தேவனுடைய உண்மை
இப்படியானால், யூதனுடைய மேன்மை என்ன? விருத்தசேதனத்தினாலே பிரயோஜனம் என்ன? ஆதி 25:32ரோம 2:25-29பிரச 6:11பிரச 6:8எபி 13:91 கொரி 15:32ஏசா 1:11-15மல்கி 3:14 அது எல்லாவிதத்திலும் உயர்ந்ததாக இருக்கிறது; தேவனுடைய வாக்கியங்கள் அவர்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்டது விசேஷித்த மேன்மையாமே. அப் 7:38ரோம 9:4நெகே 9:13-14சங் 147:19-201 கொரி 9:171 பேது 4:11எபி 5:122 பேது 1:19-21 சிலர் விசுவாசிக்காமற்போனாலும் என்ன? அவர்களுடைய அவிசுவாசம் தேவனுடைய உண்மையை ஒன்றுமில்லாமல் ஆக்குமா? 2 தீமோ 2:13எபி 4:2ரோம 9:6ஏசா 55:11தீத் 1:1-21 சாமு 15:292 தெச 1:3எண் 23:19 அப்படியாக்காது: சங் 51:4சங் 116:11கலா 2:17எபி 6:18உபா 32:4தீத் 1:2யோவா 3:33யோபு 36:3
“நீர் உம்முடைய வசனங்களில் நீதிமானாக விளங்கவும்,
உம்முடைய நியாயம் விசாரிக்கப்படும்போது வெற்றியடையவும் இப்படியானது” என்று எழுதியிருக்கிறபடி,
தேவனே சத்தியவான் என்றும், எந்த மனிதனும் பொய்யன் என்றும் சொல்வோமாக.
நான் மனிதர்கள் பேசுகிறதுபோலப் பேசுகிறேன்; நம்முடைய அநீதி தேவனுடைய நீதியைக் காண்பித்தால் என்னசொல்லுவோம்? கோபத்தைக் காட்டுகிற தேவன் அநீதி உள்ளவராக இருக்கிறார் என்று சொல்லலாமா? ரோம 6:19கலா 3:151 கொரி 9:8ரோம 2:5ரோம 9:18-20உபா 32:39-43நாகூ 1:2ரோம 4:1 அப்படிச் சொல்லக்கூடாது; அப்படிச்சொன்னால், தேவன் உலகத்தை நியாயந்தீர்ப்பது எப்படி? ஆதி 18:25அப் 17:31யோபு 8:3யோபு 34:17-19சங் 50:6சங் 9:8சங் 96:13சங் 98:9 அன்றியும், என் பொய்யினாலே தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமையுண்டாக விளங்கினதுண்டானால், இனி நான் பாவி என்று தீர்க்கப்படுவது ஏன்? ரோம 3:4ரோம 9:19-20அப் 13:27-292இராஜா 8:10-15ஏசா 10:6-7மத் 26:34மத் 26:69-751 இராஜா 13:17-18 “நன்மை வருவதற்காகத் தீமைசெய்வோமாக என்றும் சொல்லலாம் அல்லவா?” நாங்கள் அப்படிப் போதிக்கிறவர்கள் என்றும் சிலர் எங்களை அவமதிக்கிறார்களே; அப்படிப் போதிக்கிறவர்கள்மேல் வரும் தண்டனை நீதியாக இருக்கும். ரோம 6:1ரோம 6:15ரோம 5:20ரோம 7:71 பேது 3:16-17யூதா 1:4மத் 5:11
நீதிமான் ஒருவனுமில்லை
ஆனாலும் என்ன? அவர்களைவிட நாங்கள் விசேஷமானவர்களா? கொஞ்சம்கூட விசேஷமானவர்கள் இல்லை, யூதர்கள் கிரேக்கர்கள் எல்லோரும் பாவத்திற்கு உட்பட்டவர்கள் என்பதை முன்பே வெளிப்படுத்தினோமே. கலா 3:22ரோம 6:15ஏசா 65:5ரோம 11:32ரோம 3:22-23ரோம 3:191 கொரி 14:151 கொரி 4:7 அப்படியே: சங் 53:1-3சங் 14:1-3ரோம 3:231 யோவா 1:8-10யோபு 15:14யோபு 25:4மாற் 7:21-22மாற் 10:18
“ஒருவன்கூட நீதிமான் இல்லை;
உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை; சங் 14:2-4சங் 53:2தீத் 3:3ஓசி 4:6ரோம 8:7ஓசி 7:10ஏசா 31:1ஏசா 55:6
எல்லோரும் வழிதவறி, ஒன்றாகக் கெட்டுப்போனார்கள்; சங் 14:3பிரச 7:20ஏசா 59:8ஏசா 64:6ஏசா 53:6பிரச 7:291 பேது 2:25எபே 2:3
நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவன்கூட இல்லை.
அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட சவக்குழி, சங் 5:9சங் 140:3மத் 23:27-28எரே 9:3-5சங் 57:4எசேக் 13:7ஏசா 59:3யாக் 3:5-8
தங்களுடைய நாக்குகளால் ஏமாற்றுகிறார்கள்;
அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது;
அவர்கள் வாய் சபிக்கிறதினாலும், கசப்பினாலும் நிறைந்திருக்கிறது; சங் 10:7சங் 109:17-18சங் 59:12யாக் 3:10
அவர்கள் கால்கள் இரத்தம் சிந்துகிறதற்கு அலைகிறது; ஏசா 59:7-8நீதி 1:16நீதி 6:18
நாசமும், உபத்திரவமும் அவர்கள் வழிகளில் இருக்கிறது;
சமாதான வழியை அவர்கள் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள்; ஏசா 59:8ரோம 5:1லூக் 1:79மத் 7:14ஏசா 57:21
அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தேவபயம் இல்லை” என்று எழுதியிருக்கிறதே. சங் 36:1நீதி 23:17நீதி 16:6நீதி 8:13ஆதி 20:11லூக் 23:40வெளி 19:5
மேலும், வாய்கள் எல்லாம் அடைக்கப்படுவதற்கும், உலகத்தார் எல்லோரும் தேவனுடைய தண்டனைத்தீர்ப்புக்கு உள்ளானவர்களாவதற்கும், நியாயப்பிரமாணம் சொல்லுகிறதெல்லாம் நியாயப்பிரமாணத்திற்கு உட்பட்டிருக்கிறவர்களுக்கே சொல்லுகிறது என்று தெரிந்திருக்கிறோம். கலா 3:10கலா 3:22-23ரோம 2:12-18ரோம 3:9கலா 5:18எசேக் 16:631 கொரி 1:29ரோம 3:23 இப்படியிருக்க, பாவத்தைத் தெரிந்துகொள்ளுகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறதினால், எந்த மனிதனும் நியாயப்பிரமாணத்தின் செயல்களினாலே தேவனுக்குமுன்பாக நீதிமானாக்கப்படுவது இல்லை. கலா 2:16அப் 13:39ரோம 3:28கலா 2:19ரோம 4:15ரோம 4:13ரோம 5:20ரோம 9:32
விசுவாசத்தினால் வரும் நீதி
இப்படியிருக்க, நியாயப்பிரமாணம் இல்லாமல் தேவநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது; அதற்கு நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியாக இருக்கிறது. அப் 10:43எரே 33:16பிலி 3:9எரே 23:5-6கலா 3:8ஏசா 51:8ஏசா 61:10எபி 10:1-14 அது இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கும் விசுவாசத்தினாலே வரும் தேவநீதியே; விசுவாசிக்கிற எல்லோருக்குள்ளும் எவர்கள் மேலும் அது வரும், வித்தியாசமே இல்லை. ரோம 10:12கலா 3:28கலா 2:16ரோம 8:1ரோம 5:1-11கொலோ 3:11கலா 3:6-9பிலி 3:9 எல்லோரும் பாவம்செய்து, தேவமகிமை இல்லாதவர்களாகி, பிரச 7:201 யோவா 1:8-10கலா 3:22ரோம 3:9ரோம 11:32ரோம 3:191 தெச 2:122 தெச 2:14 இலவசமாக அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்; 1 பேது 1:18-19தீத் 3:5-7கொலோ 1:14எபே 1:6-7ரோம 5:9தீத் 2:14ரோம 4:161 கொரி 1:30 தேவன் பொறுமையாக இருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களை அவர் பொறுத்துக்கொண்டதைக்குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிப்பதற்காகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவிடம் விசுவாசமாக இருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாக காண்பிப்பதற்காகவும், இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிப்பதற்காகவும், ரோம 3:23-241 பேது 1:18-201 யோவா 4:101 யோவா 2:2கொலோ 1:20-23எபி 9:14-22ரோம 5:9அப் 13:38-39 கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தை விசுவாசிக்கும் விசுவாசத்தினாலே வரும் கிருபாதாரபலியாக அவரையே ஏற்படுத்தினார். உபா 32:4ரோம 4:5அப் 13:38-39ரோம 3:30ஏசா 42:21சங் 85:10-11ரோம 8:33செப்ப 3:5 இப்படியிருக்க, மேன்மைபாராட்டுவது எங்கே? அது நீக்கப்பட்டது. எந்தப் பிரமாணத்தினாலே? செய்கையின் பிரமாணத்தினாலா? இல்லை; விசுவாசப்பிரமாணத்தினாலே. ரோம 4:2ரோம 2:231 கொரி 1:29-31எபே 2:8-10கலா 3:22ரோம 2:171 யோவா 5:11-12ரோம 7:21 எனவே, மனிதன் நியாயப்பிரமாணத்தின் செயல்கள் இல்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்மானிக்கிறோம். தீத் 3:7கலா 2:16கலா 3:24கலா 3:8ரோம 3:26யாக் 2:24பிலி 3:9ரோம 4:5 தேவன் யூதர்களுக்கு மட்டுமா தேவன்? யூதரல்லாதோர்களுக்கும் தேவனல்லவா? ஆம் யூதரல்லாதோர்களுக்கும் அவர் தேவன்தான். கொலோ 3:11எபே 3:6சகரி 2:11கலா 3:14கலா 3:25-29ரோம 9:24-26சகரி 8:20-23எரே 16:19 விருத்தசேதனம் உள்ளவர்களை விசுவாசத்தினாலும், விருத்தசேதனம் இல்லாதவர்களை விசுவாசத்தின் மூலமாகவும் நீதிமான்களாக்குகிற தேவன் ஒருவரே. கலா 3:8கலா 3:20பிலி 3:3கொலோ 2:10-11கலா 2:14-16கலா 5:6கலா 6:15ரோம 4:11-12 அப்படியானால், விசுவாசத்தினாலே நியாயப்பிரமாணத்தை ஒன்றுமில்லாமல் ஆக்குகிறோமா? அப்படி இல்லை; நியாயப்பிரமாணத்தை நிலைநிறுத்துகிறோமே. கலா 2:21மத் 5:17ரோம 10:4ரோம 13:8-101 கொரி 9:21ரோம 8:4ரோம 7:7-14கலா 3:17-19