இயேசுவும் யோவான்ஸ்நானனும்
இயேசு தம்முடைய பன்னிரண்டு சீடர்களுக்கும் கட்டளைக் கொடுத்துமுடித்தபின்பு, அவர்களுடைய பட்டணங்களில் உபதேசிக்கவும் பிரசங்கிக்கவும் அந்த இடத்தைவிட்டுப் போனார். ஏசா 61:1-3அப் 10:38லூக் 4:15-21லூக் 8:1மத் 9:351 தெச 4:22 தெச 3:102 தெச 3:6 அந்தநேரத்தில் காவலிலிருந்த யோவான் கிறிஸ்துவின் செயல்களைக்குறித்துக் கேள்விப்பட்டு, தன் சீடர்களில் இரண்டுபேரை அழைத்து: மத் 14:3மாற் 6:17லூக் 7:18-35மத் 4:12மத் 9:14அப் 19:1-3யோவா 4:1யோவா 3:24-28 வருகிறவர் நீர்தானா, அல்லது வேறொருவர் வருவதற்காக நாங்கள் காத்திருக்கவேண்டுமா? என்று அவரிடத்தில் கேட்கும்படி அனுப்பினான். யோவா 11:27மல்கி 3:1உபா 18:15-18எபி 10:37மீகா 5:2ஆமோ 9:11-12ஆதி 3:15யோவா 6:14 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் கேட்கிறதையும் காண்கிறதையும் யோவானிடம்போய் அறிவியுங்கள்; குருடர்கள் பார்வையடைகிறார்கள், முடவர்கள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர்கள் கேட்கிறார்கள், மரித்தோர் உயிரோடு எழுந்திருக்கிறார்கள், தரித்திரர்களுக்கு நற்செய்தி பிரசங்கிக்கப்படுகிறது. ஏசா 35:4-6ஏசா 61:1-3ஏசா 42:6-7லூக் 4:18ஏசா 29:18யோவா 14:11-12லூக் 7:21-22யாக் 2:5 என்னிடத்தில் இடறலடையாமலிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார். 1 கொரி 2:14ஏசா 8:14-15மத் 26:31யோவா 6:66யோவா 6:60-61லூக் 11:27-28லூக் 4:23-29மத் 24:10 அவர்கள் போனபின்பு, இயேசு யோவானைக்குறித்து மக்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப்பார்க்க வனாந்திரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ? யாக் 1:6யோவா 5:35லூக் 8:18எபே 4:14ஆதி 49:4லூக் 7:24-30மாற் 1:3-52 கொரி 1:17-18 இல்லையென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? மெல்லிய உடை அணிந்திருந்த மனிதனையோ? மெல்லிய உடை அணிந்திருக்கிறவர்கள் அரசர் மாளிகைகளில் இருக்கிறார்கள். மத் 3:42இராஜா 1:82 கொரி 11:27ஏசா 20:2சகரி 13:41 கொரி 4:11வெளி 11:3 இல்லையென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைவிட மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். லூக் 1:76மத் 14:5லூக் 1:15-17மத் 17:12-13மத் 21:24-26மாற் 9:11-13மத் 11:13-14 அதெப்படியெனில்: மல்கி 3:1ஏசா 40:3மல்கி 4:5மாற் 1:2லூக் 7:26-27யோவா 1:23மத் 3:3
இதோ, நான் என் தூதுவனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்;
அவன் உமக்குமுன்னேபோய்,
உமது வழியை ஆயத்தம் செய்வான்’ என்று வேதத்தில் எழுதப்பட்டவன் இவன்தான்.
பெண்களிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைவிட பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆனாலும், பரலோகராஜ்யத்தில் சிறியவனாக இருக்கிறவன் அவனைவிட பெரியவனாக இருக்கிறானென்று உங்களுக்கு உண்மையாகவே சொல்லுகிறேன். லூக் 7:28எபே 3:8யோவா 1:15மத் 3:11மத் 5:191 கொரி 15:91 பேது 1:10எபி 11:40 யோவான்ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோகராஜ்யம் பலவந்தம் செய்யப்படுகிறது; பலவந்தம் செய்கிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள். லூக் 16:16லூக் 13:24எபே 6:11-13பிலி 2:12யோவா 6:27லூக் 7:29-30மத் 21:23-32 நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகள் அனைவரும் யோவான்வரைக்கும் தீர்க்கதரிசனம் சொன்னதுண்டு. மத் 5:17-18ரோம 3:21அப் 13:27அப் 3:22-24லூக் 24:44லூக் 24:27மல்கி 4:6யோவா 5:46-47 நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான். மல்கி 4:5மாற் 9:11-13மத் 17:10-13லூக் 1:17யோவா 1:21-231 கொரி 3:2எசேக் 2:5யோவா 16:12 கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கவேண்டும். மத் 13:9லூக் 8:8மாற் 4:23மத் 13:43மாற் 4:9லூக் 14:35வெளி 2:7வெளி 3:13 இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? சந்தைவெளிகளில் உட்கார்ந்து, தங்களுடைய தோழரைப் பார்த்து: லூக் 7:31-35புலம் 2:13லூக் 13:18மத் 12:34மத் 23:36மாற் 4:30மத் 24:34 உங்களுக்காகக் குழல் ஊதினோம், நீங்கள் நடனமாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் மாரடிக்கவில்லை என்று குறைசொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாக இருக்கிறது. ஏசா 28:9-13ஏசா 30:29எரே 9:17-20எரே 31:4மத் 9:151 கொரி 9:19-231 இராஜா 1:40லூக் 15:25 எப்படியென்றால், யோவான் உபவாசிக்கிறவனாகவும் திராட்சைரசம் குடிக்காதவனாகவும் வந்தான்; அதற்கு அவர்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன் என்றார்கள். லூக் 1:15மத் 3:4யோவா 10:20மத் 10:25எரே 15:17யோவா 8:48ஓசி 9:7யோவா 7:20 உண்கிறவராகவும் குடிக்கிறவராகவும் வந்தார்; அதற்கு அவர்கள்: இதோ, உணவுப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனிதன், வரி வசூலிப்பவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன் என்கிறார்கள். ஆனாலும், ஞானமானது அதன் பிள்ளைகளால் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார். லூக் 7:34-36மத் 9:10-11லூக் 15:1-2லூக் 19:7லூக் 5:29-30லூக் 14:11 கொரி 1:24-29லூக் 7:29
மனந்திரும்பாத பட்டணங்கள்
அப்பொழுது, தமது பலத்த செய்கைகளில், அதிகமானவைகளைச் செய்யக்கண்ட பட்டணங்கள் மனந்திரும்பாமற்போனபடியினால் அவைகளை அவர் கடிந்துகொள்ளத் தொடங்கினார்: லூக் 10:13-152 தீமோ 2:25-26எரே 8:6ஏசா 1:2-5வெளி 9:20-21வெளி 2:21மத் 21:28-32சங் 81:11-13 கோராசீனே! உனக்கு ஐயோ, பெத்சாயிதாவே! உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து மனந்திரும்பியிருப்பார்கள். எசேக் 3:6-7அப் 12:20யோவா 12:21யோபு 42:6லூக் 9:10மத் 15:21மாற் 6:45யோவா 1:44 நியாயத்தீர்ப்புநாளிலே உங்களுக்குச் சம்பவிப்பதைவிட, தீருவிற்கும் சீதோனுக்கும் சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். மத் 11:24எபி 10:26-31மத் 10:151 யோவா 4:17லூக் 12:47-48மத் 12:36ஆமோ 1:9-10எசேக் 26:1-21 வானம்வரை உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய்; உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்ததானால், அது இந்தநாள்வரை நிலைத்திருக்கும். ஏசா 14:13-15யோவா 4:46-54ஆதி 13:13மத் 4:13வெளி 11:82 பேது 2:4-9அப் 2:27எசேக் 16:48-50 நியாயத்தீர்ப்புநாளிலே உனக்குச் சம்பவிப்பதைவிட, சோதோம் நாட்டிற்குச் சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். மத் 10:15மத் 11:22மாற் 6:11புலம் 4:6லூக் 10:12
பாரம் சுமக்கிறவர்களுக்கு இளைப்பாறுதல்
அந்தச் சமயத்திலே இயேசு சொன்னது: பிதாவே! பரலோகத்திற்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, சிறுவர்களுக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். மத் 21:16சங் 8:2மத் 16:17லூக் 10:21-241 கொரி 1:18-29மத் 18:3-4ரோம 11:8-101 கொரி 2:6-8 ஆம், பிதாவே! இப்படிச்செய்வது உம்முடைய உயர்ந்த உள்ளத்திற்குப் பிரியமாக இருந்தது. 2 தீமோ 1:9எபே 3:11ஏசா 46:10எபே 1:11எபே 1:9யோபு 33:13லூக் 10:21ரோம 11:33-36 எல்லாம் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதாவைத்தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்குப் பிதாவை வெளிப்படுத்த விருப்பமாக இருக்கிறாரோ அவனைத்தவிர, வேறொருவனும் பிதாவை அறியமாட்டான். யோவா 14:6-9மத் 28:18லூக் 10:222 யோவா 1:9யோவா 17:25-261 யோவா 2:23யோவா 10:151 யோவா 5:19-20 வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். மத் 11:29யோவா 7:37யோவா 6:37கலா 5:1ஏசா 55:1-3வெளி 22:17ஏசா 48:17-18எரே 6:16 நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாக இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்களுடைய ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். எரே 6:161 யோவா 2:6பிலி 2:7-8யோவா 13:15லூக் 6:46-48மத் 7:241 பேது 2:21-23யோவா 15:10-14 என் நுகம் எளிதாகவும், என் சுமை இலகுவாகவும் இருக்கிறது என்றார். 1 யோவா 5:3யோவா 16:33பிலி 4:132 கொரி 12:9-10கலா 5:1மீகா 6:82 கொரி 1:4-52 கொரி 4:17