மத்தேயு 2

Matthew 2
அத்தியாயம் 2

சாஸ்திரிகளின் வருகை

ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, மீகா 5:2யோவா 7:42லூக் 2:4-7லூக் 2:11சங் 72:9-12ஏசா 11:10ஆதி 49:10ஆகா 2:6-9 “யூதர்களுக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைத் தொழுதுகொள்ள வந்தோம்” என்றார்கள். எண் 24:17எரே 23:5வெளி 22:16ஏசா 9:6-7சகரி 9:9ஏசா 60:3யோவா 18:37எபி 1:6 ஏரோதுராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடுகூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள். அப் 17:6-7யோவா 11:47-48மத் 23:37அப் 4:2மத் 8:291 இராஜா 18:17-18அப் 16:20-21அப் 4:24-27 அவன் பிரதான ஆசாரியர்கள், மக்களின் வேதபண்டிதர்கள் எல்லோரையும் கூடிவரச்செய்து: “கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பாரென்று” அவர்களிடத்தில் விசாரித்தான். அப் 23:9அப் 6:12எரே 8:8மத் 21:23மத் 7:29அப் 4:5யோவா 18:3யோவா 3:10 அதற்கு அவர்கள்: “யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார்; அது ஏனென்றால்: யோவா 7:42ரூத் 1:11 சாமு 16:1ரூத் 2:4யோசு 19:15ரூத் 1:19ரூத் 4:11ஆதி 35:19 யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் மக்களாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று, தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது” என்றார்கள். எசேக் 34:23-25மீகா 5:2ஏசா 9:6-7யோவா 7:42ஆதி 49:10வெளி 11:15மத் 28:18ஏசா 40:11 அப்பொழுது ஏரோது, சாஸ்திரிகளை இரகசியமாக அழைத்து, நட்சத்திரம் காணப்பட்ட காலத்தைக்குறித்து அவர்களிடத்தில் திட்டமாக விசாரித்து: 1 சாமு 18:21யாத் 1:10ஏசா 7:5-7சங் 55:21சங் 64:4-6சங் 83:3-4எசேக் 38:10-11சங் 10:9-10 நீங்கள் போய், பிள்ளையைக்குறித்துத் திட்டமாக விசாரியுங்கள்; நீங்கள் பிள்ளையைக் கண்டபின்பு, நானும் வந்து பிள்ளையைப் பணிந்துகொள்ளும்படி எனக்கு அறிவியுங்கள் என்று சொல்லி, அவர்களை பெத்லகேமுக்கு அனுப்பினான். 1 கொரி 3:19-20எரே 41:5-7லூக் 20:20-211 இராஜா 19:21 சாமு 23:22-232இராஜா 10:18-192 சாமு 17:14எஸ்றா 4:1-2 ராஜா சொன்னதை அவர்கள் கேட்டுப் போகும்போது, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த இடத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது. 2 பேது 1:19மத் 2:2நீதி 8:17சங் 25:12நீதி 2:1-6 அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள். சங் 105:3லூக் 2:10லூக் 2:20ரோம 15:9-13சங் 67:4உபா 32:13அப் 13:46-48 அவர்கள் அந்த வீட்டிற்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாக விழுந்து பிள்ளையைப் பணிந்துகொண்டு, தங்களுடைய பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் காணிக்கையாக வைத்தார்கள். ஏசா 60:6சங் 72:10லூக் 2:16மத் 2:2சங் 95:61 இராஜா 10:2அப் 10:25-26எண் 7:14 பின்பு, அவர்கள் ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாம் என்று கனவில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறுவழியாகத் தங்களுடைய நாட்டிற்குத் திரும்பிப்போனார்கள். மத் 2:19மத் 2:22மத் 2:13மத் 27:19ஆதி 20:6-7ஆதி 31:24மத் 1:20அப் 4:19

யோசேப்பு எகிப்துக்கு ஓடிப்போகுதல்

அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் கனவில் யோசேப்புக்குத் தோன்றி: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்; ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும், தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றான். அப் 10:7அப் 12:11அப் 5:19யாத் 1:22மத் 1:20மத் 2:12யோபு 33:15மத் 2:16 அவன் எழுந்து, இரவிலே பிள்ளையையும், தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப்போய், அப் 26:21மத் 2:20-21மத் 1:24 ஏரோது மரிக்கும்வரைக்கும் அங்கே இருந்தான். “எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்” என்று தீர்க்கதரிசியின் மூலமாகக் கர்த்தரால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. ஓசி 11:1யாத் 4:22எண் 24:8லூக் 24:44மத் 1:22அப் 12:1-4மத் 12:16-18மத் 2:17 அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் ஏமாற்றப்பட்டதைக் கண்டு, மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாக விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் எல்லா எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண் பிள்ளைகளையும் கொலைசெய்தான். ஏசா 59:7நீதி 28:15வெளி 17:62இராஜா 8:12தானி 3:13தானி 3:19-20ஆதி 49:7ஓசி 10:14

“புலம்பலும் அழுகையும் மிகுந்த துக்கங்கொண்டாடலுமாகிய

கூக்குரல் ராமாவிலே கேட்கப்பட்டது;

ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது,

அவைகள் இல்லாதபடியால்

ஆறுதலடையாமல் இருக்கிறாள்” என்று, எரேமியா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டது அப்பொழுது நிறைவேறியது. எரே 31:15எரே 9:17-21எரே 4:31ஆதி 35:16-20எசேக் 2:10ஆதி 37:30ஆதி 37:33-35ஆதி 42:36

நாசரேத்திற்குத் திரும்புதல்

ஏரோது மரித்தபின்பு, கர்த்தருடைய தூதன் எகிப்திலே யோசேப்புக்குக் கனவில் தோன்றி: மத் 1:20தானி 8:25தானி 11:45எசேக் 11:16ஏசா 51:12எரே 30:10மத் 2:12-13மத் 2:22 “நீ எழுந்து, பிள்ளையையும், தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்திற்குப் போ; பிள்ளையின் உயிரையெடுக்கத் தேடினவர்கள் மரித்துப்போனார்கள்” என்றான். யாத் 4:191 இராஜா 12:1-3மத் 2:131 இராஜா 11:211 இராஜா 11:40நீதி 3:5-6 அவன் எழுந்து பிள்ளையையும், தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேல் தேசத்திற்கு வந்தான். ஆதி 6:22எபி 11:8 ஆனாலும், அர்கெலாயு தன் தகப்பனாகிய ஏரோதின் பட்டத்திற்கு வந்து, யூதேயாவில் அரசாளுகிறான் என்று கேள்விப்பட்டு, அங்கே போகப் பயந்தான். அப்பொழுது, அவன் கனவில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, கலிலேயா நாட்டின் வெளிப்புறங்களிலே விலகிப்போய், ஏசா 48:17-18யோவா 7:52லூக் 2:39ஏசா 30:211 சாமு 16:2அப் 9:13-14ஆதி 19:17-21யோவா 7:41-42 நாசரேத்து என்னும் ஊரிலே வந்து குடியிருந்தான். “நசரேயன் எனப்படுவார்” என்று தீர்க்கதரிசிகளால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. நியாயாதி 13:5யோவா 1:45-46மாற் 1:24அப் 24:5யோவா 18:5யோவா 18:7யோவா 19:19லூக் 1:26