சங்கீதங்கள் 141

Psalms 141
சங்கீதம் 141

தாவீதின் பாடல்.

யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன், சங் 70:5சங் 40:13சங் 71:12சங் 143:7சங் 69:17-18யோபு 7:21சங் 22:19சங் 143:1

என்னிடத்திற்கு விரைந்துவாரும்;

நான் உம்மை நோக்கிக் கூப்பிடும்போது,

என்னுடைய சத்தத்திற்குச் செவிகொடும்.

என்னுடைய விண்ணப்பம் உமக்கு முன்பாகத் தூபமாகவும், வெளி 8:3-4வெளி 5:81 தீமோ 2:8தானி 9:21மல்கி 1:11நீதி 15:8லூக் 1:9-10சங் 63:4

என் கையுயர்த்துதல் மாலைநேரப் பலியாகவும் இருக்கட்டும்.

யெகோவாவே, என்னுடைய வாய்க்குக் காவல்வையும்; யாக் 1:26சங் 39:1மீகா 7:5சங் 34:13யாக் 3:2சங் 71:8சங் 17:3-5

என்னுடைய உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்.

அக்கிரமஞ்செய்கிற மனிதரோடு துன்மார்க்கச் செயல்களை நடப்பிக்கும்படி மத் 6:13சங் 119:361 கொரி 15:332 கொரி 6:17ஏசா 63:171 இராஜா 8:581 கொரி 10:31யாக் 1:13

என்னுடைய இருதயத்தைத்

துன்மார்க்கத்திற்கு இசைந்துப்போகச் செய்யாமல் இரும்;

அவர்களுடைய ருசியுள்ள உணவுகளில் ஒன்றையும் நான் சாப்பிடாமல் இருப்பேனாக.

நீதிமான் என்னைத் தயவாய்க்குட்டி, பிரச 7:5வெளி 3:19கலா 6:1நீதி 27:5-6நீதி 25:12நீதி 19:25நீதி 9:8-9கலா 2:11-14

என்னைக் கடிந்துகொள்ளட்டும்;

அது என்னுடைய தலைக்கு எண்ணெயைப்போலிருக்கும்;

என்னுடைய தலை அதை நிராகரிப்பதில்லை;

அவர்கள் இக்கட்டுகளில் நான் இன்னும் ஜெபம்செய்வேன்.

அவர்களுடைய நியாயாதிபதிகள் கன்மலை மேலிருந்து 2 நாளாக 25:121 நாளாக 10:1-71 நாளாக 11:1-31 நாளாக 12:381 நாளாக 13:21 சாமு 31:1-82 சாமு 1:17-272 சாமு 2:4-6

தள்ளப்பட்டுபோகிறபோது,

என்னுடைய வார்த்தைகள் இன்பமானவைகளென்று கேட்பார்கள்.

பூமியின்மேல் ஒருவன் மரத்தை வெட்டிப் பிளக்கிறதுபோல, சங் 53:5ரோம 8:36சங் 44:22வெளி 11:8-91 சாமு 22:18-192 கொரி 1:9எபி 11:37

எங்களுடைய எலும்புகள் பாதாள வாய்க்கு நேராகச் சிதறடிக்கப்பட்டிருக்கிறது.

ஆனாலும் ஆண்டவராகிய யெகோவாவே, சங் 123:1-22 நாளாக 20:12ஏசா 41:17சங் 102:17சங் 25:15-17யோவா 14:18சங் 2:12சங் 143:3-4

என்னுடைய கண்கள் உம்மை நோக்கி இருக்கிறது;

உம்மை நம்பியிருக்கிறேன்;

என்னுடைய ஆத்துமாவை வெறுமையாக விடாதிரும்.

அவர்கள் எனக்கு வைத்த கண்ணியின் சிக்குகளுக்கும், லூக் 20:20சங் 119:110சங் 140:5நீதி 13:14சங் 38:12எரே 18:22சங் 142:3

அக்கிரமக்காரர்களின் சுருக்குகளுக்கும் என்னை விலக்கி பாதுகாத்துக்கொள்ளும்.

துன்மார்க்கர்கள் தங்களுடைய வலைகளில் அகப்படுவார்களாக; சங் 35:8சங் 140:9எஸ்த 7:10நீதி 11:8சங் 64:7-8சங் 7:15-16சங் 37:14-15

நானோ அதற்குத் தப்பிக் கடந்துபோவேன்.