தீத்து 1

Titus 1
அத்தியாயம் 1

தேவனுடைய ஊழியக்காரனும், இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனுமாகிய பவுல், பொதுவான விசுவாசத்தின்படி உத்தம மகனாகிய தீத்துவிற்கு எழுதுகிறதாவது: ரோம 1:11 தீமோ 6:32 பேது 1:32 தீமோ 2:232 தீமோ 2:25தீத் 2:11-121 தீமோ 3:162 பேது 3:11 பிதாவாகிய தேவனாலும், நம்முடைய இரட்சகராக இருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக. எண் 23:192 தீமோ 1:91 யோவா 2:25எபி 6:17-181 யோவா 5:11-132 தீமோ 1:1தீத் 2:131 சாமு 15:29 பொய்யுரையாத தேவன் ஆரம்பகாலமுதல் நித்தியஜீவனைக்குறித்து வாக்குத்தத்தம் செய்து அதைக்குறித்த நம்பிக்கையைப்பற்றி தேவபக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவும் விசுவாசமும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு உண்டாகும்படி, 1 தீமோ 1:111 தீமோ 1:1தீத் 3:4-6தீத் 2:10தீத் 2:131 கொரி 9:171 தெச 2:41 தீமோ 2:3 ஏற்றகாலங்களிலே நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய கட்டளையின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்ட பிரசங்கத்தினாலே தமது வார்த்தையை வெளிப்படுத்தினார். 2 தீமோ 1:2யூதா 1:32 கொரி 2:132 பேது 1:12 கொரி 8:232 பேது 1:112 பேது 3:18யோவா 4:42

கிரேத்தா தீவில் தீத்துவின் பணி

நீ குறைவாயிருக்கிறவைகளை ஒழுங்குபடுத்தும்படிக்கும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, பட்டணங்கள்தோறும் மூப்பர்களை ஏற்படுத்தும்படிக்கும், உன்னைக் கிரேத்தா தீவிலே விட்டுவந்தேன். அப் 14:231 தீமோ 1:3பிரச 12:91 கொரி 14:401 கொரி 11:342 தீமோ 2:2அப் 11:30அப் 27:12 குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியையுடைய புருஷனும், துன்மார்க்கர்களென்றும் அடங்காதவர்களென்றும் பெயரெடுக்காத விசுவாசமுள்ள பிள்ளைகளை உடையவனுமாகிய ஒருவன் இருந்தால் அவனையே மூப்பராக ஏற்படுத்தலாம். 1 தீமோ 3:121 தீமோ 3:2-7நீதி 28:7தீத் 1:6-8எபே 5:18ஆதி 18:191 சாமு 2:111 சாமு 2:22 ஏனென்றால், கண்காணியானவன் தேவனுடைய மேற்பார்வைக்காரனுக்குரியவிதமாக, குற்றஞ்சாட்டப்படாதவனும், தன் இஷ்டப்படி செய்யாதவனும், முற்கோபமில்லாதவனும், மதுபானப்பிரியமில்லாதவனும், அடிக்காதவனும், இழிவான ஆதாயத்தை இச்சிக்காதவனும், எபே 5:182 பேது 2:101 பேது 4:101 பேது 5:2யாக் 1:19-20லூக் 12:421 தீமோ 3:1-132 தீமோ 2:24-25 அந்நியர்களை உபசரிக்கிறவனும், நல்லவைகள்மேல் பிரியமுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், நீதிமானும், பரிசுத்தவானும், இச்சையடக்கமுள்ளவனும், 1 தீமோ 3:2தீத் 2:71 இராஜா 5:71 யோவா 3:141 யோவா 5:11 இராஜா 5:11 சாமு 18:11 தெச 2:10 ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்திசொல்லவும், எதிர்த்து பேசுகிறவர்களைக் கடிந்துகொள்ளவும் வல்லவனுமாக இருக்கும்படி, தான் போதிக்கப்பட்டதற்கேற்ற உண்மையான வசனத்தை நன்றாகப் பற்றிக்கொள்ளுகிறவனுமாக இருக்கவேண்டும். 2 தெச 2:152 தீமோ 1:131 தீமோ 6:31 தீமோ 1:101 தீமோ 1:15வெளி 3:11வெளி 3:31 கொரி 14:24 அநேகர், விசேஷமாக விருத்தசேதனமுள்ளவர்கள், அடங்காதவர்களும், வீண் பேச்சுக்காரர்களும், மனதை மயக்குகிறவர்களுமாக இருக்கிறார்கள். 1 தீமோ 1:61 யோவா 4:1கலா 2:4எபே 4:141 தீமோ 6:3-52 தீமோ 3:13அப் 11:2கலா 1:6-8 அவர்களுடைய வாயை அடக்கவேண்டும்; அவர்கள் இழிவான ஆதாயத்திற்காகத் தகாதவைகளை உபதேசித்து, முழுக்குடும்பங்களையும் கவிழ்த்துப்போடுகிறார்கள். 2 தீமோ 3:61 தீமோ 6:5ரோம 3:19தீத் 3:10சங் 63:11தீத் 1:9மீகா 3:5சங் 107:42 கிரேத்தா தீவைச்சேர்ந்தவர்கள் ஓயாத பொய்யர்கள், காட்டுமிராண்டிகள், பெருந்தீனிச் சோம்பேறிகள் என்று அவர்களில் ஒருவனாகிய அவர்கள் தீர்க்கதரிசியானவனே சொல்லியிருக்கிறான். ரோம 16:181 தீமோ 4:2அப் 17:282 பேது 2:152 பேது 2:12அப் 2:11யூதா 1:8-13 இந்தச் சாட்சி உண்மையாக இருக்கிறது; எனவே, அவர்கள் யூதர்களுடைய கட்டுக்கதைகளுக்கும், சத்தியத்தைவிட்டு விலகுகிற மனிதர்களுடைய கட்டளைகளுக்கும் செவிகொடுக்காமல், 1 தீமோ 5:20தீத் 2:22 தீமோ 4:2தீத் 2:152 கொரி 13:10நீதி 27:51 தீமோ 4:62 கொரி 7:8-12 விசுவாசத்திலே ஆரோக்கியமுள்ளவர்களாக இருக்கும்படி, நீ அவர்களைக் கண்டிப்பாய்க் கடிந்துகொள். 2 தீமோ 4:4கொலோ 2:22கலா 4:92 பேது 2:22மத் 15:91 தீமோ 1:4-7ஏசா 29:13மாற் 7:7 சுத்தமுள்ளவர்களுக்குச் சகலமும் சுத்தமாக இருக்கும்; அசுத்தமுள்ளவர்களுக்கும் அவிசுவாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும் சுத்தமாக இருக்காது; அவர்களுடைய புத்தியும் மனச்சாட்சியும் அசுத்தமாக இருக்கும். ரோம 14:14ரோம 14:201 கொரி 10:231 தீமோ 4:3-4மத் 15:18ரோம 14:231 கொரி 10:31அப் 10:15 அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், செயல்களினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நல்ல செயல்களையும் செய்ய தகுதியற்றவர்களுமாக இருக்கிறார்கள். 1 யோவா 2:4ஏசா 29:13எபே 5:6எசேக் 33:312 தீமோ 3:5-8யூதா 1:4ரோம 1:28வெளி 21:27