பாபிலோனுக்கு விரோதமான தீர்க்கதரிசனம்
ஆமோத்சின் மகனாகிய ஏசாயா பாபிலோனைக்குறித்து தேவனிடத்திலிருந்து பெற்றுக்கொண்ட செய்தி. ஏசா 47:1-15எரே 50:1ஏசா 1:1தானி 5:28தானி 5:6வெளி 17:1-18ஏசா 13:19ஏசா 14:28 உயர்ந்த மலையின்மேல் கொடியேற்றுங்கள்; உரத்த சத்தமிட்டு மக்களை வரவழையுங்கள்; அவர்கள் பிரபுக்களின் வாசல்களுக்குள் நுழைவதற்குச் சைகை காட்டுங்கள். ஏசா 5:26எரே 51:58எரே 50:2ஏசா 45:1-3எரே 51:25ஏசா 10:32ஏசா 18:3ஏசா 11:12 நான் பரிசுத்தமாக்கினவர்களுக்குக் கட்டளை கொடுத்தேன்; என் கோபத்தை நிறைவேற்ற என் பராக்கிரமசாலிகளை அழைத்தும் இருக்கிறேன்; அவர்கள் என் மகத்துவத்தினாலே களிகூருகிறவர்கள் என்கிறார். யோவே 3:11எரே 51:20-24வெளி 17:12-18எஸ்றா 1:1-11எஸ்றா 6:1-22எஸ்றா 7:12-26ஏசா 23:11ஏசா 44:27-28 திரளான மக்களின் சத்தத்தைப்போன்ற கூட்டத்தின் இரைச்சலும், கூட்டப்பட்ட மக்களுடைய தேசங்களின் அமளியான இரைச்சலும் மலைகளில் கேட்கப்படுகிறது; சேனைகளின் யெகோவா போர்ப் படையை எண்ணிக்கை பார்க்கிறார். யோவே 3:14எசேக் 38:3-23யோவே 2:1-11யோவே 2:25வெளி 19:11-21ஏசா 10:5-6ஏசா 22:1-9ஏசா 45:1-2 யெகோவா வருகிறார்; அவருடைய கோபத்தின் ஆயுதங்களும், தேசத்தையெல்லாம் அழிக்க, வானங்கவிழ்ந்த கடையாந்தர தேசத்திலிருந்து வருகிறது. எரே 50:9எரே 51:20-46மத் 24:31ஏசா 13:17ஏசா 24:1ஏசா 5:26எரே 50:3எரே 51:11 அலறுங்கள், யெகோவாவின் நியாயத்தீர்ப்பின்நாள் சமீபமாயிருக்கிறது; அது சர்வவல்லவரிடத்திலிருந்து மகா அழிவாக வரும். யோவே 1:15ஆமோ 5:181 தெச 5:2-3எசேக் 30:2-3ஏசா 13:9செப்ப 1:7ஏசா 2:12ஏசா 34:8 ஆதலால் எல்லாக் கைகளும் தளர்ந்து, எல்லா மனிதரின் இருதயமும் கரைந்துபோகும். எசேக் 21:7எசேக் 7:17ஏசா 19:1நாகூ 1:6நாகூ 2:10யாத் 15:15ஏசா 10:3-4ஏசா 37:27 அவர்கள் பயமடைவார்கள்; வேதனைகளும் வாதைகளும் அவர்களைப்பிடிக்கும்; பிள்ளை பெறுகிறவளைப்போல வேதனைப்படுவார்கள்; ஒருவரையொருவர் திகைத்துப்பார்ப்பார்கள்; அவர்கள் முகங்கள் நெருப்பான முகங்களாயிருக்கும். 1 தெச 5:3ஏசா 26:17நாகூ 2:10ஏசா 21:3-4தானி 5:5-6எரே 30:6எரே 4:31எரே 50:43 இதோ, தேசத்தைப் பாழாக்கி, அதின் பாவிகளை அதிலிருந்து அழிப்பதற்காகக் யெகோவாவுடைய நாள் கடுமையும், மூர்க்கமும், மிகுந்த கோபமுமாக வருகிறது. மல்கி 4:1நாகூ 1:6ஏசா 13:15-18ஏசா 13:6ஏசா 47:10-15எரே 50:40-42எரே 51:35-58எரே 6:22-23 வானத்தின் நட்சத்திரங்களும் விண்மீன்களும் ஒளி கொடாமலிருக்கும்; சூரியன் உதிக்கும்போது இருண்டுபோகும்; சந்திரன் ஒளி கொடாமலிருக்கும். யோவே 2:31மத் 24:29எசேக் 32:7-8மாற் 13:24ஏசா 24:23ஏசா 5:30யோவே 2:10யோவே 3:15 பாவத்தின் காரணமாக உலகத்தையும், அக்கிரமத்தின் காரணமாக துன்மார்க்கரையும் நான் தண்டித்து, அகங்காரரின் பெருமையை ஒழியச்செய்து, கொடியரின் கொடுமையைத் தாழ்த்துவேன். ஏசா 2:11ஏசா 5:15தானி 5:22-23எரே 50:29-32ஏசா 11:4ஏசா 14:12-16ஏசா 14:21ஏசா 2:17 மக்களைப் பசும்பொன்னிலும், மனிதனை ஓப்பீரின் தங்கத்திலும் அபூர்வமாக்குவேன். ஏசா 4:1ஏசா 24:6யோபு 28:16சங் 137:9ஏசா 13:15-18 இதனால் சேனைகளின் யெகோவாவுடைய கோபத்தினால் அவருடைய கடுங்கோபத்தின் நாளிலே பூமி தன்னிடத்தைவிட்டு நீங்குமளவுக்கு வானத்தை அதிரச்செய்வேன். எபி 12:26-27யோவே 3:16மத் 24:29ஆகா 2:6-7நாகூ 1:4-62 பேது 3:10ஆகா 2:21-22ஏசா 34:4 துரத்தப்பட்ட வெளிமானைப்போலும், யாரும் சேர்க்காத ஆட்டைப்போலும் இருப்பார்கள்; அவரவர் தங்கள் மக்களிடத்திற்குப்போக முகத்தைத்திருப்பி, அவரவர் தங்கள் தேசத்திற்கு ஓடிப்போவார்கள். 1 இராஜா 22:17எரே 50:161 இராஜா 22:36எரே 51:9ஏசா 17:13ஏசா 47:15வெளி 18:9-10 பிடிபட்ட எவனும் குத்தப்பட்டு, அவர்களைச் சேர்ந்திருந்த எவனும் பட்டயத்தால் விழுவான். ஏசா 14:19-22ஏசா 47:9-14எரே 50:25எரே 50:27எரே 50:35-42எரே 51:3-4 அவர்கள் குழந்தைகள் அவர்கள் கண்களுக்கு முன்பாக மோதியடிக்கப்படும்; அவர்கள் வீடுகள் கொள்ளையிடப்படும்; அவர்கள் மனைவிகள் அவமானப்படுவார்கள். ஓசி 10:14நாகூ 3:10ஏசா 13:18சங் 137:8-9புலம் 5:11சகரி 14:2 இதோ, நான் அவர்களுக்கு விரோதமாக மேதியரை எழுப்புவேன்; அவர்கள் வெள்ளியை மதிக்காமலும், பொன்னின்மேல் பிரியப்படாமலும், தானி 5:28-31எரே 51:11ஏசா 41:25எரே 50:9எரே 51:27-28ஏசா 13:3-5ஏசா 21:2நீதி 6:34-35 வில்லுகளால் இளைஞர்களை கொன்றுவிடுவார்கள்; கர்ப்பக்கனியின்மேல் அவர்கள் மனமிரங்குவதில்லை; அவர்கள் கண் பிள்ளைகளைத் தப்பவிடுவதுமில்லை. 2இராஜா 8:122 நாளாக 36:17எசேக் 9:10எசேக் 9:5-6ஓசி 13:16ஏசா 13:16நாகூ 2:1நாகூ 3:10 நாடுகளுக்குள் அலங்காரமும், கல்தேயருடைய பிரதான மகிமையுமாகிய பாபிலோனானது தேவனால் சோதோமும் கொமோராவும் கவிழ்க்கப்பட்டதுபோல கவிழ்க்கப்படும். தானி 4:30ஆமோ 4:11உபா 29:23ஆதி 19:24எரே 49:18எரே 50:40எரே 51:41செப்ப 2:9 இனி ஒருபோதும், அதில் ஒருவரும் குடியேறுவதுமில்லை, தலைமுறைதோறும் அதில் ஒருவரும் தங்கியிருப்பதுமில்லை; அங்கே அரபியன் கூடாரம் போடுவதுமில்லை; அங்கே மேய்ப்பர்கள் மந்தையை கூட்டுவதுமில்லை. ஏசா 14:23எரே 51:432 நாளாக 17:11ஏசா 34:10-15எரே 50:13எரே 50:21எரே 50:3எரே 50:39 காட்டுமிருகங்கள் அங்கே படுத்துக்கொள்ளும்; ஊளையிடும் பிராணிகள் அவர்கள் வீடுகளை நிரப்பும், ஆந்தைகள் அங்கே குடிகொள்ளும்; காட்டாடு அங்கே துள்ளும். வெளி 18:2ஏசா 34:11-15 அவர்கள் பாழான மாளிகைகளில் நரிகள் ஊளையிடும்; வலுசர்ப்பங்கள் அவர்கள் சேதப்படுத்தின அரண்மனைகளில் ஒன்றாகக் கூடும்; அதின் காலம் சீக்கிரம் வரும், அதின் நாட்கள் நீடிக்காது என்கிறார். ஏசா 25:2ஏசா 35:7எரே 51:332 பேது 2:32 பேது 3:9-10உபா 32:35எசேக் 7:7-10ஆப 2:3