எரேமியா 47

Jeremiah 47
அத்தியாயம் 47

பெலிஸ்தியர்களைக்குறித்த செய்தி

பார்வோன் காசாவை அழிக்குமுன்னே, பெலிஸ்தருக்கு விரோதமாகத் தீர்க்கதரிசியாகிய எரேமியாவுக்கு உண்டான யெகோவாவுடைய வசனம்: எரே 25:20ஆதி 10:191 இராஜா 4:24யாத் 25:15-17சகரி 9:5-7ஆமோ 1:6-8செப்ப 2:4-7 யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, வடக்கேயிருந்து தண்ணீர் பொங்கி பிரவாகித்து தேசத்தின்மேலும், அதிலுள்ள எல்லாவற்றின்மேலும், நகரத்தின்மேலும், அதில் குடியிருக்கிறவர்களின்மேலும் புரண்டு ஓடும்; அப்பொழுது மனிதர் கூக்குரலிட்டு, தேசத்தின் குடிகளெல்லோரும் அலறுவார்கள். ஏசா 15:2-5ஏசா 8:7-8எரே 1:14எரே 46:20எரே 8:161 கொரி 10:261 கொரி 10:28ஆமோ 9:5-6 அவர்களுடைய பலத்த குதிரைகளுடைய குளம்புகளின் சத்தத்தையும், அவர்களுடைய இரதங்களின் கடகடப்பையும், அவர்களுடைய உருளைகளின் இரைச்சலையும் கேட்டு, தகப்பன்மார் தங்கள் கை சோர்ந்துபோனதினால் தங்கள் பிள்ளைகளையும் நோக்கிப் பார்க்காதிருப்பார்கள். நியாயாதி 5:22எரே 8:16உபா 28:54-55எசேக் 26:10-11எரே 46:9யோபு 39:19-25புலம் 4:3-4நாகூ 2:4 பெலிஸ்தரையெல்லாம் பாழாக்கவும், தீருவுக்கும் சீதோனுக்கும், மீதியான சகாயரையெல்லாம் அழிக்கவும் வருகிற நாளில் இப்படியாகும்; கப்தோர் என்னும் மத்திய தரைக் கடற்கரையான தேசத்தாரில் மீதியாகிய பெலிஸ்தரையும் யெகோவா பாழாக்குவார். ஆமோ 9:7உபா 2:23ஏசா 20:6ஆமோ 1:8-10எசேக் 21:25எசேக் 21:29எசேக் 7:12எசேக் 7:5-7 காசா மொட்டையடிக்கப்படும்; அவர்களுடைய பள்ளத்தாக்கில் மீதியாகிய அஸ்கலோன் அழியும்; நீ எதுவரைக்கும் உன்னைக் கீறிக்கொள்ளுவாய். எரே 48:37எரே 25:20எரே 41:5மீகா 1:161 இராஜா 18:28ஆமோ 1:6-8உபா 14:1எசேக் 25:16 ஆ யெகோவாவின் பட்டயமே, எதுவரை அமராதிருப்பாய்? உன் உறைக்குள் திரும்பிவந்து, ஓய்ந்து அமர்ந்திரு. எசேக் 21:3-5எரே 12:12எசேக் 21:30யோவா 18:111 நாளாக 21:272 சாமு 2:26உபா 32:41-42எசேக் 14:17 அது எப்படி அமர்ந்திருக்கும்? அஸ்கலோனுக்கு விரோதமாகவும் கடற்கரைத் தேசத்திற்கு விரோதமாகவும் யெகோவா அதற்குக் கட்டளைகொடுத்து, அவ்விடங்களுக்கென்று அதைக் குறித்தாரே. எசேக் 14:17மீகா 6:9ஏசா 10:61 சாமு 15:3ஆமோ 3:6எசேக் 25:16ஏசா 13:3ஏசா 37:26