ஓசியா 3

Hosea 3
அத்தியாயம் 3

ஓசியா தன் மனைவியுடன் செய்த சமரசம்

பின்பு யெகோவா என்னை நோக்கி: அந்நிய தெய்வங்களை மதித்து, திராட்சைரசமுள்ள 1 பாத்திரங்களை விரும்புகிறவர்களான இஸ்ரவேல் மக்கள்மேல் யெகோவா வைத்திருக்கிற அன்பிற்கு ஒப்பாக நீ இன்னும் போய், தன் நேசரால் நேசிக்கப்பட்டவளும், விபசாரியுமான ஒரு பெண்ணை நேசித்துக்கொள் என்று சொன்னார். எரே 3:12-14ஓசி 1:2-3ஏசா 45:22எரே 31:20மீகா 7:18-20உபா 7:6-7ஓசி 11:8லூக் 1:54-55 அப்பொழுது நான் அவளை எனக்குப் பதினைந்து வெள்ளிக்காசுகளுக்கும் 2, ஒன்றரைக்கலம் 3 வாற்கோதுமைக்கும் வாங்கி, ஆதி 34:12எசேக் 45:11லேவி 27:161 சாமு 18:25யாத் 22:17ஆதி 31:41ஏசா 5:10 அவளை நோக்கி: நீ விபசாரம் செய்யாமலும், ஒருவனையும் சேராமலும் அநேகநாட்கள் எனக்காகக் காத்திரு; உனக்காக நானும் காத்திருப்பேன் என்றேன். உபா 21:13 இஸ்ரவேல் மக்கள் அநேகநாட்களாக ராஜாவும், அதிபதியும் இல்லாமலும், பலியும், சிலையும் இல்லாமலும், ஏபோத்தும், தேராபீம் இல்லாமலும் இருப்பார்கள். நியாயாதி 17:52 நாளாக 15:2ஆதி 31:191 சாமு 23:9தானி 12:11தானி 9:27யாத் 28:4எபி 10:26 பின்பு இஸ்ரவேல் மக்கள் திரும்பி, தங்கள் தேவனாகிய யெகோவாவையும், தங்கள் ராஜாவாகிய தாவீதையும் தேடி, கடைசி நாட்களில் யெகோவாவையும், அவருடைய தயவையும் நாடி நடுக்கத்துடன் வருவார்கள். எரே 30:9எரே 50:4-5எசேக் 34:23-24ஏசா 2:2எசேக் 37:22-25ரோம 2:4ஏசா 55:3-4சங் 130:3-4