ரோமர் 5

Romans 5
அத்தியாயம் 5

விசுவாசத்தினாலே நீதிமானாக்கப்படுதல்

இந்தவிதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறதினால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக தேவனிடம் சமாதானம் பெற்றிருக்கிறோம். ஏசா 32:17யோவா 16:33ரோம 15:13அப் 13:38-39கொலோ 1:20ரோம 6:23யோவா 14:27எபே 2:14-17 அவர் மூலமாக நாம் இந்தக் கிருபைக்குள் பிரவேசிக்கும் பாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருந்து, தேவமகிமையை அடைவோம் என்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறோம். எபே 2:18எபே 3:12ரோம 12:121 கொரி 15:11 பேது 3:182 தெச 2:16எபி 3:62 கொரி 4:17 அதுமட்டும் இல்லை, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறது என்று நாங்கள் அறிந்து, யாக் 1:2-3யாக் 1:121 பேது 3:142 கொரி 12:9-102 கொரி 4:17லூக் 6:22-23ரோம 8:35-37எபி 12:10-11 உபத்திரவங்களிலும் மேன்மைபாராட்டுகிறோம். 1 பேது 5:10யாக் 1:122 கொரி 4:8-121 பேது 1:6-72 தீமோ 4:16-18சங் 71:18-24சங் 27:2-32 கொரி 1:4-6 மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியானவராலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறதினால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது. கலா 4:6எபே 3:16-19பிலி 1:202 தீமோ 1:122 கொரி 1:22ஏசா 44:3-51 யோவா 4:19அப் 2:33 அன்றியும், நாம் பெலன் இல்லாதவர்களாக இருக்கும்போதே, குறித்தக் காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரர்களுக்காக மரித்தார். எபே 2:1-5ரோம 5:8கொலோ 2:13தீத் 3:3-5ரோம 5:10ரோம 4:25தீத் 2:121 தெச 5:9 நீதிமானுக்காக ஒருவன் இறப்பது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான். யோவா 15:131 யோவா 3:16ரோம 16:4அப் 11:24சங் 112:52 சாமு 18:272 சாமு 23:14-172 சாமு 18:3 நாம் பாவிகளாக இருக்கும்போது கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த அவரது அன்பை நிரூபிக்கிறார். யோவா 15:13யோவா 3:16ரோம 5:61 பேது 3:181 யோவா 3:161 யோவா 4:9-10ஏசா 53:6எபே 2:7 இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, தேவனுடைய கோபத்திற்குத் தப்பி அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமே. 1 தெச 1:10ரோம 8:1எபே 2:13ரோம 3:24-26யோவா 5:24ரோம 1:18ரோம 5:1எபி 9:22 நாம் தேவனுக்கு பகைவர்களாக இருக்கும்போது, அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவரோடு ஒப்புரவாக்கப்பட்டோம் என்றால், ஒப்புரவாக்கப்பட்டப்பின்பு நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமே. 2 கொரி 5:18-192 கொரி 4:10-11ரோம 8:32கொலோ 1:20-21எபே 2:16எபி 7:25வெளி 1:18கொலோ 3:3-4 அதுமட்டும் இல்லாமல், இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப்பண்ணின நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாக நாம் தேவனுக்குள் களிகூறுகிறோம். 2 கொரி 5:18-19ரோம 5:10ஏசா 61:10ஆப 3:17-18பிலி 4:4கொலோ 2:6கலா 4:9சங் 149:2

ஆதாமினால் பாவம் நுழைந்தது

இப்படியாக, ஒரே மனிதனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே நுழைந்ததுபோலவும், எல்லா மனிதர்களும் பாவம் செய்ததினால், மரணம் எல்லோருக்கும் வந்ததுபோலவும் இதுவும் ஆனது. 1 கொரி 15:21-22ரோம 5:19ரோம 6:23ரோம 3:23யாக் 1:15ஆதி 2:17சங் 51:5ஆதி 3:19 நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்பே பாவம் உலகத்தில் இருந்தது; நியாயப்பிரமாணம் இல்லாதிருந்தால் பாவம் எண்ணப்படமாட்டாது. ரோம 4:151 கொரி 15:561 யோவா 3:4ஆதி 4:7-11ஆதி 38:10ஆதி 38:7ஆதி 13:13ஆதி 18:20 அப்படியிருந்தும், மரணமானது ஆதாம் முதல் மோசே வரைக்கும், ஆதாமின் கீழ்ப்படியாமைக்கு இணையாகப் பாவம் செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது; அந்த ஆதாம், பின்பே வந்தவருக்கு முந்தின அடையாளமானவன். 1 கொரி 15:45எபி 9:27ரோம 5:17ஆதி 7:22ரோம 5:21ரோம 8:22ஆதி 19:25ஓசி 6:7 ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானது இல்லை. எப்படியென்றால், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனிதனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாகப் பெருகியிருக்கிறது. எபே 2:8ரோம 5:12ரோம 6:231 யோவா 5:112 கொரி 9:15ஏசா 53:11ரோம 5:16-201 யோவா 2:2 மேலும் ஒருவன் பாவம் செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவிற்கு ஒப்பானது இல்லை; அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினால் தண்டனைக்குரியதாக இருந்தது; கிருபைவரமோ அநேக குற்றங்களை நீக்கி நீதிவிளங்கும் தீர்ப்புக்குரியதாக இருக்கிறது. அப் 13:38-39ஏசா 1:18ஏசா 44:22ஏசா 43:251 கொரி 11:321 கொரி 6:9-111 தீமோ 1:13-16கலா 3:10 அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாக, மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசுகிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்கள் என்பது அதிக நிச்சயமே. 1 கொரி 15:21-221 கொரி 15:49ரோம 5:12யோவா 10:102 தீமோ 2:12வெளி 22:5ஆதி 3:6வெளி 20:4 எனவே, ஒரே மீறுதலினாலே எல்லா மனிதர்களுக்கும் தண்டனைக்குரிய தீர்ப்பு உண்டானதுபோல, ஒரே நீதியினாலே எல்லா மனிதர்களுக்கும் ஜீவனைக் கொடுக்கும் நீதிக்குரிய தீர்ப்பு உண்டானது. 1 கொரி 15:22ரோம 5:12ரோம 5:15அப் 13:39ரோம 5:19ரோம 4:251 தீமோ 2:4-6எபி 2:9 அன்றியும் ஒரே மனிதனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள். ரோம 5:182 கொரி 5:21பிலி 2:8ரோம 5:12எபே 1:6ரோம 5:15தானி 9:24ஏசா 53:10-12 மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது; அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாகப் பெருகினது. ரோம 6:1சங் 25:11தீத் 3:3-7ரோம 6:14கலா 3:19-25ரோம 4:15எபே 2:1-5ஏசா 1:18 ஆதலால் பாவம் மரணத்தை ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக நீதியினாலே நித்தியஜீவனை ஆண்டுகொண்டது. தீத் 2:11யோவா 1:16-17ரோம 5:14ரோம 6:14ரோம 6:23ரோம 8:10ரோம 5:12ரோம 5:17