தீத்து 3

Titus 3
அத்தியாயம் 3

நன்மையானதைச் செய்தல்

தலைவர்களுக்கும் அதிகாரங்களுக்கும் கீழ்ப்படிந்து அடங்கியிருக்கவும், எல்லாவிதமான நல்ல செயல்களையும் செய்ய ஆயத்தமாக இருக்கவும், ரோம 13:1-71 பேது 2:13-17பிரச 10:4கலா 6:9-10நீதி 24:21மத் 22:211 தீமோ 5:102 தீமோ 1:6 ஒருவனையும் அவமதிக்காமலும், சண்டைபண்ணாமலும், பொறுமையுள்ளவர்களாக எல்லா மனிதர்களுக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்கவும் அவர்களுக்கு நினைப்பூட்டு. எபே 4:312 தீமோ 2:24-25கொலோ 3:12-13எபே 4:21 தீமோ 3:31 பேது 3:101 பேது 3:81 பேது 2:17-18 ஏனென்றால், முற்காலத்திலே நாமும் புத்தியீனர்களும், கீழ்ப்படியாதவர்களும், வழிதப்பி நடக்கிறவர்களும், பலவிதமான இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமைப்பட்டவர்களும், துர்க்குணத்தோடும் பொறாமையோடும் வாழ்கிறவர்களும், பகைக்கப்படத்தக்கவர்களும், ஒருவரையொருவர் பகைக்கிறவர்களுமாக இருந்தோம். எபே 2:1-3கொலோ 1:21ரோம 6:17கொலோ 3:71 கொரி 6:9-11ரோம 1:29-311 பேது 1:14ரோம 6:22 நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயவும் மனிதர்கள்மேலுள்ள அன்பும் வெளிப்பட்டபோது, எபே 2:4-10தீத் 2:10-111 தீமோ 4:10ரோம 5:20-21ரோம 2:42 தீமோ 1:10எபி 9:261 தீமோ 2:3 நாம் செய்த நீதியின் செயல்களினிமித்தம் அவர் நம்மை இரட்சிக்காமல், தமது இரக்கத்தின்படியே, மறுபிறப்பு முழுக்கினாலும், பரிசுத்த ஆவியானவருடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார். எபே 2:8-92 தீமோ 1:91 கொரி 6:111 பேது 1:31 பேது 3:21ரோம 12:2எபே 5:26எபே 2:4 தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்திரராகத்தக்கதாக, யோவே 2:28ரோம 5:5அப் 10:45எசேக் 36:25ஏசா 44:3யோவா 1:16யோவா 16:7நீதி 1:23 அவர் நமது இரட்சகராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக, அந்தப் பரிசுத்த ஆவியானவரை நம்மேல் சம்பூரணமாகப் பொழிந்தருளினார். ரோம 8:17ரோம 3:24தீத் 2:111 கொரி 6:11தீத் 1:2யாக் 2:5ரோம 11:6ரோம 5:1-2 இந்த வார்த்தை உண்மையுள்ளது; தேவனை விசுவாசிக்கிறவர்கள் நல்ல செயல்களைச்செய்ய ஜாக்கிரதையாக இருக்கும்படி நீ இவைகளைக்குறித்துத் திட்டமாகப் போதிக்கவேண்டுமென்று விரும்புகிறேன்; இவைகளே நன்மையும் மனிதர்களுக்குப் பிரயோஜனமுமானவைகள். தீத் 3:14சங் 16:2-3தீத் 1:9தீத் 2:14தீத் 3:1ரோம 4:51 பேது 1:211 தீமோ 1:15 புத்தியீனமான தர்க்கங்களையும், வம்சவரலாறுகளையும், சண்டைகளையும், நியாயப்பிரமாணத்தைக்குறித்து உண்டாகிற வாக்குவாதங்களையும் விட்டுவிலகு; அவைகள் பிரயோஜனமில்லாததும் வீணானதாகவும் இருக்கும். 2 தீமோ 2:141 தீமோ 4:72 தீமோ 2:23தீத் 1:142 தீமோ 2:161 தீமோ 1:3-7யோபு 15:31 கொரி 8:1 வேதப்புரட்டனாக இருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருமுறை புத்தி சொன்னபின்பு அவனைவிட்டு விலகு. ரோம 16:172 யோவா 1:10மத் 18:15-172 தெச 3:142 தெச 3:62 தீமோ 3:5கலா 5:201 கொரி 11:19 அப்படிப்பட்டவன் நிலைதவறி, தன்னிலேதானே ஆக்கினைத்தீர்ப்புடையவனாகப் பாவம் செய்கிறவனென்று அறிந்திருக்கிறாயே. எபி 10:26யோவா 3:18லூக் 19:22மத் 25:26-28அப் 13:46அப் 15:241 தீமோ 1:19-202 தீமோ 2:14

இறுதி அறிவுரைகள்

நான் அர்த்தெமாவையாவது தீகிக்குவையாவது உன்னிடத்தில் அனுப்பும்போது நீ நிக்கொப்போலிக்கு என்னிடத்தில் வருவதற்குத் தீவிரப்படு; குளிர்காலத்திலே அங்கே தங்கும்படி தீர்மானித்திருக்கிறேன். 2 தீமோ 4:91 கொரி 16:8-92 தீமோ 4:122 தீமோ 4:21அப் 20:41 கொரி 16:6 நியாயப்பண்டிதனாகிய சேனாவிற்கும், அப்பொல்லோவிற்கும் ஒரு குறைவுமில்லாதபடிக்கு அவர்களை ஜாக்கிரதையாக விசாரித்து வழியனுப்பு. அப் 18:24மத் 22:353 யோவா 1:6-8அப் 28:101 கொரி 16:11அப் 21:5லூக் 10:25லூக் 11:45 நம்முடையவர்களும் கனியற்றவர்களாக இல்லாதபடி மற்றவர்களுடைய அன்றாட தேவைகளை நிறைவுசெய்யும் முறையில் நல்ல செயல்களைச் செய்யப் பழகிக்கொள்ளட்டும். கொலோ 1:10தீத் 3:8மத் 7:19பிலி 1:112 பேது 1:8லூக் 13:6-9எபே 4:28யோவா 15:16 என்னோடு இருக்கிற அனைவரும் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். விசுவாசத்திலே நம்மைச் சிநேகிக்கிறவர்களுக்கு வாழ்த்துதல் சொல்லு. கிருபையானது உங்கள் அனைவரோடும் இருப்பதாக. ஆமென். 1 தீமோ 1:52 யோவா 1:1-2கொலோ 4:18எபே 6:23-24கலா 5:6எபி 13:251 கொரி 16:231 தீமோ 1:2