இராகத் தலைவனுக்கு தாவீதின் பாடல்.
தேவனே, என்னுடைய விண்ணப்பத்தில் என்னுடைய சத்தத்தைக் கேட்டருளும்; சங் 143:1-3சங் 34:4புலம் 3:55-56சங் 130:1-2சங் 140:1சங் 141:1அப் 27:24சங் 31:13-15
எதிரியால் வரும் பயத்தை நீக்கி, என்னுடைய உயிரை காத்தருளும்.
துன்மார்க்கர் செய்யும் இரகசிய ஆலோசனைக்கும், சங் 109:2-3சங் 143:9சங் 31:20சங் 59:2எரே 11:19சங் 27:5ஏசா 32:2எரே 18:23
அக்கிரமக்காரர்களுடைய கலகத்திற்கும் என்னை விலக்கி மறைத்தருளும்.
அவர்கள் தங்களுடைய நாவை வாளைப்போல் கூர்மையாக்கி, யாக் 3:6-8எரே 9:3சங் 57:4சங் 58:7ஏசா 54:17நீதி 12:18சங் 11:2நீதி 30:14
மறைவுகளில் உத்தமன்மேல் எய்வதற்காக கசப்பான வார்த்தைகளாகிய தங்களுடைய அம்புகளை நாணேற்றுகிறார்கள்; 1 பேது 2:22-23சங் 55:19சங் 10:8-9சங் 11:21 சாமு 18:111 சாமு 19:102 சாமு 15:14ஆப 3:14
சற்றும் பயமின்றி திடீரென்று அவன்மேல் எய்கிறார்கள்.
அவர்கள் பொல்லாத காரியத்தில் தங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, சங் 140:5சங் 10:11எசேக் 8:12யோபு 22:13சங் 59:7சங் 94:71 சாமு 23:19-23யாத் 15:9
மறைவான கண்ணிகளை வைக்க ஆலோசனைசெய்து,
அவைகளைக் காண்பவன் யார் என்கிறார்கள்.
அவர்களுடைய நியாயக்கேடுகளை ஆராய்ந்துதேடி, எரே 17:9-10மத் 26:59ஏசா 29:15சங் 5:91 கொரி 4:5தானி 6:4-5யோவா 18:29-30நீதி 20:5
தந்திரமான யோசனை நிறைவேறும்படி முயற்சி செய்கிறார்கள்;
அவர்களில் ஒவ்வொருவனுடைய உட்கருத்தும் இருதயமும் ஆழமாக இருக்கிறது.
ஆனாலும் தேவன் அவர்கள்மேல் அம்புகளை எய்வார், நீதி 6:15சங் 7:12-131 தெச 5:2-3சங் 18:141 நாளாக 10:3-7உபா 32:23உபா 32:42ஏசா 30:13
திடீரென்று அவர்கள் காயப்படுவார்கள்.
அவர்கள் தள்ளப்பட்டு, கீழே விழும்படி நீதி 18:7நீதி 12:13சங் 140:9எரே 18:16எரே 48:27யோபு 15:6லூக் 19:22மத் 21:41
அவர்கள் நாவுகளே அவர்களைக் கெடுக்கும்;
அவர்களைக் காண்கிற அனைவரும் ஓடிப்போவார்கள்.
எல்லா மனிதரும் பயந்து, தேவனுடைய செயலை அறிவித்து, எரே 51:10ஓசி 14:9சங் 40:3ஏசா 5:12சங் 107:42-43எரே 50:28சங் 58:11எசேக் 14:23
அவர் செய்கையை உணர்ந்துகொள்வார்கள்.
நீதிமான் யெகோவாவுக்குள் மகிழ்ந்து, அவரை நம்புவான்; சங் 32:111 கொரி 1:30-31சங் 40:3சங் 112:2சங் 25:20கலா 6:14யோபு 22:19பிலி 4:4
செம்மையான இருதயமுள்ளவர்கள் அனைவரும் மேன்மைபாராட்டுவார்கள்.