1 சாமுவேல் 3

1 Samuel 3
அத்தியாயம் 3

யெகோவா சாமுவேலை அழைக்கிறார்

சிறுவனாகிய சாமுவேல் ஏலியுடன் யெகோவாவுக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான்; அந்த நாட்களிலே யெகோவாவுடைய வசனம் அரிதாக இருந்தது; வெளிப்படையான தரிசனம் இருந்ததில்லை. ஆமோ 8:11-12சங் 74:91 சாமு 3:211 சாமு 2:111 சாமு 2:181 சாமு 3:15ஏசா 13:12 ஒருநாள் ஏலி தன்னுடைய படுக்கையிலே படுத்துக்கொண்டிருந்தான்; அவன் பார்க்க முடியாதபடி அவனுடைய கண்கள் இருளடைந்திருந்தது. 1 சாமு 4:15ஆதி 27:1ஆதி 48:10சங் 90:10ஆதி 48:191 சாமு 2:22பிரச 12:3 தேவனுடைய பெட்டி இருக்கிற யெகோவாவுடைய ஆலயத்தில் தேவனுடைய விளக்கு அணைந்துபோவதற்கு முன்பு சாமுவேல் படுத்திருந்தான். லேவி 24:2-4சங் 27:4யாத் 27:20-21சங் 5:7சங் 29:91 சாமு 1:62 நாளாக 13:11யாத் 30:7-8 அப்பொழுது யெகோவா, சாமுவேலைக் கூப்பிட்டார். அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன் என்று சொல்லி, 1 கொரி 12:6-11யாத் 3:4ஆதி 22:1ஏசா 6:8சங் 99:6கலா 1:15-161 கொரி 12:28அப் 9:4 ஏலியினிடம் ஓடி, இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அதற்கு அவன்: நான் கூப்பிடவில்லை, திரும்பிப்போய்ப் படுத்துக்கொள் என்றான்; அவன் போய்ப் படுத்துக்கொண்டான். மறுபடியும் யெகோவா சாமுவேலே என்று கூப்பிட்டார்; அப்பொழுது சாமுவேல் எழுந்து ஏலியினிடத்தில் போய்: இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அதற்கு அவன் என் மகனே, நான் உன்னைக் கூப்பிடவில்லை, திரும்பிப்போய்ப் படுத்துக்கொள் என்றான். 1 சாமு 4:162 சாமு 18:22ஆதி 43:29மத் 9:2 சாமுவேல் யெகோவாவை இன்னும் அறியாமல் இருந்தான்; யெகோவாவுடைய வார்த்தை அவனுக்கு இன்னும் வெளிப்படவில்லை. அப் 19:2எரே 9:24 யெகோவா மறுபடியும் மூன்றாம்முறை: சாமுவேலே என்று கூப்பிட்டார். அவன் எழுந்து ஏலியினிடத்தில் போய், இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அப்பொழுது யெகோவா பிள்ளையைக் கூப்பிடுகிறார் என்று ஏலி அறிந்து, யோபு 33:14-151 கொரி 13:11-12 சாமுவேலை நோக்கி: நீ போய்ப் படுத்துக்கொள்; உன்னைக் கூப்பிட்டால், அப்பொழுது நீ: யெகோவாவே சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்று சொல் என்றான்; சாமுவேல் போய், தன்னுடைய இடத்திலே படுத்துக்கொண்டான். யாத் 20:19ஏசா 6:8சங் 85:8அப் 9:6தானி 10:19 அப்பொழுது யெகோவா வந்து நின்று, முன்புபோல: சாமுவேலே சாமுவேலே என்று கூப்பிட்டார்; அதற்குச் சாமுவேல்; சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்றான். 1 சாமு 3:81 சாமு 3:4-6 யெகோவா சாமுவேலை நோக்கி: இதோ. நான் இஸ்ரவேலில் ஒரு காரியத்தைச் செய்வேன்; அதைக் கேட்கிற ஒவ்வொருவனுடைய இரண்டு காதுகளிலும் அது ஒலித்துக்கொண்டிருக்கும். ஆப 1:52இராஜா 21:12அப் 13:41எரே 19:3ஆமோ 3:6-7லூக் 21:26ஏசா 28:19ஏசா 29:14 நான் ஏலியின் குடும்பத்திற்கு எதிராகச் சொன்ன யாவையும், அவன்மேல் அந்த நாளிலே வரச்செய்வேன்; அதைத் துவங்கவும் அதை முடிக்கவும் போகிறேன். 1 சாமு 2:27-36யோசு 23:15லூக் 21:33எண் 23:19சகரி 1:6 அவனுடைய மகன்கள் தங்கள்மேல் சாபத்தை வரச்செய்வதை அவன் அறிந்தும், அவர்களை அடக்காமல்போன பாவத்தினால், நான் அவனுடைய குடும்பத்திற்கு என்றும் நீங்காத நியாயத்தீர்ப்புச் செய்வேன் என்று அவனுக்கு அறிவித்தேன். நீதி 19:181 சாமு 2:12மத் 10:371 சாமு 2:17நீதி 23:13-141 இராஜா 1:6எசேக் 18:30எசேக் 7:3 அதினால் ஏலியின் குடும்பத்தினர் செய்த அக்கிரமம் ஒருபோதும் பலியிலோ காணிக்கையிலோ நிவிர்த்தியாவதில்லை என்று ஏலியின் குடும்பத்தைக்குறித்து ஆணையிட்டிருக்கிறேன் என்றார். ஏசா 22:141 சாமு 2:25எரே 15:1எரே 7:16எசேக் 24:13எபி 10:26-31எபி 10:4-10லேவி 15:31 சாமுவேல் காலைவரை படுத்திருந்து, யெகோவாவுடைய ஆலயத்தின் கதவுகளைத் திறந்தான்; சாமுவேல் ஏலிக்கு அந்தத் தரிசனத்தை அறிவிக்கப் பயந்தான். எரே 1:6-81 கொரி 16:10-111 சாமு 1:9மல்கி 1:10 ஏலியோ: சாமுவேலே, என் மகனே என்று சாமுவேலைக் கூப்பிட்டான். அவன்: இதோ, இருக்கிறேன் என்றான். அப்பொழுது அவன்: யெகோவா உன்னிடத்தில் சொன்ன காரியம் என்ன? எனக்கு அதை மறைக்கவேண்டாம்; அவர் உன்னிடத்தில் சொன்ன எல்லா காரியத்திலும் ஏதாவது ஒன்றை எனக்கு மறைத்தால், தேவன் உனக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்வாராக என்றான். 2 சாமு 3:35ரூத் 1:171 இராஜா 22:161 சாமு 20:132 சாமு 19:13தானி 4:19மத் 26:63மீகா 2:7 அப்பொழுது சாமுவேல் ஒன்றையும் அவனுக்கு மறைக்காமல், அந்தக் காரியங்களையெல்லாம் அவனுக்கு அறிவித்தான். அதற்கு அவன்: அவர் யெகோவா: அவர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக என்றான். ஏசா 39:8யோபு 2:101 பேது 5:6நியாயாதி 10:15யோபு 1:21புலம் 3:39சங் 39:92 சாமு 16:10-12 சாமுவேல் வளர்ந்தான்; யெகோவா அவனோடு இருந்தார்; அவர் தம்முடைய 1 எல்லா வார்த்தைகளிலும் ஒன்றையாவது தரையிலே விழுந்துபோகவிடவில்லை. ஆதி 39:21 சாமு 9:61 இராஜா 8:56லூக் 2:521 சாமு 2:212 தீமோ 4:222 கொரி 13:11லூக் 2:40 சாமுவேல் யெகோவாவுடைய தீர்க்கதரிசிதான் என்று தாண் துவங்கி பெயெர்செபாவரை உள்ள எல்லா இஸ்ரவேலர்களுக்கும் தெரிந்தது. நியாயாதி 20:12 சாமு 3:101 தீமோ 1:122 சாமு 17:11 யெகோவா பின்னும் சீலோவிலே தரிசனம் தந்தருளினார்; யெகோவா சீலோவிலே தம்முடைய வார்த்தையினாலே சாமுவேலுக்குத் தம்மை வெளிப்படுத்தினார். 1 சாமு 3:1ஆதி 12:71 சாமு 3:4ஆதி 15:11 சாமு 3:10எண் 12:6ஆமோ 3:7எபி 1:1