யூதர்களுக்காக பவுலின் வேதனை
எனக்கு அதிக துக்கமும் இடைவிடாத மனவேதனையும் உண்டாயிருக்கிறது; 1 தீமோ 2:7ரோம 1:9கலா 1:202 கொரி 11:10பிலி 1:81 தெச 2:51 தீமோ 1:52 கொரி 1:12 நான் சொல்லுகிறது பொய்யல்ல, கிறிஸ்துவிற்குள் உண்மையைச் சொல்லுகிறேன் என்று பரிசுத்த ஆவியானவருக்குள் என் மனச்சாட்சியும் எனக்குச் சாட்சியாக இருக்கிறது. பிலி 3:18எரே 13:17புலம் 3:51சங் 119:136ரோம 10:1லூக் 19:41-44எசேக் 9:4எரே 9:1 சரீரத்தின்படி என் இனத்தைச் சேர்ந்த என் சகோதரர்களுக்குப் பதிலாக நானே கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட்டவனாகவேண்டுமென்று விரும்புவேனே. யாத் 32:32எஸ்த 8:6ரோம 11:14கலா 3:101 கொரி 16:221 கொரி 12:31 சாமு 14:241 சாமு 14:44 அவர்கள் இஸ்ரவேலர்களே; புத்திரசுவிகாரமும், மகிமையும், உடன்படிக்கைகளும், நியாயப்பிரமாணமும், தேவ ஆராதனையும், வாக்குத்தத்தங்களும் அவர்களுடையவைகளே; எபே 2:12சங் 147:19ஆதி 17:2ரோம 9:6அப் 2:39உபா 7:6யாத் 4:22எபி 9:1 முற்பிதாக்கள் அவர்களுடையவர்களே; சரீரத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட எல்லாவற்றிற்கும் மேலான தேவன். ஆமென். யோவா 10:30கொலோ 1:16-19யோவா 1:1-3ரோம 1:251 யோவா 5:20ரோம 1:31 தீமோ 3:16பிலி 2:6-11 தேவவசனம் நிறைவேறாமல்போனது என்று சொல்லக்கூடாது; ஏனென்றால், இஸ்ரவேல் வம்சத்தார் எல்லோரும் இஸ்ரவேலர் இல்லையே. கலா 6:16ரோம 2:28-29ரோம 11:1-2ரோம 3:3ரோம 4:12-16யோவா 1:47ஏசா 55:11மத் 24:35 அவர்கள் ஆபிரகாமின் வம்சத்தினராக இருந்தாலும் அனைவரும் பிள்ளைகள் அல்லவே; “ஈசாக்கினிடம் உன் வம்சம் விளங்கும்” என்று சொல்லியிருக்கிறதே. ஆதி 21:12எபி 11:18யோவா 8:37-39கலா 4:23லூக் 3:8பிலி 3:3யோவா 8:33லூக் 16:24-25 அது எப்படியென்றால், சரீரத்தின்படி பிள்ளைகள் ஆனவர்கள் தேவனுடைய பிள்ளைகள் அல்லவே, வாக்குத்தத்தத்தின்படி பிள்ளைகள் ஆனவர்களே அந்த வம்சம் என்று எண்ணப்படுகிறார்கள். யோவா 1:13ரோம 4:11-16கலா 3:26-29ரோம 8:14கலா 4:22-311 யோவா 3:1-2சங் 87:6ஆதி 31:15 அந்த வாக்குத்தத்தமான வார்த்தையாவது: குறித்த காலத்திலே வருவேன், அப்பொழுது சாராள் ஒரு மகனைப் பெறுவாள் என்பதே. ஆதி 18:10ஆதி 18:14ஆதி 17:21ஆதி 21:2எபி 11:11-12எபி 11:17 இதுமட்டுமல்லாமல், நம்முடைய முற்பிதாவாகிய ஈசாக்கு என்னும் ஒருவனாலே ரெபெக்காள் கர்ப்பவதியானபோது, ஆதி 25:21-23லூக் 16:26ரோம 5:11ரோம 5:3 குழந்தைகள் இன்னும் பிறக்காமலும், நன்மை தீமை ஒன்றும் செய்யாமல் இருக்கும்போது, தேவனுடைய தெரிந்துகொள்ளுதலின்படி இருக்கிற அவருடைய தீர்மானம், செயல்களினாலே நிலைநிற்காமல் அழைக்கிறவராலே நிலைநிற்கும்படி, 2 தீமோ 1:9எபே 1:4-52 பேது 1:10எபே 1:9-11ரோம 8:28-30தீத் 3:51 பேது 5:102 தெச 2:13-14 மூத்தவன், இளையவனுக்கு ஊழியம் செய்வான் என்று அவளுக்கு சொல்லப்பட்டது. ஆதி 25:22-231 இராஜா 22:472 சாமு 8:14 அப்படியே, யாக்கோபை நேசித்து, ஏசாவை வெறுத்தேன் என்றும் எழுதியிருக்கிறது. மல்கி 1:2-3உபா 21:15ஆதி 29:31ஆதி 29:33லூக் 14:26மத் 10:37நீதி 13:24யோவா 12:25 ஆகவே, நாம் என்னசொல்லுவோம்? தேவனிடத்திலே அநீதி உண்டென்று சொல்லலாமா? சொல்லக்கூடாதே. 2 நாளாக 19:7சங் 145:17உபா 32:4யோபு 34:10-12சங் 92:15வெளி 16:7யோபு 8:3ஆதி 18:25 அவர் மோசேயைப் பார்த்து: எவன்மேல் இரக்கமாக இருக்க விருப்பமாக இருப்பேனோ அவன்மேல் இரக்கமாக இருப்பேன், எவன்மேல் உருக்கமாக இருக்க விருப்பமாக இருப்பேனோ அவன்மேல் உருக்கமாக இருப்பேன் என்றார். யாத் 33:19ரோம 9:16மீகா 7:18ரோம 9:18-19யாத் 34:6-7ஏசா 27:11 ஆகவே, விரும்புகிறவனாலும் இல்லை, ஓடுகிறவனாலும் இல்லை, இரங்குகிற தேவனாலே ஆகும். எபே 2:8மத் 11:25-26பிலி 2:131 பேது 2:9-10எபே 2:4-5தீத் 3:3-51 கொரி 1:26-31ரோம 9:11 மேலும் என்னுடைய வல்லமையை உன்னிடம் காண்பிப்பதற்காகவும், என்னுடைய பெயர் பூமியில் எங்கும் பிரசித்தமடைவதற்காகவும், உன்னை நிலைநிறுத்தினேன் என்று பார்வோனோடு சொன்னதாக வேதத்தில் சொல்லியிருக்கிறது. யாத் 9:16நீதி 16:4யாத் 10:1-2யாத் 14:17-181 சாமு 2:7-8எஸ்த 4:14யாத் 15:14-15ஏசா 37:20 எனவே, எவன்மேல் இரக்கமாக இருக்க விருப்பாமாக இருக்கிறாரோ அவன்மேல் இரக்கமாக இருக்கிறார், எவனைக் கடினப்படுத்த விருப்பமாக இருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார். யாத் 4:21யோசு 11:20ரோம 9:15-162 தெச 2:10-12ரோம 11:7-8உபா 2:30ரோம 5:20-21அப் 28:26-28 அப்படியானால், அவர் இன்னும் ஏன் குற்றம் கண்டுபிடிக்கிறார்? அவருடைய விருப்பத்திற்கு எதிர்த்து நிற்பவன் யார்? என்று என்னோடு சொல்லுவாய். தானி 4:352 நாளாக 20:61 கொரி 15:121 கொரி 15:35ஆதி 50:20ஏசா 10:6-7ஏசா 46:10-11யோபு 23:13-14 அப்படியானால், மனிதனே, தேவனோடு எதிர்த்து வாக்குவாதம் செய்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட பொருள் உருவாக்கினவனைப் பார்த்து: நீ என்னை ஏன் இப்படி உருவாக்கினாய் என்று சொல்லலாமா? ஏசா 29:16ஏசா 45:9-11ஏசா 64:8யோபு 33:13யோபு 36:23யோபு 40:2மத் 20:151 தீமோ 6:5 மிதிக்கப்பட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்திற்காகவும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்திற்காகவும் செய்கிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ? ஏசா 64:82 தீமோ 2:20-21நீதி 16:4எரே 18:3-6அப் 9:15ரோம 9:22-23ரோம 9:11ரோம 9:18 தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத் தெரிவிக்கவும், நீதி 16:4யூதா 1:41 பேது 2:8ரோம 9:212 தீமோ 2:20யாத் 9:161 தெச 2:16ரோம 9:17 தாம் மகிமைக்காக ஆயத்தம்பண்ணின கிருபா பாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் செல்வத்தைத் தெரியப்படுத்தவும் விருப்பமாக, அழிவிற்கு ஆயத்தம்பண்ணப்பட்ட கோபத்தின் தண்டனையின் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடு பொறுமையாக இருந்தால் உனக்கு என்ன? ரோம 2:41 பேது 1:2-5கொலோ 1:27எபே 2:10எபே 3:16ரோம 5:20-211 நாளாக 29:182 தீமோ 2:21 அவர் யூதர்களிலிருந்து மட்டுமல்ல, யூதரல்லாத மக்களிடமிருந்து நம்மை அழைத்திருக்கிறாரே. கொலோ 3:111 கொரி 1:91 பேது 5:10அப் 13:47-48அப் 15:14அப் 21:17-20எபே 2:11-13எபே 3:6-8 அந்தப்படி: ஓசி 2:231 பேது 2:10எசேக் 16:8யோவா 16:27ரோம 1:7ஓசி 1:1-2
“எனக்கு மக்களாக இல்லாதவர்களை என்னுடைய மக்கள் என்றும்,
நேசிக்கப்படாமல் இருந்தவளை நேசிக்கப்பட்டவள் என்றும் சொல்லி அழைப்பேன்.
நீங்கள் என்னுடைய மக்கள் இல்லை என்று அவர்களுக்குச் சொல்லப்பட்ட இடத்திலே ஓசி 1:9-101 யோவா 3:1-3கலா 3:26ஏசா 43:6ரோம 8:162 கொரி 6:18யோவா 11:52மத் 16:16
அவர்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் எனப்படுவார்கள்” என்று ஓசியாவின் தீர்க்கதரிசனத்தில் சொல்லியிருக்கிறது.
அல்லாமலும் இஸ்ரவேல் மக்களுடைய எண்ணிக்கை கடற்கரை மணலைப்போல இருந்தாலும், மீதியாக இருப்பவர்கள்மட்டும் இரட்சிக்கப்படுவார்கள் என்றும்; ஏசா 10:20-23ரோம 11:4-6ஏசா 1:9ஓசி 1:10எசேக் 6:8எரே 5:10ஏசா 11:11ஆதி 22:17 அவர் நீதியோடு சீக்கிரமாகத் தம்முடைய காரியத்தை நிறைவேற்றுவார்; கர்த்தர் பூமியிலே சீக்கிரமாகவே காரியத்தை நிறைவேற்றி முடிப்பார்” என்றும், ஏசாயா இஸ்ரவேலரைக்குறித்துச் சொல்லுகிறான். ஏசா 10:23அப் 17:31ஏசா 30:12-14சங் 9:8வெளி 19:11தானி 9:26-27ஏசா 28:22ஏசா 5:16 அல்லாமலும் ஏசாயா முன்பே சொன்னபடி: ஏசா 1:9ஏசா 13:19ஆமோ 4:11யாக் 5:4எரே 49:18எரே 50:402 பேது 2:6உபா 29:23
“சேனைகளின் கர்த்தர் நமக்குள்ளே ஒரு வம்சத்தைக்கூட மீதியாக வைக்காமல் இருந்தாரானால்
நாம் சோதோமைப்போலாகி கொமோராவைப்போல இருந்திருப்போம்.”
இஸ்ரவேலர்களின் அவிசுவாசம்
இப்படியிருக்க நாம் என்னசொல்லுவோம்? நீதியைத் தேடாத யூதரல்லாத மக்கள் நீதியை அடைந்தார்கள்; அது விசுவாசத்தினால் உண்டாகும் நீதியே. பிலி 3:9எபி 11:7கலா 2:16ரோம 4:11கலா 5:5ரோம 10:20எபே 2:12ஏசா 51:1 நீதிப்பிரமாணத்தைத் தேடின இஸ்ரவேலரோ நீதிப்பிரமாணத்தை அடையவில்லை. ரோம 11:7யாக் 2:10-11ரோம 3:20கலா 5:3-4ரோம 10:2-4கலா 3:10-11கலா 3:21ஏசா 51:1 ஏனென்றால், அவர்கள் விசுவாசத்தினாலே அதைத் தேடாமல், நியாயப்பிரமாணத்தின் செயல்களினாலே தேடினதினால் அதை அடையவில்லை; இடறுதற்கான கல்லில் இடறினார்கள். 1 கொரி 1:23லூக் 7:231 பேது 2:8ரோம 11:11ரோம 4:16அப் 16:30-34யோவா 6:27-29லூக் 2:34
“இதோ, இடறுதற்கான கல்லையும், தவறுகிறதற்கான கன்மலையையும், சீயோனில் வைக்கிறேன்; அவரிடம் விசுவாசமாக இருப்பவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை” என்று எழுதியிருக்கிறபடி நடந்தது. ஏசா 28:16ஏசா 8:14-15ரோம 10:11யோவே 2:26-271 பேது 2:6-8சங் 118:22சங் 25:2-3ரோம 5:5