சங்கீதங்கள் 114

Psalms 114
சங்கீதம் 114

இஸ்ரவேல் எகிப்திலும், யாக்கோபின் வீட்டார் அந்நிய மக்களிடமிருந்து புறப்பட்டபோது, யாத் 12:41-42யாத் 13:3ஆதி 42:23சங் 81:5உபா 16:1ஏசா 11:16உபா 26:8யாத் 20:2

யூதா அவருக்குப் பரிசுத்த இடமும், யாத் 15:17யாத் 25:8சங் 78:68-69யாத் 19:5-6யாத் 29:45-46யாத் 6:7எசேக் 37:26-28உபா 23:14

இஸ்ரவேல் அவருக்கு இராஜ்ஜியமுமானது.

கடல் கண்டு விலகி ஓடினது; யாத் 14:21சங் 77:16ஆப 3:8-9யோசு 3:13-16ஆப 3:15ஏசா 63:12யாத் 15:8சங் 104:7

யோர்தான் பின்னிட்டுத் திரும்பினது.

மலைகள் ஆட்டுக்கடாக்களைப்போலவும், நியாயாதி 5:4-5யாத் 19:18யாத் 20:18ஆப 3:6எரே 4:23-242 பேது 3:7-11ஆப 3:8வெளி 20:11

குன்றுகள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளினது.

கடலே, நீ விலகியோடுகிறதற்கும்; ஆப 3:8எரே 47:6-7

யோர்தானே, நீ பின்னாக திரும்புகிறதற்கும்;

மலைகளே, நீங்கள் ஆட்டுக்கடாக்களைப்போலவும்; குன்றுகளே, சங் 29:6சங் 114:4

நீங்கள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளுகிறதற்கும்,

உங்களுக்கு என்ன வந்தது?

பூமியே, நீ ஆண்டவருக்கு முன்பாகவும், எரே 5:22ஏசா 64:1-3யோபு 26:11சங் 104:32மீகா 6:1-2சங் 96:9சங் 97:4-5யோபு 9:6

யாக்கோபுடைய தேவனுக்கு முன்பாகவும் அதிரு.

அவர் கன்மலையைத் தண்ணீர் குளமாகவும், உபா 8:15சங் 107:35எண் 20:11யாத் 17:6சங் 105:411 கொரி 10:4சங் 78:15-16நெகே 9:15

கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றுகிறார்.