சங்கீதங்கள் 29

Psalms 29
சங்கீதம் 29

தாவீதின் பாடல்.

தேவ பிள்ளைகளே, யெகோவாவுக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; சங் 96:7-9வெளி 5:11-14எரே 13:16-181 நாளாக 16:28-29ஏசா 60:12சங் 68:31-34சங் 2:10-12

கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.

யெகோவாவுடைய பெயருக்கேற்ற மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; சங் 96:8-91 நாளாக 16:28-292 நாளாக 20:21சங் 110:3சங் 27:4சங் 97:9சங் 113:3-6சங் 145:3-7

பரிசுத்த அலங்காரத்துடனே யெகோவாவை தொழுதுகொள்ளுங்கள்.

யெகோவாவுடைய சத்தம் சமுத்திரங்கள் மேல் தொனிக்கிறது; யோபு 37:2-5சங் 93:3-4யாத் 9:33யாத் 19:16யாத் 9:28மத் 8:26-27சங் 18:13-15சங் 77:16-19

மகிமையுள்ள தேவன் முழங்குகிறார்;

யெகோவா திரளான தண்ணீர்களின்மேல் இருக்கிறார்.

யெகோவாவுடைய சத்தம் வல்லமையுள்ளது; எசேக் 10:5சங் 33:9எரே 51:15-16லூக் 4:36சங் 68:33ஏசா 66:6லூக் 8:25யோபு 40:9-12

யெகோவாவுடைய சத்தம் மகத்துவமுள்ளது.

யெகோவாவுடைய சத்தம் கேதுருமரங்களை முறிக்கிறது; ஏசா 2:13நியாயாதி 9:15சங் 104:16

யெகோவா லீபனோனின் கேதுருமரங்களை முறிக்கிறார்.

அவைகளைக் கன்றுக்குட்டிகளைப்போலவும், லீபனோனையும், உபா 3:9எண் 23:22சங் 114:4-7ஆப 3:6-11எரே 4:23-25சங் 92:10வெளி 20:11

சீரியோனையும் காண்டாமிருகக் குட்டிகளைப்போலவும் துள்ளச்செய்கிறார்.

யெகோவாவுடைய சத்தம் தீப்பிழம்புகளைப் பிளக்கும். சங் 77:18யாத் 9:23லேவி 10:2சங் 144:5-62இராஜா 1:10-12யோபு 37:3யோபு 38:35எண் 16:35

யெகோவாவுடைய சத்தம் வனாந்தரத்தை அதிரச்செய்யும்; எண் 13:26ஏசா 13:13யோபு 9:6சங் 18:7சங் 46:3ஆகா 2:21ஆகா 2:6எபி 12:26

யெகோவா காதேஸ் வனாந்தரத்தை அதிரச்செய்கிறார்.

யெகோவாவுடைய சத்தம் பெண்மான்களை ஈனும்படி செய்து, சங் 46:2-5எசேக் 20:46-48யோபு 39:1-3சங் 26:8சங் 48:9ஏசா 10:18-19ஏசா 9:18சங் 134:1-2

காடுகளை வெளியாக்கும்;

அவருடைய ஆலயத்திலுள்ள அனைவரும்

யெகோவாவுக்கு மகிமை என்று ஆர்ப்பரிக்கிறார்கள்.

யெகோவா பெருவெள்ளத்தின்மேல் அமர்ந்திருந்தார்; 1 தீமோ 1:17ஆதி 6:17சங் 10:16மாற் 4:41ஆதி 8:1-2யோபு 38:8-11தானி 2:44யோபு 38:25

யெகோவா என்றென்றைக்கும் ராஜாவாக அமர்ந்திருக்கிறார்.

யெகோவா தமது மக்களுக்குப் பெலன் கொடுப்பார்; ஏசா 40:31எண் 6:24-272 தெச 3:16ஏசா 41:10யோவா 16:33ஏசா 40:29சங் 37:11சங் 68:35

யெகோவா தமது மக்களுக்குச் சமாதானம் அருளி,

அவர்களை ஆசீர்வதிப்பார்.