சங்கீதங்கள் 36

Psalms 36
சங்கீதம் 36

இராகத் தலைவனுக்கு, யெகோவாவுடைய ஊழியனாகிய தாவீது கொடுத்த பாடல்.

துன்மார்க்கனுடைய துரோகப்பேச்சு என் உள்ளத்திற்குத் தெரியும்; ரோம 3:18நீதி 16:6மத் 12:33-34நீதி 8:13சங் 112:1சங் 143:12சங் 18:12 பேது 1:1

அவன் கண்களுக்குமுன்பு தெய்வபயம் இல்லை.

அவன், தன்னுடைய அக்கிரமம் அருவருப்பானதென்று காணப்படும்வரை, உபா 29:19சங் 49:18சங் 10:31 நாளாக 10:13-141 சாமு 15:18-24ரோம 7:9ஓசி 12:7-8எரே 17:9

தன் பார்வைக்கேற்றபடி தனக்குத்தானே வஞ்சகம் பேசுகிறான்.

அவன் வாயின் வார்த்தைகள் அக்கிரமமும் வஞ்சகமுமுள்ளது; எரே 4:22சங் 55:211 யோவா 2:19மத் 22:15-18சங் 10:71 சாமு 11:6-131 சாமு 13:13-141 சாமு 15:26

புத்தியாக நடந்துகொள்வதையும் நன்மை செய்வதையும் விட்டுவிட்டான்.

அவன் தன்னுடைய படுக்கையின்மேல் அக்கிரமத்தை யோசித்து, மீகா 2:1நீதி 4:16ஏசா 65:2ரோம 12:9அப் 23:12மத் 27:1சங் 97:10வெளி 2:2

நல்லது இல்லாத வழியிலே நிலைத்து,

பொல்லாப்பை வெறுக்காமலிருக்கிறான்.

யெகோவாவே, உமது கிருபை வானங்களில் தெரிகிறது; சங் 100:5சங் 108:4சங் 103:11சங் 57:10எபி 6:18-20சங் 89:2மத் 24:35சங் 92:2

உமது சத்தியம் மேகமண்டலங்கள்வரை எட்டுகிறது.

உமது நீதி மகத்தான மலைகள் போலவும், ரோம 11:33ஏசா 40:28சங் 77:191 தீமோ 4:10உபா 32:4யோபு 37:23நெகே 9:6சங் 71:19

உமது நியாயங்கள் மகா ஆழமாகவும் இருக்கிறது;

யெகோவாவே, மனிதர்களையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர்.

தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! சங் 86:5ரூத் 2:121 யோவா 3:1சங் 91:41 யோவா 4:9-10சங் 139:17சங் 17:8சங் 31:19

அதினால் மனிதர்கள் உமது இறக்கைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள்.

உமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள்; சங் 16:11சங் 65:4ஏசா 58:11எரே 31:12-14ஏசா 25:6சங் 63:5மத் 5:6ஏசா 48:21

உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர்.

வாழ்வின் ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது; யோவா 8:12யோவா 4:141 யோவா 1:7யோவா 4:10யோவா 7:37-39வெளி 21:62 கொரி 4:6ஏசா 60:19

உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம்.

உம்மை அறிந்தவர்கள்மேல் உமது கிருபையையும், எரே 24:7எபி 8:11எரே 22:16சங் 9:10சங் 97:10-111 பேது 1:5யோவா 17:3சங் 143:1-2

செம்மையான இருதயமுள்ளவர்கள்மேல்

உமது நீதியையும் பாராட்டியருளும்.

பெருமைக்காரர்களின் கால் என்மேல் வராமலும், சங் 16:8ஏசா 51:23யோபு 40:11-12சங் 12:3-5சங் 123:3-4சங் 10:2சங் 119:122சங் 119:51

துன்மார்க்கர்களுடைய கை என்னைப் பறக்கடிக்காமலும் இருப்பதாக.

அதோ அக்கிரமக்காரர்கள் விழுந்தார்கள்; சங் 1:52 தெச 1:8-9நியாயாதி 5:31எரே 51:64சங் 140:10சங் 18:38சங் 55:23சங் 58:10-11

எழுந்திருக்கமுடியாமல் தள்ளப்பட்டுபோனார்கள்.