சங்கீதங்கள் 99

Psalms 99
சங்கீதம் 99

யெகோவா ராஜரிகம்செய்கிறார், சங் 97:1யாத் 25:22சங் 80:1சங் 93:1சங் 97:4வெளி 20:11ஏசா 19:14ஏசா 24:19-20

மக்கள் தத்தளிப்பார்களாக;

அவர் கேருபீன்களின் மத்தியில் அமர்ந்திருக்கிறார்,

பூமி அசைவதாக.

யெகோவா சீயோனில் பெரியவர், சங் 97:9ஏசா 14:32ஏசா 12:6யாக் 4:6-7சங் 113:4சங் 48:1-3சங் 50:2சங் 66:7

அவர் எல்லா மக்கள்மேலும் உயர்ந்தவர்.

மகத்துவமும் பயங்கரமுமான உமது பெயரை அவர்கள் துதிப்பார்களாக; ஏசா 6:3உபா 28:58சங் 111:9வெளி 15:3-4உபா 7:21யோவா 17:11நெகே 1:5நெகே 4:14

அது பரிசுத்தமுள்ளது.

ராஜாவின் வல்லமை நீதியில் பிரியப்படுகிறது, சங் 11:7எரே 23:5யோபு 36:5-7சங் 45:6-7உபா 32:3-4ஏசா 11:3-5வெளி 19:162 சாமு 23:3-4

தேவனே நீர் நியாயத்தை நிலைநிறுத்துகிறீர்;

நீர் யாக்கோபில் நியாயமும் நீதியும் செய்கிறீர்.

நம்முடைய தேவனாகிய யெகோவாவை உயர்த்தி, சங் 132:7ஏசா 66:1யாத் 15:2சங் 108:5சங் 34:3ஏசா 12:4ஏசா 25:1சங் 99:3

அவர் பாதத்தைப் பணியுங்கள்;

அவர் பரிசுத்தமுள்ளவர்.

அவருடைய ஆசாரியர்களில் மோசேயும் ஆரோனும், எரே 15:1யாத் 15:25யாத் 24:6-81 சாமு 12:18-241 சாமு 7:9-12யாத் 14:15யாத் 29:11-37யாத் 32:11-14

அவர் பெயரைப்பற்றிக் கூப்பிடுகிறவர்களில் சாமுவேலும்,

யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள்;

அவர் அவர்களுக்கு மறுஉத்திரவு அருளினார்.

மேகத்தூணிலிருந்து அவர்களோடு பேசினார்; யாத் 33:9எண் 12:5உபா 4:51 யோவா 3:21-22யாத் 19:9எபி 3:21 சாமு 12:3-5உபா 33:9

அவர்கள் அவருடைய சாட்சிப்பிரமாணங்களையும்

அவர் தங்களுக்குக் கொடுத்த கட்டளையையும் கைக்கொண்டார்கள்.

எங்களுடைய தேவனாகிய யெகோவாவே, எண் 20:12சங் 89:33எரே 46:28பிரச 7:29உபா 9:19-20எண் 14:20-34எண் 20:24உபா 3:26

நீர் அவர்களுக்கு உத்திரவு கொடுத்தீர்;

நீர் அவர்கள் செயல்களுக்காக நீதி சரிக்கட்டினபோதிலும்,

அவர்களுக்கு மன்னிக்கிற தேவனாக இருந்தீர்.

நம்முடைய தேவனாகிய யெகோவாவை உயர்த்தி, லூக் 1:49ஏசா 57:151 பேது 1:15-16ஏசா 5:16வெளி 4:8ஏசா 6:3சங் 2:6சங் 99:5

அவருடைய பரிசுத்த மலைக்கு நேராகப் பணியுங்கள்;

நம்முடைய தேவனாகிய யெகோவா பரிசுத்தமுள்ளவர்.