எரேமியா 1

Jeremiah 1
அத்தியாயம் 1

பென்யமீன் தேசத்திலுள்ள ஆனதோத் ஊரிலிருந்த ஆசாரியர்களில் ஒருவனாகிய இல்க்கியாவின் மகன் எரேமியாவினுடைய வசனங்கள்: 1 நாளாக 6:602 நாளாக 36:21எசேக் 1:3எரே 11:21எரே 32:7-9ஆமோ 1:1ஆமோ 7:10ஏசா 1:1 ஆமோனுடைய மகனாகிய யோசியா என்கிற யூதாவுடைய ராஜாவின் நாட்களில், அவன் அரசாண்ட பதின்மூன்றாம் வருடத்தில் எரேமியாவுக்குக் யெகோவாவுடைய வார்த்தை உண்டானது. 1 இராஜா 13:20ஓசி 1:1எரே 1:11எரே 1:4யோனா 1:1மீகா 1:12 நாளாக 34:1-332இராஜா 21:24 அப்புறம் யோசியாவின் மகனாகிய யோயாக்கீம் என்கிற யூதாவுடைய ராஜாவின் அரசாட்சியின் நாட்களிலும், யோசியாவின் மகனாகிய சிதேக்கியா என்கிற யூதாவுடைய ராஜாவின் பதினோராம் வருடத்து முடிவுவரையும், எருசலேம் ஊரார் ஐந்தாம் மாதத்தில் சிறைப்பட்டுப் போகும்வரைக்கும் யெகோவாவுடைய வார்த்தை அவனுக்கு உண்டானது. 2 நாளாக 36:5-82இராஜா 23:34எரே 39:2சகரி 7:51 நாளாக 3:152 நாளாக 36:11-212இராஜா 24:1-92இராஜா 24:17

எரேமியாவின் அழைப்பு

யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: எசேக் 3:16எசேக் 1:3எரே 1:2 நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குவதற்கு முன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்செய்து, உன்னை தேசங்களுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன் என்று சொன்னார். சங் 139:16ஏசா 49:1கலா 1:15-16சங் 71:5-6ரோம 8:29ஏசா 49:5ஏசா 44:22 தீமோ 2:19-21 அப்பொழுது நான்: ஆ யெகோவாவாகிய ஆண்டவரே, இதோ, நான் பேச அறியேன்; சிறுபிள்ளையாயிருக்கிறேன் என்றேன். யாத் 4:10-16யாத் 6:121 இராஜா 3:7-9எரே 32:17யாத் 4:1யாத் 6:30எரே 14:13எரே 4:10 ஆனாலும் யெகோவா: நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே, நான் உன்னை அனுப்புகிற எல்லோரிடத்திலும் நீ போய், நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக. எசேக் 3:27மாற் 16:15-16எண் 22:202 நாளாக 18:13எசேக் 3:17-21எசேக் 2:3-5எரே 1:17-18மத் 28:20 நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; உன்னைக் காப்பதற்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று யெகோவா சொல்லி, யோசு 1:5யோசு 1:9ஏசா 51:7உபா 31:6லூக் 12:4-5எபி 13:5-6எரே 15:20-21உபா 31:8 யெகோவா தமது கரத்தை நீட்டி, என் வாயைத் தொட்டு: இதோ, என் வார்த்தைகளை உன் வாயில் வைக்கிறேன். லூக் 21:15யாத் 4:11-12லூக் 12:12ஏசா 51:16ஏசா 50:4மத் 10:19எரே 5:14எசேக் 3:10 பார், பிடுங்கவும், இடிக்கவும், அழிக்கவும், கவிழ்க்கவும், கட்டவும், நாட்டவும் உன்னை நான் இன்றையதினம் தேசங்களின்மேலும் ராஜ்யங்களின்மேலும் ஏற்படுத்தினேன் என்று யெகோவா என்னுடனே சொன்னார். எரே 31:282 கொரி 10:4-5ஏசா 44:26-28எரே 31:4-5எரே 24:6ஆமோ 9:11எசேக் 36:36வெளி 11:3-6 பின்னும் யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்: எரேமியாவே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்று கேட்டார்; வாதுமை மரத்தின் கிளையைக் காண்கிறேன் என்றேன். ஆமோ 7:8ஆமோ 8:2சகரி 5:2எரே 24:3சகரி 4:2எண் 17:8எசேக் 7:10 அப்பொழுது யெகோவா: நீ கண்டது சரியே; என் வார்த்தையைத் துரிதமாக நிறைவேற்றுவேன் என்றார். எசேக் 12:28எசேக் 12:25எசேக் 12:22-23லூக் 10:28ஆமோ 8:2உபா 5:28உபா 18:17உபா 32:35 யெகோவாவுடைய வார்த்தை இரண்டாம்முறை எனக்கு உண்டாகி, அவர்: நீ காண்கிறது என்ன என்று கேட்டார்; பொங்குகிற பானையைக் காண்கிறேன், அதின் வாய் வடக்கேயிருந்து நோக்குகிறது என்றேன். எசேக் 11:3எசேக் 11:72 கொரி 13:1-2எசேக் 24:3-14ஆதி 41:32சகரி 4:2 அப்பொழுது யெகோவா என்னை நோக்கி: வடக்கேயிருந்து தீங்கு தேசத்தினுடைய குடிமக்கள் எல்லோர் மேலும் வரும். ஏசா 41:25எரே 10:22எரே 4:6எரே 6:1எசேக் 1:4எரே 31:8எரே 46:20எரே 50:41 இதோ, நான் வடதிசை ராஜ்யங்களின் வம்சங்களையெல்லாம் கூப்பிடுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்; அவர்கள் வந்து அவனவன் தன்தன் சிங்காசனத்தை எருசலேமின் ஒலிமுகவாசல்களுக்கும், அதின் சுற்றுமதில்கள் எல்லாவற்றிற்கும் விரோதமாகவும், யூதா தேசத்து எல்லாப் பட்டணங்களுக்கும் விரோதமாகவும் வைப்பார்கள். எரே 25:9எரே 4:16எரே 43:10எரே 9:11ஏசா 22:7எரே 10:25எரே 39:3உபா 28:49-53 அவர்கள் என்னைவிட்டு அந்நிய தெய்வங்களுக்கு ஆராதனைசெய்து, தங்கள் கைகளின் செயலைப் 1 பணிந்துகொண்ட அவர்களுடைய எல்லா தீமைகளுக்காக நான் என் நியாயத்தீர்ப்புகளை அவர்களுக்கு விரோதமாகக் கூறுவேன். எரே 19:4எரே 7:9அப் 7:41உபா 28:20ஏசா 2:82இராஜா 22:17உபா 31:16ஓசி 11:2 ஆகையால் நீ உன் அரையைக் கட்டிக்கொண்டு நின்று, நான் உனக்குக் கட்டளையிடுகிற அனைத்தையும் அவர்களுக்குச் சொல்; நான் உன்னை அவர்களுக்கு முன்பாகக் கலங்கச்செய்யாமல், நீ அவர்கள் முகத்திற்கு பயப்படாதிரு. 1 இராஜா 18:46எரே 1:7-81 பேது 1:13லூக் 12:35எசேக் 3:14-18யாத் 7:2எரே 23:28எசேக் 3:10-11 இதோ, தேசம் முழுவதற்கும், யூதாவின் ராஜாக்களுக்கும், அதின் பிரபுக்களுக்கும், அதின் ஆசாரியர்களுக்கும், தேசத்தின் மக்களுக்கும் எதிராக நான் உன்னை இன்றையதினம் பாதுகாப்பான பட்டணமும், இரும்புத்தூணும், வெண்கல மதிலும் ஆக்கினேன். ஏசா 50:7எசேக் 3:8-9எரே 15:20எரே 6:27மீகா 3:8-9எரே 34:20-22எரே 36:27-32எரே 37:7 அவர்கள் உனக்கு விரோதமாகப் போர்செய்வார்கள்; ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னைக் காப்பாற்றுவதற்கு நான் உன்னுடன் இருக்கிறேன் என்று யெகோவா சொல்லுகிறார். யோசு 1:9எரே 1:8எரே 20:11சங் 129:2எரே 29:25-32எரே 11:19எரே 15:10-21எரே 26:11-24