எரேமியா 30

Jeremiah 30
அத்தியாயம் 30

இஸ்ரவேல் சீரமைக்கப்படுதல்

யெகோவாவால் எரேமியாவுக்கு உண்டான வார்த்தை: எரே 1:1-2எரே 26:15 இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், நான் உன்னுடன் சொன்ன எல்லா வார்த்தைகளையும் ஒரு புத்தகத்தில் எழுதிக்கொள். ஏசா 30:8எரே 36:321 கொரி 10:112 பேது 1:21ஆப 2:2-3எரே 36:2-4எரே 51:60-64வெளி 1:11 இதோ, நாட்கள் வருமென்று யெகோவா சொல்லுகிறார், அப்பொழுது நான் இஸ்ரவேலும் யூதாவுமாகிய என் மக்களுடைய சிறையிருப்பிலிருந்து விடுவித்து, நான் அவர்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்திற்கு அவர்களைத் திரும்பிவரச்செய்வேன்; அதை அவர்கள் சொந்தமாக்கிக்கொள்ளுவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். எரே 29:14எரே 16:15எசேக் 20:42எரே 30:18எரே 23:7-8எரே 32:44எரே 33:26செப்ப 3:20 இவைகள் யெகோவா இஸ்ரவேலையும் யூதாவையும் குறித்துச் சொன்னவார்த்தைகளே. யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: தத்தளிப்பின் சத்தத்தைக் கேட்கிறோம்; திகிலுண்டு, சமாதானமில்லை. ஆமோ 8:10ஏசா 5:30லூக் 19:41-44செப்ப 1:10-11ஆமோ 5:16-18ஏசா 59:11எரே 25:36எரே 31:15-16 ஆணாய்ப் பிறந்தவன் பிரசவிக்கிறதுண்டோ என்று கேட்டுப்பாருங்கள்; பிரசவிக்கிற பெண்ணைப்போல் ஆண்கள் அனைவரும் தங்கள் இடுப்புகளின்மேல் தங்கள் கைகளை வைத்திருக்கிறதையும், முகங்களெல்லாம் மாறி வெளுத்திருக்கிறதையும் நான் காண்கிறதென்ன? எரே 4:31யோவே 2:6நாகூ 2:10ஏசா 21:31 தெச 5:3ஓசி 13:13எரே 22:23எரே 6:24 ஐயோ, அந்த நாள் பெரியது; அதற்கு இணையான நாளில்லை; அது யாக்கோபுக்கு இக்கட்டுக்காலம்; ஆனாலும் அவன் அதற்கு நீங்கலாகி காப்பாற்றப்படுவான். தானி 12:1மல்கி 4:1தானி 9:12சகரி 14:1-2யோவே 2:11மத் 24:21-22ரோம 11:26மாற் 13:19 அந்நாளில் நான் அவன் நுகத்தை உன் கழுத்தின்மேல் இல்லாமல் உடைத்து, உன் கட்டுகளை அறுப்பேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; அந்நியர் இனி அவனை அடிமை படுத்துவதில்லை. நாகூ 1:13எசேக் 34:27ஏசா 9:4எரே 27:2எரே 28:10ஏசா 10:27ஏசா 14:25எரே 2:20 தங்கள் தேவனாகிய யெகோவாவையும், நான் தங்களுக்கு எழுப்பப்போகிற தங்கள் ராஜாவாகிய தாவீதையுமே சேவிப்பார்கள். ஓசி 3:5ஏசா 55:3-5லூக் 1:69அப் 13:34எசேக் 37:23-25அப் 13:23அப் 2:30எசேக் 34:23-24 ஆகையால் என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே; இஸ்ரவேலே, கலங்காதே என்று யெகோவா சொல்லுகிறார்; இதோ, நான் உன்னைத் தூரத்திலும், உன் சந்ததியைத் தங்கள் சிறையிருப்பின் தேசத்திலும் இல்லாமல் காப்பாற்றுவேன்; யாக்கோபு திரும்பி வந்து அமர்ந்து சமாதானமாக இருப்பான்; அவனைத் தத்தளிக்கச்செய்கிறவனில்லை. எரே 46:27-28ஏசா 43:5எரே 29:14ஏசா 44:2ஓசி 2:18ஏசா 35:9எரே 23:3எரே 23:8 உன்னைக் காப்பாற்றுவதற்காக நான் உன்னுடன் இருக்கிறேன் என்று யெகோவா சொல்லுகிறார்; உன்னைச் சிதறடித்த எல்லா தேசங்களையும் நான் அழிப்பேன்; உன்னையோ நான் அழிக்காமலும், முற்றிலும் தண்டிக்காமல், மட்டாகத் தண்டிப்பேன். எரே 1:19எரே 10:24ஏசா 8:10எரே 1:8எரே 4:272 தீமோ 4:17-182 தீமோ 4:22அப் 18:10 யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்; உன் புண் ஆறாததாயும் உன் காயம் கொடியதாகவும் இருக்கிறது. எரே 15:18எரே 30:152 நாளாக 36:16எரே 14:17எசேக் 37:11ஏசா 1:5-6 உன் காயங்களைக் கட்டும்படி உனக்காக ஏற்படுவாரில்லை; உன்னைச் சுகப்படுத்தும் மருந்துகளுமில்லை. எரே 46:11எரே 8:22எரே 30:17எரே 33:61 யோவா 2:11 பேது 2:241 தீமோ 2:5-6உபா 32:39 உன் நேசர் அனைவரும் உன்னை மறந்தார்கள்; அவர்கள் உன்னைத் தேடார்கள்; திரளான உன் அக்கிரமத்தினாலும் உன் பாவங்கள் பெருகினதினாலும், எதிரி வெட்டுவதுபோலவும், கொடியவன் தண்டிக்கிறதுபோலவும் நான் உன்னைத் தண்டித்தேன். எரே 5:6யோபு 30:21புலம் 1:2எரே 22:20எரே 2:36எரே 22:22எரே 30:15எரே 4:30 உன் நொறுங்குதலினாலும் உன் வேதனையின் மிகுதியினாலும் நீ கூக்குரலிடுவானேன்? மிகுதியான உன் அக்கிரமத்தினாலும் பெருகிப்போன உன் பாவங்களினாலும் இப்படி உனக்குச் செய்தேன். எரே 30:14எரே 30:122 நாளாக 36:14-17எசேக் 16:1-63எசேக் 20:1-49எசேக் 22:1-23எஸ்றா 9:13எஸ்றா 9:6-7 ஆதலால் உன்னை அழிக்கிறவர்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள்; உன் எதிரிகளெல்லோரும் சிறைப்பட்டுப்போவார்கள்; உன்னைச் சூறையாடுகிறவர்கள் சூறையாடப்படுவார்கள்; உன்னைக் கொள்ளையிடுகிற அனைவரையும் கொள்ளைக்கு ஒப்புக்கொடுப்பேன். எரே 10:25ஏசா 33:1யாத் 23:22சகரி 2:8வெளி 13:10ஏசா 14:2யோவே 3:8புலம் 4:21-22 அவர்கள்: உன்னை விசாரிப்பாரற்ற சீயோன் என்று சொல்லி, உனக்குத் தள்ளுண்டவள் என்று பெயரிட்டதினால், நான் உனக்கு ஆரோக்கியம்வரச்செய்து, உன் காயங்களை ஆற்றுவேன் என்று யெகோவா சொல்லுகிறார். சங் 107:20எரே 33:61 பேது 2:24சங் 103:3யாத் 15:26சங் 23:3ஓசி 6:1மல்கி 4:2 யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் யாக்கோபின் கூடாரங்களின் சிறையிருப்பைத் திருப்பி, அவன் குடியிருக்கும் இடங்களுக்கு இரக்கம்செய்வேன்; நகரம் தன் மண்மேட்டின்மேல் கட்டப்பட்டு, அரண்மனை முன்போல நிலைப்படும். ஆகா 2:7-9சங் 102:13எரே 30:3எரே 33:7எரே 49:39எரே 23:3சகரி 1:16எரே 46:27 அவைகளிலிருந்து நன்றியும் ஆடல்பாடலின் சத்தமும் புறப்படும்; அவர்களை வர்த்திக்கச்செய்வேன், அவர்கள் குறுகிப்போவதில்லை; அவர்களை மகிமைப்படுத்துவேன், அவர்கள் சிறுமைப்படுவதில்லை. எரே 33:22ஏசா 51:11ஏசா 60:22எசேக் 36:37ஏசா 35:10எரே 31:12-13எரே 31:4சகரி 10:8 அவர்கள் பிள்ளைகள் முன்போலிருப்பார்கள்; அவர்கள் சபை எனக்கு முன்பாகத் திடப்படும்; அவர்களை ஒடுக்கின அனைவரையும் தண்டிப்பேன். எரே 32:39எரே 2:3எரே 50:33-34ஆதி 17:5-9ஏசா 49:26ஏசா 51:22சங் 102:18சங் 102:28 அவர்களுடைய பிரபு அவர்களில் ஒருவனாயிருக்க, அவர்களுடைய அதிபதி அவர்கள் நடுவிலிருந்து தோன்றுவார்; அவரை அருகில் வரச்செய்வேன், அவர் அருகில் வருவார், என்னிடத்தில் சேரும்படி தன் இருதயத்தை இணைக்கிற இவர் யார்? என்று யெகோவா சொல்லுகிறார். எண் 16:5எசேக் 34:23-24அப் 5:31எசேக் 37:24மாற் 11:9-101 யோவா 2:22 சாமு 7:13உபா 18:18 நீங்கள் என் மக்களாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருப்பேன். எசேக் 36:28எரே 24:7எரே 31:33வெளி 21:3சகரி 13:9எபி 8:10எரே 31:1எசேக் 37:27 இதோ, கோராவாரிக் காற்றாகிய யெகோவாவுடைய பெருங்காற்று கடுமையாக எழும்பி, அடித்து, துன்மார்க்கருடைய தலையின்மேல் மோதும். எரே 23:19-20எரே 25:32சகரி 9:14நீதி 1:27சங் 58:9 யெகோவா நம்முடைய இருதயத்தின் நினைவுகளை நடப்பித்து நிறைவேற்றுமளவும், அவருடைய கடுங்கோபம் தணியாது: கடைசி நாட்களில் அதை உணர்ந்துகொள்வீர்கள். எரே 23:20ஓசி 3:5மீகா 4:1எசேக் 38:16எரே 4:28தானி 10:14தானி 2:28எசேக் 20:47-48