ஆதியாகமம் 35

Genesis 35
அத்தியாயம் 35

யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்பிவருதல்

தேவன் யாக்கோபை நோக்கி: “நீ எழுந்து பெத்தேலுக்குப் போய், அங்கே குடியிருந்து, நீ உன் சகோதரனாகிய ஏசாவின் முகத்திற்கு விலகி ஓடிப்போகிறபோது, உனக்குக் காட்சியளித்த தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்கு” என்றார். ஆதி 31:13ஓசி 12:4சங் 91:15உபா 32:36ஆதி 31:3ஆதி 35:7பிரச 5:4-6யாத் 2:15 அப்பொழுது யாக்கோபு தன் வீட்டாரையும் அவனுடன் இருந்த மற்ற அனைவரையும் நோக்கி: “உங்களிடத்தில் இருக்கிற அந்நிய தெய்வங்களை விலக்கிப்போட்டு, உங்களைச் சுத்தம்செய்துகொண்டு, உங்கள் ஆடைகளை மாற்றுங்கள்”. யாத் 19:10யாத் 19:14எசேக் 18:31யாக் 4:81 பேது 2:1-22 கொரி 7:1எசேக் 36:25ஆதி 18:19 நாம் எழுந்து பெத்தேலுக்குப் போவோம் வாருங்கள்; எனக்கு ஆபத்து நேரிட்ட நாளில் என் விண்ணப்பத்திற்கு பதில் கொடுத்து, நான் நடந்த வழியிலே என்னுடன் இருந்த தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்குவேன் என்றான். ஏசா 43:2ஆதி 31:3ஆதி 32:7ஆதி 31:42நீதி 3:6ஆதி 28:15ஆதி 32:24ஏசா 30:19 அப்பொழுது அவர்கள் தங்கள் கையில் இருந்த எல்லா அந்நிய தெய்வங்களையும், தங்கள் காதணிகளையும் யாக்கோபிடத்தில் கொடுத்தார்கள்; யாக்கோபு அவைகளை சீகேம் ஊர் அருகே இருந்த ஒரு கர்வாலி மரத்தின்கீழே புதைத்துப்போட்டான். நியாயாதி 9:6உபா 7:25யாத் 32:2-4யாத் 32:20ஏசா 30:22நியாயாதி 8:24-27ஓசி 2:13ஏசா 2:20 பின்பு பயணம் புறப்பட்டார்கள்; அவர்களைச் சுற்றிலும் இருந்த பட்டணத்தார்களுக்கு தேவனாலே பயங்கரம் உண்டானதால், அவர்கள் யாக்கோபின் மகன்களைப் பின்தொடரவில்லை. யாத் 23:272 நாளாக 17:10யோசு 5:1சங் 14:5யாத் 15:15-16யாத் 34:24யோசு 2:9-111 சாமு 11:7 யாக்கோபும் அவனுடன் இருந்த எல்லா மக்களும் கானான் தேசத்திலுள்ள பெத்தேல் என்னும் லூஸுக்கு வந்தார்கள். ஆதி 28:19ஆதி 12:8ஆதி 28:22ஆதி 48:3நியாயாதி 1:22-26 அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக்கட்டி, தன் சகோதரனுடைய முகத்திற்குத் தப்பி ஓடிப்போனபோது, அங்கே தனக்கு தேவன் காட்சியளித்ததால், அந்த இடத்திற்கு ஏல்பெத்தேல் 1 என்று பெயரிட்டான். ஆதி 28:13ஆதி 35:1ஆதி 35:3பிரச 5:4-5யாத் 17:15எசேக் 48:35ஆதி 28:19ஆதி 28:22 ரெபெக்காளின் தாதியாகிய தெபொராள் இறந்து, பெத்தேலுக்குச் சமீபமாயிருந்த ஒரு கர்வாலி மரத்தின்கீழ் அடக்கம் செய்யப்பட்டாள்; அதற்கு அல்லோன்பாகூத் என்னும் பெயர் உண்டானது. ஆதி 24:591 சாமு 31:13நியாயாதி 2:1நியாயாதி 2:5

யாக்கோபு பதான் அராமிலிருந்து வந்தபின்பு தேவன் அவனுக்கு மறுபடியும் காட்சியளித்து, அவனை ஆசீர்வதித்து: ஆதி 18:1ஆதி 26:2ஆதி 35:1ஆதி 12:7ஆதி 17:1ஆதி 28:13ஆதி 31:11-13ஆதி 31:3 “இப்பொழுது உன் பெயர் யாக்கோபு, இனி உன் பெயர் யாக்கோபு எனப்படாமல், இஸ்ரவேல் என்று உனக்குப் பெயராகும் என்று சொல்லி, அவனுக்கு இஸ்ரவேல்” என்று பெயரிட்டார். ஆதி 17:5ஆதி 32:27-28ஆதி 17:151 இராஜா 18:312இராஜா 17:34 பின்னும் தேவன் அவனை நோக்கி: “நான் சர்வவல்லமையுள்ள தேவன், நீ பலுகிப் பெருகுவாயாக; ஒரு தேசமும் பற்பல தேசங்களின் மக்களும் உன்னிலிருந்து உண்டாகும்; ராஜாக்களும் உன் சந்ததியில் பிறப்பார்கள். ஆதி 17:1ஆதி 22:17ஆதி 9:1யாத் 6:3ஆதி 17:5-72 கொரி 6:18ஆதி 17:16ஆதி 28:3-4 நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் கொடுத்த தேசத்தை உனக்குக் கொடுப்பேன்; உனக்குப்பின் உன் சந்ததிக்கும் இந்த தேசத்தைக் கொடுப்பேன்” என்று சொல்லி, ஆதி 12:7ஆதி 28:13ஆதி 26:3-4ஆதி 13:14-17ஆதி 48:4யாத் 3:8ஆதி 15:18யோசு 6:1-21 தேவன் அவனோடு பேசின இடத்திலிருந்து அவனைவிட்டு எழுந்தருளிப்போனார். ஆதி 17:22ஆதி 18:33ஆதி 11:5நியாயாதி 13:20நியாயாதி 6:21லூக் 24:31 அப்பொழுது யாக்கோபு தன்னோடு அவர் பேசின இடத்திலே ஒரு கல்தூணை நிறுத்தி, அதின்மேல் பானபலியை ஊற்றி, எண்ணையையும் ஊற்றினான். ஆதி 28:18-191 சாமு 7:12யாத் 17:15ஆதி 31:45ஆதி 35:20 தேவன் தன்னோடு பேசின அந்த இடத்திற்கு யாக்கோபு பெத்தேல் என்று பெயரிட்டான். ஆதி 28:19

ராகேலின் மரணம்

பின்பு, பெத்தேலை விட்டுப் பயணம் புறப்பட்டார்கள். எப்பிராத்தாவுக்கு வர இன்னும் கொஞ்சம் தூரமிருக்கும்போது, ராகேல் பிள்ளைபெற்றாள்; பிரசவத்தில் அவளுக்குக் கடும்வேதனை உண்டானது. மீகா 5:2ஆதி 48:71 நாளாக 2:191 தீமோ 2:152இராஜா 5:19ஆதி 3:16ஆதி 35:19மத் 2:1 அப்போது மருத்துவச்சி அவளைப் பார்த்து: “பயப்படாதே, இந்த முறையும் மகனைப் பெறுவாய்” என்றாள். ஆதி 30:241 சாமு 4:19-21 மரணகாலத்தில் அவளுடைய உயிர் பிரியும்போது, அவள் அவனுக்கு பெனொனி 2என்று பெயரிட்டாள்; அவனுடைய தகப்பனோ, அவனுக்கு பென்யமீன் என்று பெயரிட்டான். 1 நாளாக 4:91 சாமு 4:20-21அப் 7:59லூக் 12:20லூக் 23:46யாத் 12:7ஆதி 30:1ஆதி 42:38 ராகேல் இறந்து, பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்குப் போகிற வழியிலே அடக்கம் செய்யப்பட்டாள். மீகா 5:2ஆதி 48:7மத் 2:6ரூத் 1:2ரூத் 4:11மத் 2:1யோசு 19:15மத் 2:16-18 அவளுடைய கல்லறையின்மேல் யாக்கோபு ஒரு தூணை நிறுத்தினான்; அதுவே இந்த நாள்வரைக்கும் இருக்கிற ராகேலுடைய கல்லறையின் தூண். 1 சாமு 10:22 சாமு 18:17-18ஆதி 35:14ஆதி 35:9 இஸ்ரவேல் பயணம்செய்து, ஏதேர் என்கிற கோபுரத்திற்கு அப்புறத்தில் கூடாரம் போட்டான். மீகா 4:8லூக் 2:8 இஸ்ரவேல் அந்தத் தேசத்தில் தங்கிக் குடியிருக்கும்போது, ரூபன் போய், தன் தகப்பனுடைய மறுமனையாட்டியாகிய பில்காளோடு உறவுகொண்டான்; அதை இஸ்ரவேல் கேள்விப்பட்டான். 1 நாளாக 5:1லேவி 18:81 கொரி 5:12 சாமு 16:21-222 சாமு 20:3ஆதி 49:1-281 நாளாக 12:23-401 நாளாக 2:1-2 யாக்கோபின் மகன்கள் பன்னிரண்டுபேர். யாக்கோபின் மூத்தமகனாகிய ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன் என்பவர்கள் லேயாள் பெற்ற மகன்கள். ஆதி 30:18-20ஆதி 29:32-35ஆதி 46:8-15யாத் 1:2-4ஆதி 33:2 யோசேப்பு, பென்யமீன் என்பவர்கள் ராகேல் பெற்ற மகன்கள். ஆதி 30:22-24ஆதி 35:16-18ஆதி 46:19-22 தாண், நப்தலி என்பவர்கள் ராகேலுடைய பணிவிடைக்காரியாகிய பில்காள் பெற்ற மகன்கள். ஆதி 30:4-8ஆதி 37:2ஆதி 46:23-25 காத், ஆசேர் என்பவர்கள் லேயாளின் பணிவிடைக்காரியாகிய சில்பாள் பெற்ற மகன்கள்; இவர்களே யாக்கோபுக்குப் பதான் அராமிலே பிறந்த மகன்கள். ஆதி 25:20ஆதி 30:9-13ஆதி 31:18ஆதி 35:18ஆதி 46:16-18ஆதி 28:2

ஈசாக்கின் மரணம்

பின்பு, யாக்கோபு அர்பாவின் ஊராகிய மம்ரேக்கு தன் தகப்பனாகிய ஈசாக்கினிடத்தில் வந்தான்; அது ஆபிரகாமும் ஈசாக்கும் தங்கியிருந்த எபிரோன் என்னும் ஊர். ஆதி 13:18ஆதி 23:19ஆதி 18:1ஆதி 23:2யோசு 15:132 சாமு 2:12 சாமு 2:112 சாமு 2:3 ஈசாக்கு வயது முதிர்ந்தவனும் பூரண ஆயுசுமுள்ளவனாகி, 180 வருடங்கள் உயிரோடிருந்து, ஆதி 25:7ஆதி 50:26ஆதி 47:28 உயிர்பிரிந்து இறந்து, தன் ஜனத்தாரோடு சேர்க்கப்பட்டான். அவனுடைய மகன்களாகிய ஏசாவும் யாக்கோபும் அவனை அடக்கம்செய்தார்கள். ஆதி 15:15ஆதி 49:33ஆதி 49:31ஆதி 25:7-9ஆதி 23:19-20ஆதி 25:17ஆதி 27:41ஆதி 3:19