மோசேயும் எரிகிற முட்செடியும்
மோசே மீதியான் தேசத்தின் ஆசாரியனாக இருந்த தன்னுடைய மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்துவந்தான். அவன் ஆடுகளை வனாந்திரத்தில் தூரமாக நடத்தி, தேவனுடைய மலையாகிய 1 ஓரேப்வரை வந்தான். 1 இராஜா 19:8யாத் 17:6சங் 78:70-72எண் 10:29யாத் 18:1-6நியாயாதி 4:11மல்கி 4:4ஆமோ 7:14-15 அங்கே யெகோவாவுடைய தூதன் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினித்தழலில் நின்று அவனுக்கு தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான்; முட்செடி அக்கினியால் பற்றி எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது. அப் 7:30-35ஏசா 43:2உபா 33:16மாற் 12:26லூக் 20:37சங் 66:12யாத் 3:16ஏசா 63:9 அப்பொழுது மோசே: “இந்த முட்செடி வெந்துபோகாமல் இருக்கிறது ஏன், நான் அருகில் போய் இந்த அற்புதக்காட்சியைப் பார்ப்பேன்” என்றான். அப் 7:31சங் 107:8யோபு 37:14சங் 111:2-4 அவன் பார்க்கும்படி அருகில் வருகிறதைக் யெகோவா கண்டார். முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: “மோசே, மோசே” என்று கூப்பிட்டார். அவன்: “இதோ, அடியேன்” என்றான். உபா 33:161 சாமு 3:41 சாமு 3:61 சாமு 3:8அப் 9:4ஆதி 22:1ஆதி 22:11ஆதி 46:2 அப்பொழுது அவர்: “இங்கே அருகில் வராமல் இரு; உன்னுடைய கால்களில் இருக்கிற காலணியைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி” என்றார். யோசு 5:15அப் 7:33யாத் 19:12பிரச 5:1ஆதி 28:16-17எபி 12:20யாத் 19:21லேவி 10:3 பின்னும் அவர்: “நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாக இருக்கிறேன்” என்றார். மோசே தேவனை நோக்கிப்பார்க்க பயந்ததால், தன்னுடைய முகத்தை மூடிக்கொண்டான். லூக் 20:37மத் 22:32யாத் 4:5மாற் 12:26அப் 7:32ஆதி 28:13வெளி 1:171 இராஜா 18:36 அப்பொழுது யெகோவா: “எகிப்திலிருக்கிற என்னுடைய மக்களின் உபத்திரவத்தை நான் பார்த்து, மேற்பார்வையாளர்களால் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன். சங் 145:19சங் 106:44யாத் 2:23-25சங் 34:6யாத் 22:23நெகே 9:9ஆதி 29:32யாத் 1:11 அவர்களை எகிப்தியர்களின் கைகளுக்கு விடுதலையாக்கவும், அவர்களை அந்த தேசத்திலிருந்து நீக்கி, கானானியர்களும், ஏத்தியர்களும், எமோரியர்களும், பெரிசியர்களும், ஏவியர்களும், எபூசியர்களும் இருக்கிற இடமாகிய செழிப்பான நலமும் விசாலமுமான தேசத்தில் 2 கொண்டுபோய்ச் சேர்க்கவும் இறங்கினேன். ஆதி 50:24யாத் 3:17ஆதி 15:18-21உபா 1:25யாத் 13:5உபா 8:7-9எரே 11:5எண் 13:27 இப்பொழுதும் இஸ்ரவேல் மக்களின் கூக்குரல் என்னுடைய சந்நிதியில் வந்து எட்டினது; எகிப்தியர்கள் அவர்களை ஒடுக்குகிற ஒடுக்குதலையும் கண்டேன். யாத் 2:23நீதி 22:22-23யாத் 1:11யாத் 1:13-14யாத் 3:7யாத் 1:22பிரச 4:1பிரச 5:8 நீ இஸ்ரவேல் மக்களாகிய என்னுடைய மக்களை எகிப்திலிருந்து அழைத்துவரும்படி உன்னை பார்வோனிடம் அனுப்புவேன் வா” என்றார். மீகா 6:41 சாமு 12:6ஏசா 63:11-12சங் 105:26அப் 7:34ஓசி 12:13சங் 77:20அப் 7:36 அப்பொழுது மோசே தேவனை நோக்கி: “பார்வோனிடம் போகவும், இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து அழைத்துவரவும், நான் எம்மாத்திரம் என்றான். 1 சாமு 18:18யாத் 6:122 கொரி 3:5எரே 1:62 கொரி 2:161 இராஜா 3:92 சாமு 7:18யாத் 4:10-13 அதற்கு அவர்: “நான் உன்னோடு இருப்பேன்; நீ மக்களை எகிப்திலிருந்து அழைத்துவந்தபின்பு, நீங்கள் இந்த மலையில் தேவனுக்கு ஆராதனை செய்வீர்கள்; நான் உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே அடையாளம்” என்றார். யோசு 1:5ரோம 8:31உபா 31:23ஏசா 41:10யாத் 4:12யாத் 4:15ஆதி 31:3மத் 28:20
தேவனுடைய நாமம் வெளிப்படுத்தப்பட்டது
அப்பொழுது மோசே தேவனை நோக்கி: “நான் இஸ்ரவேலர்களிடம் போய், உங்கள் முன்னோர்களுடைய தேவன் உங்களிடம் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன்” என்றான். ஏசா 9:6நீதி 30:4யாத் 3:14ஆதி 32:29ஏசா 7:14எரே 23:6மத் 1:21யாத் 15:3 அதற்கு தேவன்: “இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடன் சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்திற்கு அனுப்பினார் என்று இஸ்ரவேலர்களுடன் சொல்” என்றார். யோவா 8:58எபி 13:8வெளி 1:8சங் 90:2ஏசா 44:6யாத் 6:3வெளி 1:4வெளி 1:17 மேலும், தேவன் மோசேயை நோக்கி: “ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாக இருக்கிற உங்கள் முன்னோர்களுடைய தேவனாகிய யெகோவா என்னை உங்களிடம் அனுப்பினார் என்று நீ இஸ்ரவேலர்களுக்கு சொல்; என்றைக்கும் இதுவே என்னுடைய நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என்றென்றைக்கும் என்னுடைய நாமம். ஆதி 17:7-8எபி 13:8ஓசி 12:5மல்கி 3:6யாத் 3:6மீகா 4:5ஏசா 9:6சங் 102:12 நீ போய், இஸ்ரவேலின் மூப்பர்களைக்கூட்டி, அவர்களிடத்தில்: ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களுடைய தேவனாக இருக்கிற உங்கள் முன்னோர்களுடைய தேவனாகிய யெகோவா எனக்கு தரிசனமாகி, உங்களை நிச்சயமாக சந்தித்து, எகிப்தில் உங்களுக்குச் செய்யப்பட்டதைக் கண்டேன் என்றும், சங் 8:4யாத் 4:29யாத் 4:31ஆதி 50:24அப் 15:141 பேது 2:121 பேது 5:1அப் 11:30 நான் உங்களை எகிப்தின் சிறுமையிலிருந்து நீக்கி, நல்ல விளைச்சல் உள்ள செழிப்பான தேசமாகிய கானானியர்கள், ஏத்தியர்கள், எமோரியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்களுடைய தேசத்திற்குக் கொண்டுபோவேன் என்றும் சொன்னேன் என்று சொல். ஆதி 15:13-21யாத் 3:8-9ஆதி 50:24யாத் 2:23-25ஆதி 46:4யோசு 24:11 அவர்கள் உன்னுடைய வார்த்தையை கேட்பார்கள்; அப்பொழுது நீயும் இஸ்ரவேலின் மூப்பர்களும் எகிப்தின் ராஜாவினிடம் போய்: எபிரெயர்களுடைய தேவனாகிய யெகோவா எங்களைச் சந்தித்தார்; இப்பொழுதும் நாங்கள் வனாந்திரத்தில் மூன்று நாட்கள் பயணம்போய், எங்கள் தேவனாகிய யெகோவாவுக்குப் பலியிடும்படி எங்களைப் போகவிடவேண்டுமென்று சொல்லுங்கள். யாத் 9:1யாத் 7:16யாத் 10:24-26யாத் 10:3யாத் 9:13எண் 23:15-162 நாளாக 30:12யாத் 4:31 ஆனாலும், எகிப்து ராஜா என்னுடைய கையின் வல்லமையைக் கண்டாலொழிய, உங்களைப் போகவிடமாட்டான் என்று நான் அறிவேன். யாத் 5:2யாத் 6:1யாத் 7:1-14ஏசா 63:12-13சங் 136:11-12 ஆகையால், நான் என்னுடைய கையை நீட்டி, எகிப்தின் நடுவில் நான் செய்யும் எல்லாவித அற்புதங்களாலும் அதை வாதிப்பேன்; அதற்குப்பின்பு அவன் உங்களைப் போகவிடுவான். அப் 7:36உபா 6:22யாத் 9:15நெகே 9:10யாத் 6:6யாத் 12:31-33யாத் 11:8-9சங் 105:27 அப்பொழுது இந்த மக்களுக்கு எகிப்தியர்களின் கண்களில் தயவு கிடைக்கச்செய்வேன்; நீங்கள் போகும்போது வெறுமையாகப் போவதில்லை. யாத் 12:36யாத் 11:3சங் 105:37நீதி 16:7சங் 106:46அப் 7:10ஆதி 39:21நெகே 1:11 ஒவ்வொரு பெண்ணும், தன்தன் அயலகத்தாளிடத்திலும் தன்தன் வீட்டில் தங்குகிறவளிடத்திலும், வெள்ளியையும், பொன் நகைகளையும், ஆடைகளையும் கேட்டு வாங்குவாள்; அவைகளை உங்களுடைய மகன்களுக்கும் உங்களுடைய மகள்களுக்கும் அணிவித்து, எகிப்தியர்களைக் கொள்ளையிடுவீர்கள்” என்றார். யாத் 11:2எசேக் 39:10யாத் 12:35-36ஆதி 15:14சங் 105:37யோபு 27:16-17ஏசா 33:1நீதி 13:22