களாகவேண்டுமென்றே இப்படி விரும்புகிறேன். கொலோ 1:27கொலோ 4:8கொலோ 3:14எபே 6:22ரோம 16:25கொலோ 1:15-17எபே 3:9-10பிலி 3:8 அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது. 1 கொரி 1:241 கொரி 1:30ரோம 11:331 கொரி 2:6-82 தீமோ 3:15-17கொலோ 1:9எபே 3:9-10எபே 1:8 ஒருவனும் பொய்யான வாதங்களால் உங்களை ஏமாற்றாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன். 1 யோவா 4:1எபே 4:14மத் 24:4ரோம 16:18-192 யோவா 1:7மாற் 13:221 தீமோ 4:1-22 கொரி 11:11-13 சரீரத்தின்படி நான் தூரமாக இருந்தும், ஆவியின்படி உங்களோடுகூட இருந்து, உங்களுடைய ஒழுங்கையும், கிறிஸ்துவின் மேலுள்ள உங்களுடைய விசுவாசத்தின் உறுதியையும் பார்த்துச் சந்தோஷப்படுகிறேன். 1 கொரி 5:3-41 தெச 2:171 கொரி 16:131 பேது 5:92 பேது 3:17-181 கொரி 14:40எபி 3:141 கொரி 15:58

மனிதர்களுடைய நியமங்களிலிருந்து விடுதலை

ஆகவே, நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு, கொலோ 1:101 யோவா 2:61 தெச 4:1எபே 5:1-2கலா 2:202 கொரி 5:7கொலோ 3:17பிலி 1:27 நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, நன்றி செலுத்துவதோடு அதிலே பெருகுவீர்களாக. எபே 3:17எரே 17:8எபே 2:20-22யோவா 15:4-5கொலோ 1:232 பேது 3:17-182 தெச 2:17கொலோ 1:12-13 உலக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்; அது மனிதர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலக வழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப்பற்றினதல்ல. 1 தீமோ 6:20எபே 5:6மத் 7:15கலா 4:91 கொரி 3:18-19ரோம 1:21-22கொலோ 2:202 தீமோ 3:13 ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் குடிகொண்டிருக்கிறது. கொலோ 1:19யோவா 1:14யோவா 10:301 தீமோ 3:16யோவா 14:9-101 யோவா 5:20யோவா 10:38யோவா 14:20 மேலும் எல்லாத் துரைத்தனங்களுக்கும் அதிகாரத்திற்கும் தலைவராக இருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணம் உள்ளவர்களாக இருக்கிறீர்கள். எபே 3:19கொலோ 1:16-181 கொரி 1:30-311 பேது 3:22எபே 1:20-23பிலி 2:9-11எபி 5:9யோவா 1:16 அல்லாமலும், நீங்கள் கிறிஸ்துவைப்பற்றும் விருத்தசேதனத்தினாலே மாம்சத்திற்குரிய பாவசரீரத்தைக் களைந்துவிட்டதினால், கையால் செய்யப்படாத விருத்தசேதனத்தை அவருக்குள் பெற்றீர்கள். ரோம 2:29பிலி 3:3ரோம 6:6உபா 30:6எபே 4:22கலா 5:24கொலோ 3:8-9கலா 2:20 ஞானஸ்நானத்திலே அவரோடுகூட அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும், அதிலே அவரை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பின தேவனுடைய செயலின்மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடுகூட உயிரோடு எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள். ரோம 6:3-51 பேது 3:21கலா 3:27எபே 2:4-6கொலோ 3:1-2அப் 2:24எபே 4:5எபே 1:19-20 உங்களுடைய பாவங்களினாலேயும், உங்களுடைய சரீரவிருத்தசேதனம் இல்லாமையினாலேயும் மரித்தவர்களாக இருந்த உங்களையும் அவரோடுகூட உயிர்ப்பித்து, அக்கிரமங்கள் எல்லாவற்றையும் உங்களுக்கு மன்னித்து; எபே 2:5-6ரோம 8:11எபே 2:12 கொரி 5:19எபி 9:142 கொரி 3:61 யோவா 1:7-9எபே 2:11 நமக்கு எதிரானதாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தை அழித்து, அதை நடுவில் இல்லாதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து; எபே 2:14-16ஏசா 44:22ஏசா 43:25எபி 8:131 பேது 2:24கொலோ 2:20எபி 7:18எபி 10:8-9 துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் பறித்துக்கொண்டு, வெளியரங்கமாக வெளிப்படுத்தி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றி சிறந்தார். எபி 2:14எபே 4:8மத் 12:29யோவா 12:31-32ஏசா 53:12எபே 6:12யோவா 16:11லூக் 10:18 ஆகவே, உணவையும், பானத்தையும் குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையும் குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாமல் இருப்பானாக. ரோம 14:5-6ரோம 14:10கலா 4:10ரோம 14:13-17ரோம 14:2-3எபி 13:9எசேக் 45:171 நாளாக 23:31 அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாக இருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது. எபி 10:1எபி 8:5யோவா 1:17எபி 9:9எபி 4:1-11மத் 11:28-29 மூட்டுகளாலும் தசை நரம்புகளாலும் உதவிபெற்று இணைக்கப்பட்டு, தேவவளர்ச்சியாக வளர்ந்தேறுகிற சரீரமுழுவதையும் ஆதரிக்கிற தலையைப் பற்றிக்கொள்ளாமல், கொலோ 2:81 யோவா 4:1-2கொலோ 2:231 தீமோ 1:71 தீமோ 4:1வெளி 22:8-91 கொரி 8:5-6ரோம 1:25 மாய்மாலமான தாழ்மையிலும், தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமடைந்து, காணாத காரியங்களிலே துணிவாய் நுழைந்து, தன் சரீரசிந்தையினாலே வீணாக கர்வம் கொண்டிருக்கிற எவனும் உங்களுடைய பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை ஏமாற்றாதிருக்கப் பாருங்கள். எபே 4:15-16யோவா 15:4-61 பேது 3:81 தீமோ 2:4-62 பேது 3:18கொலோ 2:2ரோம 12:4-51 தெச 3:12 நீங்கள் கிறிஸ்துவோடுகூட உலகத்தின் வழக்கங்களுக்கு மரித்ததுண்டானால், இன்னும் உலக வழக்கத்தின்படி பிழைக்கிறவர்கள்போல, கொலோ 2:8கொலோ 2:14கொலோ 2:16கலா 4:3ரோம 7:4-61 யோவா 5:19எபி 13:91 பேது 4:1-3 மனிதர்களுடைய கட்டளைகளின்படியும் போதனைகளின்படியும் நடந்து: தொடாதே, ருசி பாராதே, தீண்டாதே என்கிற கட்டளைகளுக்கு உடன்படுகிறதென்ன? 1 தீமோ 4:3ஏசா 52:11ஆதி 3:32 கொரி 6:17 இவையெல்லாம் அநுபவிக்கிறதினால் அழிந்துபோகுமே. ஏசா 29:13தீத் 1:141 கொரி 6:13மாற் 7:18-19மாற் 7:7-13யோவா 6:27மத் 15:3-9தானி 11:37 இப்படிப்பட்டப் போதனைகள் சுயவிருப்பமான ஆராதனையையும், போலியான தாழ்மையையும், சரீர ஒடுக்கத்தையும்பற்றி ஞானம் என்கிற பெயர்கொண்டிருந்தாலும், இவைகள் மாம்சத்தைப் பாதுகாப்பதற்கேயன்றி வேறு எதற்கும் உபயோகப்படாது. 1 தீமோ 4:8கொலோ 2:18கொலோ 2:22கொலோ 2:82 கொரி 11:13-15எபே 5:29மத் 23:27-281 தீமோ 4:3