இஸ்ரவேலின் பாவம்
எப்பிராயீம் காற்றை மேய்ந்து, கொண்டற்காற்றைப் பின்தொடருகிறான்; அவன் நாள்தோறும் பொய்யையும் கேட்டையும் பெருக்கச்செய்து, அசீரியருடன் உடன்படிக்கை செய்கிறான்; எகிப்திற்கு எண்ணெய் கொண்டுபோகப்படுகிறது. ஓசி 11:12எசேக் 17:10ஓசி 5:13ஓசி 8:7எரே 22:222இராஜா 15:192இராஜா 17:4-6ஏசா 30:6-7 யூதாவோடும் யெகோவாவுக்கு வழக்கு இருக்கிறது; அவர் யாக்கோபை அவன் வழிகளுக்கு ஏற்றபடி விசாரிக்கப்போகிறார்; அவன் செயல்களுக்குத்தக்கதாக அவனுக்கு நீதியைச் சரிக்கட்டுவார். மீகா 6:2ஓசி 4:1ஏசா 10:6ஓசி 2:13ஓசி 8:13ஏசா 10:12ஏசா 3:11ஏசா 8:7-8 அவன் தாயின் கர்ப்பத்தில் தன் சகோதரனுடைய குதிகாலைப் பிடித்தான் 1; தன் பெலத்தினால் தேவனோடே போராடினான். ஆதி 25:26ஆதி 32:24-28யாக் 5:16-18ரோம 9:11 அவன் தூதனுடன் போராடி மேற்கொண்டான், அழுது அவரை நோக்கிக் கெஞ்சினான்; பெத்தேலிலே அவர் அவனைக் கண்டு சந்தித்து, அவ்விடத்திலும் நம்மோடே 2 பேசினார். ஆதி 35:151 தெச 4:17மல்கி 3:1அப் 7:30-35யாத் 3:2-5ஆதி 32:29ஆதி 35:9-10ஆதி 48:15 கர்த்தராகிய அவர் சேனைகளின் தேவன்; யேகோவா என்பது அவருடைய நிலையான நாமம். யாத் 3:15ஏசா 42:8சங் 135:13ஆதி 28:16ஆதி 32:30 இப்போதும் நீ உன் தேவனிடத்தில் திரும்பு; தயவையும் நியாயத்தையும் கைக்கொண்டு, இடைவிடாமல் உன் தேவனை நம்பிக்கொண்டிரு. மீகா 6:8ஓசி 14:1புலம் 3:25-26மீகா 7:7அப் 2:38ஓசி 6:1-3யாக் 2:13சகரி 7:9 அவன் வியாபாரி, கள்ளத்தராசு அவன் கையில் இருக்கிறது; அநியாயம்செய்ய விரும்புகிறான். ஆமோ 8:5-6மீகா 6:10-11நீதி 11:11 சாமு 12:31 தீமோ 6:9-10ஆமோ 2:7ஆமோ 3:9ஆமோ 4:1 எப்பிராயீம்: நான் செல்வந்தனானேன்; நான் பொருளைச் சம்பாதித்தேன்; நான் முயற்சிசெய்து தேடின எல்லாவற்றிலும் பாவமாகிய அக்கிரமம் என்னிடத்தில் கண்டுபிடிக்கப்படுவதில்லையென்று சொல்லுகிறான். வெளி 3:17சங் 62:101 தீமோ 6:5உபா 8:17ஏசா 10:13-14யோபு 31:24-25நீதி 30:12நீதி 30:20 உன்னை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவந்தது முதல் உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான், பண்டிகை நாட்களில் செய்யப்படுகிறதுபோல், மீண்டும் உன்னைக் கூடாரங்களில் தங்கியிருக்கச்செய்வேன். ஓசி 13:4லேவி 23:40-432 சாமு 7:2நெகே 8:15-17சங் 81:10சகரி 14:16-19யாத் 20:2எஸ்றா 3:4 அப்படியே தீர்க்கதரிசிகளுடன் சொன்னேன்; நான் அநேகம் தரிசனங்களை கொடுத்தேன்; தீர்க்கதரிசிகளைக் கொண்டு உவமைகளால் பேசினேன். 2இராஜா 17:13எசேக் 20:49ஏசா 20:2-5எரே 19:1எரே 7:25யோவே 2:281 இராஜா 13:11 இராஜா 14:7-16 கீலேயாத் அக்கிரமத்தின் இடமோ? ஆம், அவர்கள் பொய்யரானார்கள்; கில்காலிலே காளைகளைப் பலியிடுகிறார்கள்; அவர்களுடைய பீடங்கள் வயல்வரப்புகளில் இருக்கிற கற்குவியல்களைப்போல் இருக்கிறது. ஓசி 4:15ஓசி 6:8ஓசி 8:11ஓசி 9:15ஓசி 10:11 இராஜா 17:12இராஜா 17:9-11ஆமோ 4:4 யாக்கோபு சீரியா தேசத்திற்கு ஓடிப்போய், இஸ்ரவேல் ஒரு பெண்ணுக்காக வேலைசெய்து, ஒரு பெண்ணுக்காக ஆடு மேய்த்தான். ஆதி 29:18-28ஆதி 31:41ஆதி 27:43ஆதி 28:1-22உபா 26:5ஆதி 32:27-28 யெகோவா ஒரு தீர்க்கதரிசியைக் கொண்டு இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படச்செய்தார்; தீர்க்கதரிசியினால் காக்கப்பட்டான். அப் 3:22-23யாத் 12:50-51சங் 77:20அப் 7:35-37ஏசா 63:11-14யாத் 13:3ஆமோ 2:11-12மீகா 6:4 எப்பிராயீமோ அவரை மிகவும் கோபப்படுத்தினான்; ஆகையால் அவனுடைய ஆண்டவர் அவனுடைய இரத்தப்பழிகளை அவன்மேல் சுமத்தி, அவன் செய்த இகழ்ச்சியை அவன்மேல் திருப்புவார். எசேக் 18:13தானி 11:182இராஜா 17:7-181 இராஜா 2:33-341 சாமு 2:302 சாமு 1:16உபா 28:37எசேக் 23:2-10