ஏசாயா 14

Isaiah 14
அத்தியாயம் 14

யெகோவா யாக்கோபுக்கு இரங்கி, பின்னும் இஸ்ரவேலரைத் தெரிந்துகொண்டு, அவர்களை அவர்கள் தேசத்திலே குடியிருக்கச்செய்வார்; அந்நியரும் அவர்களுடன் சேர்ந்து, யாக்கோபின் வம்சத்துடன் இணைந்து கொள்வார்கள். சங் 102:13சகரி 1:17எபே 2:12-19ஏசா 54:7-8சகரி 8:22-23மல்கி 1:11அப் 15:14-17எரே 12:15-16 மக்கள் அவர்களை அழைத்துக்கொண்டுபோய் அவர்கள் இடத்தில் விடுவார்கள்; இஸ்ரவேல் வம்சத்தார் யெகோவாவுடைய தேசத்திலே அவர்களை வேலைக்காரராகவும் வேலைக்காரிகளாகவும் வைத்துக்கொண்டு, தங்களைச் சிறையாக்கினவர்களைச் சிறையாக்கி, தங்களை ஒடுக்கினவர்களை ஆளுவார்கள். ஏசா 61:5ஏசா 60:14எரே 30:16தானி 7:25-27ஏசா 60:9-12தானி 7:18ஏசா 49:23வெளி 18:20-24 யெகோவா உன் துக்கத்தையும், உன் தவிப்பையும், நீ அடிமையாக்கப்பட்டிருந்த கடினமான அடிமைத்தனத்தையும் நீக்கி, உன்னை இளைப்பாறச் செய்யும் அக்காலத்திலே, எரே 30:10எஸ்றா 9:8-9ஏசா 32:18எரே 46:27-28சகரி 8:8உபா 28:48உபா 28:65-68எசேக் 28:24 நீ பாபிலோன் ராஜாவின்மேல் சொல்லும் வாக்கியமாவது: ஒடுக்கினவன் ஒழிந்துபோனானே! தங்க நகரம் ஒழிந்துபோனதே! ஏசா 49:262 நாளாக 36:18தானி 2:38தானி 7:19-25எசேக் 5:15ஆப 1:2-10ஆப 2:17ஆப 2:6-12 யெகோவா தீயவரின் ஆயுதத்தையும், அரசாண்டவர்களின் செங்கோலையும் முறித்துப்போட்டார். சங் 125:3ஏசா 9:4ஏசா 14:29எரே 48:15-17ஏசா 10:5 மிகுந்த கோபங்கொண்டு ஓய்வில்லாமல் மக்களை அடித்து, கோபமாக மக்களை அரசாண்டவன், தடுக்க யாருமில்லாமல் துன்பப்படுத்தப்படுகிறான். தானி 7:19-21யாக் 2:13எரே 50:31வெளி 17:16-17வெளி 18:8-102 நாளாக 36:17தானி 4:35ஏசா 10:14 பூமிமுழுவதும் இளைப்பாறி அமைந்திருக்கிறது; கெம்பீரமாக முழங்குகிறார்கள். சங் 126:1-3ஏசா 49:13சங் 96:11-13சங் 98:7-9நீதி 11:10வெளி 18:20வெளி 19:1-6எரே 51:48 தேவதாரு மரங்களும், லீபனோனின் கேதுருக்களும், உனக்காக சந்தோஷப்பட்டு, நீ விழுந்து கிடந்தது முதற்கொண்டு எங்களை வெட்டவருவார் ஒருவரும் இல்லை என்று சொல்கிறது. எசேக் 31:16ஏசா 55:12-13சகரி 11:2 கீழே இருக்கிற பாதாளம் உன்னைப்பார்த்து அதிர்ந்து, உன் வருகைக்கு எதிர்கொண்டு, பூமியில் அதிபதிகளாயிருந்து செத்த இராட்சதர் யாவரையும் உனக்காக எழுப்பி, மக்களுடைய எல்லா ராஜாக்களையும் அவர்களுடைய சிங்காசனங்களிலிருந்து எழுந்திருக்கச்செய்கிறது. எசேக் 32:21-32எரே 50:8நீதி 15:24 அவர்களெல்லோரும் உன்னை நோக்கி: நீயும் எங்களைப்போல பலவீனாமானாயோ? எங்களுக்குச் சமமானாயோ? என்று சொல்வார்கள். பிரச 2:16எசேக் 32:21சங் 49:20சங் 49:6-14சங் 82:6-7லூக் 16:20-23 உன் ஆடம்பரமும், உன் வாத்தியங்களின் முழக்கமும் பாதாளத்தில் தள்ளுண்டுபோனது; புழுக்களே உன் படுக்கை, பூச்சிகளே உன் போர்வை. தானி 5:25-30ஆமோ 6:3-7தானி 5:1-4எசேக் 26:13எசேக் 32:19-20ஏசா 21:4-5ஏசா 22:2ஏசா 66:24 அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! தேசங்களை கீழ்ப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே! எசேக் 28:13-17லூக் 10:18வெளி 12:7-10வெளி 8:102 பேது 1:19ஏசா 34:4வெளி 22:162 பேது 2:4 நான் வானத்திற்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் மலையிலே வீற்றிருப்பேன் என்றும், தானி 8:10-12எசேக் 28:2எசேக் 28:12-162 தெச 2:4தானி 5:22-23எசேக் 29:3எசேக் 27:3ஏசா 2:2 நான் மேகங்களுக்கு மேலாக வானங்களில் ஏறுவேன்; உன்னதமான தேவனுக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே. ஏசா 47:8ஆதி 3:52 தெச 2:4ஏசா 37:23-24 ஆனாலும் நீ ஆழமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய். மத் 11:23அப் 12:22-23எசேக் 32:23லூக் 10:15வெளி 19:20எசேக் 28:8-9ஏசா 14:3-11 உன்னைக் காண்கிறவர்கள் உன்னை உற்றுப்பார்த்து, உன்னைக்குறித்துச் சிந்தித்து; இவன்தானா பூமியைத் தத்தளிக்கவும், தேசங்களை அதிரவும் செய்து, எரே 50:23சங் 58:10-11எரே 51:20-23ஏசா 14:4-5சங் 52:7சங் 64:9 உலகத்தை வனாந்திரமாக்கி, அதின் நகரங்களை அழித்து, சிறைப்பட்டவர்களைத் தங்கள் வீடுகளுக்குப் போகவிடாமலிருந்தவன் என்பார்கள். யோவே 2:32 நாளாக 28:8-15எசேக் 6:14எஸ்றா 1:2-4ஏசா 13:19-22ஏசா 45:13ஏசா 58:6ஏசா 64:10 தேசங்களுடைய சகல ராஜாக்களும், அவரவர் தங்கள் அறையிலே மகிமையோடே கிடத்தப்பட்டிருக்கிறார்கள். 2 நாளாக 24:162 நாளாக 24:25எசேக் 32:18-32ஏசா 22:16யோபு 30:23பிரச 12:5பிரச 6:3 நீயோ அழுகிப்போன கிளையைப்போலவும், பட்டயக்குத்தால் கொலையுண்டவர்களின் ஆடையைப்போலவும், ஒரு குழியின் கற்களுக்குள்ளே கிடக்கிறவர்களைப்போலவும், காலால் மிதிக்கப்பட்ட பிணத்தைப்போலவும், உன் கல்லறைக்கு வெளியே எறிந்துவிடப்பட்டாய். எரே 41:7எரே 41:91 இராஜா 21:191 இராஜா 21:242இராஜா 9:252இராஜா 9:34-36எசேக் 32:23ஏசா 22:16-18 நீ அவர்களுடன் அடக்கம் செய்யப்படுவதில்லை; நீ உன் தேசத்தைக் கெடுத்து உன் மக்களைக் கொன்றுபோட்டாய்; தீமைசெய்கிறவர்களுடைய சந்ததி ஒருபோதும் கனமடைவதில்லை. யோபு 18:19சங் 21:10சங் 109:13சங் 37:28ஏசா 1:4ஏசா 13:15-19யோபு 18:16சங் 137:8-9 அவன் சந்ததியார் எழும்பித் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டு, உலகத்தைப் பட்டணங்களால் நிரப்பாமலிருக்க, அவர்கள் முன்னோர்களுடைய அக்கிரமத்திற்காக அவர்களைக் கொலைசெய்ய ஆயத்தம் செய்யுங்கள். யாத் 20:5ஆப 2:8-12லேவி 26:39மத் 23:35ஏசா 27:6 நான் அவர்களுக்கு விரோதமாக எழும்புவேன் என்று சேனைகளின் யெகோவா சொல்கிறார்; பாபிலோனுடைய பெயரையும், அதில் மீதியாக இருக்கிறதையும், சந்ததியையும் பின்சந்ததியையும் அழிப்பேனென்று யெகோவா சொல்கிறார். 1 இராஜா 14:10எரே 50:29-35நீதி 10:7ஏசா 13:5ஏசா 21:9ஏசா 43:14ஏசா 47:9-14எரே 50:26-27 அதை முள்ளம்பன்றிகளுக்குச் சொந்தமும், தண்ணீர் நிற்கும் பள்ளங்களுமாக்கி, அதை அழிவு என்னும் துடைப்பத்தினால் பெருக்கிவிடுவேன் என்று சேனைகளின் யெகோவா சொல்கிறார். செப்ப 2:141 இராஜா 14:10ஏசா 13:21-22ஏசா 34:11-15வெளி 14:82இராஜா 21:13எரே 51:25-26எரே 51:42-43

அசீரியாவிற்கு விரோதமான தீர்க்கதரிசனம்

நான் நினைத்திருக்கிறபடியே நடக்கும்; நான் நிர்ணயித்தபடியே நிலைநிற்கும் என்று சேனைகளின் யெகோவா ஆணையிட்டுச் சொன்னார். நீதி 19:21ஏசா 46:10-11யோபு 23:13எரே 29:11அப் 4:28எபே 1:9மத் 11:25ஆமோ 8:7 அசீரியனை என் தேசத்திலே முறித்து, என் மலைகளின்மேல் அவனை மிதித்துப்போடுவேன்; அப்பொழுது அவனுடைய நுகம் அவர்கள்மேலிருந்து விலகி, அவனுடைய சுமை அவர்கள் தோளிலிருந்து நீங்கும். ஏசா 9:4ஏசா 37:36-38நாகூ 1:13ஏசா 10:12ஏசா 10:16-19ஏசா 10:32-34ஏசா 14:5ஏசா 30:30-33 தேசமனைத்தின்மேலும் நிர்ணயிக்கப்பட்ட யோசனை இதுவே; சகல தேசங்கள்மேலும் நீட்டப்பட்டிருக்கிற கையும் இதுவே என்றார். ஏசா 23:9யாத் 15:12ஏசா 5:25செப்ப 3:6-8 சேனைகளின் யெகோவா இப்படி நிர்ணயித்திருக்கிறார், யார் அதை வியர்த்தமாக்குவான்? அவருடைய கை நீட்டப்பட்டிருக்கிறது, யார் அதைத் திருப்புவான்? ஏசா 43:13யோபு 23:132 நாளாக 20:6நீதி 21:30யோபு 9:12நீதி 19:21ரோம 8:28சங் 33:11

பெலிஸ்தியாவுக்கு விரோதமான தீர்க்கதரிசனம்

ஆகாஸ் ராஜா மரணமடைந்த வருடத்திலே உண்டான பாரம் என்னவென்றால்: 2இராஜா 16:202 நாளாக 28:27ஏசா 13:1ஏசா 6:1 முழு பெலிஸ்தியாவே, உன்னை அடித்த கோல் முறிந்ததென்று சந்தோஷப்படாதே; பாம்பின் வேரிலிருந்து கட்டுவிரியன் தோன்றும்; அதின் கனி பறக்கிற அக்கினி சர்ப்பமாயிருக்கும். 2 நாளாக 26:6ஏசா 11:8ஏசா 30:62 நாளாக 28:182இராஜா 18:8எசேக் 26:2எசேக் 35:15ஓசி 9:1 மிகவும் தரித்திரரின் தலைப் பிள்ளைகள் திருப்தியாகச் சாப்பிட்டு, எளியவர்கள் சுகமாகப் படுத்திருப்பார்கள்; உன் வேரைப் பஞ்சத்தினாலே சாகும்படிசெய்வேன், உன்னில் மீதியானவர்களை அவன் கொன்று போடுவான். ஏசா 7:21-22செப்ப 2:4-7ஆமோ 1:6-8எசேக் 25:15-17ஏசா 3:15ஏசா 30:23-24ஏசா 33:16ஏசா 37:30 வாசலே அலறு; நகரமே கதறு; பெலிஸ்தியாவே, நீ முழுவதும் கரைந்து போகிறாய்; ஏனென்றால், வடக்கே இருந்து புகைக்காடாய் வருகிறான்; அவன் கூட்டங்களில் தனித்தவனில்லை. ஏசா 20:1எரே 1:14ஏசா 13:6ஏசா 14:29எரே 25:16-20ஏசா 16:7ஏசா 24:12ஏசா 3:26 இப்போதும் இந்ததேசத்தின் பிரதிநிதிகளுக்கு என்ன பதில் சொல்லப்படும்? யெகோவா சீயோனை அஸ்திபாரப்படுத்தினார்; அவருடைய மக்களில் சிறுமையானவர்கள் அதிலே திடன்கொண்டு தங்குவார்கள் என்பதே. சங் 102:16சங் 87:5யாக் 2:5சங் 87:1செப்ப 3:12ஏசா 25:4ஏசா 28:16ஏசா 39:1