ரோமர் 1

Romans 1
அத்தியாயம் 1

இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும், அப்போஸ்தலனாக இருப்பதற்காக அழைக்கப்பட்டவனும், தேவனுடைய நற்செய்திக்காகப் பிரித்தெடுக்கப்பட்டவனுமாகிய பவுல், அப் 9:15ரோம 15:161 கொரி 1:1எரே 1:5கொலோ 1:1தீத் 1:12 கொரி 1:1ரோம 1:9 ரோமாபுரியில் உள்ள தேவனுக்குப் பிரியமானவர்களும் பரிசுத்தவான்களாவதற்காக அழைக்கப்பட்டவர்களாகிய அனைவருக்கும் எழுதுகிறதாவது; தீத் 1:2லூக் 1:70ரோம 3:21ரோம 16:26அப் 10:43ரோம 3:2லூக் 24:26-27அப் 26:6 நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. கலா 4:4மத் 1:1எரே 23:5-6யோவா 1:14லூக் 1:31-33மத் 1:20-23ஆமோ 9:11ஏசா 9:6-7 இயேசுகிறிஸ்துவைக்குறித்து தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாகப் பரிசுத்த வேதாகமங்களில், முன்னமே தம்முடைய நற்செய்தியைப்பற்றி வாக்குத்தத்தம்பண்ணினபடி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவானவர், எபி 5:5-6எபே 1:19-23எபி 9:142 கொரி 13:4அப் 13:33-35அப் 5:30-32யோவா 2:18-211 பேது 1:11 சரீரத்தின்படி தாவீதின் வம்சத்தில் பிறந்தவரும், பரிசுத்த ஆவியின்படி தேவனுடைய குமாரர் என்று மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்ததினாலே பலமாக நிரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாக இருக்கிறார். அப் 9:15ரோம 16:26அப் 6:7மல்கி 1:111 கொரி 15:10எபி 5:9ரோம 12:31 பேது 2:9-10 அவர் எல்லா தேசத்து மக்களையும், அவர்களுக்குள் இயேசுகிறிஸ்துவினால் அழைக்கப்பட்டவர்களாகிய உங்களையும், 1 பேது 2:9வெளி 17:142 பேது 1:10எபி 3:11 கொரி 1:91 பேது 2:212 தீமோ 1:9எபே 1:11 தமது நாமத்தினிமித்தம் விசுவாசத்திற்குக் கீழ்ப்படியப்பண்ணுவதற்காக, எங்களுக்குக் கிருபையையும் அப்போஸ்தல ஊழியத்தையும் கொடுத்திருக்கிறார். கொலோ 1:2யூதா 1:1-2எபே 1:21 தெச 1:12 கொரி 13:142 யோவா 1:32 தெச 3:162 பேது 1:2-3

பவுல் ரோமபுரியைக் காண வாஞ்சித்தல்

உங்களுடைய விசுவாசம் உலகமெங்கும் பிரசித்தமாகிறபடியினாலே, முதலாவது நான் உங்களெல்லோருக்காகவும் இயேசுகிறிஸ்து மூலமாக என் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். ரோம 16:191 கொரி 1:41 தெச 1:8-9ரோம 6:171 பேது 4:11கொலோ 1:3எபே 1:15பிலி 1:3 நான் ஜெபம்பண்ணும்போதெல்லாம் இடைவிடாமல் உங்களை நினைத்துக்கொண்டிருக்கிறதைக்குறித்துத் தேவகுமாரனுடைய நற்செய்தியினாலே என் ஆவியோடு நான் வணங்குகிற தேவன் எனக்குச் சாட்சியாக இருக்கிறார். எபே 6:182 தீமோ 1:3எபே 1:16-19ரோம 9:11 தெச 5:172 கொரி 1:231 கொரி 14:14-151 தெச 1:2 நீங்கள் உறுதிப்படுத்தப்படுவதற்காக ஆவிக்குரிய சில வரங்களை உங்களுக்குக் கொடுப்பதற்காகவும், ரோம 15:30-32அப் 18:21யாக் 4:15பிலே 1:221 தெச 2:181 தெச 3:10-11அப் 19:21எபி 13:19 உங்களுக்குள்ளும் எனக்குள்ளும் உள்ள விசுவாசத்தினால் உங்களோடு நானும் ஆறுதல் அடைவதற்கும், உங்களைப் பார்க்க ஆவலாக இருக்கிறதினாலே, 2 பேது 1:122 தெச 3:3ரோம 16:25ரோம 15:292 பேது 3:17-181 பேது 5:102 தெச 2:17அப் 8:15-19 நான் எப்படியாவது உங்களிடம் வருகிறதற்கு தேவனுடைய விருப்பத்தினாலே எனக்கு நல்ல பயணம் சீக்கிரத்தில் அமையவேண்டும் என்று ஜெபித்துக்கொள்கிறேன். 1 தெச 3:7-103 யோவா 1:3-42 கொரி 7:132 கொரி 7:4-72 பேது 1:1ரோம 15:32தீத் 1:41 தெச 2:17-20 சகோதரர்களே, யூதரல்லாதவர்களாகிய மற்றவர்களுக்குள்ளே நான் அநேகரை இரட்சிப்பிற்குள் வழிநடத்தினதுபோல உங்களுக்குள்ளும் சிலரை இரட்சிப்பிற்குள் வழிநடத்துவதற்காக, உங்களிடம் வருவதற்காக பலமுறை நான் யோசனையாக இருந்தேன், ஆனாலும் இதுவரைக்கும் எனக்குத் தடை உண்டானது என்று நீங்கள் அறியாமல் இருக்க எனக்கு மனமில்லை. அப் 19:21பிலி 4:172 தீமோ 4:171 தெச 2:181 தெச 4:132 கொரி 1:81 கொரி 10:11 கொரி 12:1 கிரேக்கர்களுக்கும், மற்ற அந்நியர்களுக்கும், ஞானிகளுக்கும், மூடர்களுக்கும் நான் கடனாளியாக இருக்கிறேன். 1 கொரி 9:16-23அப் 9:15கொலோ 3:11அப் 22:21அப் 26:17-18யாக் 3:17-18ரோம 12:162 கொரி 11:19 எனவே, ரோமாபுரியில் இருக்கிற உங்களுக்கும் என்னால் முடிந்தவரை நற்செய்தியைப் பிரசங்கம்பண்ண விரும்புகிறேன். ரோம 15:201 கொரி 9:17ஏசா 6:82 கொரி 10:15-161 இராஜா 8:18மத் 9:382 கொரி 8:12அப் 21:13 கிறிஸ்துவின் நற்செய்தியைக்குறித்து நான் வெட்கப்படமாட்டேன்; முதலில் யூதர்களிலும், பின்பு கிரேக்கர்களிலும் விசுவாசிக்கிறவன் எவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாக இருக்கிறது. மாற் 8:382 தீமோ 1:81 பேது 4:162 தீமோ 1:12சங் 40:9-10லூக் 9:261 தெச 1:5-61 கொரி 1:18-24 “விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்” என்று எழுதியிருக்கிறபடி, விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்த நற்செய்தியினால் வெளிப்படுத்தப்படுகிறது. ஆப 2:4கலா 3:11எபி 10:38பிலி 3:9எபி 11:6-7ரோம 9:30ரோம 3:21ரோம 3:3

பாவத்திற்கு எதிராக தேவனுடைய கோபம்

சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனிதர்களுடைய எல்லாவிதமான அவபக்திக்கும் அநியாயத்திற்கும் எதிராக, தேவனுடைய கோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. எபே 5:61 தீமோ 4:1-2ரோம 1:32கொலோ 3:62 தெச 2:10ரோம 4:15ரோம 5:9ரோம 6:13 தேவனைக்குறித்து தெரிந்துகொள்வது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். அப் 14:16-17சங் 19:1-6ரோம 1:20அப் 17:23-30ஏசா 40:26யோவா 1:9எரே 10:10-13 எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை, தெய்வீகத்தன்மை என்பவைகள், படைக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகம் உண்டாக்கப்பட்டதிலிருந்து, தெளிவாகக் காணப்படும்; எனவே அவர்கள் சாக்குப்போக்குச் சொல்லமுடியாது. ரோம 1:19ஏசா 40:26சங் 19:1-6சங் 8:3சங் 33:6-9ரோம 2:15யோவா 15:22யோவா 1:18 அவர்கள் தேவனைத் தெரிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், நன்றி சொல்லாமலும் இருந்து, தங்களுடைய சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்ச்சி இல்லாத அவர்களுடைய இருதயம் இருள் அடைந்தது. எபே 4:17-182இராஜா 17:15எரே 2:52 தீமோ 3:2சங் 50:23யோவா 3:19வெளி 14:71 பேது 2:9 அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பைத்தியக்காரர்களாகி, 1 கொரி 1:19-21நீதி 26:12ரோம 11:25நீதி 25:14எரே 8:8-91 கொரி 3:18-19எரே 10:14ஏசா 47:10 அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனிதர்கள், பறவைகள், மிருகங்கள், ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய உருவங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள். சங் 106:20எரே 2:11அப் 17:291 பேது 4:3சங் 115:5-8ரோம 1:25உபா 5:8எசேக் 8:10 இதனால் அவர்கள் தங்களுடைய இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்களுடைய சரீரங்களை அவமானப்படுத்துவதற்காக தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார். சங் 81:11-12அப் 7:42அப் 14:16மத் 15:142 தெச 2:10-12எபே 4:18-19ரோம 1:26-28லேவி 18:22 தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, படைத்தவரைத் தொழுதுகொள்ளாமல் படைக்கப்பட்டவைகளைத் தொழுதுகொண்டார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென். ஆப 2:18எரே 13:251 யோவா 2:15-16ஏசா 44:20ஆமோ 2:42 கொரி 11:31எரே 10:14-15ரோம 9:5 இதனால் தேவன் அவர்களை இழிவான இச்சைகளுக்கு ஒப்புக்கொடுத்தார்; அப்படியே அவர்களுடைய பெண்கள் இயற்கையான இச்சையை இயற்கைக்கு எதிரான இச்சையாக மாற்றினார்கள். யூதா 1:71 தீமோ 1:10லேவி 18:22-28ரோம 1:241 கொரி 6:9எபே 4:19ஆதி 19:5நியாயாதி 19:22 அப்படியே ஆண்களும் பெண்களை இயற்கையின்படி அனுபவிக்காமல், ஒருவர்மேல் ஒருவர் இச்சையினாலே பொங்கி, ஆணோடு ஆண் அவலட்சணமானதை செய்து, தங்களுடைய தவறுகளுக்குத்தக்க பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள். லேவி 20:13லேவி 18:22ரோம 1:23-24 தேவனைத் தெரிந்துகொள்ளும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனமில்லாமல் இருந்ததால், தவறான காரியங்களைச் செய்வதற்காக, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார். 2 தெச 2:10-12ரோம 1:21தீத் 1:16எரே 9:6ரோம 1:242 தீமோ 3:8ரோம 8:7-8நீதி 5:12-13 அவர்கள் எல்லாவிதமான அநியாயத்தினாலும், வேசித்தனத்தினாலும், துரோகத்தினாலும், பொருளாசையினாலும், குரோதத்தினாலும் நிறையப்பட்டு; பொறாமையினாலும், கொலையினாலும், வாக்குவாதத்தினாலும், வஞ்சகத்தினாலும், வன்மத்தினாலும் நிறைந்தவர்களுமாக, 2 கொரி 12:20நீதி 16:28நீதி 26:20சங் 41:7ரோம 3:10 கோள் சொல்லுகிறவர்களுமாக, அவதூறு பண்ணுகிறவர்களுமாக, தேவனைப் பகைக்கிறவர்களுமாக, மூர்க்கர்களுமாக, அகந்தை உள்ளவர்களுமாக, வீம்புக்காரர்களுமாக, பொல்லாதவைகளை யோசிக்கிறவர்களுமாக, பெற்றோருக்குக் கீழ்ப்படியாதவர்களுமாக, 2 தீமோ 3:2யூதா 1:162 பேது 2:18யாக் 3:5யாக் 4:16ரோம 8:7-8தீத் 3:31 இராஜா 20:11 உணர்வு இல்லாதவர்களுமாக, உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாக, சுபாவ அன்பு இல்லாதவர்களுமாக, இணங்காதவர்களுமாக, இரக்கம் இல்லாதவர்களுமாக இருக்கிறார்கள். 2 தீமோ 3:3நீதி 18:2ரோம 3:11ஏசா 33:8எரே 4:22மத் 15:162இராஜா 18:14-37ஏசா 27:11 இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குத் தகுதியானவர்கள் என்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் தெரிந்திருந்தும், அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களையும் ஏற்றுக்கொள்ளுகிறவர்களுமாக இருக்கிறார்கள். ரோம 1:21ரோம 2:1-5ரோம 6:21சங் 50:18ரோம 1:18லூக் 11:48ரோம 2:21-23அப் 22:20