அல்லேலூயா, யெகோவாவை துதியுங்கள்; 1 தெச 5:181 நாளாக 16:34சங் 105:1சங் 136:1எரே 33:11சங் 118:1சங் 105:45சங் 107:1
அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.
யெகோவாவுடைய வல்லமையான செயல்களைச் சொல்லி, எபே 1:19ரோம 11:33சங் 139:17-18சங் 145:3-12எபே 3:18யோபு 26:14யோபு 5:9நெகே 9:5
அவருடைய துதியையெல்லாம் சொல்லக்கூடியவன் யார்?
நியாயத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும், சங் 15:2யாக் 1:25கலா 6:9யோவா 13:17யோவா 15:14உபா 11:1மாற் 3:35சங் 119:1-3
எக்காலத்திலும் நீதியைச் செய்கிறவர்களும் பாக்கியவான்கள்.
யெகோவாவே, நீர் தெரிந்துகொண்டவர்களின் நன்மையை நான் கண்டு, சங் 119:132லூக் 23:42நெகே 13:14நெகே 13:31சங் 25:7நெகே 13:22அப் 15:14நெகே 5:19
உம்முடைய மக்களின் மகிழ்ச்சியால் மகிழ்ந்து,
உம்முடைய சுதந்தரத்தோடு மேன்மைபாராட்டும்படிக்கு,
உம்முடைய மக்களுக்கு நீர் பாராட்டும் கிருபையின்படி என்னை நினைத்து, யோவா 15:16சங் 105:43எபே 1:18ஏசா 12:6ஏசா 66:10சங் 1:3சங் 105:6சகரி 9:9
உம்முடைய இரட்சிப்பினால் என்னைச் சந்தித்தருளும்.
எங்களுடைய முன்னோர்களோடு நாங்களும் பாவஞ்செய்து, நெகே 9:16சங் 78:81 இராஜா 8:47எஸ்றா 9:6-7நெகே 9:32-34தானி 9:5-8லேவி 26:40அப் 7:51-52
அக்கிரமம் நடப்பித்து, தீமைகளைச் செய்தோம்.
எங்களுடைய முன்னோர்கள் எகிப்திலே உம்முடைய அதிசயங்களை உணராமலும், யாத் 14:11-12சங் 78:422 தெச 2:10-12நீதி 1:22சங் 78:11உபா 15:15உபா 29:4உபா 32:28-29
உம்முடைய கிருபைகளின் பெருக்கத்தை நினைக்காமலும் போய்,
சிவந்த கடலின் ஓரத்திலே கலகம்செய்தார்கள்.
ஆனாலும் அவர் தமது வல்லமையை வெளிப்படுத்தும்படி, யாத் 9:16எசேக் 20:9எசேக் 20:14எசேக் 20:22எசேக் 20:44எரே 14:21ரோம 9:17தானி 9:17-19
தம்முடைய பெயரினிமித்தம் அவர்களைக் காப்பாற்றினார்.
அவர் சிவந்த கடலை அதட்டினார், அது வற்றிப்போனது; சங் 18:15ஏசா 51:10ஏசா 63:11-14நாகூ 1:4சங் 78:13யாத் 14:21-22யாத் 14:27-29நெகே 9:11
காய்ந்த தரையில் நடக்கிறதுபோல அவர்களை ஆழங்களில் நடந்துபோகச்செய்தார்.
பகைவரின் கைக்கு அவர்களை விலக்கிக் காப்பாற்றி, எதிரியின் கைக்கு அவர்களை விலக்கி மீட்டார். யாத் 14:30சங் 107:2மீகா 6:4யோபு 6:22-23சங் 136:24உபா 11:4யாத் 15:13யாத் 15:9-10
அவர்களுடைய எதிரிகளைத் தண்ணீர்கள் மூடிக்கொண்டது; யாத் 15:5யாத் 14:13யாத் 14:27-28சங் 78:53யாத் 15:10யாத் 15:19
அவர்களில் ஒருவனும் மீதியாக இருக்கவில்லை.
அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை விசுவாசித்து, யாத் 14:31யோவா 8:30-31லூக் 8:13
அவருடைய துதியைப் பாடினார்கள்.
ஆனாலும் சீக்கிரமாக அவருடைய செயல்களை மறந்தார்கள்; சங் 78:11யாத் 15:24யாத் 16:2ஏசா 48:17-18நீதி 1:25சங் 107:11யாத் 17:2நீதி 1:30
அவருடைய ஆலோசனைக்கு அவர்கள் காத்திருக்காமல்,
வனாந்திரத்திலே ஆசையுள்ளவர்களாகி, 1 கொரி 10:91 கொரி 10:6யாத் 17:2எண் 11:4எபி 3:8-10உபா 9:22எண் 11:33-34எண் 14:22
பாலைவனத்திலே தேவனைப் பரீட்சைபார்த்தார்கள்.
அப்பொழுது அவர்கள் கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார், எண் 11:31-34ஏசா 10:16சங் 78:29-31ஏசா 24:16
அவர்கள் சரீரத்திலோ வியாதியை அனுப்பினார்.
முகாமில் அவர்கள் மோசேயின்மேலும், எண் 16:1-50லேவி 21:10-12யாத் 28:36லேவி 21:6-8
யெகோவாவுடைய பரிசுத்தனாகிய ஆரோனின்மேலும் பொறாமைகொண்டார்கள்.
பூமி பிளந்து தாத்தானை விழுங்கி, உபா 11:6எண் 16:29-33எண் 26:10
அபிராமின் கூட்டத்தை மூடிப்போட்டது.
அவர்கள் கூட்டத்தில் நெருப்பு பற்றியெரிந்தது; எபி 12:29எண் 16:35-40எண் 16:46
நெருப்பு ஜூவாலை துன்மார்க்கர்களை எரித்துப்போட்டது.
அவர்கள் ஓரேபிலே ஒரு கன்றுக்குட்டியையுண்டாக்கி, யாத் 32:35யாத் 32:4-81 கொரி 10:7அப் 7:41உபா 9:12-16உபா 9:21உபா 9:8நெகே 9:18
வார்க்கப்பட்ட சிலையை வழிபட்டார்கள்.
தங்களுடைய மகிமையைப் எரே 2:11யாத் 20:4-5ரோம 1:22-23ஏசா 40:18-25சங் 89:17
புல்லைத் தின்கிற மாட்டின் சாயலாக மாற்றினார்கள்.
எகிப்திலே பெரிய செயல்களையும், சங் 78:42-51உபா 32:17-18எரே 2:32சங் 106:13சங் 78:11-12உபா 10:21உபா 4:34சங் 135:9
காமின் தேசத்திலே அதிசயங்களையும்,
சிவந்த கடலினருகில் பயங்கரமானவைகளையும் செய்தவராகிய,
தங்களுடைய இரட்சகரான தேவனை மறந்தார்கள். சங் 105:23சங் 78:51யாத் 14:25-28யாத் 15:10சங் 105:27-36
ஆகையால், அவர்களை நாசம்செய்வேன் என்றார்; உபா 9:13-14உபா 9:25எசேக் 22:30யாக் 5:16யாத் 32:32எசேக் 13:5எசேக் 20:8மத் 12:18
அப்பொழுது அவரால் தெரிந்துகொள்ளப்பட்ட மோசே,
அவர்களை அவர் அழிக்காதபடி,
அவருடைய கடுங்கோபத்தை ஆற்றுவதற்கு,
அவருக்கு முன்பாகத் திறப்பின் வாசலிலே நின்றான்.
அவருடைய வார்த்தையை விசுவாசிக்காமல், உபா 1:32எசேக் 20:6எபி 3:18-19எண் 14:31எபி 4:6உபா 11:11-12உபா 8:7-9எபி 12:16
விரும்பத்தக்க தேசத்தை அசட்டைச்செய்தார்கள்.
யெகோவாவுடைய சத்தத்திற்குச் செவிகொடுக்காமல், உபா 1:26-27எபி 3:15எபி 3:7-8எண் 14:22சங் 95:7-9எண் 14:1-4எண் 14:27-29
தங்களுடைய கூடாரங்களில் முறுமுறுத்தார்கள்.
அப்பொழுது அவர்கள் வனாந்தரத்திலே இறக்கவும், எசேக் 20:15எண் 14:28-35எபி 3:11சங் 95:11உபா 1:34-35யாத் 6:8எபி 3:18உபா 32:40-42
அவர்கள் சந்ததி தேசங்களுக்குள்ளே அழியவும்,
அவர்கள் பற்பல தேசங்களிலே சிதறடிக்கப்படவும், லேவி 26:33சங் 44:11உபா 28:64-65எசேக் 20:23உபா 28:37உபா 32:26-27உபா 4:26-27
அவர்களுக்கு விரோதமாகத் தம்முடைய கையை எடுத்தார்.
அவர்கள் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்டு, ஓசி 9:10எண் 25:1-3எண் 25:51 கொரி 10:19-20உபா 4:3எரே 10:8-10உபா 32:17வெளி 2:14
உயிரில்லாதவைகளுக்கு செலுத்தின பலிகளை சாப்பிட்டு,
தங்களுடைய செயல்களினால் அவருக்குக் கோபம் மூட்டினார்கள்; 1 கொரி 10:8உபா 32:16-21பிரச 7:29எண் 25:9சங் 106:39சங் 99:8ரோம 1:21-24
ஆகையால் வாதை அவர்களுக்குள் புகுந்தது.
அப்பொழுது பினெகாஸ் எழுந்து நின்று நியாயஞ்செய்தான்; எண் 25:6-8யோசு 7:12எண் 25:14-151 இராஜா 18:40-41உபா 13:9-11யோனா 1:12-15உபா 13:15-17
அதினால் வாதை நிறுத்தப்பட்டது.
அது தலைமுறை தலைமுறையாக என்றைக்கும் அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. எண் 25:11-13உபா 24:13ஆதி 15:6மாற் 14:3-9
மேரிபாவின் தண்ணீர்களிடத்திலும் அவருக்குக் கடுங்கோபம் மூட்டினார்கள்; எண் 20:2-13உபா 1:37உபா 4:21எண் 20:23-24சங் 81:7உபா 3:26எண் 27:13-14சங் 78:40
அவர்களினால் மோசேக்கும் பொல்லாப்பு வந்தது.
அவர்கள் அவன் ஆவியைத் துக்கப்படுத்தினதினாலே, எண் 20:10-11யாக் 3:2சங் 107:11சங் 39:1சங் 78:40யோபு 2:10சங் 141:3ஆதி 30:1
தன்னுடைய உதடுகளினால் பதறிப்பேசினான்.
யெகோவா தங்களுக்குச் சொன்னபடி, உபா 7:2உபா 7:16நியாயாதி 1:21யோசு 23:12-131 சாமு 15:22-23மத் 17:19-20எண் 33:55-561 சாமு 15:3
அவர்கள் அந்த மக்களை அழிக்கவில்லை.
அந்நிய ஜாதிகளோடு கலந்து, அவர்களுடைய செயல்களைக் கற்று; நியாயாதி 3:5-61 கொரி 15:331 கொரி 5:6நியாயாதி 1:27-36நியாயாதி 2:2-3ஏசா 2:6யோசு 15:63
அவர்களுடைய சிலைகளை வழிபட்டார்கள்; உபா 7:16நியாயாதி 2:3யாத் 23:33நியாயாதி 2:12-15சங் 78:582 நாளாக 33:2-92இராஜா 17:16-172இராஜா 17:8-11
அவைகள் அவர்களுக்குக் கண்ணியானது.
அவர்கள் தங்களுடைய மகன்களையும் 2இராஜா 16:32இராஜா 17:17உபா 32:17எரே 7:31உபா 12:30-31எசேக் 23:371 கொரி 10:202இராஜா 21:6
தங்களுடைய மகள்களையும் பிசாசுகளுக்குப் பலியிட்டார்கள்.
அவர்கள் கானான் தேசத்து சிலைகளுக்கு பலியிட்டு, எண் 35:332இராஜா 21:16உபா 21:9ஏசா 26:212இராஜா 24:4எசேக் 22:3எசேக் 7:23ஏசா 1:15
தங்களுடைய மகன்கள் மகள்களுடைய குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தினார்கள்;
தேசம் இரத்தத்தால் தீட்டுப்பட்டது.
அவர்கள் தங்களுடைய செயல்களினால் அசுத்தமாகி, எசேக் 20:18லேவி 17:7எண் 15:39எசேக் 20:30-31எசேக் 20:43ஓசி 9:1ஏசா 24:5-6ஏசா 59:3
தங்களுடைய செயல்களினால் வேசித்தனம் செய்தார்கள்.
அதினால் யெகோவாவுடைய கோபம் தமது மக்களின்மேல் எழும்பினது; நியாயாதி 2:14உபா 9:29உபா 32:19நியாயாதி 2:20நியாயாதி 3:8புலம் 2:7லேவி 20:23நெகே 9:27-38
அவர் தமது சுதந்தரத்தை அருவருத்தார்.
அவர்களைத் தேசங்களுடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; நியாயாதி 2:14நெகே 9:27-38நியாயாதி 3:12நியாயாதி 3:8நியாயாதி 4:1-2உபா 28:25உபா 28:29உபா 28:33
அவர்களுடைய பகைவர்கள் அவர்களை ஆண்டார்கள்.
அவர்களுடைய எதிரிகள் அவர்களை ஒடுக்கினார்கள்; நியாயாதி 10:12நியாயாதி 4:3
அவர்களுடைய கையின்கீழ்த் தாழ்த்தப்பட்டார்கள்.
அநேகமுறை அவர்களை விடுவித்தார்; நியாயாதி 2:16-18சங் 81:12சங் 1:11 சாமு 12:9-11சங் 106:291 சாமு 13:19நியாயாதி 5:8நியாயாதி 6:5
அவர்களோ தங்களுடைய யோசனையினால் அவருக்கு விரோதமாகக் கலகம்செய்து,
தங்களுடைய அக்கிரமத்தினால் சிறுமைப்படுத்தப்பட்டார்கள்.
அவர்கள் கூப்பிடுதலை அவர் கேட்கும்போதோ, நியாயாதி 3:9நியாயாதி 4:31 சாமு 7:8-122இராஜா 14:26-27நியாயாதி 10:10-16நியாயாதி 2:18நியாயாதி 6:6-10நெகே 9:27-38
அவர்களுக்கு உண்டான இடுக்கத்தை அவர் பார்த்து,
அவர்களுக்காகத் தமது உடன்படிக்கையை நினைத்து, சங் 105:82இராஜா 13:23யாத் 32:14நியாயாதி 2:18புலம் 3:32ஏசா 63:7லேவி 26:40-42லூக் 1:71-72
தமது மிகுந்த கிருபையின்படி மனவேதனை அடைந்து,
அவர்களைச் சிறைபிடித்த அனைவரும் அவர்களுக்கு இரங்கும்படி செய்தார். எஸ்றா 9:9எரே 42:121 இராஜா 8:50எரே 15:11நெகே 1:112 நாளாக 30:9
எங்கள் தேவனாகிய யெகோவாவே, 1 நாளாக 16:35-362 கொரி 2:14வெளி 7:10-12எசேக் 36:24-28சங் 107:1-3சங் 14:7எசேக் 37:21-28எசேக் 39:25-29
நாங்கள் உமது பரிசுத்தப் பெயரைப் போற்றி,
உம்மைத் துதிக்கிறதில் மேன்மைபாராட்டும்படி எங்களைக் காப்பாற்றி,
எங்களைத் தேசங்களிலிருந்து சேர்த்தருளும்.
இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சங் 41:13சங் 89:521 நாளாக 29:10சங் 72:18-191 கொரி 14:16சங் 105:45
அநாதியாக என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர்.
மக்களெல்லோரும் ஆமென், என்பார்களாக,
அல்லேலூயா.