ஏசாயா 20

Isaiah 20
அத்தியாயம் 20

கூஷ் மற்றும் எகிப்தைக் குறித்த தீர்க்கதரிசனம்

சேனாதிபதி தர்த்தான், அசீரியா ராஜாவாகிய சர்கோனாலே அனுப்பப்பட்டு, அஸ்தோத்திற்கு வந்து, அஸ்தோத்தின்மேல் போர்செய்து, அதைப் பிடித்த வருடத்திலே, 2இராஜா 18:171 சாமு 5:11 சாமு 6:17ஆமோ 1:8எரே 25:20எரே 25:29-30 யெகோவா ஆமோத்சின் மகனாகிய ஏசாயாவை நோக்கி: நீ போய் உன் இடுப்பிலிருக்கிற சணலாடையை அவிழ்த்து, உன் கால்களிலிருக்கிற காலணிகளைக் கழற்று என்றார்; அவன் அப்படியே செய்து, ஆடையில்லாமலும் வெறுங்காலுமாக நடந்தான். 1 சாமு 19:24மத் 3:4மீகா 1:8எசேக் 24:17எசேக் 24:23சகரி 13:4ஏசா 13:1மீகா 1:11 அப்பொழுது யெகோவா: எகிப்தின்மேலும் எத்தியோப்பியாவின்மேலும் வரும் மூன்று வருடத்துக் காரியங்களுக்கு அடையாளமும் குறிப்புமாக என் ஊழியக்காரனாகிய ஏசாயா ஆடையில்லாமலும் வெறுங்காலுமாக நடக்கிறதுபோல, ஏசா 8:18எசேக் 4:5-6ஏசா 18:1-7ஏசா 37:9ஏசா 43:3எண் 14:34வெளி 11:2-3 அசீரியா ராஜா, தான் சிறைபிடிக்கப்போகிற எகிப்தியரும், தான் குடிவிலக்கப்போகிற எத்தியோப்பியருமாகிய வாலிபர்களையும் முதியோரையும், ஆடையில்லாமலும் வெறுங்காலுமாக எகிப்தியருக்கு வெட்கமுண்டாக, இருப்பிடம் மூடப்படாதவர்களாய்க் கொண்டுபோவான். ஏசா 19:4எரே 13:22எரே 13:262 சாமு 10:4எசேக் 30:18ஏசா 3:17ஏசா 47:3எரே 46:26 அப்பொழுது இந்தக் கடற்கரைக்குடிகள் தாங்கள் நம்பியிருந்த எத்தியோப்பியாவைக்குறித்தும், தாங்கள் பெருமைபாராட்டின எகிப்தைக்குறித்தும் கலங்கி வெட்கி: ஏசா 30:3ஏசா 30:51 கொரி 3:212இராஜா 18:21எசேக் 29:6-7எரே 17:5எரே 9:23-24ஏசா 2:22 இதோ, அசீரிய ராஜாவின் முகத்திற்குத் தப்புவதற்காக நாங்கள் நம்பி, உதவிக்கென்று ஓடிவந்து அண்டினவன் இப்படியானானே; நாங்கள் எப்படி விடுவிக்கப்படுவோம் என்று அக்காலத்திலே சொல்வார்கள் என்றார். 1 தெச 5:3எபி 2:3மத் 23:33ஏசா 10:3ஏசா 28:17ஏசா 30:1-7ஏசா 30:15-16ஏசா 31:1-3