சங்கீதங்கள் 13

Psalms 13
சங்கீதம் 13

சங்கீத தலைவரிடம் கொடுக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.

யெகோவாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், யோபு 13:24புலம் 5:20சங் 89:46சங் 94:3-4சங் 22:1-2சங் 80:4சங் 44:24சங் 35:17

எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?

என்னுடைய இருதயத்திலே சஞ்சலத்தை எல்லா நாளும் வைத்து, மீகா 7:8-10எரே 8:18எரே 15:18புலம் 1:5நீதி 15:13சங் 143:3-4பிரச 5:17யோபு 10:15

எதுவரைக்கும் என்னுடைய ஆத்துமாவிலே ஆலோசனை செய்துகொண்டிருப்பேன்?

எதுவரைக்கும் என்னுடைய எதிரி என்மேல் தன்னை உயர்த்துவான்?

என் தேவனாகிய யெகோவாவே, நீர் நோக்கிப்பார்த்து, எஸ்றா 9:8சங் 18:28எரே 51:391 சாமு 14:29சங் 5:11 சாமு 14:27எபே 5:14எரே 51:57

எனக்குப் பதில் தாரும்; நான் மரணமாகிய தூக்கம்

அடையாதபடி என்னுடைய கண்களைத் தெளிவாக்கும்.

அவனை மேற்கொண்டேன் என்று என்னுடைய எதிரி சொல்லாதபடி, சங் 25:2எரே 1:19நீதி 12:3சங் 62:6யோசு 7:9புலம் 1:16சங் 38:16எசேக் 35:12-15

நான் தள்ளாடுகிறதினால் என்னுடைய எதிரி சந்தோஷப்படாதபடி இப்படிச் செய்தருளும்.

நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாக இருக்கிறேன்; ஏசா 12:2யூதா 1:21ஆப 3:18சங் 52:8சங் 119:81சங் 36:7சங் 33:18சங் 33:21-22

உம்முடைய இரட்சிப்பினால் என்னுடைய இருதயம் சந்தோஷப்படும்.

யெகோவா எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன். சங் 116:7சங் 21:13சங் 119:7